Monday, September 26, 2022

கத்தார்... சென்ற வெள்ளிக்கிழமை

 கத்தார்...

சென்ற வெள்ளிக்கிழமை பள்ளியில் தொழ வைக்க இமாம் வருவதற்கு தாமதமானது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒரு ஆப்ரிக்கர் தான் இமாமாக நிற்பதாக சொன்னவுடன் மக்களும் அனுமதித்தனர். உடனே அவர் அழகிய சொற்பொழிவை நிகழ்த்தினார். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தொழுகையை சிறப்பாக முடித்தது பலராலும் பாராட்டப்பட்டது.
எந்த மதரஸாவிலும் சென்று பட்டம் பெறவில்லை: மார்க்க அறிஞருக்கான எந்த தோற்றமும் இல்லை. இறைவன் உள்ளங்களையே பார்க்கிறான்.
இது நமது நாட்டில் சாத்தியப்படுமா? முறையாக ஓதுவார்கள் பட்டம் பெற்றவர்கள் கோவிலில் அர்ச்சகராக முடிகிறதா?
-------------------------------
“நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-5012



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)