அதிகாலையில் இறப்பு செய்தி
திருப்பூர்ல பின்னலாடை கம்பெனி வெச்சுருந்த குடும்ப நண்பர். எனக்கு நினைவு தெரிஞ்சு, பிரியாணி கேட்டா திருப்பூர்ல இருந்து கோவை கூப்டு போற அளவு பணப் புழக்கம். பணமதிப்பிழப்புல முதல் அடி வாங்குனாரு, GST, GSTயால நூல் விலை உயர்வு-னு அடுத்தடுத்த நஷ்டம்.
நஷ்டத்த சமாளிக்க கடன் வாங்குனாரு. வட்டி கட்டியே அவரோட சாம்ராஜ்ஜியம் சரிஞ்சுருச்சு.
வாஜ்பாய் காலத்துல இருந்தே பாஜககாரர். பணக்காரர் என்பதாலயே அவரு சொல்லி சங்கியா மாறுனவங்க நெறய பேரு. எங்க குடும்பத்துல. கடந்த சில மாசமா, தப்பு பண்ணிட்டேன்-னு எனக்குலாம் கால் பண்ணி அழுதாரு..
அவருக்கு கடன் குடுத்த எந்த சங்கியும் "நாட்டுக்காக வட்டி வேணாம்"-னு சொல்லல. பொறுமையா திருப்பி குடுங்க-னும் சொல்லல.. கம்பெனிய வித்து முழு கடனும் அடைச்சுட்டு வெறும் ஆளா தன் மரணத்த தானே தேடிக்கிட்டாரு.. ~மத வெறியின் பெயரில் ஜி சகாக்களால் நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான கொலை இது!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)