Wednesday, September 18, 2019

கணவன் கண்டு கொள்ளவில்லை: மம்தா நலம் விசாரித்தார்

கணவன் கண்டு கொள்ளவில்லை: மம்தா நலம் விசாரித்தார்
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேற்று வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விமான நிலையத்தில் மோடியின் மனைவி யசோதா பென் இருப்பதை கண்டதும் அவரை நேரில் சென்று சந்தித்தார்.
கொல்கத்தாவில் 2 நாள் பயணம் செய்த யசோதா பென், பயணத்தை முடித்து கொண்டு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்ல கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேற்று வந்திருந்தார்.
அதே நேரத்தில், டெல்லி செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையத்துக்கு மம்தா பானர்ஜியும் வந்தார்.
அப்போது யசோதா பென்னை கண்டதும், அவரை நேரில் சென்று மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். யசோதா பென்னுக்கு நினைவு பரிசாக தன்னிடம் இருந்த சேலையை மம்தா பானர்ஜி அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய பாஜக கூட்டணி அரசையும் மம்தா பானர்ஜி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Polimer News
18-09-2019


1 comment:

  1. திருமதி. யசோதா பென் அவர்களின் முகததைப் பாருங்கள்.எவ்ளவவு சந்தோசமாக இருக்கின்றார்.செளதா விற்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணிப்பாருங்கள். குமரிகள் கூட்டம் சோ்ந்தவுடன் கிழவி மனைவியை கைவிட்டவா்கள் அரேபிய தலைவார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)