Wednesday, September 20, 2017

ஆசிரமத்தில் எரிக்கப்பட்ட நிலையில் 600 எலும்பு கூடுகள்!

சண்டிகர் : பாலியல் வழக்கில் சிக்கி, 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிர்சாவில் உள்ள தேரா ஷச்சா தலைமை ஆசிரமத்திற்குள் என்ன தான் நடக்கிறது என்பது பற்றி அரியானா போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது.

ஆசிரம தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அடுத்தகட்டமாக அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இதில் எரிக்கப்பட்ட நிலையில், 600 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ராம் ரஹீராம் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மோட்சம் அளிப்பதாக கூறியும் சிலர் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எரிக்கப்பட்ட நிலையில் இருந்த 600 எலும்புக் கூடுகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் 600 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதையும் போலீசார் வெளியிடவில்லை. அதேசமயம், தலைமறைவாக உள்ள ராம் ரஹீமின் வளர்ப்பு மகளான ஹனீப்ரீத் இன்ஷன் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேபாள போலீசாரின் உதவியுடன், அரியானா போலீஸ் குழு விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

Dinamalar

20-09-2017



2 comments:


  1. இந்துக்கள் அனைவருக்கும் சுவாமி விவேகானந்தாின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோன்ற கயவா்களை எளிதில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வாா்கள்.

    ReplyDelete
  2. Matra makkalukku nalla karuthu ariya, viveganandharidam eadum illaya?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)