பள்ளிவாசல் கட்ட நிலம் தந்த சீக்கியர்!
உபியின் முஜாஃபர் நகரை ஒட்டிய புர்காஜி எனும் இடத்தில் கடை வைத்து தொழில் புரிபவர் சுக்பீர் சிங் என்ற சீக்கியர்.
புர்காஜி நகரின் சேர்மேன் ஜஹீர் ஃபரூக்கியிடம் சென்ற ஞாயிற்றுக் கிழமை 1000 ஸ்கொயர் இடத்தை சுக்பீர் சிங் தானமாக கொடுத்தார். எதற்காக இவர் நிலம் கொடுத்தார்?
'தற்போது அரசியல் மக்களை மதத்தின் பெயரால் பிரித்து வருகிறது. மக்களிடம் சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் இறை இல்லம் கட்டிக் கொள்ள 1000 ஸ்கொயர் ஃபிட் உள்ள எனது இடத்தை தானமாக தருகிறேன்.' என்கிறார்.
நாட்டின் நலனில் சாமான்யன் வைக்கும் அக்கறையில் ஒரு சதம் கூட நாட்டின் பிரதமரோ, நாட்டின் உள்துறை மந்திரியோ அக்கறைவைப்பதில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட்டதாக மோடி மன்கி பாத்தில் நேற்று உரை நிகழ்த்துகிறார். மனசாட்சியை அடகு வைத்து விட்டு எப்படி இவர்களால் உரையாற்ற முடிகிறது? எப்படி துணிந்து பொய் பேச முடிகிறது?
ராமர் இங்குதான் பிறந்தார் என்று பொய் கூறி முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த ஒரு இடத்தை வம்படியாக பிடுங்கிக் கொண்ட இந்துத்வாக்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய தருணமிது.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
25-11-2019
டைம்ஸ் ஆஃப் இந்தியா
25-11-2019

நல்லது காபீர்கள் ஏமாறுவது 1000 ஆண்டுகளாக நடைபெறறுவருகின்றது. இதொன்றும் புதியது அல்ல. அழியப் பிறந்த இந்து தான் அழியும் வழிகளை செம்மைபடுத்தி வருகின்றான்.
ReplyDelete