'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
4 comments:
சங்க இலக்கிய நூல்கள் 18-ல் மிகவும் முக்கியமானது புறநானூறு. தமிழர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அறிந்த வாழ்வியல் கோட்பாடுகளையும் அறிவியல் உண்மைகளையும் எடுத்துரைக்கிறது
புற நானூற்றில் 18 ஆவது பாடல் குடபுலவியனார் பாடியது. முதலில் புலவரின் பெயரே பல புதிர்களைப் போடுகிறது. எவருக்கும் சரியாகப் பொருள் சொல்ல முடியவில்லை ஒருவேளை, புலஸ்த்ய மகரிஷியின் குடியைச் சேர்ந்தவரோ என்று (குடி புலஸ்திய) என்று ஐயப்பாடு எழுப்பியோர் உண்டு. ஆனால் அதுவும் சரியாகத் தோன்றவில்லை. இவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.இந்தப் பாடலில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன?
“ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை ............”
இதைப் பலவகையாக நோக்கலாம்
1, 10, 100, 1000, 10,000, 100,000, கோடி, பத்து கோடி, 100 கோடி, 1000 கோடி
தசாம்ச முறை எனப்படும் டெஸிமல் சிஸ்ட (Decimal System) த்தைக் கண்டுபிடித்தவர்கள் வேத கால ரிஷிகள்.
உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் டெஸிமல் முறை காணப்படுவதோடு சஹஸ்ரநாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று நம் சமய வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது. இந்துக்களின் பழமொழிகள் கூட டெஸிமல் மு முறையில் இருக்கும். சாபம் இடும் இடங்களில் கூட உன் தலை சுக்கு நூறாக உடையட்டும் என்று தசாம்ச முறையில்தான் இருக்கும்.
அணைகள் கட்ட அறிவுரை
“நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”
மக்களுக்கான குடிநீர் வசதிகளைச் செய்து தா; அணகள் கட்டி நீர்ப்பாசனத்துக் கு உதவுக என்பது புலவரின் அறிவுரை. இது அக்காலத்தில் நடந்த அறப்பணிகளையும் பொதுநல சிந்தனையையும் காட்டுகிறது. புலவர் தனக்கு தங்கம் கொடு, நிலம் கொடு என்று கேட்காமல் பொது மக்களுக்கு வசதிகள் செய்து தா என்று இறைஞ்சுகிறார்.
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
உலகில் குடி நீர் இல்லாமல் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது
யார் ஒருவர் அன்னதானம் செய்கிறாரோ அவர், மற்றவர்களுக்கு உயிர் கொடுத்ததற்குச் சமம்
இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லுவார்:
அன்னாத் பவதி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ: (3-14)
உணவிலிருந்தே உயிர்கள் உண்டாகின்றன
மழையிலுருந்து உணவு உண்டாகின்றது
யக்ஞத்திலிருந்து மழை உண்டாகின்றது
நல்வினைகளில் இருந்து வேள்வி உண்டாகின்றது.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவரும் பத்தினிப் பெ ண்களால் மழை பெய்யும். நல்லாட்சி நடைபெறும் வேந்தன் நாட்டில் முயற்சியின்றியே அறுவடைகள் பெருகும் என்றெல்லாம் செப்புகிறார்.
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே = நல்ல நிலமும் நல்ல நீர்ப் பாசனமும் இருந்தால்தான் உணவு விளைச்சல் கிடைக்கும்.
மேலும் நீரும் ஒரு உணவு. இதை வள்ளுவரும் சொன்னார்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை-குறள் 12
உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவ்வுணவுகளை உண்பவர்க்குத் தாமும் உணவாகி, இருப்பதும் மழையே.
இதைத்தான் குடபுலவியனாரும் செப்பினார்.
இன்னொரு படலில் ‘’நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’--186- மோசிகீரனார்
என்று சொல்லுவதிலிருந்து நெல்லும் (நிலம்) நீரும் உயிருக்கு இன்றியமையாதவை என்பது புலப்படும்
இவைகளை எல்லாம் பார்க்கையில் குடபுலவியனார் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெளிவாகிறது.
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
இது பகவத் கீதையிலும் உள்ளது. தனக்கென மட்டும் உணவு சமைப்பவன் பாவி என்று கண்ணன் உரைப்பான் (பகவத் கீதை 3-13)
யே ஆத்ம காரணாத் பசந்தி, தே பாபா: அகம் புஞ்சதே.
இப்பொழுது புறநானூற்றுப் பாடலின் முழுப் பொருளையும் பார்ப்போம்:
கடல் சூழ்ந்த உலகில் முயற்சியால் புகழை நிலைநாட்டிய அரசர் வழி வந்தவனே! சங்கம் எனச் சொல்லப்படும் பெரிய எண் அளவுக்கு உன் வாழ்நாள் அமையட்டும். வாளை, ஆரல், வரால், கெடிற்று மீன்களை உடைய நீர் நிலைலகளையும் உயர்ந்த மதிலிலையும் உடையவனே!
நீ மறுமைச் செல்வம் விரும்பினாலும், மன்னர்களை வென்று புகழ்பெற விரும்பினாலும் அதற்கான வழியை நான் சொல்லித் தருகிறேன்.
நீரை முக்கியமாக கொண்டுள்ள உடம்புக்கு உணவு கொடுத்தவர் உயிர் கொக்டுத்ததற்குச் சமம்.
அந்த நெல்லையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்தவர் உயிரையும் உடலையும் சேர்த்தவர் ஆவர். நெல் முதலியவற்றை விளைவிக்கும் நிலம் பெரிதாக இருந்தாலும் மன்னன் முயற்சிக்குப் பலன் தராது; ஒரு வழி சொல்லித் தருகிறேன். அதைக் கடைப் பிடிப்பாயாக. பள்ளமான இடத்தில் நீர் தேங்கும்படி செய்தவர்கள் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்தவர் ஆவர்; அதோடு புகழும் கிட்டும் அப்படிச் செய்யாதவர் புகழ் நிற்காது. எனவே நீயும் நீர் நிலை பெருகச் செய்வாய்.
இதில் 4 வகை மீன்களைச் சொல்லுவதைக் கவனிக்கவும். நீர் சூழ்ந்த உலகம என்னும் அறிவியல் உண்மை சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் திரும்பித் திரும்பி வரும். இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரம்பிய உண்மை இந்தியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அது மட்டும் அல்ல; “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பது மணிமேகலையிலும் நீரின்றமையாது உலகம் என்னும் வரி திருக்குறளிலும் வருவது காண்க. உணவும் நீரும் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்னும் இந்து மதக் கருத்தும் பாரதத்தில் மட்டுமே காணப்படும். பிற நாட்டு இலக்கியத்தில் இப்படிப்பட்ட கொள்கைகளைக் காண முடியாது.
வாழ்க குடபுலவியனார்.
இயேசு சொன்னது உத்தமமான வாா்த்தை
உன் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு உன் பரமபிதாவை நோக்கி பிராத்தனை செய்வாயாக !
என்கிறாா்.
பிராத்தனையில் அடக்கம் தேவை.பகட்டு வெளிவேசம் ???????????
மேலும் நடுத் தெருவில் ஜெபம் செய்யும் கீழ்மகனை நம்பாதே என்றும் கருத்துள்ளது.
வாழ்க இயேசு.
Post a Comment