Sunday, January 20, 2019

அமெரிக்க விமான நிலையத்துக்கு முகமது அலி பெயர் சூட்டப்பட்டது!

அமெரிக்க விமான நிலையத்துக்கு முகமது அலி பெயர் சூட்டப்பட்டது!
அமெரிக்காவின் லூஸ்வில்லி விமான நிலையம் முஹம்மது அலி விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகளின் ஓட்டெடுப்புக்குப் பின் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. கென்டகி நகருக்கு அருகில் இவ்விமான நிலையமானது உள்ளது.
விமானப்பயணம் என்றாலே குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கு ஒரு வித அலர்ஜி. இதை விளையாட்டாக பல பேட்டிகளிலும் கூறியுள்ளார். அவர் பெயராலேயே விமான நிலையம் வரப் போவதை அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார். வாழ்நாள் முழுக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக உழைத்த இஸ்லாமிய மார்க்கத்தை அமெரிக்காவெங்கும் கொண்டு சென்ற மாவீரன் முகமது அலிக்கு சிறந்த கண்ணியம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் உதவி
வாஷிங்டன் போஸ்ட்
17-01-2018


1 comment:

  1. ஒரு துறையில் சிறப்பு தகுதி பெற்றவர் பெயரை பொது நிறுவனங்களுக்கு பெயர் வைப்பது பொருத்தமானதுதான். பிற மதத்தைச் சோ்ந்தவர்கள் என்றால் கண்டு கொள்ளாத சுவனப்பிரியன் மத ஆவேசம் காரணமாக இந்த செய்தியை பதிவிட்டுள்ளாா். முஹம்மது அலி என்று அரேபிய மதவாதி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)