Sunday, April 18, 2021

டெல்லி ரெட் போர்ட் அருகே உள்ள நிகாம் போத் காட்!

 

டெல்லி ரெட் போர்ட் அருகே உள்ள நிகாம் போத் காட்!

 

இன்று இரவு காணக் கிடைத்த காட்சி.... மக்கள் இரவு உணவுக்காக அலை மோதுகிறார்கள். வயிறு காய்ந்தால் கொரோனா பயம் அவர்களுக்கு எங்கிருந்து வரும். இதற்கு முழு காரணமும் மத்திய மாநில அரசுகளையே சாரும். டெல்லி முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிரதமர் நிதிக்கு செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் எங்கு சென்றன? இந்த மக்கள் கேட்பது ஒரு வேளை உணவுதானே!

 

தற்போது பல இஸ்லாமிய அமைப்புகளும், தன்னார்வ தொண்டர்களும் உணவு தயாரித்து வருகின்றனர். அதற்குள் அங்கு உணவுக்காக அடிதடியே நடக்கும் போல் உள்ளது. நாட்டின் தலைநகரின் காட்சி இது. இனி லாக் டவுன் மற்ற மாநிலங்களும் போட்டவுடன் நிலைமை மேலும் மோசமாகலாம்.

 

இந்த ஏழை மக்களின் சாபம் சுகமாக ஏசியில் உறங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை ஒரு நாள் கண்டிப்பாக உலுக்கும்.




 

 

1 comment:

  1. போங்க சுபி. அவர்கள் கேட்டது ராமர் கோவில் தானே இப்போ வந்து சாப்பாடு கொடு, ஹாஸ்பிடல் கொடு,ஆக்ஸிஜன் கொடுன்னு கேக்கலாமா. சமய கல்வி கொடுத்தா எல்லாம் சரியாயிடும்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)