தோழர் ஃபாரூக்கின் கொலையை வைத்து ஒரு கருத்து பரவலாக பரப்பப்படுகிறது. அதாவது முஸ்லிம்கள் இந்துக்களோடு இரண்டற கலக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை ஆர்எஸ்எஸ் வென்றெடுத்து விடும் என்று பதிவிடுகின்றனர்.
ஃபாரூக்கை கொன்ற கோழைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தூக்கு தண்டனையும் வாங்கிக் கொடுப்போம். அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. ஃபாரூக் நாத்திகத்தை நோக்கி ஓடியதற்கு இஸ்லாமியர்களான நாம் தான் முழு முதற் காரணம். தர்ஹா வணக்கம் ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஷியா என்று பல சாதிகளையும் பிரிவுகளையும் உண்டாக்கினால் சிந்திப்பவன் கண்டிப்பாக வெறுத்து ஓடுவான். 25 வருடங்களுக்கு முன்பு எனது எண்ணமும் நாத்திகத்தை நோக்கியே சென்றன. இறைவனின் கிருபையால் ஏகத்துவ சிந்தனையை சகோ பிஜே மூலம் இறைவன் எனக்குள் ஏற்படுத்தினான். எல்லா புகழும் இறைவனுக்கே!
ஃபாரூக் போன்ற வழி தவறி சென்ற தோழர்களை இஸ்லாத்துக்குள் கருத்துக்களின் மூலம் கொண்டு வருவோம். இஸ்லாம் சொல்வதும் அதைத்தான்.
ஃபாரூக்கை கொன்றது யார் என்பது தெரியாத நிலையில் பலரின் சந்தேகம் முஸ்லிம்களை நோக்கியே வருகிறது. தமிழகத்தில் காலூன்ற நாத்திகர்களை வென்றெடுக்க கூலிப் படை மூலம் ஆர்எஸ்எஸூம் செய்திருக்கலாம். உண்மை குற்றவாளிகள் பிடுபடும் வரை நாம் பொறுத்திருப்போம்.
நாம் மொழியால் தமிழர்கள்: இனத்தால் திராவிடர்கள்: வாழும் தேசத்தால் இந்தியர்கள்: இறை மார்க்கத்தை பின்பற்றுவதில் முஸ்லிம்கள். இதில் எது ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து தொப்புள் கொடி உறவான சகோதர மதத்தவர்களோடு சகோதரத்துவத்தைப் பேணி இன்முகத்தோடு வாழ்வோம்.
இன்று தமிழகத்தில் ரத்த தானம் செய்வதில் கடந்த 10 வருடங்களாக சிறுபான்மையினரான முஸ்லிகளே முதலிடத்தில் இருக்கின்றனர். முஸ்லிம்கள் நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் வசதி மூலம் சகோதர இந்து மதத்தவர்களே அதிகம் பலன் பெறுகின்றனர். மழை வெள்ளம் புயல் என்ற இயற்கை பேரிடர்களில் தங்கள் உயிரைக் கொடுத்து இந்துக்களை காப்பதில் முஸ்லிமகளே முன்னணியில் இருக்கின்றனர். இதனை சமீபத்தில் சென்னையில் நம் கண்ணெதிரேயே கண்டோம். பெரும்பாலான முஸ்லிமகளின் நிலை இதுதான்.
தமிழரின் பண்பாட்டை பேணுவதற்கோ தமிழில் பெயர் வைப்பதற்கோ இஸ்லாம் எந்த வகையில் தடை சொல்லவில்லை. ஆனால் அதில் ஆரிய கலாசாரம் கலவாமல் இருக்க வேண்டும். அன்னிய மதத்தவனாக இருந்தாலும் பக்கத்து வீட்டிலுள்ளவனுக்கு சமைத்ததை கொடுத்து பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்று சொல்கிறது இஸ்லாம்.
வன்முறையை கையில் எடுத்தவன் அந்த வன்முறையாலேயே அழிவான். எல்லா மதங்களும் மார்க்கங்களும் அன்பையே போதிக்கின்றன. அன்பு வழி நடந்து நாமும் மகிழ்ச்சியோடு இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவோம்.
உண்மை தோழரே...
ReplyDeletepolice has arrested few Muslims only.
ReplyDeleteOf course the investigation is on.