Saturday, September 16, 2017

lஇந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்!


3 comments:

  1. ஏற்கனவே கேட்டதுதான். தேடிப்பிடித்து பதிவு செய்துள்ளீா்கள். இந்து பெண்கள் இதுபோல் ஆயிரம் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றாா்கள்.அதையெல்லாம் பதிவு செய்ய தங்களுக்கு மனம் வராது.எனெனில் அவா்கள் அனைவரும் காபீா்கள்.

    ReplyDelete

  2. தமிழ அழகு
    புலவர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

    பாண்டிய மன்னன் ஒருவன் புலவர்களைப் பற்றிப் பாடியதாகப் பழம் பெரும் பாடல் ஒன்று உள்ளது.

    போற்றினும் போற்றுவர் பொருள்கொ டாவிடில்

    தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

    மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்

    கூற்றினும் பாவலர் கொடிய ராவரே

    எமனை விட மோசமானவர்கள் புலவர்கள் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லும் பாண்டிய மன்னன் அதற்கான காரணங்களையும் வரிசையாக அடுக்கி விட்டார்.

    தூக்கி வைத்தால் ஒரேயடியாக இந்திரன் சந்திரன் என்று புகழ்வர்.

    கையிலே காசு தரவில்லை எனில் கீழே போட்டு மிதித்துத் தாழ்த்தி விடுவர். சொன்ன சொற்களை நிலைமைக்குத் தகுந்த மாதிரி மாற்றினும் மாற்றுவர். இவர்களிட்ம் மாட்டிக் கொண்டால் ஒருவன் படும் பாடு - எமனே தேவலை!

    இராமச் சந்திரக் கவிராயர் என்று ஒரு கவிஞர். அவரது அனுபவமோ இதற்கு நேர் எதிர்.

    ஒரு கஞ்சனிடம் அவர் சென்று சேர்ந்தார். அவர் அனுபவத்தை ஒரு பாடலிலேயே கூறி விட்டார் இப்படி:-
    கல்லாத ஒருவனை நான் கற்றா யென்றேன்

    காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

    பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

    போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்

    மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை

    வழங்காத கையனை நான் வள்ள லேயென்றேன்

    இல்லாது சொன்னேனுனக் கில்லை யென்றான்

    யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே!







    நான் கல்வி அறிவில்லாத ஒருவனைக் கல்விமானே என்று புகழ்ந்தேன். காட்டை வெட்டுகின்ற மறவனை நாட்டை ஆள்பவனே என்று புகழ்ந்தேன். பொல்லாதவன் ஒருவனை நல்லவனே என்றேன். யுத்தத்திற்கே செல்லாத ஒருவனை புலியே என்றேன். சுருங்கித் திகைந்த தோள்களை உடையவனை மற்போர் செய்வதற்கு உரிய தோள் என்றேன்.யாருக்கும் ஒன்றும் கொடாத கைகளை உடையவனை வள்ளலே என்றென்.

    இவ்வாறு இல்லாத குணங்களைச் சொன்ன உனக்கு இல்லை என்றான் அவன்.

    நானும் நான் செய்த பிழையால் பேசாமல் செல்கின்றேன்.

    சரி தானே!

    தத்துவப் பிரகாசர் என்று ஒரு புலவர்.

    தன்னைப் பற்றி விரிவாக அவர் குறிப்பிடுகிறார் மூன்று பாடல்களில்.

    நினைவு கவி சொல்வோமெனச் சொலிப் பலகவிதை

    நினைவினைத் திருடி வையோம்

    நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று

    நீள்வசைகள் பாட வறியோம்

    பினையிளைய நாவல ருடன்பங்கு பேசிப்பிர

    பந்தங்கள் பாடிக் கொடோம்

    பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய

    பேய்க்கிரந் தங்கள் பேசோம்

    இனிமைதரு பூருவத் துக்குருக் களைமறந்

    தெங்கணுந் தீட்சை யேற்கோம்

    இட்டவொரு பேர்மாற்றி மாதமொரு பேரிட்

    டிடப்பெறோ மிறுமாந் திரோம்

    தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்கணெஞ்

    சமுமுருகு கவிபா டுவோம்

    சமணூல் களைப்பொரு ளெனக்கொளோந் திருஞான

    சம்பந்த ரடியர் நாமே


    பாம்புகடி த்தாலதுவு நீக்க வல்லோம்

    பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்

    வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்

    விற்ல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்

    சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்

    தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை

    தீம்பரைநல்ல் வராக்கிக் குணமுண் டாக்குந்

    திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே


    ReplyDelete
  3. பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.

    உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்.

    அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.

    புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.


    காலம் காலமாக உரையாசிரியர்கள் இதற்குத் தகுந்த விளக்கம் சொல்லி வந்துள்ளதால் நாம் விதுரர் கூறியதை உணர முடிகிறது.

    எடுத்துக் காட்டாக ஒரு சுலோகத்தை இங்கே பார்க்கலாம்.


    ஏகயா த்வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பிந் வசே குரு I

    பஞ்ச ஜித்வா விதி த்வா ஷட் சப்த ஹித்வா சுகீ பவ II

    இதன் பொருள்:

    ஒன்றால் இரண்டை ஜயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

    இங்கு ஒன்று, இரண்டு, மூன்று போன்றவற்றிற்கான பொருள் விளங்கவில்லை.

    ஆனால் உரையாசிரியர்கள் தக்க விளக்கத்தைத் தந்துள்ளனர்.

    ஒன்றால் - ஒரே உறுதியான புத்தியால்

    இரண்டை - செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது இவ்விரண்டையும் ஆய்ந்து தீர்மானித்து’

    மூன்றை - நண்பர், விரோதி, நட்பும் பகையும் இன்றி நடு நிலையில் இருப்போர் ஆகியோரை

    நான்கினால் - சாம், தான, பேத, தண்டத்தால்

    ஐந்தை ஜயித்து - ஐந்து புலன்களை ஜயித்து

    ஆறை - சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம்,த்வைதீ பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜ நீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து

    ஏழை - பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக செலவழித்தல், ஆகிய ஏழு குற்றங்களையும்

    அறிந்து சுகமாக இரு.


    இப்போது நன்கு பொருள் விளங்குகிறது.

    இது போன்ற ஏராளமான நீதி மொழிகளை விதுரர் மனித குலத்தின் நன்மைக்காகத் தருகிறார்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)