Thursday, March 08, 2007

இயேசு நாதர் மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்தாரா?

17 comments:

  1. இயேசு நாதர் மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்தாரா?

    'டைக்கானிக்' புகழ் ஜேம்ஸ் கேமரூன் இயேசு கிறிஸ்து பற்றி ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். படத்தின் பெயர் 'தி லாஸ்ட் டோம்ப் ஆஃப் ஜீஸஸ்'. இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து 3 வது நாளில் உயிர்த்தெழவில்லை என்ற கருத்தை இந்தப் படம் தெரிவிக்கிறது.

    இந்தக் கருத்து மற்றவர்களுக்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு இது பழமையான கருத்து.

    இயேசு நாதர் 3 ஆம் நாள் உயிர் பெற்று எழவில்லை என்ற முஸ்லிம்களின் கருத்தோடு ஒத்துப் போகும் ஜேம்ஸ் கேருனோடு - இயேசு நாதர் இறந்து போய் விட்டார்.: அவருடைய சடலம் 1980- ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலம் நகரில் கண்டு பிடிக்கப்பட்டது என்ற கருத்தில் முஸ்லிம்கள் ஒத்துப் போகத் தயாரில்லை. - முஸ்லிம்கள் மட்டுமல்ல.. இஸ்ரேல் நாட்டு தொல்பொருள் ஆய்வாளருமான அமோஸ் கிளாரனும் 'இயேசு நாதரின் சடலம்' என்ற கேமரூனின் கதையை நம்ப மறுக்கிறார்.

    ஜேம்ஸ் கேமரூனும் கிறித்தவர்களும் இயேசு நாதர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதில் முரண்படுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ இயேசு நாதர் என்றழைக்கப்படும் ஈஸா நபி - கொல்லப்படவும் இல்லை, மூன்றாம் நாளில் உயிர்த்தெழவும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இது குறித்து குர்ஆன் பேசுவதைக் கேளுங்கள்.

    'இறைவனின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையில் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாக கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.'
    -குர்ஆன் (4 : 157,158)

    இயேசு நாதருக்கு மனைவி மக்களில்லை. அவருக்கு திருமணம் கூட நடக்கவில்லை என்று கிறித்தவர்கள் காலம் காலமாக நம்பி வந்தனர். இதற்கு மாறாக இயேசு நாதருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு என்று முஸ்லிம்கள் சொல்லி வந்தனர். முஸ்லிம்களின் சொல்லை உண்மைப்படுத்துவதில் இயேசுநாதருக்கு மேரி மேக்தலின் என்ற மனைவி உண்டு. ஜீடா என்ற மகனும் இயேசுவுக்கு உண்டு என்ற உண்மை தொல்பொருள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டன. இதுபோல் இயேசுநாதர் கொல்லப்படவில்லை. ஆள்மாறாட்டம் நடந்தது என்ற திருக்குர்ஆனின் உண்மை வெகு விரைவில் நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நன்றி: உணர்வு வார இதழ்

    இறைவனே மிக அறிந்தவன்.

    ReplyDelete
  2. அவசரப் படாதீர்கள் அய்யா. பொருத்திருந்து பாருங்கள் இன்னும் என்னவெல்லாம் நடக்குதுன்னு.

    ReplyDelete
  3. ராஜநாகம்!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. Anonymous11:36 PM

    இதில் எந்த முடிவுக்கும் வாரமுடியாது பிரச்சனைகள் தான் அதிகமாகும் இதர்க்கு பலகலங்களுக்கு பின்னால் உன்மை வெளிவரும்
    எம்ஜெ

    ReplyDelete
  5. சு.பிரியன் படம் பாத்தீங்களா?

    ReplyDelete
  6. zeer65@gசிறில் அலெக்ஸ்!

    நான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை. பார்த்தவுடன் என் கருத்தை தெரிவிக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப் பற்றிய உங்களின் எண்ணத்தை அறிய ஆவலாய் உள்ளேன். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  7. Mr M.J

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. //முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

    முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.//

    -ஆதி சேஷன்!

    ஆதி சேஷன் அழகிய பதிவை இட்டுள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஷியாக்கள் குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளில் இருந்தோ ஆதாரம் காட்ட முடியாது. அன்றைய பாரசீகர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். நம் இந்திய கலாச்சாரத்தையும் ஒத்தவர்களாக இருந்தனர். தம் மூதாதையரின் பழக்க வழக்கத்தில் பற்று கொண்ட ஈரானிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏற்றிய புதிய பழக்கங்களே ஆதி சேஷன் சுட்டிக்காட்டிய பிரச்னைகள். இந்த பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    'இறைவனையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து அந்த இறைவனை வணங்குவது போல் மற்ற தெய்வங்களை வணங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கைக் கொண்டோர் அவர்களை விட இறைவனை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் இறைவனுக்கே என்பதையும் இறைவன் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.'
    -குர்ஆன் 2 : 165

    'இறைவன் அருளியதைப் பின் பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின் பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
    -குரஆன் 2 : 170

    'அவர்களே நேர்வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது?'
    -குர்ஆன் 2 : 175

    ஏக இறைவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள். தங்களது மார்க்கத்தைப் பிரிந்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்ப்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
    -குர்ஆன் 30 : 31,32

    ReplyDelete
  9. என்னையா நபியும் யேசுவும் ஓரெயாள சோல்வேயில்லை இதென்ன புதுக்கதை

    ReplyDelete
  10. Anonymous5:52 AM

    //என்னையா நபியும் யேசுவும் ஓரெயாள சோல்வேயில்லை இதென்ன புதுக்கதை //

    தமிழ்பித்தன் - நன்றாக சிரித்தேன்.

    நன்றி,
    அமர்.

    ReplyDelete
  11. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி! பதில் வர சிறிது தாமதமாகும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. ஏக இறையோனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
    அன்பு சகோதரர் சுவன்ப்பிரியன் அவர்களுக்கு
    சகோதரர் அரவிந்தன் அவர்களுடைய ஏசு கிருஸ்து சம்பந்தமாக வெளியிட்ட பதிவுக்கு, தாங்களிட்ட பின்னூட்டத்தில் அத்தியாயம் 4 வசனம் 171வுடைய தமிழாக்கத்தை கோடிட்டுள்ளீர்கள்.
    //'வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் இறைவனின் மீது உண்மையைத் தவிர வேறெதனையும் கூறாதீர்கள். மேரியின் மகன் ஏசு எனும் மஸீஹ் இறைவனின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமாவார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான்.அவனது உயிருமாவார்.எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். கடவுள் மூவர் எனக் கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சிறந்தது. அந்த இறைவனே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.வானங்களில் உள்ளவையும் உலகில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அந்த இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
    -குர்ஆன் 4 : 171//

    மேல் சொன்ன தமிழ் மொழி பெயர்ப்பில் "அவனது உயிருமாவார்." என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கூறுவது, ஏசு இறைவனுடைய உயிராவார் என்ற அர்தத்த்தை தருகிறது. இறைவன் நம்மை பாதுகாப்பானாக!.

    எனவே அந்த வார்த்தையை பின்வருமாறு திருத்தினால் சரியான அர்த்தமாகும்.
    "(எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த)ஓர் ஆன்மா தான்"

    இந்த தமிழாக்கமே சரியானதாக இருக்கும். இது ஏசுவும் இறைவனிடத்திருந்து வந்த ஆன்மா (உயிர்) தான் என்ற பொருள் தரும். அரபியில் varoohun (ஆன்மா) minhu (அவனிடமிருந்து) என்று தான் வருகிறது. நான் கூறியிருக்கும் தமிழாக்கம், ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

    நீங்கள் எடுத்த மொழி பெயர்ப்பு எதிலிருந்து என்பதையும் தெரிய ஆவலாய் இருக்கிறேன்.

    எனது கருத்தில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவனுக்கே உரியது. தவறு இருந்தால் எனது சிறுமதியால் வந்த தவறாகும். அதை சுட்டிக் காடடினால் திருத்திக் கொள்வேன்.

    நன்றியும், வாழ்த்துக்களுடன்
    அன்பு சகோதரன்
    நெய்னா முஹம்மது

    ReplyDelete
  13. Naina Mohamed said…

    ஏக இறையோனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
    அன்பு சகோதரர் சுவன்ப்பிரியன் அவர்களுக்கு
    சகோதரர் அரவிந்தன் அவர்களுடைய ஏசு கிருஸ்து சம்பந்தமாக வெளியிட்ட பதிவுக்கு, தாங்களிட்ட பின்னூட்டத்தில் அத்தியாயம் 4 வசனம் 171வுடைய தமிழாக்கத்தை கோடிட்டுள்ளீர்கள்.

    //'வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் இறைவனின் மீது உண்மையைத் தவிர வேறெதனையும் கூறாதீர்கள். மேரியின் மகன் ஏசு எனும் மஸீஹ் இறைவனின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமாவார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான்.அவனது உயிருமாவார்.எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். கடவுள் மூவர் எனக் கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சிறந்தது. அந்த இறைவனே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.வானங்களில் உள்ளவையும் உலகில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அந்த இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
    -குர்ஆன் 4 : 171//

    மேல் சொன்ன தமிழ் மொழி பெயர்ப்பில் "அவனது உயிருமாவார்." என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கூறுவது, ஏசு இறைவனுடைய உயிராவார் என்ற அர்தத்த்தை தருகிறது. இறைவன் நம்மை பாதுகாப்பானாக!.

    எனவே அந்த வார்த்தையை பின்வருமாறு திருத்தினால் சரியான அர்த்தமாகும்.
    "(எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த)ஓர் ஆன்மா தான்"

    இந்த தமிழாக்கமே சரியானதாக இருக்கும். இது ஏசுவும் இறைவனிடத்திருந்து வந்த ஆன்மா (உயிர்) தான் என்ற பொருள் தரும். அரபியில் varoohun (ஆன்மா) minhu (அவனிடமிருந்து) என்று தான் வருகிறது. நான் கூறியிருக்கும் தமிழாக்கம், ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

    நீங்கள் எடுத்த மொழி பெயர்ப்பு எதிலிருந்து என்பதையும் தெரிய ஆவலாய் இருக்கிறேன்.

    எனது கருத்தில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவனுக்கே உரியது. தவறு இருந்தால் எனது சிறுமதியால் வந்த தவறாகும். அதை சுட்டிக் காடடினால் திருத்திக் கொள்வேன்.

    நன்றியும், வாழ்த்துக்களுடன்
    அன்பு சகோதரன்
    நெய்னா முஹம்மது

    ReplyDelete
  14. நைனா முகம்மது!

    //எனவே அந்த வார்த்தையை பின்வருமாறு திருத்தினால் சரியான அர்த்தமாகும்.
    "(எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த)ஓர் ஆன்மா தான்"

    இந்த தமிழாக்கமே சரியானதாக இருக்கும். இது ஏசுவும் இறைவனிடத்திருந்து வந்த ஆன்மா (உயிர்) தான் என்ற பொருள் தரும். அரபியில் varoohun (ஆன்மா) minhu (அவனிடமிருந்து) என்று தான் வருகிறது. நான் கூறியிருக்கும் தமிழாக்கம், ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.//

    ரூஹ் என்பதன் நேரடி பொருள் உயிர் என்பதே. அதை ஆன்மா என்றும் குறிப்பிடுகிறோம். இதே போன்று ஆதமை படைத்ததைப் பற்றி இறைவன் கூறும்போது

    'ஆதமை நாம் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நாம் ஊதும்போது அவருக்குப் பணிந்து விழுங்கள்' என்று கூறினோம்.
    -குர்ஆன் 15 : 29

    இறைவனின் உயிர் என்று தூதர் ஈஸா கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் என்று கூற முடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

    ஆதமைக் குறிக்கும் போதும் இதே வார்த்தையைத்தான் இறைவன் பயன்படுத்துகிறான். ஏசுவின் மகன் ஈஸா என்று கூறும் கிறித்தவர்கள், அதே வார்த்தையில் விளிக்கும் ஆதமை வசதியாக மறந்து விடுகிறார்கள். தந்தை இல்லாமல் ஏசுவும், தாய் தந்தை இல்லாமல் ஆதமும் சிறப்பாக படைக்கப்பட்டதால் இறைவன் இத்தகைய வார்த்தையை பயன்படுத்துகிறான் என்று விளங்கினால் குழப்பத்திற்கு இடமில்லை.

    இறைவனே மிக அறிந்தவன்.

    ReplyDelete
  15. //இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.//- Syril Alex

    உங்களின் நம்பிக்கையை குர்ஆன் மெய்ப்படுத்துகிறது. இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

    'ஏசுவின் எதிரிகள் சுழ்ச்சி செய்தனர். இறைவனும் சுழ்ச்சி செய்தான். இறைவன் சிறப்பாக சுழ்ச்சி செய்பவன்.'
    -குர்ஆன் 3 : 54

    'ஏசுவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும் என்னை மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை என்னை மறுப்போரை விட இறுதி நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக்கிறேன்.பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது.'
    -குர்ஆன் 3 : 55

    //இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன.//

    உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  16. Anonymous6:50 AM

    Anyway Please saw " Da Vincy Code " Film. You may get some new ideas from there Mr.Suvanapriyan.

    ReplyDelete
  17. பெயரில்லா!

    ஆச்சரியமாக இன்றுதான் நண்பர் சார்வாகன் அந்த படத்தை தமிழில் அவரது பதிவில் வெளியிட்டுள்ளார். பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)