Tuesday, September 18, 2018

ஆஷூரா நோன்பு ஏன்?

ஆஷூரா நோன்பு ஏன்?
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்".
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
ஆஷூரா நோன்பின் சிறப்புகள்:-
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை".
நூல்: புகாரி 2006
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்".
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976
"நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்".
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

7 comments:

  1. எவை எவை வேண்டும் - வள்ளுவரின் அறிவுரை என்ற முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இதைப் படிக்கலாம்.



    எவை எவை வேண்டாம்? - வள்ளுவரின் அறிவுரை!



    ச.நாகராஜன்



    மனித வாழ்க்கையில் வேண்டுவன எவை எவை என்று கூறி அறிவுறுத்திய வள்ளுவர் எவை எவை வேண்டாம் என்பதையும் கூறியிருக்கிறார்.

    வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் (குறள் 177)

    பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கம் வேண்டவே வேண்டாம். அது பயன் தரும் என்று நினைத்தால் அது நடக்காது. பயன் தரும் காலத்தில் அது நிச்சயம் சிறப்பாக அமையாது.

    ஆக திருட்டுச் சொத்து வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.

    *

    வேண்டற்க என்று ஆரம்பிக்கும் இன்னொரு குறள் இது:

    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

    தூண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று (குறள் 931)




    PICTURE POSTED BY LALGUDI VEDA

    Sin City (பாவ நகரம்) என்று அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சலஸ் சூதாட்டம் ஆடுவோரின் “சொர்க்கம்”!!

    அதில் உள்ளே நுழைந்தால் நூற்றுக் கணக்கான சூதாட்ட களங்கள் நம்மைக் கவரும். சில சமயம் வென்று விடுவோம். ஆனால் மொத்தமாகப் பார்த்தால் வெளியே வரும் போது நூற்றுக்கு நூறு பேருக்கும் நஷ்டமாகவே அமையும்.

    வெல்வது போலத் தோன்றி இரையைக் காட்டும் லாஸ் ஏஞ்சலஸ் இரவு சூதாட்ட க்ளப்புகள் நம்மை அழித்து விடும்.

    இப்படிப்பட்ட சூதாட்ட விடுதிகள் எங்கிருந்தாலும் அது எந்த வகையாக இருந்தாலும் வெற்றியை முதலில் தருவது போலக் காட்டினாலும் அங்கே நுழையாதே என்பது வள்ளுவரின் கட்டளை!

    *

    ReplyDelete
  2. இனி வேண்டா என்று அறிவுறுத்தும் குறள்கள் 10.



    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

    பொறுத்தனோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

    மிகவும் சுவாரசியமான இந்தக் குறளை பரிமேலழகர் உள்ளிட்ட பழைய உரையாசிரியர்கள் சரியான முறையில் விளக்கத்தை அளிக்க நவீன “தோழர்களும்” நாத்திகத்தில் ஊறிய “குறள் வித்தகர்களும்” தன் மனதிற்கேற்ப “விசித்திர உரை” எழுதியுள்ளனர்.

    பரிமேலழகர் உள்ளிட்டோர் பல்லக்கில் அமர்ந்திருப்பவனையும் அதைத் தூக்கிச் செல்பவனையும் பார்த்தாலேயே உங்களுக்குத் தெரியுமே வினைப் பயன் எப்படிப் பட்டதென்று. இதற்கு அறநூல்களின் துணையே தேவை இல்லை என்கின்றனர்.




    வினைப் பயன் விடாது என்பது வள்ளுவர் வாக்கு.

    ஆனால் நாத்திகத் தோழர்களோ சிவிகையில் செல்பவனையும் அதைத் தூக்கிச் செல்பவனையும் பார்த்து அறத்தின் இயல்பு இது தான் என்று எண்ண வேண்டாம் என்று வள்ளுவர் கூறுவதாக உரை கூறுகின்றனர். இப்படி வள்ளுவர் வலிதாக பல்லக்கைக் காட்டி ஒரு உதாரணம் மூலம் இக்கருத்தைக் கூறுவாரா! மாட்டார்.

    *

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

    பழித்தது ஒழித்து விடின் (குறள் 280)

    மொட்டை அடித்தலும் தாடி வளர்த்தலும் வேண்டவே வேண்டாம். அப்படிச் செய்து தவம் செய்வதற்கு பதிலாக உலகம் சுட்டிக் காட்டும் தீய பழக்கங்களை ஒழித்தாலேயே போதும் என்கிறார் வள்ளுவர்.

    *

    ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஓரதலையாப்

    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள் 357)

    நன்றாக ஆராய்ந்து பார்த்து உள்ளத்தால் மெய்ப்பொருளை உணர்ந்தால் மீண்டும் பிறப்பு என்பது வரும் என்று நினைக்க வேண்டாம்.

    மெய்ப்பொருள் கண்டார் மீண்டும் ஜனன மரணச் சுழலில் அகப்பட மாட்டார்.

    *

    அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை

    எண்ணி இடத்தாற் செயின் (குறள் 497)

    ஒரு காரியத்தைச் செய்யும் போது நன்கு ஆராய்ந்து எண்ணி செய்தால் அஞ்சாமை தவிர வேறு ஒரு துணையும் தேவை இல்லை.

    *

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

    நட்பாம் கிழமை தரும் (குறள் 785)

    இருவரிடையே தோன்றும் உணர்ச்சி - ஒரே மாதிரியான உணர்வு - நட்பைத் தரும் ; வளர்க்கும்.

    அடிக்கடி சென்று சந்தித்துப் பழகிப் பேசினால் தான் நட்பு வரும் என்பதில்லை!

    *




    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

    அற்றது போற்றி உணின் (குற 942)

    மருந்து என்பதே ஒருவனுக்கு வேண்டாம் என்று வள்ளுவர் சொல்லும் ரகசிய குறள் இது.

    தக்க அளவுடன் உண்டதை ஜீரணித்து அதன்படி ஒருவன் வாழ்ந்தால் அவனுக்கு மருந்தே வேண்டாம்.

    ReplyDelete
  3. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

    என் ஆற்றுங் கொல்லோ உலகு (குறள் 211)

    மழை எந்த பிரதிபலனை எதிர்பார்க்கிறது?ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. அதே போல பிரதிபலன் எதிர்பாராது தேவையான உதவி செய்க என்பது வள்ளுவரின் அறிவுரை.

    இதன்படி வாழ்ந்தவன் அர்ஜுனன் என்பது குறிப்பிடத் தகுந்தது. எவருக்கு உதவி செய்கிறானோ அவரிடமிருந்து எதையும் பெறுவதில்லை என்பது அர்ஜுனனின் பிரதிக்ஞை. இப்படி ஒரு அரிய வீரனை மஹாபாரதம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது!

    *

    சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்

    கழல் காப்புக் காரிகை நீர்த்து (குறள் 777)

    எங்கும் பரவும் புகழை வேண்டி தன் உயிரையும் தன் உயிரையும் வேண்டாத வீரர் காலில் கட்டும் கழலே அழகான அணியாகும்.

    *

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

    வேண்டாப் பொருளும் அது (குறள் 901)

    மனைவி சொல் கேட்டு அதன் படி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்கள். உரிய தன் கடமையைச் செய்ய விரும்புவோர் வேண்டும் பொருளும் அதுவே ஆகும்.

    மனைவி அழகில் மயங்கி அவள் பொருளற்றதைச் சொன்னாலும் அதைச் செய்வோருக்கான எச்சரிக்கைக் குறள் இது.

    *

    ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்

    தோற்றம் நிலக்குப் பொறை (குறள் 1003)

    பொருளை நன்கு சேர்க்கும் ஒருவன் அதைப் பிறர்க்கும் கொடுத்து வரும் புகழை விரும்பவில்லை எனில் அவன் பூமியில் வாழ்ந்தாலும் கூட அது பூமிக்கான சுமையே.

    *

    வள்ளுவரைப் படித்து அறிவது ஒரு வாழ்க்கைப் பயிற்சி. அதில் செய்ய வேண்டுவனவற்றையும் செய்ய வேண்டாதவற்றையும் அறிவதே நமது முயற்சி.

    வள்ளுவ ரகசியம் தெரிந்தோர் அதன் படி வாழ்வர்; உயர்வர்!

    ReplyDelete
  4. Dear Nazeer,
    can u stop irrelevant comments? that is useless and waste of time

    ReplyDelete
  5. Dear Nazeer,
    can u stop irrelevant comments? that is useless and waste of time-
    --------------------------------------------
    ஆஷிக் ஒரு இந்திய வெறுப்பாளன்.அரேபிய அடிமை.அரேபிய மத வெறியன்.

    திருக்குறள் கசக்கின்றது இவருக்கு.பாவம்.பரிதாபம்.இவரது முதுகிலா தகவல்கள் வெளியாகின்றது ?

    ReplyDelete
  6. முகம்மதுவிற்கு ஆஷூரா நோன்பு வைக்க கற்றுக்கொடுத்தது யுதர்கள்தாம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
    சொந்த புத்தி அவருக்கு கிடையாது.
    யுதர்களையே காப்பி அடித்து வாழ்ந்து வந்தாா்.
    ஆமாம் அல்லா ஆஷூரா நோன்பு வைக்கச் சொல்லாதபோது யுதர்கள் செய்தார்கள் என்பதற்காக இவரும் ஆஷூரா நோன்பு இருந்தது சரியா ? தவறா ?

    ReplyDelete
  7. மூடனே திருக்குறளுக்கு இங்கே என்ன வேலை? இந்த இடத்திற்க்கான பின்னூட்டமா?
    எனக்கு பிடித்த நூல் திருக்குறள் தான், ஏனென்றால் பார்ப்பன கொழுப்பை தவறு என்று சொல்லும் நூல் திருக்குறள் தான், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
    யுத்த மதமே இஸ்லாத்திலிருந்த பிரிந்த வழிகேடுதானே, இறைத்தூதர் மூஸாவுக்கு (அலை) அதிகம் வேண்டப்பட்டவர்கள் நாங்கள் தான் , வரலாறு அறியாத அறிவிலி

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)