Tuesday, March 22, 2016

இந்து பெண்ணையும், அவரது குழந்தையையும் பராமரிக்கும் முஸ்லிம்கள்!

இந்து பெண்ணையும், அவரது குழந்தையையும் பராமரிக்கும் முஸ்லிம்கள்...

Posted by Nazeer Ahamed on Tuesday, March 22, 2016

இந்து பெண்ணையும், அவரது குழந்தையையும் பராமரிக்கும் முஸ்லிம்கள்!
------------------------------------------------------
உத்தர பிரதேசம் லக்னோவில் ஒரு அழகிய மனித நேய பணி நடந்து வருகிறது. ஒரு இந்து பெண் தனது குழந்தையை பெற்றெடுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வருகிறது. வறுமையான குடும்ப சூழல் கொண்ட இந்த பெண்ணை பிறந்த வீடும் ஏற்றுக் கொள்ள வில்லை. இவளது கணவனோ டேராடூன் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். நிர்கதியாக நின்ற இந்த பெண்ணை இஸ்லாமியர்கள் அரவணைத்தனர். அந்த பெண்ணை பள்ளி வாசலிலேயே தங்க வைத்துக் கொண்டனர். குழந்தையின் வைத்திய செலவுக்காக தினமும் சந்தா வசூலிக்கின்றனர். ஒவ்வொரு நேர தொழுகையிலும் அந்த குழந்தையின் நோய் குணமாக இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர்.

குஜராத்தில் கவுசர் பீவி என்ற கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் இட்டனர் இந்துத்வா அரக்கர்கள். ஆனால் இங்கோ கணவன் கை விட்ட அபலைப் பெண்ணையும் இதயத்தில் ஓட்டை உள்ள குழந்தையையும் இஸ்லாமியர்கள் பராமரிக்கின்றனர். இந்துவாக அந்த பெண்ணும் குழந்தையும் இருந்தாலும் அவர்களும் மனிதப் பிறவிகள்தானே என்று இஸ்லாமியர் உதவுகின்றனர். இஸ்லாமும் முஸ்லிம்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

இன்னா செய்தாரே ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

2 comments:

  1. குஜராத்தில் கவுசர் பீவி என்ற கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் இட்டனர் இந்துத்வா அரக்கர்கள். ஆனால் இங்கோ கணவன் கை விட்ட அபலைப் பெண்ணையும் இதயத்தில் ஓட்டை உள்ள குழந்தையையும் இஸ்லாமியர்கள் பராமரிக்கின்றனர். இந்துவாக அந்த பெண்ணும் குழந்தையும் இருந்தாலும் அவர்களும் மனிதப் பிறவிகள்தானே என்று இஸ்லாமியர் உதவுகின்றனர். இஸ்லாமும் முஸ்லிம்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

    Every religion has produced men and women of most exalted character- Swami
    vivekananda

    ReplyDelete
  2. குஜராத்தில் கவுசர் பீவி என்ற கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் இட்டனர் இந்துத்வா அரக்கர்கள். ஆனால் இங்கோ கணவன் கை விட்ட அபலைப் பெண்ணையும் இதயத்தில் ஓட்டை உள்ள குழந்தையையும் இஸ்லாமியர்கள் பராமரிக்கின்றனர். இந்துவாக அந்த பெண்ணும் குழந்தையும் இருந்தாலும் அவர்களும் மனிதப் பிறவிகள்தானே என்று இஸ்லாமியர் உதவுகின்றனர். இஸ்லாமும் முஸ்லிம்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

    Every religion has produced men and women of most exalted character- Swami
    vivekananda

    Muslims has planted bombs at two places killing 34 people on the sport at Belgium.
    Now Belgium is at six and seven.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)