மாட்டின் மேல் காட்டும் கரிசனையை மனிதனுக்கும் காட்டுங்கள் மாடுகளா!
ஆக்ரா : உ.பி.,யில், ஆம்புலன்ஸ் வராததால், உரிய நேரத்தில் சிகிச்சையின்றி இறந்த மனைவியின் உடலை தள்ளுவண்டியில் வைத்து, கணவன் எடுத்துச் சென்றார். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மெயின்புரி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவர், கன்னையாலால், 36. இவரது மனைவி, சோனி, 30. சமீபத்தில், சோனிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் சேவை பிரிவுக்கு, கன்னையாலால் தகவல் கொடுத்தார்.
ஒரு மணி நேரமாகியும், ஆம்புலன்ஸ் வராததால், சோனியை, தள்ளுவண்டியில் வைத்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, சோனியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து, சோனியின் உடலை எடுத்துச் செல்ல, அமரர் ஊர்தி வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், உடலை தள்ளுவண்டியில் வைத்து, போர்வையால் மூடி, கன்னையாலாலும், உறவினர்களும், வீட்டுக்கு எடுத்து வந்தனர்.ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படாதது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தரும்படி, மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
தினமலர்
14-03-2018

No comments:
Post a Comment