Tuesday, August 27, 2019

முதலுக்கே மோசம் வந்துவிட்டது.....



முதலுக்கே மோசம் வந்துவிட்டது. இந்திய பொருளாதாரத்தின் ஆணி வேரான RBIன் பணத்தில் கை வைத்து விட்டார்கள். Surplus amount Transfer to Government என்ற பெயரில் 1.76லட்சம் கோடியை எடுக்கிறார்கள். இதை செய்யவிடாமல் தடுத்த RBI கவர்னர்கள் ரகுராம்ராஜன், உர்ஜித்பாட்டில்க்கு அழுத்தம் கொடுத்து விலக செய்தார்கள். அந்த இடத்தில் Finance அல்லது Economy பற்றி எந்த படிப்போ நிபுணத்துவமோ இல்லாத IAS அதிகாரி சக்திகந்தா தாசை கொண்டுவந்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.
இது RBIன் நம்பகத்தன்மையை குலைத்து மிகப்பெரும் பொருளாதார சீரழிவிற்கு அடிகோல போகிறது. இந்தப் பணத்தை இதற்கு முன்பும் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவை உண்மையான Surplus Amount. சாராசரியாக 50,000 கோடி அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்தார்கள். மன்மோகன்சிங் காலத்தில் இது சராசரியாக 20,000கோடி மட்டுமே. ஒவ்வொரு வருட Auditing முடிவிலும் இப்படி Surplus பணத்தை அரசுக்கு RBI கொடுப்பதுண்டு. ஆனால் ஒரு போதும் முதலுக்கே மோசமாகும் அளவிற்கு எடுத்ததில்லை.
இந்த பணம் மக்கள் பணம். பல ஆண்டுகளாக சேர்த்து வைக்கப்பட்ட மக்களின் பணம். இது தேசத்திற்கான இன்சுரன்ஸ். பெரும்போர் அல்லது இயற்கை பேரழிவு என்று இதை எடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்த அரசின் பொருளாதார தோல்வி மட்டும் இதற்கு காரணம் அல்ல. வரி விலக்கு என்ற பெயரில், வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை கார்பொரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்து நடந்த மிகப்பெரிய ஊழலின் எதிரொலி இது.
இதற்கு எதிராக இன்று மக்கள் குரல் கொடுக்காவிட்டால் நாளை இதை தொடர்ந்து செய்வார்கள். வங்கிகள் தங்கள் குறுகியகால டெபாசிட்டிற்கு துளி கூட வட்டி கொடுக்கப்போகாத நிலைக்கு தள்ளப்படும். ஏற்கனவே இது 4%க்கும் கீழாக சென்று வருகிறது. Repo Rateஐ குறைப்பதன் மூலம் FD, RD, PPF நீண்டகால முதலீட்டிற்கும் எந்த பெரிய பலனும் கிடைக்கப்போவதில்லை.
ஆன்மிகம், பக்தி கட்டுரைகளை கொஞ்ச காலம் படிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தை படிக்கத் தொடங்குங்கள். இல்லையென்றால் உங்கள் சேமிப்பும் கைக்காசும் களவாடப் படுவது தெரியாமல் போகக்கூடும். அதே போல பிள்ளைகளை Engineering படிக்க வைக்காமல் Economics, Commerce, Auditing, Accountancy படிக்கவையுங்கள். வீட்டிற்கொரு Engineer தேவையில்லை. ஆனால் பொருளாதாரம் தெரிந்தவர் வேண்டும். அது தான் நாட்டிற்கும், வீட்டிற்கும் உடனடி தேவை.

1 comment:

  1. காடடறபிகளின் புத்தகங்களைப் படித்து மூடத்தனத்தில்ஆழ்ந்து கிடக்கும் சுவனப்பிரியனுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்க தகுதி இல்லை.ரிசா்வ வங்கி கீழ்கண்டபடி உபரி பணத்தை மத்திய அரசிற்கு கொடுத்துள்ளது.
    2009-10 -25009 கோடி
    2010-11-18759
    2011-12- 15009
    2012-13-16010
    2013-14-33010
    2014-15-52679
    2015-16-65896
    2016-17-65876
    2017-18-40659
    2018-19-40000
    வருடந்தோறும்நடைபெறும்ஒரு சாதாரண நிகழ்ச்சி.இதற்குபோய் இப்படி படிப்பவனை ஏமாற்றுகிறாயே? என்னடி இப்படி இருக்கினறீர்கள். தேச உணா்வு இப்படியா மறத்து போக வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)