பின்னணி பாடகி ஜெனிஃபர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் போஸ்டனில் ஒரு கிருத்தவ குடும்பத்தில் பிறந்தவர் ஜெனிஃபர். பல புகழ் பெற்ற ஆங்கில பாடல்களை பாடுவதோடு அராபிய பாடல்களையும் பாடி வந்துள்ளார். அராபிய மொழியின் பற்றால் இஸ்லாத்தையும் குர்ஆனையும் படிக்க ஆரம்பித்துள்ளார். மொராக்கிய பாடகர் ஒருவர் இவருக்கு இஸ்லாம் சம்பந்தமான பல விளக்கங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு குர்ஆன் வசனங்களால் ஈர்க்கப்பட்டு சில வருடங்கள் முன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
இஸ்லாத்தின் அருமையை உணர்ந்ததால் அது பற்றிய தேடல் மேலும் அதிகமானது. குர்ஆனை அதன் சட்டங்களோடு ஓதுவதற்கு பயிற்சி எடுத்தார். தற்போது அவ்வாறு அவர் ஓதிய குர்ஆனின் பகரா வசனத்தைத்தான் நாம் கேட்கிறோம். இஸ்லாமிய உலகில் இந்த வீடியோ மிக பிரபலமாகியுள்ளது. பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ளவர் கூட இவ்வளவு தெளிவாக குர்ஆனின் வசனங்களை ஓத முடியாது. அந்த அளவு தெளிவுற ஓதுகிறார். இறைவன் இவரது அறிவை மேலும் விசாலமாக்குவானாக!

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)