Tuesday, September 15, 2020

பாகிஸ்தான் லாஹூரில் உள்ள பத்ஸாஹி பள்ளிவாசல்!

 பாகிஸ்தான் லாஹூரில் உள்ள பத்ஸாஹி பள்ளிவாசல்!

பாகிஸ்தான் லாஹூரில் உள்ள பத்ஸாஹி பள்ளிவாசல் 1671 லிருந்து 1673 வரை மன்னர் ஒளரங்கஜேப் உத்தரவால் கட்டி முடிக்கப்பட்டது. தனது தந்தை ஷாஜஹான் கட்டிய டெல்லி ஜூம்ஆ மசூதியின் மாடலை பின் பற்றி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதனை கட்டி முடித்தார் மாமன்னர்.
இந்த பள்ளிவாசல் சில காலம் சீக்கியர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அந்த நாட்களில் இங்கு போர் தளவாடங்களை போட்டு வைக்கும் இடமாக இதனை பயன்படுத்தி வந்துள்ளனர். குதிரைகளை கட்டி வைக்கும் லாயமாகவும் இந்த பள்ளியின் வளாகத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். பிறகு பிரிட்டிஷார் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பள்ளியையும் லாஹூரையும் கைப்பற்றினர். அதன் பிறகு முஸ்லிம்கள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு பள்ளியை தொழும் இடமாக மாற்றியுள்ளனர்.
இதன் பரப்பளவு 276000 ஸ்கொயர் ஃபிட் ஆகும். ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் வரை இங்கு தொழ முடியும். உலகின் மிகப் பெரும் பரப்பளவுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்று. தற்போதும் அனைத்து மத மக்களும் சென்று பார்க்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் பெண்கள் உள்ளே செல்ல வேண்டுமானால் முகம் கை தவிர மற்ற உறுப்புகளை மறைத்து கண்ணியமாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலா தளங்களில் பக்ஸாஹி பள்ளிவாசலும் அதன் சுற்றுப் புறங்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
மொழிபெயர்ப்பு
சுவனப்பிரியன்








1 comment:

  1. இந்து ஆலயங்களை அழித்து அதன் செல்வங்களை கொண்டும், இந்துக்களின் வீடுகளைக் கொள்ளையடித்து பிரமாண்டமான அரேபிய மத வழிபாட்டுத்தலங்கள் இந்தியாவில் அரேபிய முகலாள ஆப்பானிய கொள்ளைக்காரா்களால்கட்டப்பட்ட கல்லறைகளைக் கண்டால் கண்ணீா் வடிப்பதைத்தவிர வேறு என்ன செய்ய ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)