Saturday, April 04, 2009

இரத்த தானத்தில் முன்னணி வகிக்கும் அமைப்பு!




இரத்ததானம் செய்வதில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் சவூதி அரேபியாவிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இரத்தான முகாம்களை நடத்தி, மக்கள் சேவையில் முன்னிலை வகிப்பது அனைவரும் அறிந்ததே. அதோடு TNTJ, அவசர தேவைகளுக்காகவும் இரத்ததானம் வழங்கி உயிர்காத்து வருகின்றது.

சவூதி அரேபியா - ரியாதிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனையான "கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி" மருத்துவமனையிலுள்ள இரத்த தான பிரிவு அதிகாரிகள், ரியாத் TNTJ வைத் தொடர்பு கொண்டு, உடனடியாக "இரத்தத் தட்டுக்கள் Platelets" தானம் தேவை என வேண்டுகோள் விடுத்தனர். இம்மருத்துவமனையில், ரியாத் TNTJ வால் பல மாபெரும் இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வகையான தானத்தில், இரத்தத்தில் உள்ள "இரத்தத் தட்டுக்கள்" பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் இரத்தம் கொடையாளியின் உடலிலேயே செலுத்தப்படும்.

உடனடியாக, ரியாத் TNTJ விடம் இரத்த தானத்திற்காக பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, கடந்த 09. மார்ச். 2009 திங்கள் கிழமை அன்று இரவு 7 மணிக்கு, இரத்த தானம் செய்யப்பட்டது. இதில் 9 பேர் கலந்து கொண்டனர்.

ரியாத் இரத்த தான பொறுப்பாளர், மண்டலச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உடனடி தேவைக்கு உதவிய கொடையாளிகளுக்கும், ரியாத்TNTJ வுக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

மத அமைப்புகள் இந்த அமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படத் துவங்கினால் மத துவேஷங்கள் மறையும்: மனித நேயம் வளரும்.

2 comments:

  1. senthil kumar8:19 PM

    thodarattum intha sevai

    ReplyDelete
  2. Senthil Kumar!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)