Tuesday, July 21, 2020

ஒரு ரூபாய் கூட கட்டணமாக பெற்றது கிடையாது..

இவர் சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமியர். தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்...

வங்கி பணி முடிந்ததும் மாலையில் வீடு திரும்பி சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்...
அங்கு இரவு முழுவதும் கண் விழிக்கிறார், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதை செய்து கொடுக்கிறார்.. பிறகு மருத்துவர்களிடம் நோயாளி இறந்த பின், உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு முறையாக பிறகு உடல்களை பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்களை பெற்றுக் கொண்டு தனது நண்பர்களுடன் இறந்தவர் உடல்களை அவரவர் மத சடங்குகள், நம்பிக்கையின்படி உடல் தகனம் செய்கிறார்...

இதற்காக அவர் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கட்டணமாக பெற்றது கிடையாது..

இதுவரை 80 பேர் உடல்களை நல் அடக்கம் செய்திருக்கிறார்..

இதற்கு உதவிகரமாக பக்கபலமாக இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கும் நாமும் அவருக்கு வாழ்த்து சொல்லலாமே...
#வாழ்த்துக்கள் #தோழர்


1 comment:

  1. இதற்கு உதவிகரமாக பக்கபலமாக இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கும் நாமும் அவருக்கு வாழ்த்து சொல்லலாமே...
    #வாழ்த்துக்கள் #தோழர்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)