Monday, September 10, 2018

தண்ணீர் பாட்டில்களை தாகிப்பவருக்கு இலவசமாக....

ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் அங்கிருந்த ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து தண்ணீரை அள்ளிக் குடித்தார். பிறகு, கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் தம் மனத்திற்குள் ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே கடுமையான தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத் தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் மற்ற பிராணிகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
புஹாரி : 2363 அபூஹூரைரா (ரலி).
----------------------------------------
சவுதி அரேபியாவில் கோடைக் காலங்கள் மற்றும் நோன்பு திறக்கும் நேரங்களில் சிறுவர்கள் இவ்வாறு தண்ணீர் பாட்டில்களை தாகிப்பவருக்கு இலவசமாக அளித்து வருவதை பரவலாக பார்க்கலாம். இதனை நம் ஊர்களிலும் செயல்படுத்தி இறைவனின் அன்பை பெறலாம்.



2 comments:

  1. போட்டதையே போட்டு பக்கத்தை ஒட்ட வேண்டிய அவலநிலையில் சுவனப்பிரியன். பாலைவனம் போல் இலக்கியம் கவிதைகள் என்று போற்றத்தக்க ஏதும் இல்லாத அரேபிய நாகரீகத்தின் அடிமைகள் .இந்த சிறு சம்பவத்தை திரும்ப திரும்ப எழுதி பார்த்து திருப்தி அடைய வேண்டும்.பற்றாக்குறை.

    ஏற்கனவே இதை வெளியிட்டுள்ளீா்கள்.சவுதியில் வேறு நல்ல விசயங்கள் இல்லையா ?
    அரைத்த மாவையே அரைக்க எப்படி மனம் வருகின்றது.

    ReplyDelete
  2. சவுதியில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது, உதாரணமாக எல்லா நாட்டு முஸ்லிம்களும் ஒரே பள்ளியில் தோளோடு தோல் சேர்ந்து தொழலாம், இந்தியா போல ஜனாதிபதியாக இருந்தாலும் கோவிலுக்கு வெளியே நிற்கவேண்டிய அவசியம் இல்லை (ஆனால் பார்ப்பனர்கள் கோவிலுக்குள் கற்பழிக்கலாம்). ஒரே தட்டில் சாப்பிடலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)