Thursday, August 17, 2006

குர்ஆனும் இந்து மத வேதங்களும் !

குர்ஆனும் இந்து மத வேதங்களும் !

ஒரு கதையை எடுத்துக் கொண்டாலே அதன் நடையை வைத்து இது சுஜாதா, இது பாலகுமாரன், இது தமிழ்வாணன் என்று கண்டு பிடித்து விடுவோம்.ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சில நியதிகள் இறைவன் கொடுத்த வேதங்களிலும் ஆங்காங்கே தென்படும்.இது போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.

1.' மாருத்பிஹி ராக்னா ஆஹாஹி'
'அக்னியின் ரகசியம் பாலைவன மக்களுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்டது'
1 : 19 : 1-9 -ரிக் வேதம்

இவை ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள சுலோகங்கள். இந்த சுலோகமானது திரும்ப திரும்ப ஒன்பது இடங்களில் தொடராக இடம் பெறுகிறது.

'ஃபபி அய்யி ஆலாயி ரப்பிகும் மாது கத்திபான்'
'உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்'
55 : 13 - குர்ஆன்

குர்ஆனிலும் மேலே குறிப்பிட்ட வசனம் 'அர்ரஹ்மான' என்ற அத்தியாயத்தில் திரும்ப திரும்ப 31 இடங்களில் வருகிறது.

2).'வைலுய் யௌமயிதில் லில்மகத்திபீன்'
'பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடுதான்'
77 : 15, 19, 24,28 - குர்ஆன்

மேற்கண்ட வசனம் குர்ஆனில் ஒரே அத்தியாயத்தில் பத்து தடவை திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம்.

'நா பான்ற மன்யசி ஷாம் ஜயக அத்ஹித் அனு அஸ்'
10 : 133 - ரிக் வேதம்

மேற்கண்ட சுலோகம் ரிக் வேதத்தில் ஐந்து இடங்களில் திரும்பத் திரும்ப வருகிறது.

3). 'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி உள்ளோம். படிப்பினை பெறுவோர் எவரும் உண்டா?'
54 : 17 , 22, 32, 40

சந்திரன் என்ற அத்தியாயத்தில் மேற் சொன்ன வசனம் நான்கு இடங்களில் திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம்.

'கஷ்மி தேவயா ஹவிஷ வித்ஹெம் '
12 அத்தியாயம், யஜீர் வேதம்

மேற் கண்ட சுலோகம் யஜீர் வேதத்தில் ஒன்பது இடங்களில் திரும்ப திரும்ப வருகிறது.

'விட்டான்மி அஸ்யரோதசி'
1 : 105 - ரிக் வேதம்

மேற்கண்ட சுலோகம் ரிக் வேதத்தில் பதினெட்டு இடங்களில் தொடர்ச்சியாக வருகிறது.

குர்ஆன் மூல மொழியில் இருப்பது போல் இந்துக்களின் ஆதி கிரந்தங்களும் ஓரளவுக்கு மூல மொழியில் இருப்பதால் இந்த ஒற்றுமையைக் காண முடிகிறது. ஏசுவக்கு அருளப்பட்ட பைபிள் மூல மொழியான அராமிக்கிலும், யூதர்களின் வேதமான தோரா மூல மொழியான ஹீப்ரூவிலும் இன்று இருந்திருக்குமானால் குர்ஆன், பைபிள், தோரா, இந்து மத வேதங்கள் அனைத்தும் ஒரே நடையிலும் ஒரே கருத்தையும் கூறுவதைக் கண்டிருப்போம்.

துரதிர்ஷ்ட வசமாக அந்த வேதங்களெல்லாம் புரோகிதர்களால் மாற்றப் பட்டு விட்டது. அதே போல் ஆதி கிரந்தங்களான ரிக், யஜீர், சாம,அதர்வண வேதங்களிலும் வர்ணாசிரமக் கொள்கைகள் ஆங்காங்கே புகுத்தப் பட்டு விட்டது. 'வேதங்களில் சாதி' என்ற தலைப்பில் தங்கமணியும் இது சம்பந்தமாக விரிவாக விளக்கி இருந்தார். இத்தகைய இடைச் செருகல்களை வேதங்களைத் தொகுத்த வியாசரோ அல்லது இந்து மதத்தை இடையில் சீர் செய்த ஆதி சங்கரர் காலத்திலோ யாராவது ஏற்றி இருக்கக் கூடும். இது பற்றிய உண்மையை இறைவனே அறிவான்.

கல்கி அவதாரம்

1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி வந்து விட்டார் என்று பண்டிட் வேத பிரகாஷ் உபாத்யா 'கல்கி அவதார்' என்ற நூலிலே மிகவும் விரிவாக அலசி இருக்கிறார். இவர் இதற்காக வைக்கும் எட்டு ஆதாரங்களை என்னுடைய முந்தய 'இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற பதிவில் விரிவாக விளக்கி இருக்கிறேன்.

வெறும் வாய் வார்த்தையாக இதை இவர் கூறவில்லை. வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் ஆராய்ந்து அந்த விபரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தொகுத்துதான் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். வங்காளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இந்நூலை அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து எட்டு பண்டிதர்கள் பார்வையிட்டு ஆதாரபூர்வமான செய்திகளையே தொகுத்து வழங்கியுள்ளார் என்று கூறி மதிப்புரை வழங்கி தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

'அந்த அராபியர் தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்'
1 : 163 : 1 - ரிக் வேதம்

'இறைவனின் தூதராகவும் தூதர்களில் முத்திரை (இறுதி) யாகவும் முகம்மது இருக்கிறார்'
33 : 40 - குர்ஆன்.

இரண்டு வேதங்களுமே முகமது நபி இறுதித் தூதர் என்று ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக விளக்குகின்றன.

'ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியார் தனது சீடர்களுடன் தோன்றுவார். அவரத பெயர் முகமது ஆகும். அந்த அரபு மகா தேவரை (வானவர் போன்றவரை) 'பஞ்சஹவ்யா' விலும் கங்கை நீரிலும் நீராட்டி (அவரது அனைத்து பாவங்களையும் கழுவி) மனமார்ந்த பெரு மதிப்பையும் பக்தியையும் முன் வைத்துக் கூறுவர்.நான் உமக்குக் கீழ்படிகிறேன். மனித சமுதாயத்தின் பெருமையே! அரபு வாசியே! நீர் தான் சாத்தானை ஒழிக்க ஒரு பெரும் படையை திரட்டி உள்ளீர். நீர் மிவேச்ச நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பட்டவராகவும் உள்ளீர்.நீர் அந்த மேலான பரம் பொருளின் மீது பக்தி கொண்டவருமே அவனின் அம்சமுமாய் இருக்கின்றீர். நான் உமது அடிமை. உமது காலடியில் என்னை ஏற்றுக் கொள்ளும்.'

3 : 3 : 5 - 8 பவிஷ்ய புராணம்

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபூ ஆசியா,

33 comments:

  1. தங்களின் வலைப்பூ மிக்க விவரமாகவும் ஆதாரத்துடனும் உள்ளது. இதைப்பற்றி சில காலங்களுக்கு முன் நான் எங்கோ படித்திருக்கிறேன்.

    மேலும் சில சம்பவங்கள்.

    1. பிறந்த குழந்தைகளைக் கொன்று அழிக்கும் கம்சனும் பிர்அவ்னும் (PHAROAH).

    2. சிறையில் பிறந்த கோபாலனை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லும்போது கடல் பிளந்து வழிவிட்டதும், மோஸஸ் தனது மக்களுடன் பிர்அவ்னிடம் தப்பித்துச் செல்லும்போது கடல்பிளந்து வழி விட்டதும்.

    3. ரோமாபுரியைச் சேர்ந்தோர் அப்போது காளைமாட்டை வணங்கி வந்ததுவும்.

    4. ஊழிப்பெருவெள்ளம் வந்து உலகை அளிப்பது, நோவாவைச் சுற்றிப் பிண்ணப்பட்டிருக்கும் ஊழிப் பெருவெள்ளம்.

    இதைப்பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  2. ம்யூஸ்!

    //ஆனால், தாங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இஸ்லாமியர்களிலேயே நிறையப் பேர் காஃபிர்கள்தான் இல்லையா?//

    முதலில் ஒருவன் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து விடடதாலேயே முஸ்லிம் ஆகிவிட முடியாது. அரசாங்க கெஜட்டில் வேண்டுமானால் முஸ்லிம் என்ற பிரிவில் வருவார். ஆனால் இறைவன் அவரை இஸ்லாமியன் என்று ஒத்துக் கொள்வதற்கு இறைவன் சொன்ன முக்கிய கட்டளைகளை தன் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். அப்துல்லா என்ற பெயரை வைத்துக் கொண்டு இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை தர்ஹாவிலும், தனி மனிதனிடத்தும், சிலைகளிடத்தும் சென்று நிறை வேற்றினால் அவனும் காபிராகி விடுகிறான். அநியாயமாக உயிர்க் கொலைகளை செய்பவனும் காபிராகி விடுகிறான். இதுபோல் அரபி பெயர் வைத்த காஃபிர்கள், இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொண்டு நிறைய இருக்கிறார்கள். மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் அந்த மக்களுக்கு குர்ஆனை சரியாக விளங்க வைக்காததே முக்கிய காரணம்.

    ReplyDelete
  3. திருவடியான்!

    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!

    நான்கு விபரங்களைக் கொடுத்து இரண்டு மத கருத்துக்களையும் ஒப்பிட்டுக் கூறியிருக்கிறீர்கள். இது போன்ற தகவல்களின் மூலம் உலகை படைத்தது ஒரே இறைவன்தான் என்றும் வேதங்கள் அனைத்தும் அந்த ஒரே இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் மேலும் உறுதியாகிறது. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் இதிகாசங்கள் மக்களிடம் பிரபல்யம் ஆனதுபோல் நான்கு வேதங்களும் பிரபல்யமாகவில்லை. நான்கு வேதங்களையும் மொழி மாற்றம் செய்யாமல், மக்களிடம் கொண்டு செல்லாமலும் இந்து மத புரோகிதர்கள் மறைத்தன் காரணம் நமக்கு இப்பொழுதுதான் விளங்குகிறது.

    காருன்!

    'அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை அவன் வெளிப் படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன், 'இதுவே உங்கள் இறைவன். மோசேயின் இறைவன் அவர் வழி மாறிச் சென்று விட்டார்.' என்றான்.
    அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும் அவர்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

    20 : 88, 89 -குர்ஆன்.

    ReplyDelete
  4. அசலம்!

    //வாழ்த்தும்
    பெஹ்ரேனிய வாழும் அன்பன்
    அசலம்//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. மோல்ஸ்!

    //என்ன சுகவனம் படமா ஒரு புது கதை சொல்லரீர்?..//

    சுகவனமா! :-(
    ஐயா... என்னுடைய பெயர் சுவனப் பிரியன். பெயரையே சரியாக படிக்காத நீங்கள், பதிவை எந்த லட்சனத்தில் படித்திருப்பீர்கள் என்று தெரிகிறது. இன்னொரு முறை பதிவை நன்றாக படிக்கவும். அது படம் இல்லை அனைத்தும் ஆதாரங்கள் என்பது விளங்கும். ...

    ReplyDelete
  6. 3At 3:45 AM, மு.மயூரன் said...
    சுவனப்பிரியன்,

    விவாதங்கள் ஓரளவுக்கு மேல் பயன் தரப்போவதில்லை.
    நீங்க்ளே சொன்னதுபோல், இறைமறுப்பாளர்களின் செயலுக்கு இறைவன் பொறுப்பாளியல்ல. எனவே என்னை கட்டுப்படுத்தும், தன்வழிப்படுத்தும் ஆற்றல் அவருக்கில்லை. என் வழியை தீர்மானிக்கும் ஆற்றல் அவரை விட என்னிடம் அத்கமாயுள்ளது. என்னளவில் அவரை விட நானே ஆற்றல் மிக்கவன்.

    அது ஒரு புறமிருக்க,

    குருட்டுத்தனமான மத நம்பிக்கை எவ்வாறு மனிதாபிமானத்தை, அடிப்படை மனித் அநேயத்தைக்கூட மறுதலித்துவிடுகிறது என்பதற்கும், மத நம்பிக்கை எப்போதும் அதன் உச்ச நிலையில் காட்டுமிராண்டித்தனமாகவே மாறிவிடும் என்பதற்கும் உங்கள் பதில் மிக நல்ல எடுத்துக்காட்டு.

    லெபனானில் சாகும் அப்பாவிகளின் சாவை, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இவ்வளவு கேவலமாக, மனிதத்தன்மையற்று நீங்களும் , உங்கள் மதமும் நியாயப்படுத்துமானால், அந்த மதத்தை, அதனை பின்பற்றுவோரின் கருத்துக்களை எள்ளளவும் நான் மதிப்பதற்கில்லை.

    உங்களுடனான உரையாடல் இத்தோடு முற்றுபெறுவதாய் உணர்கிறேன்.

    மதத்துக்காக மனிதர் அல்ல.
    மனிதருக்காகவ்வே மதம்
    மனிதாபிமானமற்ற மதவாதிகளோடு பேச எதுவுமில்லை.

    ReplyDelete
  7. Mayuran!

    //என்னை கட்டுப்படுத்தும், தன்வழிப்படுத்தும் ஆற்றல் அவருக்கில்லை. என் வழியை தீர்மானிக்கும் ஆற்றல் அவரை விட என்னிடம் அத்கமாயுள்ளது. என்னளவில் அவரை விட நானே ஆற்றல் மிக்கவன். //


    ஆணவத்தின் உச்சக் கட்டம் உங்களின் வார்த்தைகள்.

    'நானே உங்களின் மிகப்பெரிய இறைவன் என்றான்'
    79 :24 -குர.ஆன்

    'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.'என்று பிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணை சுட்டு எனக்கொரு மாளிகைளை கட்டு. அதன் மீதேறி மோசேயின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்.' என்றான்.
    28 : 38 - குர்ஆன்

    உங்களைப் போலவே எகிபதில் பிர்அவுன் என்ற அரசனும் பெருமையடித்துக் கொண்டிருந்தான். முடிவில் இறைவனால் கடலில் மூழ்கடிக்கப் படும்போது 'இறைவனை ஏற்கிறேன்' என்றான். அவனின் வார்த்தையை இறைவன் சட்டை செய்யாது கடலில் மூழ்கடித்தான். அந்த உடல் உலகத்தார் அத்தாட்சிக்காக இன்றும் எகிப்தில் வைக்கப்பட்டுள்ளது. அவனைப் போல அதிகாரமோ, செல்வமோ கூட உங்களுக்கு கொடுக்கப் பட வில்லை. அவனுக்கே அந்த நிலை எனும் போது உங்களின்நிலையை நினைத்து பரிதாபப் படுகிறேன். இது போன்ற சவால்களையெல்லாம் விடுப்பதை விட்டு தவிர்ந்துஇறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

    //லெபனானில் சாகும் அப்பாவிகளின் சாவை, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை//

    லெபனானில் இஸ்ரேல் செய்யும் காட்டு மிராண்டித்தனத்தை உங்களை விட அதிகமாக நான் எதிர்க்கிறேன்.

    'கொலைக்குப் பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொரவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும் 'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
    5 : 32 - குர்ஆன்.

    இதன் மூலம் அநியாயமாக கொலை செய்வது எந்த அளவு கடுமையான குற்றம் என்பதை குர்ஆன் விளக்குகிறது.

    //அதுசரி கடவுள் ஏன் இப்போது இஸ்ரேலை ஆதரிக்கிறார்? லெபனான் மக்களையும் அரபிக்களையும், குழந்தைகளையும் கொல்வது கடவுளுக்கு பிடிக்குமோ?//

    என்ற உங்களின் குதர்க்கமான கேள்விக்குத் தான் 'அதிலும் சில நன்மைகளை ,படிப்பினையை இறைவன் நாடியிருக்கலாம். இறைவனே அறிந்தவன்' என்று கூறியிருந்தேன். அந்த பதிலை உங்கள் தோதுக்கு வளைக்க முயற்ச்சிக்கிறீர்கள். உண்மை எதுவென்பது பதிவைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

    ReplyDelete
  8. At 7:53 PM, rd said...
    //உலகின் முதல் மனிதரான ஆதம் இறை அடியாராகத்தான் இருந்தார். அவரின் வழித் தோன்றல்கள் தான் நானும் நீங்களும். இதில் கூட உலக சகோதரத்துவத்தை எந்த அளவு இஸ்லாம் சொல்கிறது பார்த்தீர்களா? இதனால்தான் இஸ்லாத்தில் தீண்டாமை அறவே ஒழிக்கப் பட்டிருக்கிறது//

    இஸ்லாத்தில் தீண்டாமை இல்லையென்றால் பிறகு ஏன் சன்னி,ஷியா பிரிவுகள் அதில் இருக்கின்றன? ஷியா முஸ்லிம்கள் ஈராக்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சன்னி முஸ்லிம்களால் கொல்லப்படுகின்றனர்.சிலசமயம் பள்ளிவாசல் உள்ளேயே.அவர்களும் உங்களை மாதிரியே ஒரே புனித நூல்,ஒரே இறைத்தூதர்,ஒரே கடவுள்தான் பின்பற்றுக்கின்றனர்.அப்படியிருந்தும் ஏன் இந்த ஈனசெயல்?இதுவும் இஸ்லாம் மதத்தின் தீண்டாமைதானே?

    ReplyDelete
  9. ஆர்.டி!

    //இஸ்லாத்தில் தீண்டாமை இல்லையென்றால் பிறகு ஏன் சன்னி,ஷியா பிரிவுகள் அதில் இருக்கின்றன?//

    ஷியா, சன்னி பிரிவுகள் தீண்டாமையினால் வந்தது அல்ல. முகமது நபியின் மருமகனும் அன்றைய ஆட்சியாளருமான அலீ காலத்தில் இந்த பிரிவு உண்டானது. நபித் தோழர்களில் ஒரு சிலர் முகமது நபியின் போதனைகளை தவறாக விளங்கிக் கொண்டதனால் ஏற்பட்ட பிளவு தான் அது. அதன் பிறகு தங்கள் தவறை நபித் தோழர்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால் இஸ்லாத்தை ஏற்றதாக நடித்த ஒரு சில யூதர்கள் இப்படி ஒரு சமாதானம் ஏற்படக் கூடாது என்பதனால் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பினர். இந்த வதந்திகளை நம்பிய ஒரு சிலர் ஷியாக்கள் என்ற பெயரில் பிரிந்தனர். அது இன்று வரை நிலைத்து விட்டது. இது விரிவாக விளக்க வேண்டிய வரலாறு.

    இதைக் காரணமாக வைத்து நீ உயர்ந்தவன், அலலது நான் தாழ்ந்தவன் என்ற வார்த்தை ஒருவரின் வாயிலிருந்தும் வராது. அதை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை.

    //.சிலசமயம் பள்ளிவாசல் உள்ளேயே.அவர்களும் உங்களை மாதிரியே ஒரே புனித நூல்,ஒரே இறைத்தூதர்,ஒரே கடவுள்தான் பின்பற்றுக்கின்றனர்.அப்படியிருந்தும் ஏன் இந்த ஈனசெயல்?இதுவும் இஸ்லாம் மதத்தின் தீண்டாமைதானே?//
    இந்தக் கொலைகள் தீண்டாமையினால் வருவதில்லை. அரசியல் சூழ்ச்சிகள். முசாரப்பைக் கவிழ்க்க பெனாசிர் பார்ட்டி, நவாஸ் ஷெரீப் பார்ட்டிகள் பாகிஸ்தானில் உள் நாட்டு கலவரங்களைத் தூண்டி முசாரஃப்பை வீட்டுக்கு அனுப்ப எடுக்கும் அரசியல் சூழ்ச்சிகள். இது இஸ்லாத்தோடு எந்த வகையில் சம்பந்தப் படும்?

    அதே போல் ஈராக்கில் நடக்கும் ஷியா, சன்னி கொலைகளில் அமெரிக்கா பிரிட்டிஷாரின் தலையீடும் இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு இந்தியாவில் காலூன்ற பிரிட்டிஷார் இந்து முஸ்லிம்களை எப்படி பிரித்தார்களோ அதே முறை தான் ஈராக்கிலும் கையாளப் படுகிறது.

    ReplyDelete
  10. //
    இதைக் காரணமாக வைத்து நீ உயர்ந்தவன், அலலது நான் தாழ்ந்தவன் என்ற வார்த்தை ஒருவரின் வாயிலிருந்தும் வராது. அதை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை.

    //

    அது சரி,
    ஆள் இருந்தா தானே உயர்ந்தவன், தாழ்ந்தவன், நடுத்தரமானவன் எல்லாம்..

    பாம் போட்டு காலி பண்ணிட்டா...எவனுமே இல்ல...!! அத்தெத்தான் சவூதி பணம் கொடுத்து சலாபி வஹாபி இஸ்லாமிய சகோக்கள் செய்கிறார்கள்...

    ReplyDelete
  11. வஜ்ரா!

    //பாம் போட்டு காலி பண்ணிட்டா...எவனுமே இல்ல...!! அத்தெத்தான் சவூதி பணம் கொடுத்து சலாபி வஹாபி இஸ்லாமிய சகோக்கள் செய்கிறார்கள்...//

    சுவனப்பிரியன் : ஹலோ! வணக்கம் சார்! பிரதமர் மன் மோகன் சிங்குங்களா!

    மன்மோகன்சிங்: ஆமாம்! என்ன விஷயம்?

    சுவனப்பிரியன் : வேற ஒண்ணுமில்லீஙக! வஜ்ரா சங்கர்னு ஒருத்தர் தமிழ் மணத்துல வலைப் பதிவரா இருக்காரு. தற்போது இஸ்ரேல்ல வேலை செய்துகிட்டு இருக்காரு. வகாபிகள், சலபிகள் என்று பல பேரை சவூதி தயார் பண்ணி பல பேரை போட்டு தள்ளுதாம். பாம்பே குண்டு வெடிப்பு சம்பந்தமா நீங்க சி.பி.ஐ க்கு எல்லாம் பணத்தை செலவழிக்க வேணாம். மொசாத்தைக் கையில் வைத்திருக்கும் வஜ்ராவை நீங்க விசாரிச்சுப் பாருங்க. பல உண்மைகள் வெளி வர வாய்ப்பிருக்கு! : - ))

    மன்மோகன்சிங் : தகவலுக்கு ரொம்ப நன்றி சுவனப்பிரியன்.

    ReplyDelete
  12. சுவனப்பிரியன்,

    தாங்கள் மன்மோகன்ஸிங்கிற்கு ஃபோன் போட்டுப் பேசுகிற அளவுக்கு நெருங்கிய நண்பர் என்பது எனக்கு இத்தனை நாளாகத் தெரியாது.

    நான் ஏதும் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டிருந்தால் மனதிலே வைத்துக்கொள்ளாதீர்கள். நமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ளலாம். :-))

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. At 4:10 AM, மருதநாயகம் said...
    //
    அது சரி,
    ஆள் இருந்தா தானே உயர்ந்தவன், தாழ்ந்தவன், நடுத்தரமானவன் எல்லாம்..

    பாம் போட்டு காலி பண்ணிட்டா...எவனுமே இல்ல...!! அத்தெத்தான் சவூதி பணம் கொடுத்து சலாபி வஹாபி இஸ்லாமிய சகோக்கள் செய்கிறார்கள்...
    //

    வக்கிரனுக்கு உருப்படியா வாதாட துப்பில்லை. எதிர்த்து வைக்க அவடம் ஒரு பாயிண்டு கூட இல்லை. சலாபி வஹாபினு ஏதோ சம்மந்தமில்லாம உளறி கொட்டிட்டு போயிருக்கா

    ReplyDelete
  15. ம்யூஸ்!

    //ஃபோன் போட்டுப் பேசுகிற அளவுக்கு நெருங்கிய நண்பர் என்பது எனக்கு இத்தனை நாளாகத் தெரியாது. //

    ஆஹா.... நான் அதை விளையாட்டா சொன்னேங்குறது பதிவை படிக்கிற அத்தனை பேருக்கும் தெரியுங்க! வஜ்ரா இது போல் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கும் போது நாமும் அதே பாணியில் பதில் சொன்னால் என்ன? என்று நினைத்து தான் அப்படி எழுதினேன். பிரதமரோடு இந்த அளவு நெருக்கமா இருந்தேன்னா நான் ஏன் சார் சவூதியில் ஒரு கம்பெனியில் மாத சம்பளத்துக்கு வேலை செய்யனும்? :-(

    // மனதிலே வைத்துக்கொள்ளாதீர்கள். நமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ளலாம். :-))//
    நான் எதையும் மனதில் வைத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல் ஜாலியாகவே செல்லட்டும் அனைவரின் பொழுதுகளும். :-))

    ReplyDelete
  16. மருத நாயகம்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதில் இல்லாத கோபத்தில் இது போன்றெல்லாம் வார்த்தைகள் வருவது சகஜம். இதற்காக நாம் எவரையும் தனிப்பட்ட முறையில் ஒருமையில் திட்டுவதை நானும் விரும்பவில்லை. இஸ்லாமும் தடுக்கிறது நண்பரே ! எனவே தான் உங்களின் பின்னூட்டத்தை எடிட் செய்து வெளியிடும் படி ஆகி விட்டது. இதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    'விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீர்களாக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்: அவன் நேர் வழிப் பெற்றோரையும் அறிந்தவன்.'
    16 : 125 - குர்ஆன்

    ReplyDelete
  17. அன்பு சுவனப்பிரியன்,

    தாங்கள் "இந்து மதத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்" பதிவிற்கான பின்னூட்டங்களை இங்கே இடச்சொல்லியிருந்தீர்கள். இடுகிறேன்.

    இந்து மத புராணங்களில் இது போன்ற கதைகளும் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவே நான் பட்டியலிட வேண்டியதாகி விட்டது. அது உங்கள் மனதை புண்படுத்தியதாக நான் உங்கள் பின்னூட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    நான் எனது பின்னூட்டத்தில் சொல்லியது ஹிந்து புராணங்களில் இருப்பதாகச் சொல்லப்படும் அந்த விஷயங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்பதையே.

    அவை எந்த மாதிரி கட்டுக்கதைகள் என்பதை விளக்க தங்கள் மதத்தை தொடர்புபடுத்தி ஒரு உதாரணம் சொன்னேன். அந்த இழிவான உதாரணம்தான் என் மனதை புண்படுத்தியதே ஒழிந்து, தாங்கள் கூறியிருந்த கட்டுக்கதைகள் இல்லை.

    இந்த குழப்பம் தவிர்க்க ஒரு வழி உண்டு. தயவுசெய்து நான் அனுப்பிய பின்னூட்டத்தை வெளியிட்டுவிடுங்களேன். ப்ளீஸ்.

    இதே போல் தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று சற்று சிந்தியுங்கள்.

    அதை விளக்கத்தான் அந்த உதாரணத்தையே கூறினேன். படிப்பவர்களுக்கு ஸஸ்பென்ஸ் தாங்காமல் மண்டை உடைந்துவிடுவதற்கு முன்னால் அதை நாம் வெளியிட்டுவிடுவோமே.

    என்றும் போல் நண்பர்களாகவே இருப்போம். நன்றி!

    தங்களை நண்பராகப்பெற நானே கொடுத்து வைத்திருக்கவேண்டும். இஸ்லாம் பற்றிய நல்ல புரிதல், கேள்வி கேட்போருக்கு பொறுமையாய் பதிலளித்தல் போன்ற நற்குணங்கள் தங்களுக்கு உண்டு. பெரும்பாலான வலைப்பதிவு இஸ்லாமியர்கள் கேள்வி கேட்டால் உடனேயே நீ யூத ரத்தம், பார்ப்பான், ஹிந்துத்துவவாதி என்று குதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இஸ்லாம் பற்றி தங்களைப்போல தெளிவாய் எழுதுவதும் இல்லை. தங்களுக்கு நீண்ட வாழ்நாளும், நல்ல ஆரோக்கியமும்தர எல்லாம் வல்ல நம் இறையை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  18. ஆக்னர்!

    //இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமையன்று பாக்தாத்தில் நிகழ்ந்தது.இதுக்கூட அமெரிக்க/பிரிட்டிஷாரின் தலையீடு என்று சொல்லப்போறீர்களா?
    உங்கள் மதத்தில் நடக்கும் இந்த தீண்டாமையை ஏன் மூடி மறைக்கிறீர்கள்?//

    இது போன்ற கலவரத்தை ஒரு முறை இரு முறை ஆரம்பித்து வைத்து விட்டால் போதும்.அது தானாகவே பற்றிக் கொள்ளும். இதை சதாம் ஆட்சி அகற்றப் பட்ட உடனே அமெரிக்காவும் பிரிடடனும் ஆரம்பித்து விட்டது. ஒரு முறை இராக்கிய ராணுவ உடையில் வந்த இருவர் ஈராக்கிய பொது மக்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். சாமர்த்தியமாக அந்த இருவரையும் பொது மக்கள் வளைத்து பிடித்தனர். முடிவில் அவர்கள் இருவரும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் என்பது வெளியானது. அவர்களை சிறையிலிருந்து பிரிட்டிஷ் ராணுவமும் பிறகு மீட்டுக்கொண்டு சென்ற துரோகத்தை பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் ஒரு வருடம் முன்பு பார்த்தோம்.

    இது போன்ற பாதிப்பில் குடும்பத்தை இழந்த இளைஞர்கள் வெறியில் ஆயுதம் ஏந்தி ஷியா, சன்னி என்று மாறி மாறி கொன்று குவித்து வருகின்றனர். இந்து முஸ்லிம் சண்டையை ஆரம்பித்து வைத்த பிரிட்டிஷார் அதன் மூலம் எத்தனை ஆண்டு நம் நாட்டை ஆள முடிந்தது என்பதையும் நம் வரலாறு சொல்லுமே!

    //இந்த தீண்டாமையை ஏன் மூடி மறைக்கிறீர்கள்?//

    முதலில் தீண்டாமை என்பது என்ன?

    'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)

    இது போல்பிறப்பிலிருந்தும் பெயர் வைப்பதிலிருந்தும் கோவிலில் சென்று இன்னார்தான் மூலஸ்தானம் வரையில் செல்ல முடியும் என்றும் கடவுளின் பெயரால் எழுதி வைத்து அதை நடைமுறையும் படுத்துவதற்கு பெயர்தான் தீண்டாமை.

    'மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுவோரே அந்த இறைவனிடம் அதிகம் சிறந்தவர். இறைவன் அறிந்தவன். நன்கறிபவன்.'
    49 : 13 - குர்ஆன்

    'இறைவனின் ஆலயங்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?'
    2 : 114 - குர்ஆன்

    'இறைவனை வணங்கும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?'
    'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?'
    96 : 9,10,14 - குர்ஆன்

    இந்த குர்ஆன் வசனத்தை மீறுபவன் எப்படி முஸ்லிமாக இருக்க மடியும்? ஈராக்கில் நடக்கும் ஷியா, சன்னி மோதல் யார் அங்கு ஆட்சி அமைப்பது எனபதால் தானே யொழிய தீண்டாமையினால் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    //இதேபோல் ஷியா முஸ்லிம்கள் பல கொடுமைகளுக்கு பலியானர்கள்.முக்கியமாக 1982ல் Dujail கிராமத்தில் சிறுவர்கள் உட்பட 150 ஷியா ஆண்கள் சதாம் ஹுசேனின் உத்தரப்படி கொல்லப்பட்டனர்.உண்மையா இல்லையா?//

    இதை நான் மறுக்கவில்லையே! இதை விட பல கொடுமைகளை சதாம் செய்திருக்கிறார். அதற்கான தண்டனையையும் தன் மகன்களையும் இழந்து அனுபவித்து வருகிறார். தற்போது குர்ஆனும் கையுமாக காடசி தருகிறார். பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் உலகில் அவருக்கு உதவாதல்லவா?

    //இன்னும் ஏன் சன்னி/ஷியா பிரிவுகளை முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர்?//

    நல்ல கேள்வி. இக் கேள்வியை ஷியா, சன்னி என்று பிரிந்து இருக்கும் முஸ்லிம்களிடம் நீங்களும் கேளுங்கள். மேலே உள்ள குர்ஆன் வசனத்தின் படி உலகில் உள்ள அனைத்து மக்களும் சகோதரர்களே! நம் அனைவரின் மூதாதையர் ஆதாமும் ஏவாளும். இந்த நிலைக்கு வந்து விட்டால் பிரிவுகள் ஏது?

    'நம்பிக்கை கொண்டோர் அனைவரும் சகோதரர்கள் தாம். உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! இறைவனை அஞ்சுங்கள். அருள் செய்யப் படுவீர்கள்.
    49 : 10- குர்ஆன்.

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. ம்யூஸ்!

    //இந்த குழப்பம் தவிர்க்க ஒரு வழி உண்டு. தயவுசெய்து நான் அனுப்பிய பின்னூட்டத்தை வெளியிட்டுவிடுங்களேன். ப்ளீஸ்.//

    இந்த பிரச்னை நீள வேண்டாம் என்று தான் இரண்டு பின்னூட்டங்களையுமே எடுத்து விட்டேன். நான்எழுதியவை அனைத்தும் என் கற்பனையில் உதித்தவை அல்ல என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் எழுதி அனுப்பியதோ உங்களின் சொந்த கற்பனை என்று உங்கள் கையாலேயே வாக்கு மூலமும் தருகிறீர்கள். உங்களின் கற்பனையை நான் எப்படி பிரசுரிப்பது?. இஸ்லாம சம்பந்தமாக எந்த சந்தேகமும் ஆதாரத்தோடு எழுதி அனுப்புங்கள்.கண்டிப்பாக பிரசுரித்து அதற்கு பதிலும் தருகிறேன்.

    //தங்களை நண்பராகப்பெற நானே கொடுத்து வைத்திருக்கவேண்டும்.//

    இஸ்லாமிய நம்பிக்கை படி ஆதாம் ஏவாளிலிருந்து பல்கிப் பெருகியவர்கள் தான் மனிதர்கள் அனைவரும். அதன்படி நீங்கள் என்னுடைய சகோதரராக ஆகின்றீர்கள். இதே அளவுகோலால்தான் இந்து,கிறித்தவ, இஸ்லாமிய மக்கள் அனைவரையும் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு முஸ்லிமும் அப்படித்தான் பார்க்கவும் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு ஆதிக்க சக்திகளால் இன்று பிளவுண்டு இருக்கிறோம். புரிந்துணர்வு அனைவருக்கும் இருந்தால் எந்த பிரச்னையும் தலை எடுக்காது.

    //தங்களுக்கு நீண்ட வாழ்நாளும், நல்ல ஆரோக்கியமும்தர எல்லாம் வல்ல நம் இறையை வேண்டிக்கொள்கிறேன்.//

    நன்றி! இதே பிரார்த்தனைகளை உங்களுக்கும் நமது நாட்டுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  21. சுவனப்பிரியன்,

    நான்எழுதியவை அனைத்தும் என் கற்பனையில் உதித்தவை அல்ல என்பதும் உங்களுக்கு தெரியும்.

    உங்கள் கற்பனையில் உதிக்காததால் அவை கற்பனை இல்லை என்று சொல்லமுடியாது. மற்றவர்களின் கற்பனையில் உதித்திருந்து அதை தாங்கள் எடுத்தாண்டிருந்தாலும், அவை கற்பனைகள்தான்.

    உங்களின் கற்பனையை நான் எப்படி பிரசுரிப்பது?

    மற்றவர்களின் கற்பனையை மட்டும் வெளியிடும் தங்களுக்கு என்னுடைய கற்பனையை வெளியிட தயக்கம் தேவையுமில்லை.

    அந்த கற்பனையை நானே பிரசுரம் செய்யச் சொல்லும்போது உங்களுக்கு சங்கடங்கள் தேவையில்லை.

    ReplyDelete
  22. ஆக்னர்!

    //.ஒருவேளை மதங்கள் சரியாக இருந்து அதை பின்பற்றும் மக்கள்தான் சரியில்லையோ!!!//
    சரியாக சொன்னீர்கள்! ஒரு சிறு திருத்தம். இந்து மதமும், கிறித்தவ மதமும் இறைவன் கொடுத்த வேதங்களை வைத்திருந்தாலும் பிற்பாடு வந்த புரோகிதர்களால் மாற்றப் பட்டு மதங்களிலே பிரிவுகளை உண்டாக்கி விட்டனர்.எனவே அவர்களிடம் ஏற்பட்ட பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட வேத புத்தகங்களே காரணமாகிவிட்டது. ஆனால் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட பிரிவுகளுக்கு காரணமாக குர்ஆனை சொல்ல முடியாது. ஷியா, சன்னி பிரிவுகள் அரசியல் சம்பந்தமாக யார் ஆட்சியில் அமர்வது? என்ற குழப்பத்தில் உருவானதே. எனவே இந்த பிரிவுகளுக்கு இஸ்லாமியரிடத்தில் இருக்கும் அறியாமையே காரணம். குர்ஆனை சரியாக விளங்கியிருந்தால் இந்த பிரிவுகளே ஏற்பட்டிருக்காது.

    ReplyDelete
  23. ம்யூஸ்!

    //தயவுசெய்து நான் அனுப்பிய பின்னூட்டத்தை வெளியிட்டுவிடுங்களேன். ப்ளீஸ்.//

    //படிப்பவர்களுக்கு ஸஸ்பென்ஸ் தாங்காமல் மண்டை உடைந்துவிடுவதற்கு முன்னால் அதை நாம் வெளியிட்டுவிடுவோமே.//

    உலக சாம்ராஜ்ஜியங்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த ஒருவர், நான் உயர்ந்த சாதி என்று திமிர் வாதம் செய்த அராபியர்களை ஆப்ரிக்கர்களோடு ஒன்றாக்கிய உத்தமர், இன்று நான் ஒரு முஸ்லிம் என்று நெஞசை நிமிர்த்தி சொல்வதற்கான காரணகர்த்தர், இவ்வளவு புகழுக்குரிய ஒருவரைப் பற்றி கற்பனைகளை எழுதி அதை பிரசுரிக்கவும் சொல்லி இன்னும் நூறு பின்னூட்டங்களை அனுப்பினாலும் செவி சாய்ப்பவனா நான்? அதை வெளியிட்டுப் பார்ப்பதில் என்ன சந்தோஷம் ம்யூஸுக்கு!

    // மற்றவர்களின் கற்பனையை மட்டும் வெளியிடும் தங்களுக்கு என்னுடைய கற்பனையை வெளியிட தயக்கம் தேவையுமில்லை.//

    நான் எழுதியதெல்லாம் மற்றவர்களின் கற்பனை என்று யார் சொன்னது? நான் சிறு வயதில் இருந்து பள்ளிப் பாடங்களில் படித்து வந்த கம்ப ராமாயணம் பொய் என்கிறீர்களா? நான் எழுதியவற்றுக்கு புத்தகம் பக்கம் முதற் கொண்டு என்னால் ஆதாரம் தர முடியும். அவை கட்டுக் கதைகள் அல்ல புராண இதிகாசங்களில் உள்ள வரலாறுகள் என்பதையும் என்னால் நிரூபிக்க முடியும் என்றும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. asalamu alaikum suvanapriyan.. enathu pear syed.. islathai pattriya ungalathu pathivugal sirappaga ullathu.. nan islathai pattriya atharavana website kalaium padithu irukiren, ethira website kalaium padithu irukiren.. islathuku ethirana karuthukal sollum valaithalamana "irai illa islam" endra valai thalam patriya ungal karuthai ethirparkiren.. enathu emailed "syedreej27@gmail.com".. vasalam..

    ReplyDelete
  25. asalamu alaikum... nan ungal dawah pani thodara ellam valla allah subhanawathalavai vendukiren.. nan islathuku aatharavana valaithalangalai parthathai vida atharku ethira valaithalangalai than athigam parthu irukiren.. athilum kirippaga "irai illa islam" endra valaithalam.. ithai pattriya ungal karuthai therivikka korukiren.. vasalam..

    ReplyDelete
  26. இந்துகழும் இசுலாமியரும் வெள்ளிகிழமை இறைவழிபாடு செய்வது ஏன்

    ReplyDelete
  27. இந்துகழும் இசுலாமியரும் வெள்ளிகிழமை இறைவழிபாடு செய்வது ஏன்

    ReplyDelete
  28. இந்துகழும் இசுலாமியரும் வெள்ளிகிழமை இறைவழிபாடு செய்வது ஏன்





    ReplyDelete
  29. யுதர்கள் உபயோகிக்ற தொப்பி இசுலாமியர் உபயோகிகும தொப்பி வேருபாடு என்ன?





    ReplyDelete
  30. யுதர்கள் செய்கிற சுன்னத்துக்கும் இசலாமியர் சுன்னத்திற்கும் அடிபடையில் வித்தியாசம் என்ன?


    ReplyDelete
  31. யுதர்கள் எருசலேம்ப் கோவிலை நோக்கி தோழுகை செய்தார்கள் இசுலாமியர் மெக்காவை நோக்கி ஏன்

    ReplyDelete
  32. யுதர்கள் எருசலேம்ப் கோவிலை நோக்கி தோழுகை செய்தார்கள் இசுலாமியர் மெக்காவை நோக்கி ஏன்

    ReplyDelete
  33. யுதர்கள் எருசலேம்ப் கோவிலை நோக்கி தோழுகை செய்தார்கள் இசுலாமியர் மெக்காவை நோக்கி ஏன்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)