Followers

Saturday, October 03, 2020

மனிதனாய் பிறந்தவனுக்கு முதல் பிரியம் மனிதர்களிடமிருந்தே தொடங்கும்.

 


மார்க்கம் அறிந்த ஒரு தாயால்தான் சாத்தியப்படும்.

 இந்த சிறுவயதில் எத்தனை அழகாக தன்னை படைத்த இறைவனை விளங்கி வைத்துள்ளான் இந்த சிறுவன்.

இவை எல்லாம் மார்க்கம் அறிந்த ஒரு தாயால்தான் சாத்தியப்படும்.
நமது குழந்தைகளையும் இவ்வாறு சிறு வயதிலேயே ஏகத்துவத்தை போதித்து வளர்ப்போம்.



குவைத் மன்னர் இறப்புக்காக வருந்தும் இந்து மத சகோதரர்!

 குவைத் மன்னர் இறப்புக்காக வருந்தும் இந்து மத சகோதரர்!


இனத்தால், மொழியால், மதத்தால், நிறத்தால், நாட்டால் வேறுபட்டுள்ளார் குவைத் மன்னர். ஆனாலும் இந்த இந்து நண்பர் தனது வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்ததாக நினைத்து வருத்தப்படுகிறார். கொரோனா வால் மக்கள் பரிதவித்த நிலையில் அரபுகளுக்கு எப்படி இலவச வைத்தியம் செய்யப்படுகிறதோ அதே போன்று வெளி நாட்டவர்களும் இலவச மருத்துவ சேவை வலியுறுத்தி பல வெளிநாட்டு தொழிலாளர் உயிரை காப்பாற்றியுள்ளார். அவரவர் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல விமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மனன்ர் இறந்த செய்தியால் இது போல் பல லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வீட்டு இறப்பாக நினைத்து மனம் உருகியுள்ளார்கள்.

ஆட்சியாளர் என்றால் இப்படி இருக்க வேண்டும். சாமான்ய மக்களின் அன்பை பெற வேண்டும். நம் நாட்டில் ஒரு ஆட்சியாளர் இருக்கிறார. அதானி, அம்பானிக்கு சாதகம் எதுவோ அதனை செய்து கொடுக்கவே முனைப்பு காட்டுகிறார். திடீரென்று லாக்டவுன் அறிவிப்பு செய்து பல ஆயிரம் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வாகன வசதி இல்லாமல் இறந்த செய்தியை அறிந்தோம். அவரைப் பொருத்த வரை சாமான்ய மக்களின் உயிர் ஒரு பொருட்டல்ல.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் சாமான்ய மக்கள் க்யூவில் நின்று இறந்த செய்தி அறிந்திருப்போம். ஆனால் சேகர் ரெட்டியிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இத்தனை கோடி எப்படி வந்தது என்பதற்கு ஆதாரம் சிபிஐயிடம் இல்லையாம். இதனை சொல்வதற்கு வெட்கப்படவில்லை மத்திய அரசு. உண்மை வெளி வந்தால் பல அரசியல் தலைகள் உருளும் என்பதை மோடி அறியாதவல்ல. இப்படியும் கேவலப்பட்டு ஒரு ஆட்சியாளர் இருப்பாரா என்று சிந்திக்கின்றோம் நாம்.



Friday, October 02, 2020

ஆப்பிரிக்காவின் ருவாண்டா

 நவீன கால இஸ்லாமிய வரலாற்றில், நாம் யாருமே மறக்க கூடாத, நம் அடுத்த தலைமுறைகளுக்கு நிச்சயம் கடத்த வேண்டிய நிகழ்வு என்றால் அது ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாடு தொடர்பான சம்பவங்கள் தான்.


1994-ல், 1% மட்டுமே என்று இருந்த ருவாண்டாவின் முஸ்லிம் மக்கட்தொகை அடுத்த சில வருடங்களில் 14%-த்தை தாண்டியது. எப்படி மிக குறுகிய காலத்தில் இந்த அபார வளர்ச்சி சாத்தியம் என்ற கேள்விக்கான பதிலில் நம் எல்லோருக்கும் படிப்பினை இருக்கிறது.

ருவாண்டா இரு பெரும் இனப்பிரிவுகளை கொண்ட நாடு, ஹுடு மற்றும் டுட்சி இனங்கள் தான் அவை. இவற்றில் ஹுடு மக்கள் தான் பெரும்பான்மை. பல ஆண்டுகளாக இவர்களுக்குள் நீடித்து வந்த பனிப்போர் ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ருவாண்டா அதிபர் விமான விபத்தில் கொல்லப்பட, இதற்கு காரணம் சிறுபான்மை டுட்சி மக்கள் தான் என்று குற்றம் சாட்டி வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள் ஹுடு இன வலதுசாரிகள். இதற்கு அரசும் உடந்தையாக செயல்பட, வன்முறை இனக்கலவரமாக வெடித்தது.

டுட்சி இன மக்களும், கலவரத்தை எதிர்த்த மிதவாத ஹுடு மக்களும் குறிவைக்கப்பட்டனர். ருவாண்டா முஸ்லிம்கள் இந்த இரு இன பிரிவுகளிலும் காணப்பட்டாலும், கலவரத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தனர். பள்ளிவாசல்களில் ஒருங்கிணைப்பை கொண்டுவந்து இனக்கலவரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

கொல்லப்படுவதில் இருந்து மக்களை காக்க பல்வேறு யுக்திகளையும் கையாண்டார்கள் ருவாண்டா முஸ்லிம்கள். பள்ளிவாசல்கள் மற்றும் தங்கள் வீடுகளில் இலட்சக்கணக்கான டுட்சி இனத்தவருக்கு அடைக்கலம் தந்தனர். சொல்லிமாளாத துயரங்களை எதிர்கொண்டு அவர்களுக்கு உணவு முதலிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொடுத்தார்கள்.

மேலும், ஹுடு வன்முறையாளர்களிடத்தில் உளவாளிகளாக நுழைந்து அவர்களின் திட்டங்களை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தினார்கள். சவப்பெட்டிகளுக்குள் மக்களை அடைத்து ஒரு பிம்பத்தை கட்டமைத்தெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை காத்திருக்கிறார்கள். பல முஸ்லிம்கள் தங்கள் உயிரை இப்பணிக்காக இழந்திருந்தார்கள்.

தங்களின் இந்த செயல்பாட்டிற்கு 'எவரொருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் (உலக) மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' என்ற குர்ஆன் வசனத்தையே (5:32) பல முஸ்லிம்களும் சுட்டிக்காட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டது. இனக்கலவரம் முடிவுக்கு வந்தபோது, பெற்றோரை இழந்து தவித்த டுட்சி இன சிறுவர்களுக்காக, முஸ்லிம் பெண்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அவர்களுக்கு கல்வி தந்ததுடன் தாயாக இருந்து கவனித்துக்கொண்டதாகவும் ஆவணப்படுத்தியது வாஷிங்டன் போஸ்ட்.

முஸ்லிம்களின் இத்தகைய நடவடிக்கைகளால் கவரப்பட்ட மக்கள், இனக்கலவரத்தின் முடிவில், கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்க ஆரம்பித்தனர். தங்களை முஸ்லிம்கள் காப்பாற்றியதற்கு பின்னணியில் குர்ஆன் இருந்ததை உணர்ந்த காரணத்தால் இஸ்லாமை தழுவினோம் என டுட்சி இன மக்களும், மிகச் சிறிய சமுதாயமாக இருந்த போதிலும் எதற்கும் அஞ்சாது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் முஸ்லிம்கள் நின்றது தங்களை கவர்ந்த காரணத்தால் இஸ்லாமை தழுவினோம் என ஹுடு இன மக்களும் கூறினர்.

இனக்கலவரத்திற்கு முன்பாக 1%-மாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் 15%-மாக உயர்ந்தது இந்த காரணங்களால் தான். இஸ்லாமிய தழுவல் எந்த அளவிற்கு வீரியமாக இருந்தது என்றால், இந்த மனமாற்றத்தை தடுக்க வாடிகனின் ஆதரவை நாடும் அளவு சூழ்நிலை சென்றதாக குறிப்பிடுகின்றன சில ஊடகங்கள்.

இன்று ருவாண்டாவின் அமைச்சரவை, இராணுவம் என்று எல்லா துறைகளிலும் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர் முஸ்லிம்கள். இனம் மொழி மதம் கடந்து பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே கணக்கில் கொண்டு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இவர்களுடைய செயலில் நிச்சயம் உலக மக்கள் எல்லோருக்கும் படிப்பினை இருக்கிறது.

'ஒருவர் தன் இனத்தின் மீது அன்பு செலுத்துவது இனவெறி அல்ல. மாறாக தன் இனத்தவர் தவறு செய்ய முற்படும் போது அவருக்கு துணை போவதே இனவெறியாகும்' - முஹம்மது நபி (அமைதி உண்டாவதாக). நூல்: அபூதாவூத்.

படம்: ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள விளையாட்டரங்கத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்கள், 2019.

செய்திக்கான ஆதாரங்கள்:
1. The Washington Post
2. TRT World
3. Qantara
4. The New Times
5. BBC Sounds
6. Wikipedia

Bro Aashiq Ahamed ன் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது




Thursday, October 01, 2020

இதுதான் மரணித்த, மன்னரின் மண் அறை...

 குவைத் நாட்டின் மன்னரின் நல் அடக்கம் முடிந்தது....


இதுதான் மரணித்த, மன்னரின் மண் அறை...

பூக்களை கொட்டவில்லை...

கட்டடம் கட்டவில்லை...

மண் அறையில் யாரும் தங்களின் தலையை தாழத்தி கீழே விழவில்லை....

மன்னன் ஆனாலும் சாதாரண மனிதன் ஆனாலும் மய்யவாடியும் ஒன்றுதான்...

மண் (குழி)அறையும் ஒன்றுதான்.

நம் நாட்டில் ஐந்து வருடம் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் பண்ணும் அளப்பறையை இங்கு ஒப்பிட்டுப் பார்போம்.....