Wednesday, August 04, 2010

"டார்வின் கோட்பாடு தவறு" என்பது உண்மைதானே!

"டார்வின் கோட்பாடு தவறு" என்பது உண்மைதானே!

டார்வினிஷ்டுகள் "ஓரு செல் உயிரினம் தானாக உருவாகி பிறகு பல லட்சம் வருடங்கள் பரிணாமம் ஏற்ப்பட்டு படிப்படியாக குரங்கு வரை வந்து பிறகு மனிதனாக உருவெடுத்தான்" என்று கதை விடுகின்றனர்.

பல காலமாக பலருக்கும் ஓரு சந்தேகம் உள்ளது. "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா"

இங்கிலாந்தின் ஷெப்பீல்டு மற்றும் வார்விக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கோழி முட்டையை சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

முட்டையின் ஓட்டுப்பகுதியை உருவாக்க OVOCLEIDIN (OC-17) என்ற புரோட்டீன் மிகவும் அவசியம் என்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இந்த புரோட்டீன் கருவுற்ற கோழியின் சினைப்பையில் உற்பத்தியாகிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இவர்கள் தொழில் நுட்பம் வாய்ந்த HECTOR என்ற கம்யூட்டரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். முட்டை ஓட்டின் அணுக்களின் கட்டமைப்பை ஆய்வு செய்தனர்.

புரோட்டீன் OC-17 இங்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. கோழியின் உடம்பில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற ரசாயன பொருளை கால்சைட் என்ற படிமங்களாக மாற்ற OC-17 உதவுகிறது. இந்த கால்சைட் தான் கடினமான முட்டை ஓடாக மாறுகிறது. கோழிக்குஞ்சு உருவாவதற்க்கு தேவையான கரு மற்றும் அதனைப் பாதுகாக்கும் திரவம் ஆகியவற்றை முட்டை ஓடு தன்னுள் வைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குழுவுக்கு செப்பீல்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் காலின் ப்ரீமேன் தலைமை வகித்தார்.

இந்த ஆய்வின் மூலம் ஓவ்வொரு படைப்புக்கும் படைப்பாளன் இருந்தே ஆக வேண்டும் என்பது உறுதியாகிறது.

"மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னை சீராக்கி, உன்னைச் செம்மைப் படுத்தினான். அவன் விரும்பிய வடிவில் உன்னை அமைத்தான்."
-குர்ஆன் 82- 6,7

9 comments:

  1. இணைய நண்பர்களே! நலமா!

    கணிணியும் இணைய இணைப்பும் அலுவலத்தில் தனியாக இன்னும் கிடைக்கவில்லை. அதுவரை பின்னூட்டங்களும் பதில்களும் சிறிது தாமதமாகலாம்.

    படித்ததோடு பின்னூட்டத்தில் உங்கள் கருத்தையும் பதியலாமே. நன்றி.

    ReplyDelete
  2. If really there is one,

    What is the role for him in our life?

    ReplyDelete
  3. இந்த ஆய்வின் மூலம் ஓவ்வொரு படைப்புக்கும் படைப்பாளன் இருந்தே ஆக வேண்டும் என்பது உறுதியாகிறது.

    appo intha padaipaaliyai yaru
    padaithathu!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. Mr Rami!

    // If really there is one: what is the role for him in our life?//

    மனிதனை படைத்த இறைவன், அந்த மனிதன் உலகில் வாழ சில சட்ட திட்டங்களை வகுக்கிறான். இறைவனி்ன் சட்ட திட்டத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு சொர்க்கத்தை தருகிறான். மாறு செய்பவர்களுக்கு நரகத்தை தருகிறான்.

    ReplyDelete
  5. சுப்ரா!
    // appo intha padaipaaliyai yaru
    padaithathu!!!!!!!!!!!!!!! ''அப்போ இந்த படைப்பாளியை படைத்தது யார்? ''//

    விரிவாக விளக்க வேண்டிய கேள்வி. சுருக்கமாக விளக்க முயற்ச்சிக்கிறேன்.

    மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு ஓர் எல்லை உண்டு. வார்னர் ஹைசன் பர்க் எனும் அறிவியலார் 1926 ல் ஓரு புரட்சிகரமான கோட்பாட்டை உருவாக்கினார். அநிச்சய தத்துவம்(uncertainity principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணு(electron) எனும் துகள்கள் அணுவின் மையக்கருவைச் சுற்றி ஓளியின் வேகத்தில் சுழல்கின்றன. எலக்ட்ரான்களின் வேகமும் அந்த நேரத்தில் சுற்றுப்பாதையில் அது இருக்கும் இடத்தையும் அளக்க முயலும்போது ஏற்படும் விளைவை வைத்து ஹைசன் பர்க் இக் கோட்பாட்டை உருவாக்கினார்.

    இந்த ஆய்வின் மூலம் அவர் கண்டுபிடித்தது "எலக்ட்ரான்களின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக அளக்க முயற்ச்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே அவற்றின் வேகத்தை உங்களால் அளக்க முடியும் "

    எனவே இதன் மூலம் ஹைசன் பர்க் சொல்ல வருவது: "மனிதனின் அறியும் ஆற்றலுக்கு நிச்சயமாக எல்லை உண்டு "

    அற்பப் பொருளாம் அணுவைப் பற்றியே இன்னும் நாம் ஓரு தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. இந்த அணுவையும் படைத்து கோடிக்கணக்கான உயிரினங்களையும் கோள்களையும் படைத்து பரிபாலிக்கும் நித்திய ஜீவன், நிரந்தரனான இறைவனின் ஆதியை அறிந்து உள் வாங்கும் சக்தி நமக்கு உள்ளதா? அதை தாங்கும் சக்தி நம் அறிவுக்கு உண்டா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    "கடவுள் யாராலும் படைக்கப் படாமல் எப்படித் தோன்றினான். அப்படி ஓரு கடவுள் இருப்பதை நான் ஓப்புக் கொள்ள மாட்டேன்" என வாதிடுவது "உயிர் என்றால் என்னவென்று எனக்கு புரியாதவரை அப்படி ஓன்று எனக்குள் இருப்பதை நான் ஓப்புக் கொள்ள மாட்டேன் " எனக் கூறுவதற்க்கு ஓப்பாகும்.

    படைப்பாளன் ஓரு போதும் படைக்கப்பட்டவனாக இருத்தல் இயலாததாகும். இதையே வேறு வார்த்தையில் கூறினால் படைக்கப்பட்டவை எதுவும் படைப்பாளனாக முடியாது.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சுப்ரா!

  8. முகமது நபிக்கு முன் இஸ்ரவேலர்களுக்கு தூதராக அனுப்பப்பட்ட இறைத்தூதர் மோசே அதாவது மூஸா. இவருக்கும் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இது பற்றி குர்ஆன் கூறுவதை இனி பார்ப்போம்.

    நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து அவரிடம் நாம் பேசியபோது "என் இறைவா! உன்னை எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்" எனக் கூறினார். அதற்கு இறைவன் "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக. அது அதற்க்குறிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்." என்று கூறினான். இறைவன் அந்த மலைக்கு காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கைக் கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்." எனக் கூறினார்.
    குர்ஆன் : 7-143

    இறைவனைப் பார்க்கும் சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் படவில்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

    ReplyDelete
  9. "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்"

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)