Sunday, August 12, 2018

சாராயத்தால் வீழ்ந்த மு க முத்து!

சாராயத்தால் வீழ்ந்த மு க முத்து!
ஒரு மனிதன் மதுவால் எந்த அளவு பாதிக்கப்படுவான் என்பதற்கு மு க முத்துவின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. மு க ஸ்டாலின் இடத்தில் இருக்க வேண்டியவர் மதுவால் சீரழிந்து இன்று உருக்குலைந்து போயுள்ளார். பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு படங்களில் பார்த்த அந்த அழகு மகன் இன்று உருக்குலைந்து போயுள்ளார்.
கலைஞர் அவர்கள் மதுக் கடைகளை திறக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது நேரில் சென்று 'வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. இந்த மக்கள் குடித்து பாழாய் போவார்கள்' என்று ராஜாஜி கோரிக்கை வைத்தார். தனக்கு வருமானம்தான் முக்கியம் என்று கருதிய கலைஞர் மதுக் கடைகளை பலரது எதிர்ப்பையும் மீறி திறந்தார். அதில் அவரது குடும்பத்தின் மூத்த குடிமகனே வீழ்ந்ததுதான் ஒரு கரும் புள்ளி.
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.
---------------------------------------------
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219


3 comments:

  1. திருவள்ளுவருக்கு 1330 அடி உயர சிலை எழுப்பி என்ன பயன் ?
    குறளோவியம் எழுதி என்ன பயன் ?
    திருக்குறளுக்கு உரை எழுதி என்ன பயன் ?
    -----------------------------------
    இத்தனையையும் கலைஞா் செய்தது கொள்கையினால் இல்லை.இலட்சிய பிடிப்பு காரணம் கிடையாது.
    சிலை எழுப்பினால் திட்ட மதிப்பீட்டில் 10 முதல் 30 சதம் கமிஷன் கிடைக்கும்.
    மற்றகாரியங்கினால் பண ஆதாயம் கிட்டும்.
    பண ஆதாயத்திற்குதான் ஏதையும் செய்வா் கலைஞா்.
    முக.முத்து அவருக்கு பாவம்.அவரது் son அவரது sin.ஜெயலலிதாவிடம் போய் பணம் பெற்று மருத்துவ சிகிட்சை பெற்றார்என்று நண்பா் கூறுகின்றாா்.
    முக.முத்துவிற்கு சுயஅறிவு எங்கே போவது.

    ReplyDelete
  2. சிலையில் திருடியர்வர்களை விட கேவலமானவர்கள் சவப்பெட்டியில் திருடியவர்கள்

    ReplyDelete
  3. 7000 சிலையை களவாண்டவர்கள் யார்? இந்து அறநிலையாயத்துறை சேர்ந்தவர்கள் , பார்ப்பனர்களின் உதவி இல்லாமல் எப்படி திருடமுடியும்?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)