Saturday, October 07, 2017

30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்!

30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்!

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு 3 இளைஞர்கள் 'தர்ஹாக்கு செல்ல வேண்டாம்: மத்ஹப் என்ற சாதி நம்மிடம் இல்லை: வரதட்சணை வாங்க வேண்டாம்: ஃபாத்திஹாக்கள் ஓதி புரோகிதத்தை வளர்க்காதீர்கள்: ஹத்தம் ஹந்தூரி நடத்தாதீர்கள்' என்று பிரசாரம் செய்தனர். துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். பிஜே என்ற மார்க்க அறிஞரை அழைத்து வந்து ஹால் மீட்டிங் போட்டனர்.

உடன் கிராம இஸ்லாமிய மக்கள் மத்தியில் சலசலப்பு... 'என்ன இது புது கொள்கை: நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? தர்ஹாக்களுக்கு போகக் கூடாது என்கிறார்கள்? ஃபாத்திஹா கூடாது என்கிறார்கள்? குழப்பவாதிகள்... கூப்பிடுங்கள் அவர்களை விசாரணைக்கு'  என்று ஊர் மக்களில் சில குறிப்பிட்ட நபர்கள் பள்ளிக்கு அழைத்தனர்.

அன்றைய மக்கத்து சிலை வணங்கிகள் நபிகள் நாயகத்தையும் அவரது தோழர்களையும் நோக்கி என்ன கேள்வி கேட்டார்களோ? அது போன்ற கேள்வியையே இவர்களும் கேட்டனர்.

மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

குர்ஆன் : 2:170

 ஊர் மக்கள் அழைக்கிறார்களே என்று மதித்து அந்த இளைஞர்களும் விசாரணைக்காக பள்ளிவாசல் நோக்கி வந்தனர். பெருங் கூட்டமே அங்கு அமர்ந்திருந்தது. அந்த ஏகத்துவ இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு அங்கு அமர்ந்திருந்த பெரிசுகளால் பதில் சொல்ல இயலவில்லை. ஊர் மக்களுக்கு கோபம் தலைக்கேறியது. விசாரணை என்ற பெயரில் அங்கு அராஜம் நிறைவேறியது. விசாரணைக்கு என்று அழைத்து விட்டு அந்த இளைஞர்களை அடிக்க ஆரம்பித்தனர். தெருக்களில் அடித்துக் கொண்டே அவர்களை விரட்டிச் சென்றனர். 'இன்றோடு இந்த இயக்கத்தை ஒழித்து விட்டோம்' என்ற இறுமாப்போடு களைந்து சென்றனர்.

ஆனால் இறைவன் நினைத்ததோ வேறு... அடி வாங்கிய அந்த மூன்று நான்கு இளைஞர்களும் முன்பை விட வீரியமாக உழைத்தனர். பண்டாரவாடை என்ற கிராமத்தில் ஏகத்துவ வித்துக்கள் அன்று விதைக்கப்பட்டது. விதைக்கப்பட்ட அந்த வித்துக்கள் முளை விட்டு.... செடியாக மாறி.... மரமாகி... கிளைகளாகி..... மொட்டு விட்டு..... பூப்பூத்து.... காயாகி..... இன்று கனியாக மாறி ஊரை வலம் வந்து கொண்டுள்ளது. 30 வருட காலத்தின் உழைப்புக்கு இறைவன் கொடுத்த பரிசு இன்று நீங்கள் பார்க்கும் காணொளி.......

அனைவரும் இளைஞர்கள். மற்ற மதங்களில், இயக்கங்களில் இளைஞர்கள் பெரும்பாலும் குடித்து விட்டு நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கையில் ஏகத்துவ இளைஞனோ குர்ஆனை கையில் எடுத்துள்ளான். அதன் சட்டதிட்டத்தை முடிந்த வரை வாழ்வில் கடைபிடிக்க முனைகிறான். உலக கல்வியையும் கற்கிறான்: மார்க்க கல்வியையும் கற்கிறான். ஃபஜ்ர் என்ற காலைத் தொழுகைக்கு தயாராகி பள்ளிக்கு வருகிறான். அழைப்புப் பணியை செய்கிறான். மாற்று மதத்தவரோடு இணக்கமாக வாழ்கிறான். இன்றைய இஸ்லாமிய தமிழக கிராமங்களின் பெரும்பாலான நிலை இதுதான். இந்நிலை மாற உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!

 இனி காணொளியைக் காண்போம்....







   

3 comments:

  1. பாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்
    October 6, 2017
    - அரவிந்தன் நீலகண்டன்

    அலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்
    விலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த
    மலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்
    தலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே

    உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்
    பலவாறு நின்புகழ்மை பாரித்து என்சிற்றறிவாற்
    சொலவருமோ? தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட
    நலமெலாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே

    அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து
    முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலை முதிர்ச்சியுற்ற
    மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றோம்
    இன்னுமிவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துவமே!

    இதைப் பாடியவர் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் நாகபட்டினம் என்கிற ஊரைச் சார்ந்த மறைமலையடிகள் எனும் தெலுங்கர்.
    -------------------------------------------------------------------
    பாரத நாட்டைப் பாடுவமே
    பரமா னந்தங் கூடுவமே!
    முனிவர்கள் தேசம் பாரதமே
    முழங்கும் வீரர் மாரதமே!
    பாரத தேசம் பேரின்பம்
    பார்க்கப் பார்க்கப் போந்துன்பம்!
    வந்தே மாதர மந்திரமே
    வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே!

    வந்தேமாதரம் என்போமே
    வாழ்க்கைப் பிணிகள் பின்போமே!
    காலை சிந்தை கதிரொளியேம்
    மாலை நெஞ்சில் மதிநிலவே!
    சாந்தம் சாந்தம் இமயமலை
    சார்ந்து நிற்றல் சமயநிலை!
    கங்கை யோடுங் காட்சியிலே
    கடவுள் நடனம் மாட்சியிலே!
    காடும் மலையும் எங்கள் மடம்
    கவியும் வரைவும் எங்கள் படம்!


    பெண்கள் பெருமை பேசுவமே
    மண்ணில் அடிமை வீசுவமே!
    அடிமையழிப்பது பெண்ணொளியே
    அன்பை வளர்ப்பது அவள் வழியே!
    பெண்ணை வெறுப்பது பேய்குணமே
    பேசும் அவளிடம் தாய்க்குணமே!
    சாதிப் பேயை யோட்டுவமே
    சமநிலையெங்கும் நாட்டுவமே!

    இதைப் பாடியவர் திரு. வி. கலியாண சுந்தரனார். இவர் ஆந்திராவைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைதாப்பேட்டை வட்டத்தில் துள்ளல் என்கிற கிராமத்தில் பிறந்த ஒரு தெலுங்கர்.

    ReplyDelete

  2. வேத வாணியும் பாரத தேவி
    வீர துர்க்கையும் பாரத தேவி
    மாதவர் கனல் பாரத தேவி
    மங்கலத் திரு பாரத தேவி
    சேது தொட்டிமயம் வரை நீண்ட
    தெய்வ நாட்டினள் பாரத தேவி

    மோது தென்கடல் முன் வளர்ந்தோங்கும்
    மூலசக்தியும் பாரத தேவி
    கோடி கோடி சிரங்கள் வணங்க
    கோடி கோடிக் கரந்தொழு தேத்தக்
    கோடி தேவர்கள் ஆசிகள் கூறக்
    கொலுவிருப்பவள் பாரத தேவி!

    இதைப் பாடிய கவியோகி சுத்தானந்த பாரதி

    ReplyDelete


  3. தவ்ஹித் ஜமாத் என்பது அச்சு அசல் அரேபிய அடிமைத்தனத்தை
    முஸ்லீம்கள் மத்தியில் உருவாக்க ஏற்பட்டுள்ள அமைப்பு ஆகும்.

    அரேபியாவில் இந்த இயக்கத்திற்கு வாகாபிகள் என்று பெயா். எங்கெல்லாம் அரேபிய பயங்கரவாதம் அரங்கேறுகின்றதோ அங்கு வாகாபிகள் இருப்பாா்கள். இந்துக்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் யுதா்களை அழிக்க நினைக்கும் இவா்கள் பெரும் ஆபத்தானவா்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)