'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, June 28, 2016
இனம் மொழி நிறம் கடந்த மனித நேயம்!
இனம் மொழி நிறம் கடந்த மனித நேயம்!
உணவை உண்பவர் இந்தியர்: உணவை ஊட்டுபவர் எகிப்தியர். இருவரின் மொழியும் வேறு: இனமும் வேறு: நாடும் வேறு: இந்த மனித நேயத்தை வேறெங்கும் பார்த்திருக்கிறீர்களா? இதுதான் இஸ்லாம்!
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் தெரிந்தவன்”
அல்-குர்ஆன் 49:13
‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’
ஆதாரம் : அஹ்மத்
‘ஒரு நம்பிக்கையாளன் தான் விரும்புவதை இன்னொரு நம்பிக்கையாளனுக்கும் விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’
(ஆதாரம் : முஸ்லிம்).
இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.
ReplyDeleteஇவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.
பச்சைப் பொய்.
அரேபிய கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி பிற மக்களை காபீா் என்று பட்டம் கட்டி அழிக்க நினைக்கின்றது.