Saturday, December 26, 2020

இறுக்கினால் இறுகி விடும்

 ஏமனிலிருந்து அகதியாக மலேசியாவிற்கு தனது தாயோடு வருகிறார் புகாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர் காலணிகளை விற்கத் தொடங்குகிறார். சிறிது பணம் சேர்ந்தவுடன் தனது தாயாரிடம் கொண்டு கொடுக்கிறார். அவரது தாயோ 'புஹாரி... உனது வருமானத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடு' என்கிறார். புகாரியோ 'அம்மா... சிறிது காலம் கழித்து இன்னும் பணம் சேரட்டும். அப்போது கொடுக்கலாம்' என்கிறார்.


ஆனால் அவரது தாயாரோ 'புஹாரி...  இது இறைவன் நமக்கு அளித்த கொடை. தாமதிக்காது பாதியை தர்மம் செய்து விடு' என்கிறார். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து தனக்கு கிடைக்கும் லாபத்தில் பாதியை தர்மமாக செலவிடுகிறார். தற்போது இவருக்கு வயது 52. மலேசியாவின் உயரிய விருதான டான்ஸ்ரீ பட்டத்தையும் பெற்று 70 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். மலேசிய பணக்காரர்களில் ஒருவராகவும் இடம் பிடித்துள்ளார். தர்மம் கொடுக்க கொடுக்க குறையாது. அது பல்கிப் பெருகும் என்பதற்கு புஹாரியின் வாழ்வு ஒரு உதாரணம். 

-----------------------------------------------

சிறந்த தர்மம் எது?
"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1426
இறுக்கினால் இறுகி விடும்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.
அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),
நூல்: புகாரி 1433, 1434



1 comment:


  1. குறளட வழி நடந்த உத்தமார்களில் இவரும் ஒருவா்.வாழ்க.
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை-திருக்குறள்.

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
    குறள் விளக்கம்:

    வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
    மேலே செல்ல
    குறள்:222
    நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
    குறள் விளக்கம்:

    மற்றவரிடமிருந்து பொருளைப் பெறுதல் நல்லதாயினும் இரத்தல் தீது; மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே சிறந்தது.
    மேலே செல்ல
    குறள்:223
    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே உள.
    குறள் விளக்கம்:

    யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
    மேலே செல்ல
    குறள்:224
    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
    குறள் விளக்கம்:

    பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
    மேலே செல்ல
    குறள்:225
    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    குறள் விளக்கம்:

    தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
    மேலே செல்ல
    குறள்:226
    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
    குறள் விளக்கம்:

    வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
    மேலே செல்ல
    குறள்:227
    பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
    குறள் விளக்கம்:

    தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
    மேலே செல்ல
    குறள்:228
    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
    குறள் விளக்கம்:

    தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் சுயநலமிகள், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
    மேலே செல்ல
    குறள்:229
    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
    குறள் விளக்கம்:

    பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
    மேலே செல்ல
    குறள்:230
    சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
    குறள் விளக்கம்:

    சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)