Monday, March 28, 2016

பாகிஸ்தானிய குழந்தைகள் ரியாத்தில் பிரித்தெடுப்பு!



நிஷார் அமீர் கனி, ஃபாத்திமா தம்பதிகளுக்கு பாகிஸ்தானில் இரண்டு குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. சவுதி மன்னர் சல்மானுக்கு சவுதியில் சிகிச்சை அளிக்க வேண்டி பெற்றோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற மன்னர் சல்மான் அவர்களை சவுதி அழைத்திருந்தார்.

மார்ச் 3 ந்தேதி குழந்தைகளும் பெற்றோரும் ரியாத் வந்து சேர்ந்தனர். மன்னர் சல்மான் உத்தரவுக்கிணங்க நேற்று மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது. 20 க்கும் மேற்பட்ட மருத்துவ குழு போராடி குழந்தைகளை நல்ல முறையில் பிரித்தெடுத்தனர். குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளனர். தாய் ஃபாத்திமா மன்னர் சல்மானுக்கு தனது இதயங் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
29-03-2016

http://saudigazette.com.sa/saudi-arabia/mother-separated-pakistani-twins-thanks-king-salman/

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)