Saturday, June 18, 2011

டார்வினிடம் நான் கேட்கும் ஒரு முக்கியமான கேள்வி :-)


பரிணாமத்தைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. டார்வினின் பரிணாமக் கொள்கைகளை ஆதரித்து நாத்திகர்களும், அதனை மறுத்து ஆத்திகர்களும் உலகமெங்கும் பல விவாதங்களை நடத்துகின்றனர். ஆத்திகர்கள் வைக்கும் பல கேள்விகளுக்கும் அறிவியல் பூர்வமாக டார்வினிஷ்டுகளால இன்று வரை பதிலளிக்க முடியவில்லை. இதில் இவருக்கு 200 வது ஆண்டை விழாவாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

உயிரினங்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து கால சூழலுக்கு ஏற்ப பல பரிணாமங்கள் நடந்துள்ளதாக டார்வின் கூறுகிறார். இதற்கு பல லட்ச வருடங்கள் தேவைப்படும் என்றும் கூறுகிறார்.

இதற்கு அறிவியல் ஆதாரங்கள் எதனையும் அவரோ அவரது சிஷ்யர்களோ சமர்ப்பிக்கவில்லை.

உதாரணத்திற்கு ஒட்டகை சிவிங்கி எட்டாத உயரத்தில் இருக்கும் இலை தழைகளை சாப்பிட எத்தனித்து தனது கழுத்தை நீட்ட முயற்ச்சித்தது. இந்த முயற்ச்சியின் பலனாக பல பரிணாமங்கள் எடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நாம் பார்க்கும் இந்த நிலையை அடைந்தது என்கிறார். அதே காடுகளில் வசிக்கும் மானுக்கு ஏன் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை? மானும் ஒட்டகை சிவிங்கியைப் போல் இலை தழைகளை சாப்பிடக் கூடியதே! யானைக்கு தும்பிக்கை ஏன் வந்தது? கங்காருக்கு வயிற்றில் ஏன் பை வந்தது? அதற்கான காரணம் என்ன? இதற்கு அடுத்த பரிணாமத்தை வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு மாற்றத்தைக் கூட பதிவு செய்ய முடியவில்லையே ஏன்? என்று வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

யானை, குதிரை என்று உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் இனப் பெருக்கத்திற்காகவும் உடல் சுகத்திற்க்காகவும் மற்றொரு துணையைத் தேடுகிறது. அது போன்ற உணர்வு மேலிடும் போது அனைத்து உயிரினங்களுக்கும் அதன் ஆண் உறுப்பு பழைய நிலையிலிருந்து மாற்றம் அடைந்து ஏற்கெனவே இருந்த நிலையை விட பெரிதாகிறது. 'பேகுலம்' (Baculam) என்ற சுருங்கி விரியும் தன்மை கொண்ட எலும்பு விசேஷமாக இந்த இடத்தில் இறைவனால் பொறுத்தப்பட்டுள்ளது. உடலில் உள்ள எந்த உறுப்பும் ஒரு முறை வளர்ந்தால் பிறகு பழைய நிலையை அடைவதில்லை. நகம் முடி போன்றவை வளர்ந்தால் வெட்டி அப்புறப்படுத்துகிறோம். ஆனால் மர்ம உறுப்புக்கு மட்டும் இறைவன் இத்தகைய விசேஷமான தன்மையை கொடுத்திருக்கிறான்.

யானை குதிரை போன்ற உயிரினங்களுக்கு தேவையின்பால் வெளியாகும் அந்த மர்ம உறுப்பு தனது தேவையை முடித்தவுடன் பழைய நிலையை அடைந்து உடலினுள் மறைந்து கொள்வதையும் பார்க்கிறோம். டார்வினின் கோட்பாட்டின் படி தேவையின் பால் ஒரு முறை வளர்ந்த அந்த உறுப்பு திரும்பவும் பழைய நிலையை அடைய தேவையில்லை. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட இந்த உறுப்பை பல நூறு அல்லது பல ஆயிரம் தடவை தேவையின்பால் உபயோகப்படுத்தியும் மாறிய அதே நிலையில் இருப்பதில்லை. திரும்பவும் பழையபடியே தனது பழைய நிலையை அடைந்து விடுகிறது. ஒட்டக சிவிங்கிக்கு தேவையின்பால் கழுத்து நீண்டது போல் உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை?

இதற்கு டார்வின் என்ன பதிலைக் கொடுக்கிறார்? அல்லது அறிவியல் அறிஞர்கள் இதற்கு என்ன பதில் தருகிறார்கள்? எனக்கு விளங்கிக் கொள்வதற்காகவே இந்த கேள்வி. தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். ஒருக்கால பரிணாமவியலை நான் சரியாக விளங்கிக் கொள்ளாமல் கூட இருக்கலாம்.


2:164
.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.


4:1
.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்துபடைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.


19:67
.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?


22:5
.
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.


7:172
.
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.

இந்த வசனத்தையும் மேலே அறிவியலார் வெளியிட்டிருக்கும் படத்தையும் ஒப்பிட்டால் நமக்கு பல உண்மைகள் விளங்கும்.

"ஓரு செல் உயிரினம் தானாக உருவாகி பிறகு பல லட்சம் வருடங்கள் பரிணாமம் ஏற்ப்பட்டு படிப்படியாக குரங்கு வரை வந்து பிறகு மனிதனாக உருவெடுத்தான்" டார்வின்


பல காலமாக பலருக்கும் ஓரு சந்தேகம் உள்ளது. "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா"

இங்கிலாந்தின் ஷெப்பீல்டு மற்றும் வார்விக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கோழி முட்டையை சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

முட்டையின் ஓட்டுப்பகுதியை உருவாக்க OVOCLEIDIN (OC-17) என்ற புரோட்டீன் மிகவும் அவசியம் என்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இந்த புரோட்டீன் கருவுற்ற கோழியின் சினைப்பையில் உற்பத்தியாகிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இவர்கள் தொழில் நுட்பம் வாய்ந்த HECTOR என்ற கம்யூட்டரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். முட்டை ஓட்டின் அணுக்களின் கட்டமைப்பை ஆய்வு செய்தனர்.

புரோட்டீன் OC-17 இங்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. கோழியின் உடம்பில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற ரசாயன பொருளை கால்சைட் என்ற படிமங்களாக மாற்ற OC-17 உதவுகிறது. இந்த கால்சைட் தான் கடினமான முட்டை ஓடாக மாறுகிறது. கோழிக்குஞ்சு உருவாவதற்க்கு தேவையான கரு மற்றும் அதனைப் பாதுகாக்கும் திரவம் ஆகியவற்றை முட்டை ஓடு தன்னுள் வைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குழுவுக்கு செப்பீல்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் காலின் ப்ரீமேன் தலைமை வகித்தார்.

இந்த ஆய்வின் மூலம் ஓவ்வொரு படைப்புக்கும் படைப்பாளன் இருந்தே ஆக வேண்டும் என்பது உறுதியாகிறது.

"
மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னை சீராக்கி, உன்னைச் செம்மைப் படுத்தினான். அவன் விரும்பிய வடிவில் உன்னை அமைத்தான்."

49 comments:

  1. //உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை?//
    எந்த உயிரினத்திற்காவது அந்த உறுப்பு அப்ப்டியே இருக்கிறதா ?

    /இதற்கு அறிவியல் ஆதாரங்கள் எதனையும் அவரோ அவரது சிஷ்யர்களோ சமர்ப்பிக்கவில்லை/
    அறிவியலில் சஅனைத்து கருத்துகளுமே முதாலில் தோராய கருத்தாக உருவாக்கப் படும்ஆதாரம் இல்லாமல் ஆய்வு பத்திரிகைகளில் பதிவிடப் படாது.அவரோ அவருக்கு பின் வருபவர்களோ அதன் மீது பல சோதனைகள் செய்து அக்கூற்றை வலுப் படுத்தலாம். அல்லது எதிர்க்கலாம்.அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல் அவர் பதிவிட்டார் என்பதனை எப்படி கூறுகிறீர்கள்?.
    http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
    டார்வின் இக்கொள்கையை புதிதாக ஏற்படுத்தியவர் அல்ல,இவரின் கண்டுபிடிப்பு பரிணாம் வளர்ச்சிக்கு காரணம் இயற்கை தேர்வு நடைமுறை என்பது மட்டும்தான்.
    இவருக்கு முன் 1809 ல் ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் போன்ற பல்ர் பரிணாம்த்தை ஆய்வு செய்தவர்கள்.
    http://en.wikipedia.org/wiki/Transmutation_of_species
    கோழி முட்டை கதை ஷேஃப்ஃபீல்ட் விஞ்ஞானிகளின் ஒரு கருத்து.அதற்கு பிரபல இறைமறுப்பாளர் பி.எம் மேயரின் கருத்து.
    http://scienceblogs.com/pharyngula/2010/07/chickens_eggs_this_is_no_way_t.php
    ___________
    ஒரு கொளகை அறிவியலைல் மீளாய்வு செய்யப்ப்டுவதும்,அது கொஞ்சம் மாறறப்மடைந்து வேறு கொள்கையாவதும் கூட பரிணாம வளர்ச்சியே.
    கடவுள்,மத கோட்பாடுகள் கூட இப்படித்தான் தோன்றின‌

    எல்லா உயிரினங்களும் இப்போது இருக்கும் அதே அளவிலேயே படைக்கப் பட்டது என்றால் ஆதம் 90 அடி உயரம் என்று ஹதிது கூறுகின்றது.இன்னும் மறுமை நாளில் அனைவரும் அதே அளவு ஆகிவிடுவோம் என்றும் கூறுகிறது..
    ஏன் மனிதன் சுருங்கினான்?.
    ஏதேனும் ஒரு 90[10 to 90 OK] அடி உள்ள ஒரு மனிதனின் உடலை உலக முழுவதும் தோண்டி எடுத்து காட்டினால் நீங்கள் சொல்வதற்கு ஆதாரமாகி விடும்.பரிணாமம் பொய்த்து விடுவது மட்டுமல்ல இஸ்லாமின் அறிவியல அனைவரும் ஏற்பார்கள்.பல பரிசுகள் கிட்டும்.

    ReplyDelete
  2. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!!

    சகோ.சுவனப்பிரியன்,
    யானை/குதிரை மேட்டர்களை கேள்விகளாய் வைத்து டார்வின் ஆதரவாளர்களை சிந்திக்க தூண்டி இருக்கிறீர்கள்.

    படைப்பியல் அதிசயங்கள் பற்றி பல ஆண்டுகளாய் பல முறை பலர் இதுபோன்று கேட்டாலும், இதற்கெல்லாம் பதிலே சொல்லாமல், டார்வினின் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகளை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு....

    தொடர்ந்து ஆத்திகம் பற்றி, "இறைவனின் ஆதி மனிதன் படைப்புக்கு எங்கே யு ட்யூப் வீடியோ அதாரம்" என்று இக்கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாக பதில் சொல்வதாக நினைத்து கேள்வி கேட்டுக்கொண்டே...
    இருப்பார்கள்.

    ஏனெனில், இவர்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும். சுயமாக விடை தேடத்தெரியாது. அப்படி தேடி இருந்தால் இறைவனை உணர்ந்திருப்பார்கள்.

    இந்த வகையில், இறையியல் கேள்விகளுக்கு தவறான லாஜிக்-அற்ற ஆதாரமற்ற நம்பமுடியாத விடைகளை அளித்த டார்வினை கூட நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

    ஆனால் அவர்களின் ஆதரவாளர்களை...?!
    ம்ஹூம்...!

    டார்வினிஸ்டுகளுக்கு பதில் சொல்லத்தெரியாது என்றில்லை.
    பதில் இல்லை...!

    சகோ.சுவனப்பிரியன்,
    கேள்விகள் கேட்ட நீங்கள் ஓர் இலவுகாக்கும் கிளி.
    :-)

    ReplyDelete
  3. Anonymous11:19 PM

    சகோ. பேட் சொல்கிறார்...

    நண்பர் சார்வாகன் அவர்களுக்கு!

    பருவ வயது வந்தவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள ( உடன் பிறந்த சகோதர , சகோதரியானாலும் கூட) அறிவியலின் படி தவறு இருப்பதாக தெரியவில்லை எங்களை போன்ற மதவாதி களுக்கு அது பாவம்

    அறிவியலை முன்னிறுத்தும் நாத்திக வாதி அல்லது கம்யூனிஸ்ட் ஆகியோர்களாகிய உங்களின் நிலை என்ன?

    ReplyDelete
  4. சகோ. சார்வாகன்!

    //எந்த உயிரினத்திற்காவது அந்த உறுப்பு அப்ப்டியே இருக்கிறதா ?//

    இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. டார்வினின் பரிணாமத் தத்துவத்தின்படி தேவையின் பொருட்டு நீளமான ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பெரியதாகியது என்றால் மிருகங்களுக்கு உள்ள குறிப்பிட்ட அந்து உறுப்பும் தேவையினால் பெரிதாகின்றது. பெரிதான அந்த உறுப்பு டார்வினின் தத்துவத்தின்படி சுருங்கக் கூடாது. ஏன் சுருங்குகிறது என்பதுதான் எனது கேள்வி!

    //http://en.wikipedia.org/wiki/Charles_Darwin//

    நீங்கள் கொடுத்த சுட்டி டார்வினின் வரலாறைக் கூறுகிறது. அவரது ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக சொனன கருத்துக்கள்தான் இடம் பெற்றுள்ளன. ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞர்கள் நிரூபித்த உண்மைகளை போல டார்வினின் தத்துவத்தை எவரும் நிரூபிக்கவில்லை. அவருக்கு எதிரான கொள்கைகள்தான் மேலும் நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கிறது. மனிதனின் மண்டை ஓடுகளும், விலங்குகளின் மண்டை ஓடுகளும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ளதை அதில் எந்த வொரு மாற்றமும் இல்லாததும் மிக விளக்கமாக ஹாருன் யஹ்யா விளக்கியுள்ளார். நேரமிருப்பின் அவரது தளத்தில் சென்று படித்துப் பாருங்கள்.

    //எல்லா உயிரினங்களும் இப்போது இருக்கும் அதே அளவிலேயே படைக்கப் பட்டது என்றால் ஆதம் 90 அடி உயரம் என்று ஹதிது கூறுகின்றது.//

    ஒட்டு மொத்த மனிதனின் வளர்ச்சி விகிதம் இறப்பு விகிதம் கால சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் டார்வினின் பரிணாமல் இறைவனால் உருவாக்கப்பட்ட உயிரினங்களின் தோற்றத்திலேயே மாறுபாடுகள் வர பரிணாமம் காரணம் என்கிறார். இதற்குத்தான் ஆதாரம் கேட்கிறோம்.

    ஆதமுக்கு இரண்டு கால்களும் இரண்டு கையும் இரண்டு கண்களும் என்பது போன்ற அனைத்து அவயங்களும் எந்த மாற்றமும் அடையாமல் இன்று வரை நமக்கு தொடர்ந்து வருகிறது. இந்த கருத்து அறிவியலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அளவுகளில் மட்டுமே இன்று வித்தியாசத்தை பார்க்கிறோம். உலக முடிவு நாள் வரை இதே நிலைதான்.

    முத்துப் பேட்டையில் கூட ஒரு தர்ஹா 60 அடியில் கட்டி வைத்துள்ளார்கள். உண்மையிலேயே அப்படி ஒரு மனிதர் தமிழகத்தில் வாழ்ந்தாரா என்பதெல்லாம் நிரூபிக்கப் படவில்லை. மேற்கண்ட தர்ஹாவை ஆராய்ந்து அந்த பரிசுகளை சார்வாகனே தட்டிச் செல்லலாம். :-)

    ReplyDelete
  5. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!!

    சகோ. ஆஷிக்!

    //ஆனால் அவர்களின் ஆதரவாளர்களை...?!
    ம்ஹூம்...!

    டார்வினிஸ்டுகளுக்கு பதில் சொல்லத்தெரியாது என்றில்லை.
    பதில் இல்லை...!

    சகோ.சுவனப்பிரியன்,
    கேள்விகள் கேட்ட நீங்கள் ஓர் இலவுகாக்கும் கிளி. :-)//

    ஆக பதில் வராது என்கிறீர்களா? அப்படியானால் இனி அவர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையில் தங்கள் நேரத்தை செலவழிப்பார்கள் என்று நம்புவோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. சகோ. பேட்!

    //அறிவியலை முன்னிறுத்தும் நாத்திக வாதி அல்லது கம்யூனிஸ்ட் ஆகியோர்களாகிய உங்களின் நிலை என்ன?//

    சார்வாகன் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்.

    சிறிய திருத்தங்கள் செய்து உங்களது பின்னூட்டத்தை வெளியிட்டேன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. rabbani2:59 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் திருத்தியது நல்லது அழகிய முறையில் விவாதிக்க வேண்டும் என்று மார்க்கம் இட்ட கட்டளை யை நினைவு படுத்தியதிற்கு நன்றி

    ReplyDelete
  8. ஒரு வாதத்திற்கு டார்வினின் கண்டு பிடிப்பு தவறு என்ரு வைத்துக் கொண்டலும், இறைவன் 6 நாளில் இந்த அண்ட சரசரங்கலை உண்டாக்கினார் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல பெண்களுடன் உடல் உறவு வைக்க வேண்டி இருந்த தால், ஆதி கால மனிதனின் விதைப்பை தேவைக்கு தகுந்த மாதிரி பெரியதாக இருந்ததக படித்து இருக்கின்றேன். இந்த ஆதாம் ஈவாள் concept கூட ஆபிரகாமிய மதங்களில் மட்டும் தாணே வருகின்ரது. ஆனால் எந்த மததிலிருந்து வெளியெரினாலும் பரினாம தத்துவத்தை எளிதாக ஏற்றுக் கொள்கிரார்கள். (தமிழில் டைப் செய்தால் எனக்கு மூச்சு வாங்குது, ஆங்கிலமோ அறிவோ அறை குறை)


    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  9. //ஆதமுக்கு இரண்டு கால்களும் இரண்டு கையும் இரண்டு கண்களும் என்பது போன்ற அனைத்து அவயங்களும் எந்த மாற்றமும் அடையாமல் இன்று வரை நமக்கு தொடர்ந்து வருகிறது. இந்த கருத்து அறிவியலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அளவுகளில் மட்டுமே இன்று வித்தியாசத்தை பார்க்கிறோம். உலக முடிவு நாள் வரை இதே நிலைதான்.//

    எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர், இன்னும் பலவகையான விலங்குகளின் ஃபாசில்கள் கிடைத்துள்ளன! ஆனால், இப்படி உயரமான மனிதர்களுடையது எங்கே?! 'சார்வாகன்' அவர்களுடைய கேள்விக்குப் பதில் கூறாமல், வேறு எதையோ பேசுகிறீர்கள்!
    ஆதான் 90 அடி என்று உண்மையிலேயே சொல்லப்பட்டிருக்கிறதா?!

    அப்படியெனில் அந்த காலகட்டத்திலிருந்து இப்போது வரை மனிதனின உயரம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது(உங்கள் கருத்துப்படி). அப்படியெனில், வெவ்வேறு உயரம் கொண்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் எங்கேயும் கிடைக்கவில்லையே!! அவர்களுக்கெல்லாம் இறுதித் தீர்ப்பு கிடைத்து சொர்க்கமோ நரகமோ சென்றுவிட்டார்களா?!

    ReplyDelete
  10. rabbani5:24 AM

    நண்பர் கன்னனுக்கு உங்களின் மீது அமைதி உண்டாகட்டும் அந்த 6 நாட்கள் என்பது 24 மணிநேர நாட்கள் அல்ல மாறாக 6 periods என்று எடுத்துக்கொள்ளவும். பரிணாம கொள்கை அறிவியல் பூர்வமாக நிருபிக்க படவில்லை

    ReplyDelete
  11. ஊர் சுற்றி!

    //ஆதான் 90 அடி என்று உண்மையிலேயே சொல்லப்பட்டிருக்கிறதா?!//

    ஆதமுடைய உயரம் 60 முழங்கள் என்று முகமது நபியின் அறிவிப்பு வருகிறது.

    //எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர், இன்னும் பலவகையான விலங்குகளின் ஃபாசில்கள் கிடைத்துள்ளன! ஆனால், இப்படி உயரமான மனிதர்களுடையது எங்கே?!//

    மனிதர்களின் எலும்புகள் டைனோசர்களைவிட மென்மையாக இருந்திருக்கலாம். இன்றும் ஒரு உடலை புதைத்து அடுத்த நூறு வருடத்தில் அதே இடத்தில் பல உடல்களை முஸ்லிம்களாகிய நாங்கள் தமிழகத்தில் புதைக்கிறோம். அரிதாகத்தான் ஒரு சில எலும்புகள் கிடைக்கும. அதனால் முன்னோர்களின் எலும்புகள் மண்ணோடு மண்ணாக மக்கி இருக்க வாய்ப்புண்டு. அல்லது நமது பார்வைக்கு இன்னும் படாமல் அந்த எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் புதையுண்டு இருக்கலாம். வருங்காலத்தில் கண்டு பிடிக்கப் படலாம். ஆதமையும் ஹவ்வாவையும் மறுப்பவர்கள்தான் எலும்புகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.

    ஒரு பொருள் கிடைக்காததாலேயே அந்த தத்துவம் பொய்யாக முடியாது. குர்ஆனும், மாற்றப்படாத பைபிளும், வேறு பல இறை வேதங்களும் ஒரு மனிதரிலிருந்து பல்கி பெருகியவர்கள்தாம் நாம் அனைவரும் என்கிறது. விஞ்ஞானமும் ஒரு ஆப்ரிக்க தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும் என்கிறது.

    ReplyDelete
  12. //மனிதர்களின் எலும்புகள் டைனோசர்களைவிட மென்மையாக இருந்திருக்கலாம். இன்றும் ஒரு உடலை புதைத்து அடுத்த நூறு வருடத்தில் அதே இடத்தில் பல உடல்களை முஸ்லிம்களாகிய நாங்கள் தமிழகத்தில் புதைக்கிறோம். அரிதாகத்தான் ஒரு சில எலும்புகள் கிடைக்கும. அதனால் முன்னோர்களின் எலும்புகள் மண்ணோடு மண்ணாக மக்கி இருக்க வாய்ப்புண்டு. அல்லது நமது பார்வைக்கு இன்னும் படாமல் அந்த எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் புதையுண்டு இருக்கலாம். வருங்காலத்தில் கண்டு பிடிக்கப் படலாம். //

    எல்லாத்தையும் 'லாம், லாம்' னு சொன்னா எப்படிங்க! 'மனிதனின் எலும்புகள் மென்மையாக இருந்ததுன்னு, அதனால கரைஞ்சு போயிடுச்சு'ன்னு யாராவது சொல்லியிருக்காங்களா? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற மிகப்பழைய மனித எலும்புகளின் உயரம்கூட இதே 6 அடியில்தான் இருக்கிறது. உயரம் குறைந்து வந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம், எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை!

    //ஆதமையும் ஹவ்வாவையும் மறுப்பவர்கள்தான் எலும்புகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.//
    இருக்குன்னு சொல்றவங்க நிரூபிக்கணுமா? இல்லேன்னு சொல்றவங்க நிரூபிக்கணுமா?!

    ReplyDelete
  13. ////'சார்வாகன்' அவர்களுடைய கேள்விக்குப் பதில் கூறாமல், வேறு எதையோ பேசுகிறீர்கள்!////

    ஐயாக்களா...!

    இங்கே மொதல்ல கேள்வி கேட்டது ஆரூ?


    FIR 1:
    பதில்களை காணவில்லை..!
    மானுக்கு ஏன் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை? மானும் ஒட்டகை சிவிங்கியைப் போல் இலை தழைகளை சாப்பிடக் கூடியதே!

    FIR 2:
    பதில்களை காணவில்லை..!
    யானைக்கு தும்பிக்கை ஏன் வந்தது?


    FIR 3:
    பதில்களை காணவில்லை..!
    கங்காருக்கு வயிற்றில் ஏன் பை வந்தது? அதற்கான காரணம் என்ன?

    FIR 4:
    பதில்களை காணவில்லை..!
    பரிணாமத்தை வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு மாற்றத்தைக் கூட பதிவு செய்ய முடியவில்லையே ஏன்?

    FIR 5:
    பதில்களை காணவில்லை..!
    டார்வினின் கோட்பாட்டின் படி தேவையின் பால் ஒரு முறை வளர்ந்த அந்த உறுப்பு திரும்பவும் பழைய நிலையை அடைய தேவையில்லை.ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட இந்த உறுப்பை பல நூறு அல்லது பல ஆயிரம் தடவை தேவையின்பால் உபயோகப்படுத்தியும் மாறிய அதே நிலையில் இருப்பதில்லை. திரும்பவும் பழையபடியே தனது பழைய நிலையை அடைந்து விடுகிறது. ஒட்டக சிவிங்கிக்கு தேவையின்பால் கழுத்து நீண்டது போல் உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை?

    FIR 6:
    பதில்களை காணவில்லை..!
    பருவ வயது வந்தவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள ( உடன் பிறந்த சகோதர , சகோதரியானாலும் கூட, மேலும் பல உறவுகளையும் ) அறிவியலின் படி தவறு இருப்பதாக தெரியவில்லை. எங்களை போன்ற மதவாதிகளுக்கு அது பாவம்.

    ஆனால், அறிவியலை முன்னிறுத்தும் நாத்திக வாதி அல்லது கம்யூனிஸ்ட் ஆகியோர்களாகிய உங்களின் நிலை என்ன?


    இனி....

    ///இறைவன் 6 நாளில் இந்த அண்ட சரசரங்கலை உண்டாக்கினார் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.///

    FIR 7:
    பதில்களை காணவில்லை..!
    ---சூரியனும் பூமியும் படைக்கபடவே இல்லாத அந்த 'நாட்களில்'(?)... 'நாட்கள்' என்றால் என்ன..?

    ///பல பெண்களுடன் உடல் உறவு வைக்க வேண்டி இருந்த தால், ஆதி கால மனிதனின் விதைப்பை தேவைக்கு தகுந்த மாதிரி பெரியதாக இருந்ததக படித்து இருக்கின்றேன்.///
    ----ஹாஹ்ஹாஹ்ஹா...

    FIR 8:
    பதில்களை காணவில்லை..!

    இதெல்லாமா நம்புவீர்கள்..? கொஞ்சமாவது யோசிக்க வேணாம்..?

    ஆதிகாலத்தில், ஒரு மனிதனுக்கு ஒரு மனுஷிதானே..? மக்கள்தொகை உங்களுக்கு மட்டும் எப்படி கண்ணா ரிவர்ஸில் போகுது..??? கொஞ்சம் விழித்துக்கொண்டு பின்னூட்டம் போட்டால் நன்றாக இருக்குமே..!

    FIR 9:
    இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காமல் தப்பிக்கும் தமக்கென எந்த கொள்கையுமற்ற இஷ்டத்துக்கு வாழும் நாத்திகர்கள் என்ப்படுவோரை காணவில்லை..!

    @ ஊர்சுற்றி...!

    நீங்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் மிக்க மிக்க நேர்மையாளர் போல தோன்றுகிறீர்கள்.

    முந்தி கேட்ட கேள்விக்கு முந்தி பதில்..!

    பிந்தி கேட்ட உங்கள் கேள்விக்கு பிந்தி பதில்..!

    இதுதான் நீதி, நேர்மை, நியாயம், கண்ணியம், தர்மம், மதிப்பு, மருவாதி எல்லாம்..!

    எனவே, மேற்கண்ட "FIR போடப்பட்ட காணவில்லை கேள்விகளுக்கு" எல்லாம் ஒன்று விடாமல் கரீக்டா பதில் சொல்லிடுங்கமா என் ஊர்சுற்றி கண்ணூ..! என் செல்லம்ல..! ஊர்சுற்றாம இந்த பக்கமா வந்துருங்கமா ராசா..!

    அப்புறம் வரும் உங்களுக்கு வடை.. ஸாரி... விடை..!

    ReplyDelete
  14. @ முஹம்மத் ஆஷிக்,

    ஆம், பரிணாமவியல் 100% நிரூபிக்கப்படவில்லைதான்! அப்படியெனில் உங்களது நம்பிக்கைகளில் இருக்கும் ஓட்டைகளுக்கு என்ன பதில்!

    'பரிணாமவியலை முழுமையாக நிரூபிக்கவில்லை' என்கிற வாதத்தை வைத்திருக்கும் நீங்கள், அதற்கான பதில்கள் இல்லையென நம்பும் நீங்கள், அதற்கான பதிலை எதிர்பார்க்காமல், நீங்களே ஒத்துக்கொண்டுள்ளவற்றில் இருக்கும் எதிர்க் கேள்விகளுக்கான பதிலை விளக்கத் தயாராக இருக்க வேண்டும்!

    இல்லை, உயரமான மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்படாததற்கு இப்படி ஒரு 'லாம்' இருக்கலாம், அப்படி ஒரு 'லாம்' இருக்கலாம், என்று அடுக்கிக்கொண்டுபோகும்போது,
    பரிணாமவியலில் நிரூபிக்கப்படாத உங்களது கேள்விகளுக்கும் அதேபோல் சில 'லாம்'கள் இருக்கலாம்தானே?!

    ReplyDelete
  15. //பல பெண்களுடன் உடல் உறவு வைக்க வேண்டி இருந்த தால், ஆதி கால மனிதனின் விதைப்பை தேவைக்கு தகுந்த மாதிரி பெரியதாக இருந்ததக// This information i got from madhan's "manithanukkul mirukam" book. mr.mohammed Asiq please avoid blame others. i have given comments only in Mr.Swanapriyan's blog not in yours. mr.suwanapriyan please consider about this before publish.

    kannan from abu dhabi.

    ReplyDelete
  16. FIR 10

    ஊர்சுற்றி என்பவரை காணவில்லை.

    கண்டுபிடித்து தருபவர்களுக்கு 60 முழம் எலும்புக்கூடு ஒன்று பரிசாக அளிக்கப்படும்.

    ReplyDelete
  17. @ கண்ணன்

    என்னா....சகோ..கண்ணா...!
    இதுக்கெல்லாமா போய் கோச்சுக்கிறது...!

    //ஆங்கிலமோ அறிவோ அறை குறை//-ன்னு சொல்லிட்டு பட்டைய கிளப்புரீங்களே..!?

    என் அருமை கண்ணா..!
    நீங்கள் சுவனப்பிரியன் பிளாக்கில் தப்பாக கேட்டு ஒரு நகைப்புக்குறிய கமென்ட் போட்டா, நான் ரைட்டா கேட்டு ஒரு சிந்திக்க வைக்கும் கமென்ட் போடக்கூடாதா..?

    பார்த்தீங்களா...?
    பார்த்தீங்களா...?

    மதனுடைய புத்தகத்தை வேதவாக்காக... அப்படியே எந்த ஒரு கேள்வியும் கேட்காம சுயமா சிந்திக்காம நம்புறீங்களே..?
    இது சரியா முதல்லே..?

    பகுத்தறிவை உபயோகிங்க சகோ..!

    அப்புறம் பாருங்க. மதனுக்கு தெரியாத மேட்டர்லாம் உங்களுக்கு தெரியும்..!

    அப்புறம், நீங்களே அவரை கேள்வி கேட்டால், பாவம் அவருக்கே கூட பதில் தெரியாது சகோ..!

    ReplyDelete
  18. @ ஊர்சுற்றி,

    அட..! வந்துட்டீங்களா..!

    சரிங்க, உங்க வாதப்ப்டியே வருவோம்.

    அதுவும் தப்பு..! இதுவும் தப்பு...!

    அப்புறம், எது சரி..?

    நீங்களே சொல்லுங்களேன்..!

    ஒண்ணு ஆதாரமே இல்லை. வெறும் நம்பிக்கை. ஆனால், நாளடைவில், அறிவு வளர வளர பல விஷயங்களை அறிவியல் நிரூபிக்குது உண்மைன்னு. ஆனா அறிவியல் எதையும் இதுவரை பொய்யுனு நிரூபிக்கலை. அது குர்ஆன்-இஸ்லாம்.


    இன்னொண்ணு ஆதாரமே இல்லை. வெறும் நம்பிக்கை. ஆனால், நாளடைவில் அறிவு வளர வளர எல்லா விஷயங்களையும் பித்தலாட்டம், உடான்ஸ், ரீல், பொய், கப்சான்னு அறிவியல் நிரூபிக்குது. இது டார்வினின் பரிணாம தியரி.

    இப்போ.. நீங்கதான் நாட்டமை..!

    தீர்ப்ப சொல்லுங்கப்பு..!

    ReplyDelete
  19. பரினாம வளர்ச்சி பொய். இன்னைறைய அறிவியல் சொல்லுவது எல்லாம் பொய்.
    உலகம் தட்டை.மலைதான் பூமிய தாங்குது
    சுவனப்பிரியன் 1400 வருஷத்துக்கு முந்தைய புத்தகம் சொல்லுவது தான் சரி.
    அஸ்கு புஸ்கு

    ReplyDelete
  20. @ முஹம்மத் ஆஷிக் ,
    அப்படியெனில் குர்-ஆனில் இருப்பதெல்லாம் அப்படியே உண்மை என்கிறீர்கள்!

    நான் முழுக்க குர்-ஆனைப் படிக்காததினால், அடுத்த நிலை கேள்விகளைக் கேட்பது நியாயமாக இருக்காது. அதற்காகத்தான் குர்-ஆன் படித்துக்கொண்டிருக்கிறேன்! அதிலிருக்கும் விசயங்கள் நம்பத்தகுந்தவையும் மனிதகுலம் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் இல்லை என்பதை, அதைப் படித்து முடித்த பின்பு வந்து விவாதிக்கிறேன்.

    ஒன்று சந்தேகத்திற்கு உட்பட்டது என்பதற்காக, சந்தேகத்திற்கு உட்பட்டதும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் இயலாத இன்னொன்றை, உங்களைப் போல் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது!
    -நன்றி.

    ReplyDelete
  21. Mr.Ashiq Ali

    i'm not saying darvin is correct. i already accepted that, darvin might be wrong. but my indulactual not accepting the logic that "GOD MADE THIS UNIVERSE IN 6 days and he took rest on 7th day (was he so tired?) if you consider that each days as period than what about 7th day. did god take long leave?. i too accept the things after proper discussion. but with out clearing my question you have given comment that "ha ha ha ha". if you feel that my answer is wrong, you should have asked in the comment itself that from where you got this information. for you kind information in the earlier time/ stage man had many life partners (please don't consider as wife) please read dr.shalin's "yuir mozhi". even king david had many women in his anthappuram (bible says). even though i studied about eveluation thoery, i'm not skilled enough to discuss.

    kannan from abu dhabi
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  22. நண்பரே
    இதற்கு தனி பதிவிட்டு நண்பர் ஆசிக்கின் வகை படுத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.

    ReplyDelete
  23. @ ஊர்சுற்றி,

    சகோ.ஊர்சுற்றி,
    குர்ஆன் படிக்கும் உங்கள் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
    படியுங்கள் சகோ.

    ஆனால், தயவு செய்து உங்களின்...
    //நம்பத்தகுந்தவையும் மனிதகுலம் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் இல்லை//....என்ற இந்த தவறான முன்முடிவை ஒதுக்கி வைத்து விட்டு நடுநிலையுடன், தெளிந்த, திறந்த, மனதுடன், புதிதாக அறியும் ஆவலுடன், நேர்மையாக படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொகிறேன். படித்து முடித்த பிறகே எந்த ஒரு முடிவுக்கும் வாருங்கள் சகோ.


    அப்புறம் சகோ.... இங்கே, ஒன்றை கவனித்தீர்களா..?

    ///ஒரு வாதத்திற்கு டார்வினின் கண்டு பிடிப்பு தவறு என்ரு வைத்துக் கொண்டலும்,...///--என்று பின்னூட்டமிட ஆரம்பித்தவர் நீங்கள்,,,,


    கடைசியில்...

    ///ஒன்று சந்தேகத்திற்கு உட்பட்டது என்பதற்காக, சந்தேகத்திற்கு உட்பட்டதும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் இயலாத இன்னொன்றை, உங்களைப் போல் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது!///---என்று கூறி, பரிணாமத்துக்கும் சேர்த்து நீங்கள் செமை ஆப்பு வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. அதுதான் இந்த பதிவுக்கு அவசியம்.



    மற்றபடி...

    நான் சொன்ன இது...
    //சரிங்க, உங்க வாதப்ப்டியே வருவோம்.//...என்று கூறி, உங்களுக்காக சொல்லப்பட்டதுதான்..!

    ஏனெனில், எனது இறை நம்பிக்கை இந்த அடிப்படையிலானது அல்ல..!

    :)

    ReplyDelete
  24. சகோ. கண்ணன்!

    //"GOD MADE THIS UNIVERSE IN 6 days and he took rest on 7th day (was he so tired?) if you consider that each days as period than what about 7th day. //

    'முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெரு வெடிப்பில் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்.'
    -A brief history of time, page no 9,Hawking

    'உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது'
    -குர்ஆன் 22:47

    ஒருநாள் என்பதன் கால அளவு 24 மணி நேரமாகும் என்பது நமது பூமிக்கு மட்டுமே செல்லுபடியாகும் கால அளவாகும். ஆனால் இந்த கால அளவு நமக்கு அருகில் உள்ள சந்திரனில் கூட செல்லுபடியாகாது. அங்கு ஒரு நாள் என்பது நம்முடைய 24 மணி நேரத்தைப் பொன்று 28 மடங்காகும். அங்கு மாதமும் நாளும் ஒரே கால அளவைக் கொண்டதாகும். இதற்கு மாறாக வியாழன்(ஜூபிடர்) கோளில் ஒரு நாள் என்பது வெறும் 10 மணி நேரமாகும்.

    எனவே ஆறு நாட்களில் இவ்வளவு மகா பேரண்டம் படைக்கப்பட்டது நமது பூமியில் உள்ள நாட்களின் அளவை வைத்து மதிப்பிடல் முடியாது என்பதை விளங்குகிறோம்.

    பெரு வெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே நமக்கு காலத்தின் தொடக்கம் என்பதாக அறிஞர் ஹாக்கிங் கூறுகிறார்.

    // rest on 7th day (was he so tired?)- than what about 7th day. did god take long leave?. //

    ஏழாம் நாளான ஒன்றை எங்கிருந்து எடுத்தீர்கள்?
    இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததாக எங்கு படித்தீர்கள்? தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.

    //i too accept the things after proper discussion. but with out clearing my question you have given comment that "ha ha ha ha".//

    ஆஷிக் அவ்வாறு எழுதியது உங்களுக்கு மன வருத்தத்தைத் தந்திருந்தால் நான் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனி அவ்வாறு உங்களின் பதிலில் எழுதமாட்டார். வழக்கம் போல் உங்கள் கருத்தை தாராளமாக வைக்கலாம். நன்றி!

    ReplyDelete
  25. @ மிஸ்டர்.சகோ.கண்ணன் அவர்களே,

    //Mr.Ashiq Ali//--இது நான்தான்(?) என்று புரிந்து கொண்டு பதில் அளிக்கிறேன்.

    ///ஒரு வாதத்திற்கு டார்வினின் கண்டு பிடிப்பு தவறு என்ரு வைத்துக் கொண்டலும்,///--என்று பின்னூட்டமிட ஆரம்பித்தவர் நீங்கள்.

    ஆனால்,

    ///i'm not saying darvin is correct. i already accepted that, darvin might be wrong.///---என்று தெளிவாக பிரகடனப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.கண்ணன். இதுதான் இந்த பதிவிற்கு தேவை.


    நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் "நாட்கள்" பற்றி..!

    //"ha ha ha ha".//---வருந்துகிறேன். நிஜமான என் உணர்வை எழுத்தில் பகிர்ந்தமைக்கு.



    // please read dr.shalin's "yuir mozhi"//---யாரை சொல்கிறீர்கள்...? சூடான பதிவிற்கும், அதிக ஹிட்சுக்கும் ஆசைப்பட்டு அடிக்கடி ஆண்குறி/ஆண்களை ஹேண்டில் செய்வது பற்றி எழுதுவார்களே அந்த சகோதரியா..? அல்லது வேறு ஒருவரா..? சுட்டி கொடுத்திருந்தால் நலம்.


    சரி, யாரோ....

    ///for you kind information in the earlier time/ stage man had many life partners///---இதற்கு சான்று என்று அந்த டாக்டர் ஷாலினி என்ன கூறினார்...? கார்பன் டெஸ்ட் செய்யப்பட்ட ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னால் கிடைத்த 'குடும்பப்பட கல்வெட்டா'..?

    நாம் தான் 1400 ஆண்டு பழமையான விஷயங்களையே கூட நம்புவது கிடையாதே ஸார்..!?

    ReplyDelete
  26. ஜெய்சங்கர்!

    //பரினாம வளர்ச்சி பொய். இன்னைறைய அறிவியல் சொல்லுவது எல்லாம் பொய். //

    அறிவியல் பொய் என்று நான் சொல்லவில்லை. இஸ்லாமும் சொல்லவில்லை. டார்வினின் பரிணாமத் தத்துவம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாமல் திரும்ப திரும்ப அனைவராலும் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்ற பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருப்பதுதான் இங்கு பிரச்னையே!

    //உலகம் தட்டை.மலைதான் பூமிய தாங்குது//

    இதை எங்கிருந்து படித்தீர்கள்? வழக்கம் போல் பொய்யான தகவல்.

    ReplyDelete
  27. ஊர்சுற்றி!

    //நான் முழுக்க குர்-ஆனைப் படிக்காததினால், அடுத்த நிலை கேள்விகளைக் கேட்பது நியாயமாக இருக்காது. அதற்காகத்தான் குர்-ஆன் படித்துக்கொண்டிருக்கிறேன்! //

    தாராளமாக படித்து விட்டு சிறந்த கருத்துகளோடு வாருங்கள்.

    //அதிலிருக்கும் விசயங்கள் நம்பத்தகுந்தவையும் மனிதகுலம் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் இல்லை என்பதை, அதைப் படித்து முடித்த பின்பு வந்து விவாதிக்கிறேன்.//

    படிக்க ஆரம்பிக்கும் முன்னால் நம்மை படைத்த இறைவனின் வாக்கு என்று முஸ்லிம்கள் சொல்லுகிறார்களே! அது உண்மையாக இருக்குமா? என்ற தேடலில் குர்ஆனில் தேடுங்கள். நிச்சயம் பல கேள்விகள் பிறக்கும்.

    ReplyDelete
  28. சகோ.ஊர்சுற்றி,

    ///எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர், இன்னும் பலவகையான விலங்குகளின் ஃபாசில்கள் கிடைத்துள்ளன!///----என்று ஆரம்பித்தவர்கள் நீங்கள்....

    ///ஒன்று சந்தேகத்திற்கு உட்பட்டது என்பதற்காக///---என்று கூறி....

    டார்வினின் பரிணாமத்தை சந்தேக வட்டத்தில் வைத்து விட்டதற்கு மிக்க நன்றி சகோ.

    குறிப்பு: காபி பேஸ்டில் உங்களுக்கான முந்தைய என் பதிலி சிறு திருத்தம் இது.


    +++++++++++++++++++++++++++++++++++


    எனினும், இங்கே கேட்கப்பட்ட FIR கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை சகோ.சுவனப்பிரியன்...!

    நான் சொன்னேன் அல்லவா...?

    "இலவு காக்கும் கிளி" என்று..!

    ReplyDelete
  29. சகோ. சார்வாகன்!

    //நண்பரே
    இதற்கு தனி பதிவிட்டு நண்பர் ஆசிக்கின் வகை படுத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.//

    நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  30. @சார்வாகன்,

    ////இதற்கு தனி பதிவிட்டு நண்பர் ஆசிக்கின் வகை படுத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.////

    ----இங்கே பதில் அளிக்காமல் அருமையான எஸ்கேப்.

    ஆனாலும், இந்த முடிவு நன்றே.

    வீண் அக்கப்போரை தவிர்க்க...!


    பதிவு போடுவதற்கு முன்னர்,

    எதற்கும் இந்த சுட்டியில் சென்று அங்கிருப்பவற்றை அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து விட்டு

    அப்புறமா பதிவு போடுதல் உங்களுக்கு நலம், சகோ.சார்வாகன்.


    வேண்டுகொள்:
    பரிணாமம் என்ற தலைப்பில்... பரிணாமத்தை பற்றி எழுத...!

    ReplyDelete
  31. சகோ. ஆஷிக்!

    //எனினும், இங்கே கேட்கப்பட்ட FIR கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை சகோ.சுவனப்பிரியன்...!

    நான் சொன்னேன் அல்லவா...?

    "இலவு காக்கும் கிளி" என்று..!//

    சார்வாகன் தனி பதிவாகவே போடுவதாக சொல்லியிருக்கிறார்.

    யானைக்கு ஏன் தும்பிக்கை வந்தது?

    மானுக்கு மட்டும் ஏன் தலை நீளவில்லை?

    மர்ம உறுப்பு பழைய நிலையை ஒவ்வொரு முறையும் அடைவது ஏன்?

    கங்காருக்கு ஏன் வயிற்றில் பை வந்தது?

    உயிரினங்களின் உடலில் உயிர் எப்படி வந்தது?

    ஒரு செல் உயிரி உண்டானது எவ்வாறு?

    என்ற பல கேள்விகளுக்கும் அறிவியல் ஆதாரங்களோடு பதில்களை சார்வாகன் கொண்டு வருகிறார். நாமும் காத்திருப்போம்.

    ReplyDelete
  32. இந்த 7வது ஒய்வு நாள் சமச்சாரம் பைபிளில் பழைய ஏற்பட்டில் (2:1) வருகின்றது. கிறித்தவம் மற்றும் இஸ்லாம் ஆதாமை பற்றி பேசுவதால் இந்த் 7வது நாள் சமாச்சாரமும் இரண்டுக்கும் same எண்று நினைத்தேன். (இப்ப மாட்டிக் கொண்டேன்)

    kannan from abu dhabi.

    ReplyDelete
  33. சகோ. கண்ணன்!

    //இந்த 7வது ஒய்வு நாள் சமச்சாரம் பைபிளில் பழைய ஏற்பட்டில் (2:1) வருகின்றது. கிறித்தவம் மற்றும் இஸ்லாம் ஆதாமை பற்றி பேசுவதால் இந்த் 7வது நாள் சமாச்சாரமும் இரண்டுக்கும் same எண்று நினைத்தேன். (இப்ப மாட்டிக் கொண்டேன்)//

    தவறான தகவல்களை நம்மையறியாமல் தந்து விடுவது எல்லோருக்கும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

    இதில் மாட்டிக் கொள்வதெல்லாம் ஒன்றும் இல்லை சகோ. நான் கூட சில தவறான தகவல்களை தந்து நண்பர்கள் பின்னூட்டத்தில் விளக்கியவுடன் திருத்தியிருக்கிறேன். மனிதர்கள் கரம் புகுந்ததால் பைபிளில் இது போன்று பல தவறுகள் உள்ளன. பைபிளைப் பார்த்துதான் குர்ஆனை முகமது நபி உருவாக்கினார் என்ற வாதம் கூட இது போன்ற பல வசனங்களால் அடிபட்டுப் போகிறது.

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் சார்வாஹன் அவர்களே நீங்கள் பதிவு போட்டு எனது கேள்விக்கு பதில் சொல்வதாக சொல்லிருப்பதால் காத்திருக்கிறேன் பதில் அறிவியலின் அடிப்படையில் இருக்க வேண்டும்

    ReplyDelete
  35. நண்பர் சார்வாகன் அவர்களுக்கு இந்தகேள்வி நண்பர் இக்பால் செல்வனிடம் கேட்டதிற்கு ஒரு மொக்கையான பதில் தந்தார் அவரும் ஒரு பதிவு போடுவதாக சொல்லிருக்கிறார் பார்ப்போம்

    இதோ உங்களுக்காக

    on June 18, 2011 9:34 AM said...
    பருவ வயது வந்த ஆண் பெண்(உடன் பிறந்த சகோதர சகோதரி என்றாலும்) செக்ஸ் வைத்து கொள்ள அறிவியலின் அடிப்படையில் தவறு இருப்பதாக தெரியவில்லை.மதவாதிகளாகிய எங்களுக்கு அது பாவம்.அறிவியலை முன்னிருத்தும் உங்களை போன்றவர்களின் நிலை என்ன?

    இக்பால் செல்வன் on June 18, 2011 10:39 AM said...
    @ bat - அப்படியா ? நெருங்கிய ரத்த சம்பந்தத்தில் உறவு வைப்பதை இயற்கை தடுக்கின்றது ( INCEST ).. ஏனெனில் நெருங்கிய ரத்த சம்பந்தத்தில் உறவு வைப்பது ஜீன் விருத்தியினைத் தடுத்து, இனப்பரம்பலில் நோஞ்சானான தலைமுறையை உண்டாக்கும், அது தாக்குப்பிடிப்பதில்லை ... மனித இனம் அதனை நன்கு உணரும் .. அதனாலேயே நெருங்கிய உறவு முறை பாலுறவுகளை அனேக மனிதர்கள் விரும்புவதில்லை.. இவை மதங்களால் ஏற்பட்டதல்ல. மதங்களுக்கு முன்னரே இவை ஏற்பாடுகளாகி விட்டன.

    உதா. யானைக் கூட்டத்தில் ஆண் யானை குட்டியாக இருந்து பெரிதாக ஆனவுடன் அவை துரத்தப்படும், ஏனெனில் ! அது நெருங்கிய உறவில் உறவாடினால் இனவிருத்தி நோஞ்சானாக ஆகிவிடும் என்பதால். அவைக்கும் கடவுள் தான் சொல்லிக் கொடுத்தார் என நீங்கள் சொல்லுவீர்கள் ? ஆனால் இவை அனைத்து உயிரினங்களிலும் இல்லை ... சில உயிரினங்களில் நெருங்கிய உறவாடல் இயல்பாகவே இருக்கின்றன ... ஆனால் மனித இனத்தில் இவை இயல்பாகவே வெறுக்கப்படுகின்றன ....

    INCEST-ஐ வளர்த்தது மதங்களே ! ஏனெனில் ஆதாமும், ஏவாளும் அண்ணன் தங்கையர் போலே இருப்பினும் உறவாடி சந்ததி வளர்த்தார்கள் ... அதே போல ஆதாமின் மகன்களுக்கு எங்கிருந்து பெண்கள் கிடைத்தார்கள்.. ஆரம்ப கால கதைகள் INCEST வகையறாக்களே ! இவ்வாறான கதைகளை உருவாக்கியது மதவாதிகளே ...

    ஏன் இன்றளவும், பெரியப்பன், சிற்றப்பன் பிள்ளைகள், மாமன், அத்தைப் பிள்ளைகள் நெருங்கிய ரத்தம் என்று பகுத்தறிவுக்கு தெரிந்து மதம் - கலாச்சார காரணங்களுக்காக உறவாடி வருவதும் யார் செய்த குற்றம் ???

    அறிவியலில் அனைத்தும் ஆதாரங்களும், காரணங்களும் காட்ட முடியும் .. ஆனால் மதங்களால் முடிவதில்லை. எழுதிய வேத வசனங்களைத் தூக்கிக் காட்டி உட்பொருள் எனக் கூறி திசைத்திருப்புவதே வேலையாகும் ........ !!!

    அறிவியலின் படி நெருங்கிய INCEST உறவுகள் இனவிருத்திக்கு உகந்தது அல்ல என்பதுவே உண்மை ..

    NEXT QUESTION PLS !

    இதிலும் அறிவியலின் படி நிறைய தவறு இருக்கிறது ஜீன் அது இது என்று உளறி இருக்கிறார் நெருங்கிய உறவோடு செக்ஸ் வைத்து அதன் மூலம் குழந்தை பெற்றால் ஜீன் குறைபாடு நடக்க சான்ஸ் உள்ளது, probability அவ்வாறு நடக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது மேலும் அந்த ஜீன் குறைபாடு களை எழிமையாக இன்றைய மருத்துவ அறிவியலின் படி சரி செய்யலாம் என்பது வேற கதை

    அடுத்த பின்னுட்டம்

    bat on June 18, 2011 3:00 PM said...
    நண்பரே நீங்கள் எப்போதும் இப்படிதானோ எதையும் அரைகுறையாக படித்து எல்லாம் தெரிந்த மேதாவி போல் நடந்து கொள்வது எனது கேள்வி என்ன,உங்களது பதில் என்ன செக்ஸ் வைத்து கொள்வதை கேட்டால் நீங்கள் இனவிருத்தி அது இது என்று கதை விடுகிறீர்கள் செக்ஸ் என்பது இனவிருத்திக்காக மட்டும் பன்னும் ஒரு செயல?

    bat on June 18, 2011 4:25 PM said...
    நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எனது முந்திய பின்னூட்டத்திற்கு விளக்கம் அறிவியலின் அடிப்படையில் கொடுக்க வேண்டும்

    இக்பால் செல்வன் on June 18, 2011 9:09 PM said...
    @ bat - // அறிவியலை முன்னிருத்தும் உங்களை போன்றவர்களின் நிலை என்ன? //

    அறிவியலை முன்னிறுத்தும் எங்களைப் போன்றோரின் நிலையில் அது தவறு .... என்பதே ஆகும்.

    // இப்படிதானோ எதையும் அரைகுறையாக படித்து எல்லாம் தெரிந்த மேதாவி போல் நடந்து கொள்வது எனது கேள்வி என்ன,உங்களது பதில் என்ன செக்ஸ் வைத்து கொள்வதை கேட்டால் நீங்கள் இனவிருத்தி அது இது என்று கதை விடுகிறீர்கள் செக்ஸ் என்பது இனவிருத்திக்காக மட்டும் பன்னும் ஒரு செயல //

    அறிவியலின் படி செக்ஸ் என்பது இனவிருத்திக்கானது ... மதவாதிகளுக்கு எப்படியோ ???

    உங்களுக்கு என்ன அறிவியலின் ஜெனிட்டிக் அடிப்படையில், உளவியல் அடிப்படையில் விடை வேண்டும் அவ்வளவு தானே.. ஒரு பதிவாகவே எழுதிப் போடுகின்றேன். வந்து படியும் சகோ.

    இவ்வாறு நிறைய தவறுகளுடன் ஒரு மொக்கை பதில் தந்து தப்பித்து விட்டார்
    செக்ஸ் என்பது இனவிருத்திக்காக மட்டும் செய்யும் செயலாம் அதற்க்கு அறிவியலை யும் துணைக்கு அழைக்கிறார் எனக்கு தெரிந்து பால்ஊட்டிகள் தனது உடல் பசி யினாலும் அமைதிக்காகவும் ஒரு மருந்தாக செய்யும் செயலே செக்ஸ் அதன் பிரதிபலனாக கிடைக்கும் பலனே இனவிருத்தி. இவர் சொல்லுவது போல் நம்பினால் தங்களால் குழந்தை பெறமுடியாது என்று தெரிந்த வர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள கூடாதா?

    ReplyDelete
  36. FIR 1:
    பதில்களை காணவில்லை..!
    மானுக்கு ஏன் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை? மானும் ஒட்டகை சிவிங்கியைப் போல் இலை தழைகளை சாப்பிடக் கூடியதே!

    நாம் கேட்ட கேள்விக்கு சார்வாகன் அளித்திருக்கும் பதில்:

    இயற்கைத் தேர்வில் ஒரு இனத்திற்கு நிகழ்ந்தது பிற இனத்திற்கு நடக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.மான்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் ஒட்டக சிவிங்கிகள் வாழ்கின்ரனவா ,ஒட்டகச் சிவிங்கிகள் ஊமைகளாக்வும் இத்தேர்வினால் ஆகிவிட்டன.இது ஒரு மிக‌ சிறந்த தேர்வு இலை ஆனால் இருந்த வாய்ப்புகளில் உள்ள சிறந்த ஒன்று.

    மான்களுக்கு வேறு பல வாய்ப்ப்ய் இருந்து இருக்கலாம்.இக்கேள்வியின் மீது முனைவர் பட்டம் செய்யும் அள்விற்கு விஷயம் இருக்கின்றது நண்பரே!!!!!!.

    நான் பொறியியலாளன்,பரிணாம் குறித்த என‌து புரிதல்கள் இன்னும் வளர்க்கப் படவேண்டும். இருந்தாலும் காலக் கணக்கீடுகள் பரிணாம் ஃபாசில்கள் கூற்றை மிகவும் ஒத்துப் போகின்றது.

    இது குறித்து இன்னும் மிக சரியான விடை தேடி பல ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கிறேன்.இன்னொரு பதிவிடிவேன்உதிய பதிவு பாருங்கள்,வியப்பாக இருக்கும்..நன்றி
    பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய்!!!!!!!! பாய்!!!!!!

    http://saarvaakan.blogspot.com/2011/06/blog-post_20.html

    ReplyDelete
  37. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.சுவனப்பிரியன்,
    தங்கள் சுட்டியில் சென்று பார்த்ததில்,
    நீங்கள் சொன்ன அந்த ஒரே ஒரு அரைவேக்காட்டு அம்சம் கூட இல்லையே சகோ..?

    /////நண்பரே
    இதற்கு தனி பதிவிட்டு நண்பர் ஆசிக்கின் வகை படுத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்./////----என்று சொல்லிவிட்டு ஒன்றுக்கு கூட பதில் சொல்லாமல்.....

    நீங்கள் கொடுத்த சுட்டியில்... அந்த பரிணாமம் பற்றிய மொக்கை பதிவில்....

    உள்ள ஒரு சூப்பர் காமடி வரி,

    ////பரிணாமம் நிரூபிக்கப் பட்ட ஒன்று.இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு அனைவருக்கும் புரியும் படி எளிமைப் படுத்தப்படும்.////


    அடப்பாவிங்களா...!

    அப்ப, இதுவரை எவனுக்குமே புரியாததுதான் பரிணாமமா...?

    ரொம்ப சந்தோசம்....!

    பிற்காலத்தில் ஒருவேளை அதை "எளிமைப்படுத்திய" பின்னால்... நீங்கள் எல்லாரும் ஒருவாட்டி அந்த "எளிமைப்படுத்தப்பட்ட பரிணாமத்தை" படிச்சிட்டு வந்து... ஒருவேளை உங்களுக்கும் அது புரிஞ்சால்.... அப்பால வந்து அது பற்றி விவாதிங்க ராசாக்களா...!

    அது வரை...

    ஒரு நாத்திகனும்... வெட்கம்னு ஒண்ணு இருந்தால் பரிணாமம் பத்தி பேசாதிங்க..!

    ச்சே...

    இப்படியா ஒரு 'பெரிய(?)மனுஷன்' ஊரை ஏமாற்றிக்கொண்டு திரிவார்..?


    நம்மை எல்லாம் வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பயளுங்கன்னு நினைத்து விட்டாரா அந்த ஆளு...?


    இனி இந்த மாதிரி சைபர்கள் கூடவெல்லாம் நாம் விவாதித்தால் நம்மைத்தான் பார்பவர்கள் கூமுட்டை என்று நினைப்பார்கள் சகோ..!

    ReplyDelete
  38. டார்வினின் கூற்றுப்படி (உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதாக) இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை

    ... Few saw any reason to demur - though it is a startling fact that, of the half dozen reviews of the On the Origins of Species written by paleontologists that I have seen, all take Darwin to task for failing to recognize that most species remain recognizably themselves, virtually unchanged throughout their occurrence in geological sediments of various ages." --- Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.
    நீண்ட காலங்களாகவே தொல்லுயிரியலாளர்கள், டார்வினின் கற்பனையான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கூற்றிற்கான தொடர் நிகழ்வுகளை தேடி வருகின்றனர் (ஆனால் அவர்களது முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது)...
    ஆனால் வியப்பளிக்கும் உண்மை என்னவென்றால், Origin of Species குறித்து நான் பார்த்த அரை டஜன் விமர்சனங்களில், அவற்றை எழுதிய தொல்லுயிரியலாளர்கள், பெரும்பாலான உயிரினங்கள் தாங்கள் இருந்த காலங்களில் மாற்றமடையாமல், தாங்களாகவே இருந்துள்ளன என்பதை டார்வின் உணரத் தவறியதாக விமர்சித்துள்ளனர் --- (Extract from the original Quote of) Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.

    இந்நேரம் நீங்கள் ஒன்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது, ஒரு கோட்பாடை முன்வைத்து விட்டு அதற்கான ஆதாரத்தை தேடுகிறார்கள் டார்வின் ஆதரவாளர்கள். ஜே குட் அவர்களோ, இருக்கும் ஆதாரத்தை வைத்து அதற்கேற்றார்போல் ஒரு கோட்பாடை உருவாக்கி கொண்டார்.

    இப்போது நான் பரிணாமவியலாளர்களிடம் கேட்க நினைக்கும் சில கேள்விகள்,
    • இதுவரை கண்டெடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள், உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும் அவைகளில் பெரும்பாலானவை மாற்றமடையாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை நீங்கள் ஏற்கின்றீர்களா? மறுக்கின்றீர்களா?
    • ஜே குட் மற்றும் நைல்ஸ் எல்ரெச் ஆகிய இருவரின் கோட்பாடான "puntuated Equilibria" கொண்டுவரப்பட்டதற்கு டார்வினின் கூற்று தவறு என்பதுதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா? இல்லையா?
    • டார்வின் மற்றும் ஜே குட், இந்த இருவரது கோட்பாட்டில் எது சரி? எது தவறு?. இதே கேள்வியை வேறு விதமாக கேட்பதென்றால், உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாற்றடைந்து வேறொன்றாக மாறினவா? அல்லது குறுகிய கால இடைவெளியில் விரைவாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறி பிறகு மாற்றமடையாமல் தொடர்ந்தனவா?
    • ஜே குட் அவர்களின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் டார்வினின் "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
    • "இல்லை, இல்லை, டார்வின் சொன்னது தான் சரி" என்றால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் அவரது கருத்துக்கு எதிராக உள்ளனவே? அதற்கு உங்களது பதிலென்ன?
    • மேற்கண்ட கேள்விக்கு, "உயிரினப்படிமங்கள் இன்னும் முழுமையான அளவில் கிடைக்கவில்லை , அதனால் தான் பரிணாமம் தென்படவில்லை" என்று நீங்கள் கூறினால், பிறகு எந்த வரலாற்று ஆதாரங்களை வைத்து நாங்கள் பரிணாமத்தை நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
    • பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காத போது, சென்ற காலத்தில் இப்படி நடந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்படி நம்பமுடியும்?
    • இன்றைய நிலவரப்படி, வரலாற்று ஆதாரங்கள் "உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும், அவை சிறுகச் சிறுக வேறொன்றாக மாறவில்லை" எனவும் சொல்கின்றன. இன்றைய ஆதாரங்கள் இப்படி சொல்கின்ற நிலையில் இவற்றை நம்புவது சரியா? அல்லது ஆதாரங்களே இல்லாத, நீங்கள் சொல்கின்ற கொள்கையை நம்புவது சரியா?
    • எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பின்னப்பட்ட ஒரு கருத்தை கதை என்று கூறுவது ஏற்புடையதா? அல்லது அறிவியல் என்று கூறுவது ஏற்புடையதா?

    பரிணாமவியலில் உள்ள ஓட்டைகள் காலப்போக்கில் தங்களுடைய அளவிலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, அதிகரித்து கொண்டுதான் வருகின்றன.

    ஓட்டைகள் பல நிறைந்த இப்படியான ஒரு கோட்பாட்டை நம்ப மறுப்பவர்களை"அறிவியலை எதிர்க்கின்றார்கள்" என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை பரிணாமவியலாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

    நன்றி: www.ethirkkural.blogspot.com

    ReplyDelete
  39. 7. //நீங்கள் சொல்லும் சீலகாந்த், ஆர்கியாப்ட்ரிக்ஸ் --இதெல்ல்லாம் என்னவாம்?//

    இவையெல்லாம் இடைப்பட்ட உயிரினங்கள் கிடையாது. சீலகாந்த் என்பது ஒரு மீன். ஆர்கியாப்ட்ரிக்ஸ் என்பது பறவை. இவை குறித்து பதிவுகள் வர இருக்கின்றன (இன்ஷா அல்லாஹ்)....

    ஐயா, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள முயலுங்கள். ஒரு உயிரினம் மற்றொன்றாக சிறுகச் சிறுக மாறினால் நமக்கு எண்ணற்ற இடைப்பட்ட உயிரினங்கள் கிடைத்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, '2' என்ற உயிரினம் '3' ராக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவை சிறுக சிறுக மாற்றமடைந்தால் நமக்கு 2.1 (2.11,2.12 etc), 2.2(2.21,2.22 etc), 2.3, 2.4 etc etc என்று '3' வரும்வரை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் காட்டும் ஆதாரங்களை பார்த்தீர்களா?

    நிச்சயமாக பரிணாமத்தை நம்புபவர்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
    -Thanks. Ethirkkural.blogspot.com


    1.முள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றது?
    2.அது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு ஏற்படாதது ஏன்?
    3.அதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது?
    4.பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன்?-இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன்?அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்?
    5.ஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது?
    6.தேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது?
    7.மேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது? பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்?
    8.ஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான(?) ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் இல்லாமல் போனது ஏன்?
    10.ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்தது?அல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது?
    thanks bro Gulam

    ReplyDelete
  40. 11.வண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம்? ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்?
    12.பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்-?வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்?
    13.சிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்?அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது?
    14.மற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன்? அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாதது ஏன்?
    15.மனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன்? ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் இயல்பை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம்? அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன?
    14.நண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது?
    15.சிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் கற்றுக்கொண்டது?

    மேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.எனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதே எம் தரப்பு வாதம். இப்படி ஒவ்வொரு உயிரும் சிறப்பியல்களுடன் அமைய வாழ்வதென்பது கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க சாத்தியம் என்பதே எம் நிலைபாடு.

    உங்களை பொறுத்தவரை உலகில் முதன்முதலில் தான் தோன்றியான உயிரின உருவாக்க மூலம் தவிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறீர்கள்.அதன் அடிப்படைப்பில் நான் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் நான் மேலே குறிப்பிட்டவைகள் எதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.ஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வசரிசைக்கு ஆதாரமாக இருக்கும் போது நான் கேட்ட அனைத்து " ? " க்கும் மிக தெளிவாக,விரிவாக விளக்கங்கள் உங்கள் (பரிணாமவியல்)கோட்பாடுகளில் நிறைந்திருக்கும், அக்கோட்பாடுகளிலிருந்து விடை அளிப்பீர்கள் என நம்புகிறோம்!
    -Thanks Bro. Gulam

    ReplyDelete
  41. Anonymous6:56 PM

    ஐயா சுவனப்பிரியன்,

    ஈழப்பிரச்சினைக்கு உங்கள் விமர்சனம் வாசிக்கப்போய் இங்கே வந்து பார்த்தால் விளங்குகிறது உங்களின் நிலமை.

    ”....உதாரணத்திற்கு ஒட்டகை சிவிங்கி எட்டாத உயரத்தில் இருக்கும் இலை தழைகளை சாப்பிட எத்தனித்து தனது கழுத்தை நீட்ட முயற்ச்சித்தது. இந்த முயற்ச்சியின் பலனாக பல பரிணாமங்கள் எடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நாம் பார்க்கும் இந்த நிலையை அடைந்தது என்கிறார். அதே காடுகளில் வசிக்கும் மானுக்கு ஏன் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை? ....”

    முதலில் சார்ஸ் டாவினின் கூர்ப்புக்கொள்கை பற்றி சரியாக விளங்காமல் பேசுவதால் வந்த வினை இது.
    இந்த மான் ஒட்டைச்சிவிங்கி டாவினின் கூர்ப்புக்கொள்கைக்கான கிளாசிக்கல் உதாரணங்களில் ஒன்று...

    1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன.
    2) வரட்சி மற்றும் போட்டி காரனமாக ப்திவாக இருந்த தாவரங்கள், புல்வெளிகளில் உணவு அருகிப்போனது.
    3) குட்டையான க்ழுத்தைக்கொண்ட மான்கள் இறந்து போயின.
    4) சிறிது நீளமான கழுத்துள்ள மான்கள் பிழைத்தன.
    5) அம்மான்களிடையே இனப்பெருக்கம் நிகழ்ந்தது
    6) இம்முறை பிரந்த குட்டிகளின் கழுத்து முன்னரை விட நீளமாக இருந்தது (நீளமான க்ழுத்துடைய மான்கள் கலப்பில் ஈடுபட்டதால்)
    7) இவ்வகை இயற்கையின் தேர்வு மில்லியன் வருடங்களில் மானினத்தை ஒத்த ஒட்டைச்சிவிங்கியின் தோற்றத்துக்கு வகை செய்தது.

    இதுவே டாவின் சொன்ன தியரி.
    அதை யாரோ உங்களூக்கு மான் கழுத்தை நீட்டியது எனக் கதை விட்டுள்லார்கள். நீங்களும் டாவின் ஆதரவாளர்கலை கிண்டுகிறீர்கள்.

    சால்ஸ் டாவினின் கூர்ப்புக்கொள்கையை படிக்கும் போது டீ விரீசின் விகாரக்கொள்கை, கிரெகர் மெண்டலின் ஜெனற்றிக்ஸ் பற்றியும் படியுங்கள்.

    நீங்கள் என்ன செய்தாலும் தயவு செய்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு சொல்வதை மட்டும் நிறுத்துங்கள்.

    எட்டி எட்டி கழுத்தை நீட்டினால் எலும்பு நீழலாம் ஆனால் அவை அடுத்த ச்ந்ததிக்கு கடத்தப்பட மாடாது. இதற்கு நல்ல உதாரனம் ஆயிரமாயிரம் வருடங்களாக சுன்னத்துச் செய்யும் முஸ்லிம்களின் ஆண்குறியில் மாற்ரம் வராது. காரனம் அது மரபணுவில் மாற்ரம் விளைவிகாதது!

    ReplyDelete
  42. அனானி!

    //இதுவே டாவின் சொன்ன தியரி.
    அதை யாரோ உங்களூக்கு மான் கழுத்தை நீட்டியது எனக் கதை விட்டுள்லார்கள். நீங்களும் டாவின் ஆதரவாளர்கலை கிண்டுகிறீர்கள்.//

    ஒரு ஒட்டக சிவிங்கி உடனே உரு மாற்றம் அடையவில்லை என்பது டார்வினின் தியரி. நூறு வருடத்தில் சிறிய வளர்ச்சி ஆயிரம் வருடத்தில் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி இப்படியே வளர்ந்து தான் தற்போதய நிலையை அடைந்ததாக சொல்கிறீர்கள்.

    இந்த வாதத்தை ஒரு பேச்சுக்காக ஒத்துக் கொள்வதாக இருந்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட பல நூறு இனங்கள் இருக்க வேண்டும். அனைத்தும் கிடைக்கா விட்டாலும் பரிணாமம் அடைந்த இடை இனம் ஒன்றின் எலும்புகளாவது ஆதாரத்துக்கு காட்ட வேண்டும். நாம் இன்று பார்க்கும் அதே நிலையிலேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள விலங்கினங்களின் மாதிரிகளும் மாறா தன்மை கொண்டுள்ளன. எனவே இவை எல்லாம் டார்வினின் அனுமானங்கள்தானே யொழிய நிரூபிக்கப்பட்ட உண்மை கிடையாது.

    ReplyDelete
  43. Anonymous11:35 PM

    ”....இந்த வாதத்தை ஒரு பேச்சுக்காக ஒத்துக் கொள்வதாக இருந்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட பல நூறு இனங்கள் இருக்க வேண்டும். அனைத்தும் கிடைக்கா விட்டாலும் பரிணாமம் அடைந்த இடை இனம் ஒன்றின் எலும்புகளாவது ஆதாரத்துக்கு காட்ட வேண்டும்....”

    எலும்பென்ன எலும்பு ஆபிரிகாவில் பல இனங்கள் உண்டு. மேலும் கலப்பகோஸ் தீவுகளில் வாழும் ஃபிஞ்ச் பறவை விடயம் கேள்விப்பட்டதுண்டா? இன்றும் ஒவ்வொரு வருடமும் புதுப்புது இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன! மிக மிக ஆச்சரியம்தரும் வகையில் டாவினின் கூர்ப்புக்கொள்கையை நிரூபிக்கும் வண்ணம். தேடினால் வீடியோக்கள் கிடைக்கும். ஏறத்தாழ 50 மணித்தியாலங்கள் வரை வருமளவுக்கு பார்ட்திருக்கிறேன். டிஸ்கவரி, பீ.பி.சி போன்றவற்ரைப் பாருங்கள்.

    ReplyDelete
  44. Anonymous11:38 PM

    ”....நாம் இன்று பார்க்கும் அதே நிலையிலேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள விலங்கினங்களின் மாதிரிகளும் மாறா தன்மை கொண்டுள்ளன. ....”

    கூர்ப்பு அல்லது பரிணாமம் மில்லியன் வருடங்கள் கொண்டது. நாம் பார்ப்பது ஆயிரம் வருடங்கள். எனவே வேறுபாடு தெரியாது. கடவுள் படைத்தார் எனும் கதைகள் எல்லாம் 3000 வருடங்கள்தான் இருக்கும். அதுவும் ஏழு நாளில் படைத்தார் எனும் ஜோக்! ஆனால் பரிணாமம் மில்லியன் வருடங்களாக நடந்து வருவது!

    ReplyDelete
  45. // ஒட்டக சிவிங்கிக்கு தேவையின்பால் கழுத்து நீண்டது போல் உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை ஏன் அடையவில்லை?//
    (அ) FIR5.

    இதற்கு என் மூளைக்கு எட்டிய ஒரு பதில்.

    "தேவையின்பால் எந்த அளவிற்கு இனப்பெருக்க உறுப்பு வெளியே வருகிறதோ, பெரிதாகிறதோ, அதைவிட அதிகத் தேவை அது உள்ளே இருப்பதும் சிறியதாக இருப்பதும். ஏனென்றால், இனப்பெருக்க உறுப்பில் அடிவிழுந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ எப்படி வலிக்கும் என்பது நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்காது. எனவே, உள்ளே செல்வதும் மறுபடியும் சிறிதாவதும் மிக முக்கியத் தேவை என்பதாலேயே,

    'உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை அடையவில்லை' என்கிறேன்!".

    எனது பதில் திருப்திகரமாக இருந்தால் தெரியப்படுத்தவும்! :)

    ReplyDelete
  46. ஊர் சுற்றி!

    //இனப்பெருக்க உறுப்பில் அடிவிழுந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ எப்படி வலிக்கும் என்பது நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்காது. எனவே, உள்ளே செல்வதும் மறுபடியும் சிறிதாவதும் மிக முக்கியத் தேவை என்பதாலேயே,

    'உயிரினங்களுக்கு குறிப்பிட்ட அந்த உறுப்பு நிரந்தர தன்மையை அடையவில்லை' என்கிறேன்!".

    எனது பதில் திருப்திகரமாக இருந்தால் தெரியப்படுத்தவும்! :)//

    உங்கள் வாதம் நியாயமானதே!

    நிரந்தர தன்மையை அடைய விடாமல் தடுத்தது எது என்பதே என் கேள்வி. அவைகள் அனைத்தும் ஒரு கூட்டம் போட்டு தங்களுக்குத் தாங்களே ஒரு முடிவுக்கு வந்தனவா? பரிணாமம் என்பது அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே மாதிரியான தன்மையைத்தான் கொடுக்கும். இந்த வகையிலும் பரிணாமம் தோல்வியுறுகிறதா இல்லையா?

    ReplyDelete
  47. நன்றி!
    தங்கள் பதிலுக்கு!
    பிறகு சந்திக்கலாம்!

    ReplyDelete
  48. வெகுநாட்களுக்கு முன் விட்டுச் சென்றது....

    பரிணாமவியல் பற்றி ஓரளவிற்கு படித்துத் தெரிந்துகொண்டு இங்கு திரும்பவும் வந்திருக்கிறேன்.

    உங்களின் முக்கியமான கேள்வியே, பரிணாமவியல் பற்றி அடிப்படைப் பாடம்கூட இல்லாமல் வந்த கேள்வி, அனானி அதற்கு விளக்கமளித்துவிட்டார்.

    ஒரு முக்கியமான கேள்வி என்று ஆரம்பித்த நீங்கள், பின்னூட்டங்களில் 5, 10, 15 ஏன்று கேள்விகளைக் கூட்டிக்கொண்டே போனபோதே கவனித்திருக்கவேண்டும்....!

    பரிணாமவியலைப் புரிந்துகொள்வதற்குத் துளியும் தயாராக இல்லாத நீங்கள், இடைப்பட்ட உயிரினங்களின் எலும்புக்கூடுகள் எங்கே என்று கேட்பீர்கள், காண்பித்தால் அதற்கும் இடைப்பட்ட எலும்புக்கூட்டைக் காண்பி என்பீர்கள், உங்களின் கேள்விகளை இன்னும் கூட்டிக்கொண்டே போவீர்கள்....

    ReplyDelete
  49. ஏராளமான இடைப்பட்ட உயிரினங்களின் எலும்புகளும், உயிரினங்களும், இயற்கையின் தேர்வில் மாற்றம்பெற்ற, உணவின் அடிப்படையில் மாற்றம்பெற்ற ஒரேவகையிலிருந்து பிரிந்த உயிரினங்களும் ஏராளம் இருக்கின்றன...

    நம் கண்ணுக்கெதிரேயே உயிர்மாற்றங்களும் நிகழ்ந்து அவை நிரூபிக்கவும் செய்யப்பட்டிருக்கின்றன.

    மனிதனின் பரிணாமவியலே இவை எல்லாவற்றிலும் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது... Ardipithecus-> Australopithecus afarensis-> Australopithecus robuscus-> Homo habilis-> Homo erectus-> Homo Sapiens.

    இது போன்று ஏராளம் இருக்கின்றன.

    அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க
    http://talkorigins.org/ இந்த தளத்தை முழுமையாகப் படிக்கவும்.

    மற்றபடி, படிப்பதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல், கேள்விகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே செல்வதும், கிடைக்கும் பதில்களை நகையாடிவிட்டு 'பதிலே இல்லை' என்று சொல்வதும் நண்பர்களின் பின்னூட்டங்களை உற்சாகப்படுத்தலாம், ஆனால் பரிணாமம் பற்றிய அடுத்த நிலைக்கு நிச்சயம் உங்களை எடுத்துச் செல்லாது!

    பரிணாமவியல் பற்றி அடிப்படையும், ஓரளவிற்கும் தெரிந்துகொள்ள ஊக்கசக்தியாகவும், சரியான நேரத்தில் பரிணாமம் பற்றி விசாரித்தும் படித்தும் அறிந்துகொள்ள ஒரு துவக்கமாகவும் இருந்த தங்களது இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி! :)

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)