ரய்யான் !!!
டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட சில மாதங்களுக்கு முன்பு கணவனை இழந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் நமது நிவாரண குழுவால் பராமரிக்கப் பட்டிருந்தார். திடீரென நள்ளிரவில் வலி எடுக்கவே அவரை அழைத்து சென்று ஜாமியா நகரில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டது. இறைவனின் கிருபையால் அவர் அழகான ஆண் குழந்தையை சுகப் பிரசவத்தில் பெற்றார். தாயும்,குழந்தையும் நலமாக உள்ளனர்.
அந்தக் குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும் என தாயார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நமது குழுவினர் 'ரய்யான்' என்று பெயரிட்டனர்.
மறுமையில் நாம் அனைவரும் ரய்யான் வாசலின் வழியாக சுவர்க்கத்தில் நுழைய இறைவன் அருள் புரிவானாக...
BY

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)