Saturday, December 31, 2022

அது சாமி ஆட்டம் அல்ல.. சாதிவெறியாட்டம்

 

செருப்புகளை தலையில் வைத்து நடக்க சொல்லியபோது வராத சாமி ஆட்டம்..

சேரி பெண்களை மானபங்க படுத்திய போது வராத சாமி ஆட்டம்.

சேரியின் குடிசைகளை கொளுத்திய போது வராத சாமி ஆட்டம்.

குடிநீர் தொட்டியில் மலத்தை கொட்டியபோது வராத சாமி ஆட்டம்.

சக மனிதர்கள் கோயிலுக்குள் நுழையும் போது வருகிறதென்றால்....

அது சாமி ஆட்டம் அல்ல.. சாதிவெறியாட்டம்..

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)