Saturday, June 18, 2016

முஸ்லிம்களை குருத்வாராவில் நோன்பு திறக்க வைக்கும் சீக்கியர்கள்!



முஸ்லிம்களை குருத்வாராவில் நோன்பு திறக்க வைக்கும் சீக்கியர்கள்!

டெல்லியில் உள்ள ரகுவீர் நகரில் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள குருத்வாராவில் சீக்கியர்கள் தங்கள் சொந்த செலவில் உணவு தயாரித்து நோன்பிருக்கும் முஸ்லிம்களுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். குருத்வாராவுக்கு உள்ளேயே அமர வைத்து உணவு பரிமாறுகிறார்கள். பல நுறு முஸ்லிம்கள் இதன் பலனை பெற்றுக் கொள்கிறார்கள். நோன்பிருக்கும் ஒருவருக்கு உணவளிப்பது என்பது அந்த நோன்பாளி பெற்ற நன்மையை உணவளிப்பவருக்கு பெற்றுத் தருவதாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். அந்த நன்மையை நாடி மனிதாபிமானத்தோடு செயல்படும் சீக்கியர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

மத நல்லிணக்கத்தை பேணும் இது போன்ற மக்கள் இருக்கும் காலமெல்லாம் மோடி அமீத்ஷாக்களின் திட்டம் நமது நாட்டில் நிறைவேறப் போவதில்லை!

1 comment:


  1. நல்ல செய்தி.தொடரட்டும் நற்பணிகள். வாழக

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)