Thursday, March 29, 2018

அமீத்ஷா எப்போதாவது உண்மையும் பேசுவார் :-)


அமீத்ஷா எப்போதாவது உண்மையும் பேசுவார் :-)

கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக 2வது முறையாக சொதப்பியுள்ளது, முதலில் ஊழலில் முதலிடம் எடியூரப்பா அரசுதான் என்று வாய்தவறி உளறிக்கொட்டினார் அமித் ஷா. அப்போது தவறைச் சுட்டிக்காட்டியவரே தற்போது மொழிபெயர்ப்பில் சொதப்பி கூட்டத்தில் இருந்த பாஜகவினரை நெளிய வைத்தார்.

அன்று எடியூரப்பா பற்றி பேசி தர்மசங்கடமான வீடியோ வைரலாகியுள்ளது போல் இந்த தவறான மொழிபெயர்ப்பு வீடியோவும் காங்கிரஸாரால் உற்சாகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த முறை அமித் ஷா உரையை ஹிந்தியிலிருந்து கன்னட மொழிக்கு மொழி பெயர்த்த பிரஹலாத் ஜோஷி, “நரேந்திர மோடி ஏழைகளுக்கும் தலித்துக்களுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார்” என்றார்.

இதனையடுத்து சிரிப்பலை எழ பாஜகவினர் நெளியத் தொடங்கினர்.

இம்முறையும் எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-03-2018


1 comment:

  1. வாய் தடுமாற்றம் என்பார்களே அதுதான் இது. இமாலயசாதனை செய்துவரும் பாரதிய ஜனதாக்கட்சியை தாக்கி பேச வேறு வாய்ப்பே இல்லை.போயும் போயும் ஒரு வார்த்தை சறுக்கலை பெரிது படுத்தி பேசி மன ஆறுதல் அடைய வேண்டிய துா்பாக்கிய நிலையில் பாரதிய ஜனதாக் கட்சியின் எதிரிகள் வீழ்ந்து கிடப்பதைக் காணும் போது அளவில்லா ஆனந்தம்.ஆனந்தம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)