Monday, July 12, 2021

சிறு வயது முதலே கண்ணில் கோளாறு.


 


12 வயதான இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே கண்ணில் கோளாறு. நிறங்கள் இவனுக்கு தெரிவதில்லை. எல்லாம் ஒரே நிறங்களாகவே இததனை ஆண்டுகள் பார்த்து வந்துள்ளான்.

 

மருத்துவர்கள் சில சிகிச்சைகளை செய்த பின்பு ஒரு கண்ணாடியை தருகின்றனர். அந்த கண்ணாடியின் மூலம் முதன் முதலாக தனது வாழ்வில் நிறங்களை பார்க்கிறான் அந்த சிறுவன். நிறங்களை பார்த்த சந்தோஷத்தில் குலுங்கி அழ ஆரம்பித்து விடுகின்றான். நெகிழ்ச்சியான சம்பவம்.

 

நாம் கேட்காமலேயே இறைவன் நமக்கு அனைத்து அவயங்களையும் சரி வர கொடுத்துள்ளானே! இது பற்றி என்றாவது நினைத்து படைத்தவனுக்கு நன்றி செலுத்தியிருக்கிறோமா?

 

” மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.

குர்ஆன் (7:10)

2 comments:

  1. இந்த மனிதனை நிறக்குருடாக படைத்தது யாரின் தவறு? அல்லாவின் தவறா?

    100 ஆண்டுகளுக்கு முன் இப்படி நிறக்குருடு நோய் வந்தவா்கள் அனைவரும் சுகம் கிடைக்காமல் மரணித்து விட்டாா்கள்.

    அல்லா ஏன் இந்த கொடூமை செய்கின்றான் ? அல்லாவின் ஓரவஞ்சகத்தை நிறுத்துவது எப்படி ?

    ReplyDelete
  2. Taliban, danish siddique?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)