Thursday, August 16, 2012

ரக்ஸா சர்மா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?



ரக்ஷா சர்மா! பேஸ் புக் நட்பால் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பாலி டெக்னிக்கில் இன்ஜினியரிங் படித்து வந்த இவர் தனது சக மாணவர்கள் பேஸ் புக மூலம் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலையை நாடியுள்ளார். பெண் உரிமை என்பதை என்ன என்று விளங்காமல் இது போன்ற இளம் பெண்கள் பேஸ்புக் மூலமாக நண்பர்களை பெறுவதும் பிறகு தங்களின் கற்பை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. நம் தமிழ்நாட்டிலும் இவ்வாறு ஏமாற்றப்பட்ட பல பெண்களின் வாழ்க்கையை யார் திரும்ப கொடுப்பார்? இதுதான் பெண் விடுதலையா? இதற்குதான் இவரது பெற்றோர்கள் வாயையும் வயிற்றையும் கட்டி கல்லூரியில் படிக்க வைக்கிறார்களா? இன்று இவரது கற்பையும் இவரது உயிரையும் பெண்ணியம் பேசக் கூடியவர்களால் திரும்ப தந்து விட முடியுமா? இதுதான் பெண் விடுதலையா?


தேவையற்ற காட்சிகளை சினிமாக்களும் சீரியல்களும் விளக்குவதால் இதனை உண்மை என்று நம்பி தங்கள் எதிர்காலத்தை பாழ்படுத்திக் கொள்கின்றனர். நம் ஆம்பள பசங்களும் இதே தொழிலாக பல கல்லூரி மாணவிகளை வளைப்பது தொடர்கதையாகிறது. தாய் தகப்பனை உதறி விட்டு கள்ள காதலன் மூலமாக ஓடுவது இப்போது பேஷனாகி விட்டது. அவனும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ அனுபவித்து விட்டு லாட்ஜில் விட்டு விட்டு ஓடியவுடன் 'ஙே' என்று முழித்து கண்ணை கசக்கிக் கொண்டு நிற்பதும் பிறகு இவர்களே விலைமாதர்களாக மாறிப் போவதும் பரிதாபத்திற்குரிய ஒன்று.

பெண் கவிஞர்கள் பலரின் கவிதைகளை இணையத்தில் படித்திருப்போம். இவர்கள் தாங்கள் ஏதோ புரட்சி செய்வதாக எண்ணிக் கொண்டு பெண்ணின் அந்தரங்கங்களை பற்றி எல்லாம் கவிதைகளாக வடித்து பதிவாக்குகிறார்கள். பெயரை குறிப்பிட விரும்பவில்லை. உங்களுக்கே தெரியும் அவர்கள் யாரென்று. படித்த இவர்களுக்கு இது தவறான அணுகுமுறை என்று தெரியாதா? பெரியாரின் புதுமைப்பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ள இதுதான் வழியா?

------------------------------------------------------------------



இந்த மாணவி கெமிஸ்ட்ரி டெஸ்டில் சில தவறுகள் செய்ததற்காக வகுப்பு ஆசிரியர் லேசாக அடித்திருக்கிறார். மாணவியின் தவறை சுட்டிக் காட்டியும் இருக்கிறார். இதைப் பொறுத்துக் கொள்ளாத மாணவி கழிவறை செல்வதாக கூறி அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு இதெல்லாம் ஒரு காரணமா? விலை மதிக்க முடியாத இந்த உயிர்கள் அற்ப காரணங்களுக்காக போகத்தான் வேண்டுமா? இந்த குழந்தையை பிரிந்து அழும் அந்த தந்தையை சற்று எண்ணிப் பாருங்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?

இதற்கு காரணம் பெற்றோர்களே! குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய பாட சுமைகளை தினமும் கொடுத்து வருகிறோம். அந்த குழந்தையின் மூளையின் ஏற்கும் திறன் என்ன? அவருக்கு எந்த மாதிரியான கல்வியை கொடுக்க வேண்டும் என்று நாம் சிந்திப்பதே இல்லை.



மேகாலயாவில் எம்பிஏ படித்து வந்த மாணவி ஒருவர் தனது ஹாஸ்டல் அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவை எல்லாம் நமக்கு உணர்ததும் பாடம் என்ன?

'பக்கத்து விட்டுல அவன் சென்டம் எடுத்துட்டான்: எதிர்த்த வீட்டுல அந்த பொண்ணு என்னமா படிக்கிறா? நீயும்தான் இருக்கியே? தடிமாடு...தெண்டச் சோறு....' என்று தினமும் அர்ச்சணை செய்ய தயங்குவதில்லை நமது பெரும்பாலான பெற்றோர்கள். இது அந்த குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. நாம் வாழ்வதற்கு தகுதியில்லாதவனோ என்று அடி மனதில் எண்ணம் பதிந்து விட்டால் பிறகு சிறிய தோல்விகளைக் கூட தாங்க முடியாமல் தற்கொலைகளை நாடுகின்றனர் இளம் சிறார்கள்.

மாணவனுக்கு எதில் ஆர்வம் என்பதை நாம் தீர்மானித்து குறைவாக மார்க் எடுத்தாலும் அவனை ஊக்கப்படுத்துவது போன்று உங்களின் ஆலோசனை இருக்க வேண்டும். 'இந்த பரீட்சையில் குறைவாக மார்க் எடுத்தால் என்ன? அடுத்த முறை எடுத்திட்டாப் போச்சு...கவலைபடாதேடா..' என்று தைரியத்தை நீங்கள் அவனுக்கு கொடுக்க வேண்டும். அதிகாரத்தில் சொல்வதை நீங்கள் அன்பினால் சொல்லிப் பாருங்கள் அதற்கு கிடைக்கும் விடை நமக்கு சாதகமாகவே இருக்கும்.

சில தந்தைமார்கள் வீட்டை ஏதோ சிறைச் சாலைபோல் வைத்திருப்பார்கள். உள்ளே நுழையும் போதே முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு பிள்ளைகளை மிரட்டுவதை பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஏனோ நாம் எண்ணுவதில்லை.

----------------------------------------------------------------

மெயிலில் நண்பர் அனுப்பிய செய்தி தாய்குலங்களின் பாதுகாப்புக்காக!

செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவரா நீங்கள்?

உங்களுக்காக இந்த செய்தி:

Please SPEND SOME TIME AND READ THIS AND SHARE ESPECIALLY GIRLS: ''நீங்கள் செல்போனிலோ வீடியோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

அது எப்படி...?? என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது...?'' என்று யோசிக்கிறீர்களா...?? வெயிட்...!! உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்த போது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்து விட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.

"செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்..? என்பது தானே உங்கள் டவுட்". அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம். அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி-குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன.

செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர். அந்த புதிருக்கான விடையின் பெயர் "ரெக்கவரி சாஃப்ட்வேர்"(recovery software). மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்று போல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்க சம்பவங்களின் பின்னணி என்ன...? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார். ''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல் தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள்.

ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்கு தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல "ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்" இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.

இந்த மாதிரியான "ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள்" எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார். இதைத் தவிர்க்க என்ன செய்வது...? முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம்.

ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள். அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் "வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரிசெய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும்.

ஜாக்கிரதை...!!! ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள். உஷாராக இருங்கள்.. இந்த பதிவின் நோக்கமே பெண்களை உஷார் படுத்தத்தான்..

----------------------------------------------------------------

சில நாட்கள் முன்பு ஒரு நண்பர் அனுப்பியிருந்த பின்னூட்டம் இது.. இந்த செய்தி உண்மைதானா? இதுசம்பந்தமான ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறது என்பதற்கான சுட்டிகளை பின்னூட்டத்தில் நண்பர்கள் அளித்தால் நலமாக இருக்கும்.

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

20 comments:

  1. அனைவருக்குமான அருமையான
    எச்சரிக்கைப்பதிவு
    விரிவான பதிவாகக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உரைக்கும் உண்மை

    ReplyDelete
  3. உறைக்கும் உண்மை

    ReplyDelete
  4. உறைக்கும் உண்மை

    ReplyDelete
  5. Anonymous1:59 AM

    நல்ல பதிவு.பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆண்மைக்கும் தொடர்பு பற்றி எதிர்மறையான எதேனும் ஆராய்ச்சி முடிவுகள் வந்திருக்குமா என்று இக்பால் செல்வன் google search இலும் wikipedia விலும் தேடிக்கொண்டிருப்பார். ஏனென்றால் இதில் இஸ்லாமியப் பெண்களின் ஆடை சம்பந்தப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. திரு ரமணி!

    //அனைவருக்குமான அருமையான
    எச்சரிக்கைப்பதிவு
    விரிவான பதிவாகக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள் //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. சகோ ஆஷா ஃபர்வீன்!

    //உறைக்கும் உண்மை //

    //உரைக்கும் உண்மை //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. சகோ அனானி!

    //நல்ல பதிவு.பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆண்மைக்கும் தொடர்பு பற்றி எதிர்மறையான எதேனும் ஆராய்ச்சி முடிவுகள் வந்திருக்குமா என்று இக்பால் செல்வன் google search இலும் wikipedia விலும் தேடிக்கொண்டிருப்பார். ஏனென்றால் இதில் இஸ்லாமியப் பெண்களின் ஆடை சம்பந்தப்பட்டுள்ளது. //

    அவ்வாறு தேடி ஏதும் முடிவுகள் கிடைத்தாலும் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார். :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

  9. திரு அருள்!

    //மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி! //

    வன்னியர்கள் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று எனது பதிவு இருந்தால்தான் எனக்குரிய பதிலடியாக இருக்கும். சுதந்திரத்திற்காக பல இனத்தவர்களும் தங்கள் பங்கை செலுத்தியிருக்கிறார்கள். அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை நமது அரசும் மீடியாக்களும் திட்டமிட்டு மறைத்ததை எடுத்துக் காட்டுவதே எனது பதிவின் நோக்கம். மற்றபடி வன்னியர்களின் பங்களிப்பை நான் மறுக்க வில்லை. நன்றி.

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post.html

    ReplyDelete
  10. Anonymous6:08 AM

    Nizam said.......

    //முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.//

    35 என்பது நினைத்து பார்க்க முடியதா அளவான புள்ளி விவாரம் கண்டிப்பாக .................................................இதில் பங்கு இருக்கும். அவரை நோக்கும் போது இன்னும் கூடுதாலக ஆக வாய்புக்கள் ஆதிகமாக தென்படுகிறாது. on ரக்ஸா சர்மா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?

    ReplyDelete
  11. Anonymous6:11 AM

    Huh, finally a non-religious social message from you. Thanks.

    Why dont you do this more and reduce your religious fanaticism? The world will be a better place without stinking religions and religious fanatics.

    ReplyDelete
  12. அனானி!

    //Huh, finally a non-religious social message from you. Thanks. //

    பாராட்டுக்கு நன்றி!

    //Why dont you do this more and reduce your religious fanaticism? The world will be a better place without stinking religions and religious fanatics.//

    இந்த உலகில் பிறந்த யாவரும் மதம் அல்லது மார்க்கம் சாராமல் வாழவே முடியாது. என்னதான் கடவுள் மறுப்பை பேசினாலும் பெரியாரும் வீரமணியும் கருணாநிதியும் இந்து மதத்துக்குள்ளேதான் வருவர். அவர்கள் சாமி கும்பிடா விட்டாலும் அவர்கள் வீட்டு பெண்களோ வாரிசுகளோ கண்டிப்பாக கோவிலுக்கு செல்பவர்களாகத்தான் உள்ளனர்.

    மதத்தையோ மார்க்த்தையோ பின்பற்றுவது தவறல்ல. அனால் அதில் உள்ள மூடப்பழக்கங்களை களைந்து தூய வழியை நமது அறிவு கொண்டு சிந்தித்து பார்க்க வேண்டும். மற்ற இனங்களுக்கோ மதங்களுக்கோ ஊறு விளைக்காமல் தனது மார்க்கத்தை சரி வர பின்பற்றினாலேயே உலகில் பல பிரச்னைகள் தீர வழியுண்டு.

    இப்படி மதமும் மார்க்கமும் தேவையில்லை என்றால் இதற்கு மாற்றாக நீங்கள் வைக்கும் வழி முறை என்ன?

    ReplyDelete
  13. அலைபேசி அல்லது ஒளிப்படக் கருவிகளின் மூலம் எடுக்கப்படும் நிழற்ப்படம் அல்லது ஒளிப்படம் எல்லாமே அதன் நினைவகப் பகுதியில் தான் சேமிக்கப்படுகிறது. நமக்கு தேவை இல்லாத படங்கள், பாடல்களை அழித்து விட்டால் மட்டும் போதாது. அழிக்கப்பட்ட நினைவகப் பகுதி முழுமைக்கும் வேறு ஏதேனும் படங்களையோ பாடல்களையோ முழுமையாக நிரப்பி விட்டால் நிரந்தரமாக அந்த படங்கள் அழிந்து விடும்.

    தேவை இல்லாதவற்றை அழித்துவிட்டு வேறு எதையேனும் நிரப்பி விட்டால் மட்டுமே முழுமையாக நிரந்தரமாக அழிக்க முடியும்.
    இது தகவலுக்கு....

    பெண்கள் அணியும் ஆடைக்கும் ஆண்களின் ஆண்மைக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றி நீங்கள் எதன் அடிப்படையில் சொல்லுரிங்க?
    எதாவது ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலா இல்ல நம்பிக்கையின் அடிப்படையிலா?
    தயவு செய்து விளக்கவும்

    ReplyDelete
  14. திரு எபினேசர் ஜோஸப்!

    //தேவை இல்லாதவற்றை அழித்துவிட்டு வேறு எதையேனும் நிரப்பி விட்டால் மட்டுமே முழுமையாக நிரந்தரமாக அழிக்க முடியும்.
    இது தகவலுக்கு....//

    தகவலுக்கு நன்றி!

    //பெண்கள் அணியும் ஆடைக்கும் ஆண்களின் ஆண்மைக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றி நீங்கள் எதன் அடிப்படையில் சொல்லுரிங்க?
    எதாவது ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலா இல்ல நம்பிக்கையின் அடிப்படையிலா?
    தயவு செய்து விளக்கவும்//

    அது எனது கருத்தல்ல. நண்பர் ஒருவர் முந்தய பதிவில் இந்த தகவலை பகிர்ந்திருந்தார். இது சம்பந்தமாக மேலதிக விபரம் இருந்தால் பகிருங்கள் என்றுதான் சொல்லியிருந்தேன்.

    அடுத்து இல்லற வாழ்வில் மறைமுகமான சில எதிர்பார்ப்புகள் இருந்தால்தான் இல்லறம் சுகிக்கும். இதற்கு உதாரணமாக சினிமாவை எடுததுக் கொள்ளலாம். ஒரு படத்தின் கதாநாயகி கண்ணியமாக உடை உடுத்தி வரும் போது நமக்குள் ஒரு மரியாதை வருகிறது. அதே படத்தில் கவர்ச்சி நடிகைகள் உடலை காட்டும் போது அந்த பெண்களின் மேல் ஒரு ஈர்ப்பு வருவதில்லை. தற்போதெல்லாம் சினிமாக்கள் பார்ப்பதை கூடிய வரை தவிர்த்து வருகிறேன். நான் சொல்வது பல வருடங்களுக்கு முன் உள்ள மன நிலை.

    ReplyDelete
  15. இந்தியாவில் ஆண்களை விட அதிகமாக 'தம்' அடிக்கும் பெண்கள்: அதிர்ச்சி தகவல்

    டெல்லி: இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சிகரெட் பிடிக்கிறார்கள்.

    நாள் ஒன்றுக்கு ஆண்கள் 6 சிகரெட் பிடி்ததால் பெண்கள் 7 சிகரெட் பிடிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    இது குறித்து மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி வருமாறு,

    இந்தியாவில் 21 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் தினமும் புகை பிடிக்கின்றனர்.

    15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 47.9 சதவீதம் பேர் அதாவது ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர்
    புகையிலை உட்கொள்கின்றனர்.

    சுமார் 206 மில்லியன் இந்தியர்கள் புகையிலை மெல்லும், மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள்.

    இதில் 32.9 சதவீதம் பேர் ஆண்கள்.

    புகையிலை பயன்படுத்தும் 5 பெண்களில் ஒருவர் புகையிலை மெல்லும், மூக்குப் பொடி போடும் பழக்கமுள்ளவர்.

    அதுவே 10ல் ஒருவர் தான் புகை பிடிக்கின்றனர்.

    சராசரி இந்திய பெண் 17.5 வயதில் புகை பிடிக்க ஆரம்பிக்கிறார்.

    அதுவே ஆண்கள் 18.8 வயதில் புகை பிடிக்கும் பழக்கத்தை துவங்குகின்றனர்.

    இது குறித்து டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில்,

    புகையிலை பயன்படுத்தும் பழக்கம் ஆண்களிடையே குறைந்தும் (51 சதவீதத்தில் இருந்து 48 சதவீதம்),

    பெண்களிடையே அதிகரித்தும்(10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம்) உள்ளது.

    இதனால் புகையிலை கம்பெனிகள் பெண்களை குறி வைத்தே செயல்படுகின்றன என்றார்.

    http://tamil.oneindia.in/news/2012/08/17/india-indian-female-smokers-outpuff-males-159801.html

    ReplyDelete
  16. Hindus Must Read This
    http://adirainirubar.blogspot.com/2012/08/9.html?showComment=1345572746601#comment-c8062523063196041743

    ReplyDelete
  17. ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை' நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது.
    ‘ஓரினச்சேர்க்கை'யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க்கை'யில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்' உடலுறவை மேற்கொள்ளும் மக்களைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த புதிய ‘சிக்மா எயிட்ஸ் ஆய்வு குழுமத்தின்' ஆய்வில் தெரியவந்துள்ளது.
    அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்' எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
    அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை' பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையாளர்களால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
    இதுபோன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்சேர்க்கையால்' எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்' குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன.
    லத்தீன் அமெரிக்காவில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக ‘ஓரினச்சேர்க்கை' விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்' தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை' மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
    பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளில் ‘ஓரினச்சேர்க்கையாளர்களிடையே' பரவும் எய்ட்ஸ் நோய் தாக்கம் மிக கடுமையாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நாடுகளில் ஓரினச்சேர்க்கையாலர்களால் மறைமுகமாக, எய்ட்ஸ் நோய் தொற்றிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 10% முதல் 25% சதவீதமாக உள்ளது என்பதேயாகும். ‘ஓரினச்சேர்க்கையாளர்களை‘ திருமணம் செய்து கொண்டதால், எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளனர் என இந்த ‘சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழுமத்தின்' ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  18. Anonymous6:11 PM

    அந்த ஆராய்ச்சி லின்கைத் தான் போடுங்களேன். உங்க பதிவல சொல்லியிருப்பதற்கும் அதற்கும் ஆறு வித்தியாசங்கள் என்னன்னு நாமும் ஒரு ஆராய்ச்சி பண்ணிப்புடுவோம்.

    ஆண்களுக்கு ஆண்மை குறைந்தா பெண்களுக்கு நல்லது இல்லையா? அவங்க மீதான வன்முறை குறையும் இல்லையா? அதற்காகத் தான் மேற்கத்திய நாடுகள்ல அப்படி உடை அணியறாங்க! அதனால அங்க வன்முறையும் குறைவா இருக்கு. அதனால தான் அங்க கவர்ச்சியா உடை அணிந்து ஒரு பெண் பஸ் ஏறினாலும் எவனும் அவங்க மேல வந்து தேச்சுகிட்டு நிற்க மாட்டான். புரிஞ்சுக்குங்க பாஸ்!

    ReplyDelete
  19. கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!
    http://tamil.indiansutras.com/2012/08/impotence-glamour-dress-affect-male-fertility-000575.html

    ReplyDelete
  20. கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!
    http://tamil.indiansutras.com/2012/08/impotence-glamour-dress-affect-male-fertility-000575.html

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)