Tuesday, July 10, 2018

சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்.

காயல்பட்டணம், சதுக்கைத்தெரு சென்ரல் பள்ளிக்கூடம் அருகில், இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார் ஜனாப் தர்வேஸ்....
இவர் தனது வாடிக்கையாளர்களுக்கு இறைச்சியை பனை ஓலையில் லாவகமாக கட்டித் தருகிறார். பிளாஸ்டிக்கின் பயன்பாடு இதனால் வெகுவாக குறையும். பனை ஓலைகளும் பயன்பாட்டுக்கு வரும். நமது முன்னோர்களின் வழியை பின் பற்றும் இவரை வாழ்த்துவோம்.
இவ்வாறு பல துறைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று வழியை கண்டு பிடிப்போம்: சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்.



1 comment:

  1. அருமையான சாதனை. நல்ல முன் உதாரணம்.அதிக அளவில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)