Saturday, August 25, 2012

வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!

ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது.



கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி' பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன்கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர்.


-தினமலர்
25-08-2012

இறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.

''அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழ்வதற்காக அனுப்பி விடுகிறான்'' (அல்குர்ஆன் 39:42)

''அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னைத் திரும்ப உலகுக்குத் திருப்பி அனுப்புவாயாக!'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)

''நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' என்றும் கூறுவான். அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை; அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.'' (அல்குர்ஆன் 23:100)

மரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. எனவே இறந்த மனிதனின் உயிர் உயிருடன் இருப்பவரின் உடலில் சவாரி செய்ய முடியவே முடியாது. எனவே இறந்தவனின் ஒரு ஆவி மற்றவனின் உடலில் ஏறும் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு வரலாம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அறவே வரக் கூடாது. ஆனால் நம்மிலும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை பேய் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு தர்ஹாக்களில் கட்டிப் போட்டு அவர்களின் நோயை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். அரசாங்கம் இது போன்று ஏர்வாடி, வேள்ங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நோயாளிகளை மீட்டு அவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இதனால் பலரின் வாழ்வை அழிவிலிருந்து மீட்கலாம்.



பேரூந்துக்கு வேப்பிலை கட்டப்பட்டதால் கொஞ்சம் தைரியத்தோடு வண்டியை டிரைவர் ஓட்டுவார். அது ஒன்றுதான் இதில் கிடைத்த நன்மை. இதன் மூலம் காசு பார்க்கும் மந்திரவாதிகளுக்கும் சில நன்மைகள். இங்கு சவுதியில் பேய் ஓட்டுகிறேன் என்று யாராவது காசு பார்க்க ஆரம்பித்தால் அவர் கம்பி எண்ண வேண்டியதுதான். :-)











37 comments:

  1. ஆயிரமாயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் பேய் ,பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களிடயே ஒழிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது...மூட நம்பிக்கைகள் இருக்கும்வரை பேய் பிசாசுகள் உலாவத்தான் செய்யும்...

    ReplyDelete
  2. பேய் கூப்பிடுகிறது, நான் போகிறேன்- கடிதம் எழுதி வைத்துவி்ட்டு +2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    வேலூர்: பேய் தன்னை அழைப்பதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு +2 மாணவி ஒருவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா(35). அதே பகுதியில் உள்ள காலனி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் குறிஞ்சி மலர்(17). இதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற குறிஞ்சி மலர், மாலையில் வீடு திரும்பினார். அப்போது தாய் வேலைக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த குறிஞ்சி மலர் மின்விசிறியில் சேலையின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இரவு வேலை முடித்து வீடு திரும்பிய ஜீவா, வீட்டில் வந்து பார்த்த போது மகள் தற்கொலை செய்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஜீவாவின் வீட்டில் போலீசார் நடத்திய ஆய்வில், குறிஞ்சி மலர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது.

    இதில் அவர் கூறியிருப்பதாவது,

    கடந்த சில நாட்களாக என்னையும், எனது உறவினர், நண்பர்கள் உட்பட 4 பேரை பேய் கூப்பிட்டது. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய் கூப்பிட வேண்டாம். நான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது சாவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்த குறிஞ்சி மலரின் தந்தை முத்துகுமாரும், தற்கொலை செய்து இறந்துள்ளார். தற்போது குறிஞ்சு மலரும் தற்கொலை செய்து இறந்துள்ளார். மேலும் தன்னையும், சிலரையும் பேய் கூப்பிட்டதாக குறிஞ்சி மலர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    http://tamil.oneindia.in/news/2012/08/25/tamilnadu-2-girl-committed-suicide-vellore-160250.html

    ReplyDelete
  3. பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி: 4000 குழந்தைகளை பழிவாங்கும் எனவும் பீதி!

    கிருஷ்ணகிரி: பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

    இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க பரிகாரபூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

    எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புவதும், பீதியை கிளப்புவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

    வட கிழக்கு இந்தியர்களுக்கு எதிரான எஸ்.எம்.எஸ் பீதி அடங்கும் முன்போ மெகந்தி பீதி கிளம்பியது.

    இதனால் தமிழ்நாடு முழுவதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய மருத்துவமனைகளில் குவிந்தனர் பொதுமக்கள்.

    பின்னர் அது வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விடும் இத்தகைய எஸ்.எம்.எஸ்களை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. மேலும் வதந்தியை கிளப்பும் இணைய தளங்கள் முடக்கப்பட்டன.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது பிறந்த குழந்தை பேசியதாகவும், அது சாபம் விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை விடிய, விடிய, தூங்காமல் செய்து விட்ட அந்த செய்தியின் விபரம் வருமாறு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை மாலை ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும்,

    பிறந்தவுடன் அந்த குழந்தை சிரித்து பின்னர் பேசியதாகவும், அந்த குழந்தை நான் அதிகாலை 4 மணிக்குள் இறந்து விடுவேன், அப்போது நான் 4 ஆயிரம் ஆண், பெண் குழந்தைகளை காவு வாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல் பரவியது.

    செல்போன் மூலம் இந்த தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

    இதனால் குழந்தைகள் வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    சிலரின் ஆலோசனைப்படி பெண்கள் தேங்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, அதை குழந்தையின் தலையை சுற்றி தெருவில் உடைத்தனர்.

    இதையடுத்து பிறந்த குழந்தையுடன் காவு மிரட்டலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அது எப்படி செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது.

    தர்மபுரி அருகே உள்ள வெங்கிடம்பட்டியில் உள்ள ஒருவருக்கு ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து இந்த பகுதியிலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழத்தை அறுத்து காவு கொடுத்து உள்ளனர்.

    கோவில்களிலும் குழந்தையின் பெயரில் பெண்கள் அர்ச்சனை செய்தனர்.

    மேலும் சில இடங்களில் ஆண்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் தேங்காய் உடைத்தும் பரிகாரம் செய்தனர்.

    இந்த தகவல் குறித்தும் பரிகார பூஜைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள ஊத்தங்கரை தாசில்தார் புகழேந்தி, அப்படி ஒரு குழந்தை பிறக்கவே இல்லை என்று தகவல் தெரியவந்துள்ளதாக கூறினார்.

    இது வதந்தி. இந்த வதந்தியை யாரோ திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள் என்றார்.

    இது பொய்யான தகவல் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இருப்பினும் குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பரிகாரம் செய்து வருகிறார்கள்.

    கிராமங்கள் தோறும் முச்சந்தியில் தேங்காய் உடைக்கப்பட்டும், எலுமிச்சை பழம் அறுக்கப்பட்டும், மஞ்சள், குங்குமம் தெளிக்கப்பட்டும் இருக்கிறது.

    எங்கு பார்த்தாலும் பிறந்த குழந்தை பேசியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தே பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    http://tamil.oneindia.in/news/2012/08/24/tamilnadu-child-rumour-rocks-krishnagiri-district-160201.html

    ReplyDelete
  4. Anonymous6:40 AM

    சில இடங்களில் பேய் இருக்கிறது என்று சொல்லி சமூக விரோதிகள் அவர்களுடைய வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. சகோ ஹாஜா மைதீன்!

    //ஆயிரமாயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் பேய் ,பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களிடயே ஒழிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது...மூட நம்பிக்கைகள் இருக்கும்வரை பேய் பிசாசுகள் உலாவத்தான் செய்யும்...//

    இதனை பிரசாரத்தின் மூலமே ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும். கடந்த 25 வருடங்கள் நாமெல்லாம் பிரசாரம் செய்ததின் பலன் தற்போது தெரிய வருகிறது அல்லவா? மலர் மன்னனும், கோவி கண்ணனும் வஹாபியம் வளர்ந்ததனால் தர்ஹாக்களில் கூட்டம் குறைந்து விட்டது என்று பதிவு போடும் அளவுக்கு வந்திருக்கிறது அல்லவா!

    ReplyDelete
  6. சகோ உண்மைகள்!

    //கிருஷ்ணகிரி: பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.//

    வருகைக்கும் அருமையான இரண்டு தகவல்களைத் தந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. சகோ அனானி!

    //சில இடங்களில் பேய் இருக்கிறது என்று சொல்லி சமூக விரோதிகள் அவர்களுடைய வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.//

    வீட்டை காலி செய்ய, மனைகளை குறைந்த விலைக்கு வாங்க இதுபோன்று பேய் இருப்பதாக கதை கட்டி விடுவது பல இடங்களில் நடக்கிறது.

    ReplyDelete
  8. அஸ்ஸலாம் அலைக்கும் சகோ,
    சுவன் சொன்னது...
    // பஸ் டிரைவருக்கு வேப்பிலை கட்டப்பட்டதால் கொஞ்சம் தைரியத்தோடு வண்டியை ஓட்டுவார்.//
    சுவன் பாய்..பஸ் டிரைவருக்கு வேப்பிலை கட்டினது முன் பக்கத்திலா அல்லது பின் பக்கத்திலா ...??!! பாத்து எழுதுங்க பாய் ....
    தவறை சுட்டிகாட்டியதுக்காக என்னை வேப்பிலை அடிக்காதீங்க பாய் ...ஆஹா ..ஆஹா
    // அது ஒன்றுதான் இதில் கிடைத்த நன்மை //
    நன்மையாவது, புடலங்காயாவது ...சுத்தமான 24 காரெட், அக்மார்க் மூடநம்பிக்கை
    --

    ReplyDelete
  9. சலாம் சகோ நாசர்!

    //சுவன் பாய்..பஸ் டிரைவருக்கு வேப்பிலை கட்டினது முன் பக்கத்திலா அல்லது பின் பக்கத்திலா ...??!! பாத்து எழுதுங்க பாய் ....
    தவறை சுட்டிகாட்டியதுக்காக என்னை வேப்பிலை அடிக்காதீங்க பாய் ...ஆஹா ..ஆஹா //

    நீங்க பதிவை உன்னிப்பாக படிக்கிறீர்களா அல்லது மேலோட்டமாக படிக்கிறீர்களா? என்பதை தெரிந்து கொள்ளவே அவ்வாறு எழுதினேன். எப்பூ.....டி சமாளிப்பு. :-) ஹா..ஹா...தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

    //நன்மையாவது, புடலங்காயாவது ...சுத்தமான 24 காரெட், அக்மார்க் மூடநம்பிக்கை //

    அது மூட நம்பிக்கைதான். வேப்பிலையும் எலுமிச்சை பழமும் இருக்கும் தைரியத்தில் எதையாவது பார்த்து பயந்து போய் எங்கும் மோதி விடக் கூடாது அல்லவா! 50 பேருக்கு மேல் பயணிக்கும் பேரூந்தின் ஓட்டுனர் அல்லவா?


    ReplyDelete
  10. Anonymous8:53 AM

    bhaisaab, last post regarding drinks and this post regarding goast, are you trying give message to somebody.

    ReplyDelete
  11. மனிதனின் மூடநம்பிக்கைக்கு அளவே இல்லை... மனிதனின் தீய குணங்கள் தான் சாத்தான்..என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்களின் பகிர்வு பயனுள்ள விழிப்புணர்வு சகோ! இது என் முதல் வருகை, உங்களை என் வலைக்கு இனிதே வரவேற்கிறேன்...

    ReplyDelete
  12. சகோ அனானி!

    //bhaisaab, last post regarding drinks and this post regarding goast, are you trying give message to somebody. //

    சமூகத்தில் உள்ள பல தீமைகளை நாம் கண்டும் காணாமல் சென்று விடுவதாலேயே பல தீமைகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. நம்மால் முயன்ற வரை தீமைகளை எதிர்த்து போராட வேண்டும். என்னளவில் எனக்குள்ள அதிகாரம் இவ்வாறு நடக்கும் தீமைகளை ஓரளவு பதிவுகளாக வெளியிடுவது. எடுப்பதும் எடுக்காததும் படிப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது.

    ReplyDelete
  13. சகோ ஆயிஷா ஃபாரூக்!

    //மனிதனின் மூடநம்பிக்கைக்கு அளவே இல்லை... மனிதனின் தீய குணங்கள் தான் சாத்தான்..என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்களின் பகிர்வு பயனுள்ள விழிப்புணர்வு சகோ! இது என் முதல் வருகை, உங்களை என் வலைக்கு இனிதே வரவேற்கிறேன்...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. Anonymous11:21 AM

    கடவுள் இருக்கு என்று நம்பும் போது பேய்களும் இருக்கு என்று நம்புவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை ... !!!

    இஸ்லாத்தில் இருப்போர் பேய்களை நம்புவதில்லையா என்ன ???!!! சாத்தான், ஜின்கள் என்றெல்லாம் இருப்பது பேய்கள் இல்லையா !!!

    என்ன வித்தியாசாம் இவர்கள் வேப்பிலை கட்டுகின்றார்கள் நீங்கள் குரானை ஓதுகின்றீர்கள் .. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ...

    ReplyDelete
  15. Anonymous11:23 AM

    @ உண்மைகள் - // பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி //

    இதில் அதிசயப்பட ஒன்றுமே இல்லை சகோ. முதன்முதலில் குழந்தை ஒன்று பேசியதாக ஒரு முக்கியமான நூலில் வருகின்றது !!! அதையே பலர் நம்புகின்ற போது, படிக்காத மக்கள் சிலர் இதை நம்புவதில் ஒன்றும் அதிசயமில்லையே ...

    அந்த நூல் எதுவென உங்களுக்கேத் தெரியும் ?

    ReplyDelete
  16. Anonymous11:24 AM

    மற்றப்படி இது ஒரு நல்ல பதிவு !!!

    ReplyDelete
  17. Anonymous11:24 AM

    //மூட நம்பிக்கைகள் இருக்கும்வரை பேய் பிசாசுகள் உலாவத்தான் செய்யும்...//

    மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை கடவுளும் உலாவிக் கொண்டுத் தான் இருப்பார் !!!

    :)

    ReplyDelete
  18. இக்பால் செல்வன்!

    //கடவுள் இருக்கு என்று நம்பும் போது பேய்களும் இருக்கு என்று நம்புவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை ... !!!//

    கடவுள் இருக்கிறான் என்பதை ஒரு சராசரி மனிதன் சிந்தித்தே உணர்ந்து விட முடியும். ஆனால் பேய் என்பதை இதுவரை நமது அறிவும் ஒத்துக் கொள்ளவில்லை. மனிதர்கள் இதற்கு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

    //இஸ்லாத்தில் இருப்போர் பேய்களை நம்புவதில்லையா என்ன ???!!! சாத்தான், ஜின்கள் என்றெல்லாம் இருப்பது பேய்கள் இல்லையா !!!//

    சாத்தான் என்ற படைப்பு மனிதனை நேர் வழியிலிருந்து தவறான வழிக்கு கொண்டு செல்ல படைக்கப்பட்ட ஒரு படைப்பு.

    அதேபோல் ஜின்கள் என்ற ஒரு படைப்பும் உள்ளது. மனிதர்களைப் போல் அவையும் ஒரு படைப்பு. ஆனால் நம் கண்களுக்கு தெரியாது. மலக்குகள் என்ற படைப்பு இந்துக்கள் சொல் வழக்கில் உள்ள தேவர்களை ஒத்தது. இவர்களும் இறைவன் இட்ட கட்டளையை மாத்திரமே செய்வர்.

    ஆனால் பேய் என்ற ஒன்றானது இறந்தவனின் உடலிலிருந்து ஆவி வெளியாகி வேறொருவனின் உடலில் புகுந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பிரமை. தனியாக இருக்கும் போது எதையோ பார்த்து விட்டு 'நான் பேயை பார்த்தேன்' என்பார் சிலர். பலர் இருக்கும் போது இந்த பேய் வருவதில்லை என்பதையும் நோக்க வேண்டும்.

    //என்ன வித்தியாசாம் இவர்கள் வேப்பிலை கட்டுகின்றார்கள் நீங்கள் குரானை ஓதுகின்றீர்கள் .. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ... //

    இந்துக்களைப் பார்த்து அவர்களின் நம்பிக்கையும் முஸ்லிம்களிடமும் தொற்றிக் கொண்டது. குர்ஆனின் கட்டளைப்படி உலகில் பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். குர்ஆனை நம்பும் ஒரு முஸ்லிம் கண்டிப்பாக பேய் என்ற படைப்பை நம்ப மாட்டார். இது வரை பேய் இருந்ததை எவரும் நிரூபிக்கவும் இல்லை. வரும் காலங்களிலும் நிரூபிக்க முடியாது.

    ReplyDelete
  19. சகோ சுவனப் பிரியன்,
    மார்க்கத்தில் ஜின்கள் உண்டு என்பதியும் மறுக்கப் போகிறீர்களா??
    ஜின்னை தூணில் கட்டிய முகமது(சல்) அவர்களின் வல்லமை!!
    //461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    "இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்."
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Booக் :8//

    ****************
    சூனியம் முகமதுக்கு வைக்கப்பட்டது என்ற ஹதிதை மறுக்கப் போகிறீர்களா?
    //5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
    அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
    (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
    பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
    நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். 92
    Volume :6 Book :76//

    சில ஹதிதுகள் இயற்கைக்கு மேம்பட்ட சில சக்திகள் சோதிடர்களுக்கு உள்ளுதிப்பு(ஹி ஹி இது அடைப்புக்குறி) செய்வதாக் கூறுகிறது.
    //3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
    என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    Volume :3 Book :59//
    முகம்து நிலவைப் பிளந்த ஃபோட்டோ கட்டுவது யார்?

    மத புத்தக்த்தில் அறிவியல் என்பதும் மூடத்தனமே!!!

    சுலைமான்(அலை) ஜின் படை வைத்து வைத்து இருந்தாராமே!!!
    http://www.islam101.com/history/people/prophets/sulaiman.htm
    சரி எல்லாம் யூதனுங்க இட்டுக் கட்டியது என்ற நகைச்சுவை விள்க்கத்தை சொல்வோம்!!!கேட்பதற்கு ஆள் இருக்கிறார்கள்!!

    ஹி ஹி மூடத்தனத்தில் அனைத்து மத்வாதிகளும் ஒன்றே!!!

    நன்றி

    ReplyDelete
  20. திரு.சு.பி.சுவாமிகள்,

    //ஆனால் பேய் என்ற ஒன்றானது இறந்தவனின் உடலிலிருந்து ஆவி வெளியாகி வேறொருவனின் உடலில் புகுந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பிரமை. தனியாக இருக்கும் போது எதையோ பார்த்து விட்டு 'நான் பேயை பார்த்தேன்' என்பார் சிலர். பலர் இருக்கும் போது இந்த பேய் வருவதில்லை என்பதையும் நோக்க வேண்டும்.
    //

    இந்தியாவில் பேய்னு யாரோ தப்பா பேரு வச்சிட்டாங்க,ஆனால் அது ஷைத்தான் ,ஜிட் ,வோட்கா தான், மக்களுக்கு பெயர் வைக்க தெரியவில்லை.

    எனவே ஷைத்தான் தாக்காமல் இருக்க வேப்பிலை ,எலுமிச்சம் பழம் என்றால் ஓ.கேவா.

    ஷைத்தான், ஜின் இருக்குன்னு அச்சடிச்ச புக்கில போட்டு முகமது அய்யா சொன்னால் அது உண்மை,அதையே பேய்னு சொன்னா மூட நம்பிக்கையா?

    பி.டி.சாமிக்கதைய விட நல்லக்கதையா இருக்கு :-))

    ReplyDelete
  21. திரு வவ்வால் சுவாமிகள்!:-(!

    //ஷைத்தான், ஜின் இருக்குன்னு அச்சடிச்ச புக்கில போட்டு முகமது அய்யா சொன்னால் அது உண்மை,அதையே பேய்னு சொன்னா மூட நம்பிக்கையா?

    பி.டி.சாமிக்கதைய விட நல்லக்கதையா இருக்கு :-))//

    நீங்கள் பேய் பிசாசுக்கும், ஜின்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளாததால் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

    ஜின் இனத்திலிருந்து உருவானவன்தான் சைத்தான். இந்த சைத்தான் மனிதர்களை நல்லவற்றிலிருந்து திசை திருப்புவதற்காக இறைவனால் படைக்கப்பட்டவன். ஆனால் நாம் சொல்லி வரும் பேய் பிசாசு கதை என்பதே வேறு. இங்கு இறந்த ஒருவனின் ஆவியானது வேறொரு உடலில் புகுந்து கொண்டு ஆட்சி செய்வதாகத்தான் பலர் நம்பி வருகின்றனர். இதைத்தான் தவறு என்கிறோம்.

    ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள்கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். அல்குர்ஆன் 7:179

    ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56

    இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்களைப் போன்று ஜின்களும் பகுத்தறிவு வழங்கப்பட்ட, நன்மை தீமை பிரித்தறிவிக்கப்பட்ட ஓர் இனம் என்பதை விளக்குகின்றன. ஆனால் மனிதர்களை விடப் பன்மடங்கு ஆற்றல் கொண்டது ஜின் இனம் என்றும், அவர்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 27:39, 40, 72:8,9, 7:12, 15:27, 38:76, 55:15)

    எனவே மறுமையில் நல்லவர்கள் சுவனத்தை அடைவதும், கெட்டவர்களுக்கு நரகம் கூலியாகக் கிடைப்பதும் மனித இனத்தைப் போன்று ஜின்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் நாம் சொல்லி வரும் பேய் பிசாசுகளை ஒத்தவர்கள் அல்ல. பேய் பிசாசுகள் உள்ளதாக இதுவரை எவரும் நிரூபிக்கவும் இல்லை.

    ReplyDelete
  22. Anonymous1:18 PM

    @ சுவனப்பிரியன் உங்க நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது ...

    //கடவுள் இருக்கிறான் என்பதை ஒரு சராசரி மனிதன் சிந்தித்தே உணர்ந்து விட முடியும். ஆனால் பேய் என்பதை இதுவரை நமது அறிவும் ஒத்துக் கொள்ளவில்லை. மனிதர்கள் இதற்கு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.//

    கடவுள் இருக்கின்றார் என்பதற்கும் எந்தவொரு ஆதாரத்தையும் மனிதன் சமர்ப்பிக்கவில்லையே சகோ.

    ஜின்கள் இருக்கு ஆனால் பேய்கள் இல்லை என்கின்றீர்கள் !!!

    ஜின்கள் எங்கே இருக்கு ! அதை மட்டும் பார்த்துள்ளீர்களா ? அதற்கு ஆதாரங்கள் உண்டா ?

    //இது வரை பேய் இருந்ததை எவரும் நிரூபிக்கவும் இல்லை. வரும் காலங்களிலும் நிரூபிக்க முடியாது.
    //

    பேய் மட்டுமல்ல கடவுள், ஜின்கள், மலக்குகள், தேவர்கள், மோகினிகள், அணங்குகள் எதுவுமே நிரூபிக்க முடியாதவைகள். ஏனெனில் அனைத்துமே உளம் சார்ந்த பிரமைகள் மட்டுமே !!!

    ReplyDelete
  23. Anonymous1:21 PM

    //இங்கு இறந்த ஒருவனின் ஆவியானது வேறொரு உடலில் புகுந்து கொண்டு ஆட்சி செய்வதாகத்தான் பலர் நம்பி வருகின்றனர். இதைத்தான் தவறு என்கிறோம்.//

    என்னக் கொடுமை இது !!! ஜின்களை நம்பும் போது பேய்களை நம்பக் கூடாதா ???

    இரண்டுக்கும் ஆதாரமே இல்லை !!!

    //ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். //

    அப்போ நரகத்துக்கு போக வேண்டும் என்றே கடவுள் சிலரைப் படைத்து வைத்துள்ளார். என்னக் கொடுமை இது !!! கொஞ்சம் கூட நியாயமற்றவராக இருக்கின்றார். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ---- நரகத்துக்கு என்றே படைக்கப்பட்டுள்ளார்களே !!! It is an UNJUST gOD !!!

    //பேய் பிசாசுகள் உள்ளதாக இதுவரை எவரும் நிரூபிக்கவும் இல்லை.//

    ஜின்கள் இருப்பதாகவும் எந்த அதிபுத்திசாலியும் இன்று வரை நிரூபிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க !!!

    ReplyDelete
  24. சகோ சார்வாகன்!

    //சகோ சுவனப் பிரியன்,
    மார்க்கத்தில் ஜின்கள் உண்டு என்பதியும் மறுக்கப் போகிறீர்களா??//

    நான் எப்படி மறுப்பேன்? குர்ஆனும் நபி மொழியும் மிகத் தெளிவாக ஜின் என்ற இனம் உண்டு. அது நெருப்பால் படைக்கப்பட்டது. மனிதர்களைப் போலவே நன்மை தீமை சொர்க்கம் நரகம் அவைகளுக்கும் உண்டு. மனிதர்களை வழி கெடுக்கும் சைத்தான் என்ற படைப்பு ஜின் படைப்பிலிருந்து உண்டாக்கப்பட்டது. இவை அனைத்தும் குர்ஆனில் உள்ளது.
    'ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அல்குர்ஆன் 18:50
    ஆனால் நாம் இங்கு பயன் படுத்தும் பேய் பிசாசு இறந்தவன் உடலின் ஆவியாக வந்து வேறொரு உடலில் புகுந்து கொள்வதைத்தான் தவறு என்கிறோம். அப்படி நிகழ சாத்தியமே இல்லை என்று குர்ஆனின் வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

    //சில ஹதிதுகள் இயற்கைக்கு மேம்பட்ட சில சக்திகள் சோதிடர்களுக்கு உள்ளுதிப்பு(ஹி ஹி இது அடைப்புக்குறி) செய்வதாக் கூறுகிறது//

    . குர்ஆன் 15:17 லும் இந்த விபரத்தைக் கூறுகிறது. எல்லாவற்றையும் ஒட்டுக் கேட்க முடியாது. ஒரு சில வற்றை ஒட்டுக் கேட்டு அதை சில ஜோதிடனிடம் சொல்லி விடுவதாக குர்ஆனும் ஹதீஸூம் விளக்குகின்றன. ஆனால் அவை நாம் நம்பும் பேய்கள் அல்ல என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.

    //சுலைமான்(அலை) ஜின் படை வைத்து வைத்து இருந்தாராமே!!!//

    ஆம் அதை குர்ஆனும் உறுதிப்படுத்துகிறது.

    //ஹி ஹி மூடத்தனத்தில் அனைத்து மத்வாதிகளும் ஒன்றே!!!//

    ஹி....ஹி....ஒரு செல் உயிரி தானாக கடலிலிருந்து தத்தி தடுமாறி நிலத்துக்கு வந்து பிறகு கால் கைகள் எல்லாம் விட்டலாச்சாரியா படம் போல முளைத்து பின்னர் பறவைகளுக்கும் தானாகவே பறக்கும் சக்தியும் இறக்கைகளும் வந்தது என்று நம்புவதை விட குர்ஆன் கூறும் மனித ஜின் படைப்புகள் மேலாக எனக்குத் தெரிகின்றது. :-)


    ReplyDelete
  25. இக்பால் செல்வன்!@

    //என்னக் கொடுமை இது !!! ஜின்களை நம்பும் போது பேய்களை நம்பக் கூடாதா ???//

    //ஜின்கள் இருப்பதாகவும் எந்த அதிபுத்திசாலியும் இன்று வரை நிரூபிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க !!!//

    //கடவுள் இருக்கின்றார் என்பதற்கும் எந்தவொரு ஆதாரத்தையும் மனிதன் சமர்ப்பிக்கவில்லையே சகோ.//

    உங்களின் இத்தனை கேள்விகளுக்கும் தின மலரில் வந்த ஒரு பதிலை தருகிறேன்.

    தின மலர். அறிவியல் ஆயிரம்!

    கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?
    -பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

    இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?

    தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.

    //ஜின்கள் இருக்கு ஆனால் பேய்கள் இல்லை என்கின்றீர்கள் !!! //

    ஜின்கள் எங்கே இருக்கு ! அதை மட்டும் பார்த்துள்ளீர்களா ? அதற்கு ஆதாரங்கள் உண்டா ?//

    ஜின்கள் நம்மை பார்க்கும். ஆனால் நாம் ஜின்களைப் பார்க்க முடியாது. இதை குர்ஆனும் நபி மொழிகளும் சொல்வதால் நம்புகிறேன். குர்ஆன் சொன்னால் நம்பத்தான் வேண்டுமா? என்று நீங்கள் கேட்டால் ஆம் என்று சொல்வேன். ஏனெனில் அது இறைவனின் வேதம்தான் என்பதற்கு என்ன ஆதாரங்கள் என்பதையும் பல பதிவுகளில் விளக்கியும் இருக்கிறேன்.

    //பேய் மட்டுமல்ல கடவுள், ஜின்கள், மலக்குகள், தேவர்கள், மோகினிகள், அணங்குகள் எதுவுமே நிரூபிக்க முடியாதவைகள். ஏனெனில் அனைத்துமே உளம் சார்ந்த பிரமைகள் மட்டுமே !!!//

    அது உங்கள் நம்பிக்கை. ஜின்கள் உண்டு, பேய் பிசாசுகள் கிடையாது என்பதும் கடவுள் உண்டு என்பதும் எனது நம்பிக்கை..குர்ஆன் இறைவன் வேதமல்ல என்று நீங்கள் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து விட்டால் உங்கள் வாதங்களை நான் ஒத்துக் கொள்கிறேன்.


    ReplyDelete
  26. @மலர்மன்னன்!

    //அவசரப்படாதீர்கள், கொஞ்சம் பொறுமையாக இருந்தால் முழு ஹிந்துஸ்தானமே கைக்கு வந்துவிடும், மக்கள் தொகையைப் பெருக்குவோம் அதுவே போதும் என்று அபுல் கலாம் போன்ற ’தேசிய’ முஸ்லிம்கள், முக்கியமாக ஜின்னா அல்லாத ஷியா தலைவர்கள் சொன்னார்கள்.
    சமகால சரித்திரம் படிப்பீர்களாக!//

    அபுல் கலாம் இவ்வாறு சொன்னதற்கு ஆதாரத்தை தாங்கள் சமர்ப்பிக்க முடியுமா?

    //தமிழ் நாட்டிலிருந்து சில முஸ்லிம்களும் கேரளத்திலிருந்து நிறைய நிறைய காக்காக்களும் ஆசை ஆசையாய் தாருல் இஸ்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லவே செய்தார்கள். போனவர்களில் பலர் அவமானப்பட்டும் சூழல் ஒத்துக் கொள்ளாமலும் திரும்பினார்கள். சிலர் அங்கேயே தங்கினார்கள்.//

    ஒரு சிலர் நீங்கள் சொல்வது போல் போயிருக்கலாம். அவர்கள் மொத்த முஸ்லிம்களின் சதவீதத்தில் ஒரு சதவீதம் கூட தேற மாட்டார்கள். பாக்கி 99 சதவீதமான தென்னாட்டு முஸ்லிம்கள் பிறந்த மண்ணை விட்டு போகவில்லை. காரணம் இந்த மண்ணின் மீது உள்ள பற்றுதான். தேச பிரிவினை நிகழ்ந்தது எல்லையோர இரண்டு மூன்று மாநிலங்களே! ஒட்டு மொத்த இந்தியாவிலும் அல்ல. பாகிஸ்தானை விட இந்தியாவில்தான் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் அன்றும் இருந்தார்கள்: இன்றும் உள்ளார்கள். இதை அறியாதவரல்ல நீங்கள்.

    //வேட்டியில் கிழிசல் ஏற்பட்டுவிட்டால் இரண்டாகக் கிழித்துப் பயன்படுத்துவதுமேல் என்றுதான் 1941-42 ல் ராஜாஜி சொன்னார். சகோதரர்களிடையே மன வேற்றுமை வந்துவிட்டால் பாகப் பிரிவினை செய்வதுமேல் என்றும் சொன்னார்.//

    உடுத்தும் வேட்டியும் நாம் பிறந்த நாடும் ஒன்றுதானா உங்கள் பார்வையில். சகோதரர்களிடம் ஏதேனும் தகராறு வந்தால் அதனை சமரசமாக தீர்த்து வைப்பதுதான் நல்லோர்களின் செயல். அதை விடுத்து சிறிய சண்டையை தூபம் போட்டு வளர்த்து விட்டு பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை உருவாக்கி இன்று வரை நமது நாட்டுக்கு தலைவலியை உண்டாக்கியதில் ராஜாஜிக்கும் முக்கிய பங்குண்டு. ஜின்னா பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார். இஸ்லாத்தின் மீதோ இஸ்லாமிய சட்டங்களின் மீதோ எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியவர்தான் ஜின்னா. அவரால் சாமான்ய இஸ்லாமியனின் வலியை எவ்வாறு உணர முடியும்? இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்திருந்தால் என்றோ வல்லரசாகியிருப்போம். அதைக் கெடுத்தது ஜின்னா, ராஜாஜி கும்பல் எனறால் அது மிகையாகாது.

    ReplyDelete
  27. சகோ.சுவனப்பிரியன்!தினமலருக்கு கூடவா விளம்பரம்:)

    நம்ம இருக்குற ஊர்கள் பக்கம் பேய் பயமே இல்லாதபடி ஊரே ஒளிமயமாக இருப்பதால் பேய்கள் வருவதில்லையோ!
    பொதுவா அரேபிய நாடுகளில் பேய்,பில்லிசூனியம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லையென்றாலும் கூட சிலர் பில்லிசூனியத்தில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள்.நம்ம ஊரில் வாகனத்துக்கு எலுமிச்சை வச்சு மிதிக்கிற மாதிரி கார்களுக்கு கோழி பலி கொடுக்கிற ஆட்களும் கூட இருக்கிறார்கள்.

    பேய் இருக்கிறதா என்பதற்கு இக்பால் செல்வன் சொல்லும் தர்க்கம் சரியாக இருக்கிற மாதிரி தெரிகிறதே!கடவுள் இருக்கிறார் என்றால் பேயும் இருக்கிறது:)

    உங்கள் தளத்திற்கு எதிர்விமர்சனங்களே வலு சேர்க்கின்றன.அடிச்சு ஆட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. சகோ.சுவனப்பிரியன்!இந்தியா,பாகிஸ்தான் பிரிவினைக்கால கட்டத்தின் குறைகளையும் ஜின்னாவால்தான் என்றோ நேரு குழுவால்தான் என்றோ இனி விமர்சித்துப் பயனில்லை.அது வரலாறாக இரு தேசத்தின் பாடப்புத்தகத்திலும் இடம் பெற்று விட்டன.

    பிரிவினைக்கு அப்பால்,உலக அரசியல் பொருளாதார மாற்றங்களில் இரு நாடுகளும் பாடம் கற்றுக்கொண்டதா என்றால் இல்லை.நான் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.மக்களிடம் பகைமை உணர்வை தேசிய அரசியலே உருவாக்குகின்றன.

    உலகப்போரில் பிரிந்த கிழக்கு ஜெர்மனியும்,மேற்கு ஜெர்மனியும் போல் இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒன்றாக இணையாவிட்டாலும் பரவாயில்லை.நட்பு ரீதியாக தம் நாட்டு நலன்களை முன்னெடுக்கலாமே!இதன் பின்னணியில் பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய தீவிரவாதமும்,இந்தியாவுக்கு தெற்காசிய பெரியண்ணன் மனப்பான்மையும் இருக்கிறது.கூடவே முன்பு அமெரிக்க,ரஷ்ய பனிப்போர் போட்டியும்,இப்பொழுது அமெரிக்க,சீன ஆளுமை போட்டிகள் நிலவுகின்றன.

    கம்யூனிச நாடுகளில் பேய்கள் இருக்கிறதா:)

    ReplyDelete
  29. சகோ ராஜ நடராஜன்!

    //சகோ.சுவனப்பிரியன்!இந்தியா,பாகிஸ்தான் பிரிவினைக்கால கட்டத்தின் குறைகளையும் ஜின்னாவால்தான் என்றோ நேரு குழுவால்தான் என்றோ இனி விமர்சித்துப் பயனில்லை.அது வரலாறாக இரு தேசத்தின் பாடப்புத்தகத்திலும் இடம் பெற்று விட்டன.//

    அப்படி இடம் பெற்ற வரலாறுகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

    //பிரிவினைக்கு அப்பால்,உலக அரசியல் பொருளாதார மாற்றங்களில் இரு நாடுகளும் பாடம் கற்றுக்கொண்டதா என்றால் இல்லை.நான் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.மக்களிடம் பகைமை உணர்வை தேசிய அரசியலே உருவாக்குகின்றன.//

    உண்மைதான். சாமான்ய மக்களான ஒரு இந்தியனுக்கோ பாகிஸ்தானிக்கோ எதைப் பற்றியும் கவலையில்லை. அவனது தின வாழ்க்கை பிரச்னை இல்லாமல் செல்ல வேண்டும் என்றே நினைக்கிறான். நீங்கள் வளைகுடாவில் இருப்பதால் சாதாரண பாகிஸ்தானிகளிடம் நீங்கள் பேசிப் பார்த்தாலே தெரியும். அரசியல்வாதிகளே இரு நாட்டு மக்களுக்கும் வெறியை ஏற்றி வைத்துள்ளார்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்களின் வாழ்வை வளமாக ஓட்ட முடியும். பாகிஸ்தானில் நடக்கும் பல உள்நாட்டு பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர 'இந்தியா தாக்க வருகிறது' எனற பொய்யை சொல்லி அந்த மக்களின் எண்ணத்தை திசை திருப்பி விடுவார்கள். நம் நாட்டிலும் அதுதான் நடக்கிறது. பார்லிமண்ட் தாக்குதலிலிருந்து மும்பை தாக்குதலிலிருந்து கார்கில் போர் வரை இதை நாம் பார்த்து வருகிறோம்.

    //உலகப்போரில் பிரிந்த கிழக்கு ஜெர்மனியும்,மேற்கு ஜெர்மனியும் போல் இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒன்றாக இணையாவிட்டாலும் பரவாயில்லை.நட்பு ரீதியாக தம் நாட்டு நலன்களை முன்னெடுக்கலாமே!இதன் பின்னணியில் பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய தீவிரவாதமும்,இந்தியாவுக்கு தெற்காசிய பெரியண்ணன் மனப்பான்மையும் இருக்கிறது.கூடவே முன்பு அமெரிக்க,ரஷ்ய பனிப்போர் போட்டியும்,இப்பொழுது அமெரிக்க,சீன ஆளுமை போட்டிகள் நிலவுகின்றன.//

    உண்மைதான். சில கள்ள முல்லாக்கள் பாகிஸ்தானிய இளைஞர்களை இன்று வரை மூளை சலவை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக பண உதவி செய்வதாக ஒரு பாகிஸ்தானிய நண்பன் வருத்தமோடு சொன்னான். இந்த நிலை மாற வேண்டும். மக்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட்டால் இந்த நிலை மாற வழியுண்டு.

    ReplyDelete
  30. @ராஜ நடராஜன்!

    //பேய் இருக்கிறதா என்பதற்கு இக்பால் செல்வன் சொல்லும் தர்க்கம் சரியாக இருக்கிற மாதிரி தெரிகிறதே!கடவுள் இருக்கிறார் என்றால் பேயும் இருக்கிறது:)//

    இரண்டையுமே எவரும் பார்த்ததில்லை. ஆனால் கடவுள் இல்லாமல் இந்த உலகம் தானாக உருவாகியிருக்கும் என்று உங்கள் அறிவு ஒத்துக் கொள்கிறதா? நம்முள் இருக்கும் இந்த உயிரை கொடுத்தது யார்? ஒரு சிறு துளி விந்தில் பெற்றோரின் முக சாடை, குரல், நிறம் என்று அனைத்தையும் கொண்டு வருவது எல்லாம் தானாகவே நிகழ்ந்து விடுவதாக நமது அறிவு சொல்கிறதா? இப்படி பல கேள்விகள் உலகை பற்றி சிந்தித்தாலே கடவுளின் இருப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    //கம்யூனிச நாடுகளில் பேய்கள் இருக்கிறதா:)//

    கம்யூனிஸ நாடுகள் மட்டும் அல்ல அரபு நாடுகளிலும் பேய்களின் நடமாட்டம் இல்லை. நம் கிராமங்களில் மாத்திரமே பேய் பிசாசுகள் நடமாடுவதை வைத்தே பேய்கள் என்பது பொய்யான கற்பனை என்ற முடிவுக்கு வந்து விடலாம். இரண்டு பேர் உள்ள இடத்தில் பேய் வருவதில்லை. ஒருவன் தனியாக இருக்கும் போதே பேய் வரும். :-)

    ReplyDelete

  31. US astronaut Neil Armstrong, the first man on the Moon, has died aged 82.

    A statement from his family says he died from complications from heart surgery he had earlier this month.
    He set foot on the Moon on 20 July 1969, famously describing the event as "one small step for a man, one giant leap for mankind".
    US President Barack Obama said Armstrong was "among the greatest of American heroes - not just of his time, but of all time".
    Last November he received the Congressional Gold Medal, the highest US civilian award.
    He was the commander of the Apollo 11 spacecraft. More than 500 million TV viewers around the world watched its touchdown on the lunar surface.

    Armstrong and fellow astronaut Edwin "Buzz" Aldrin spent nearly three hours walking on the moon, collecting samples, conducting experiments and taking photographs.
    "The sights were simply magnificent, beyond any visual experience that I had ever been exposed to," Armstrong once said.
    'Reluctant hero'

    Mr Aldrin told the BBC's Newshour programme: "It's very sad indeed that we're not able to be together as a crew on the 50th anniversary of the mission… [I will remember him] as a very capable commander."
    Apollo 11 was Armstrong's last space mission. In 1971, he left the US space agency Nasa to teach aerospace engineering.

    Neil Armstrong speaking in November 2011
    Born in 1930 and raised in Ohio, Armstrong took his first flight aged six with his father and formed a lifelong passion for flying.

    He flew Navy fighter jets during the Korean War in the 1950s, and joined the US space programme in 1962.

    Correspondents say Armstrong remained modest and never allowed himself to be caught up in the glamour of space exploration.
    "I am, and ever will be, a white-socks, pocket-protector, nerdy engineer," he said in February 2000, in a rare public appearance.
    In a statement, his family praised him as a "reluctant American hero" who had "served his nation proudly, as a navy fighter pilot, test pilot, and astronaut".
    The statement did not say where Armstrong died.

    He had surgery to relieve four blocked coronary arteries on 7 August.

    http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098

    ReplyDelete
  32. மனிதம் மடிந்து விடவில்லை. நெகிழ வைத்த நிகழ்வு. படித்துப் பாருங்கள்.

    http://eerammagi.blogspot.com/2012/08/blog-post_26.html#comment-form

    ReplyDelete
  33. சகோ அத்விகா!

    //மனித இனத்துக்கு அற்புதமான மன ஒருமைப்பாடு தரவல்லது உருவவழிபாடே ஆகும். சுமார் 98% மக்களுக்கு உருவ வழிபாடே ஏற்றது. உருவமற்ற வழிபாட்டில் மனம் பெரும்பான்மையினருக்கு லயிக்காது. மிக சிலருக்கே உருவமற்ற வழிபாடு ஏற்றது. //

    தவறான வாதம். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று உருவத்தை வணங்குவதில்லை. ஐந்து நேரமும் அவர்கள் தங்களைப் படைத்த இறைவனின் பெருமையை தினமும் மசூதிகளிலும் வீடுகளிலும் போற்றி வருகிறார்கள். விவேகானந்தர் கூற்றுப்படி புத்தருக்கு முன்னால் நமது பாரதத்தில் உருவ வழிபாடு இல்லாதிருந்தது என்பதை அறியலாம்.

    இஷ்டதெய்வ வழிபாட்டை, புத்தர் இடைவிடாமல் நிந்தித்து வந்தார். அதன் விளைவாக விக்கிரங்கள் பாரதத்தில் நுழைவு பெற்றன. வேதங்களுக்கு உருவங்களைப் பற்றித் தெரியாது. படைப்பாளனாகவும் நண்பனாகவும் இருந்த கடவுள் தத்துவத்தை இழந்த போது அதற்கு எதிர்ச்செயலாக மகான்களான ஆசான்களின் உருவங்களைச் சமைக்கத் துவங்கினார்கள். புத்தரே விக்கிரகமாக ஆக்கப்பட்டார். அப்படியே அவரை லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். பலாத்காரமான சீர்திருத்த முயற்சிகள் உண்மையான சீர்திருத்தத்தை முட்டுக்கட்டையிட்டுத் தடுப்பதில் வந்து முடிகின்றன.நல்லது செய்வதற்காகவேனும், முரட்டுப் பிடிவாதமான இயக்கத்தைத் துவக்கினால் சரித்திரம் அதற்கு விரோதமாக இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.
    -விவேகானந்தர்

    ReplyDelete
  34. Anonymous8:50 AM

    ராவணன் said

    உங்கள் ஏக இறைவன் இருப்பது உண்மையென்றால் எதுவுமே இல்லாமல் பஸ் ஓடும். டீசல் எதுக்கு? அல் குரானே உண்மை என்று நம்பும் உன்னைப் போன்ற மூடர்களை விட இந்த உலகில் அதிகம் மக்கள் இருக்கின்றார்கள். ஏக இறைவன் என்று ஒன்று இருப்பதாக நம்பும் நீங்கள் பேய் இருப்பதை ஏன் நம்பவில்லை?

    இந்தப் பின்னூட்டம் நீ வெளியிட்டாலும் வெளியிடா விட்டாலும் என் பதிவில் வரும்.- on வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!

    ReplyDelete
  35. Mr Ravanan,

    //உங்கள் ஏக இறைவன் இருப்பது உண்மையென்றால் எதுவுமே இல்லாமல் பஸ் ஓடும்.///

    எதுவுமே இல்லாமல் எதுவும் இயங்காது. எதுவுமே இல்லாமல் பஸ்சும் ஓடவே ஓடாது.

    எல்லாவற்றையும் காரண காரியங்களுடன் இணைத்தே இறைவன் படைத்திருக்கிறான்.

    ///அல் குரானே உண்மை என்று நம்பும் உன்னைப் போன்ற மூடர்களை விட இந்த உலகில் அதிகம் மக்கள் இருக்கின்றார்கள்.///

    அதிகமான மக்கள் இருந்தும் யாது பலன்? நேர்வழியில் உள்ளவர்களே வெற்றியடைவார்கள்.

    அதுசரி, குர்ஆன் உண்மையென்று நம்பும் சுவனப்பிரியன் போன்ற மூடர்களின் (தங்களின் பார்வையில்) பதிவில் பின்னூட்டம் இட்டு, தங்களைத் தாங்களே மகா மூடர் என்று பகிரங்கப் படுத்திக் கொள்கிறீர்களே!


    ///இந்தப் பின்னூட்டம் நீ வெளியிட்டாலும் வெளியிடா விட்டாலும் என் பதிவில் வரும்.- on வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!///

    சும்மா சொல்லக்கூடாது? உங்கள் பின்னூட்டம் போல, உங்கள் பதிவுகளும் இழிந்த நிலையில் உள்ளவை என்று சொல்கிறீர்கள்.

    ///ஏக இறைவன் என்று ஒன்று இருப்பதாக நம்பும் நீங்கள் பேய் இருப்பதை ஏன் நம்பவில்லை?///

    இறைவனின் படைப்பில் பேய் என்றொன்று இல்லாததால், நம்பவில்லை.

    - Ismath

    ReplyDelete
  36. ஒரு முஸ்லிம் கண்டிப்பாக பேய் என்ற படைப்பை நம்ப மாட்டார். இது வரை பேய் இருந்ததை எவரும் நிரூபிக்கவும் இல்லை. வரும் காலங்களிலும் நிரூபிக்க முடியாது.................////////////////////////
    ///////////////////////////
    அப்படி பதில் போட்டு தாக்குங்க சகோ இவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது சாத்தான், ஜின்கள்.மலக்குகள் . இவை எல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட சுட்டியையும் இங்கே பதிந்துவிட்டால் .. இவர்கள் எல்லாம் தெறித்து ஓடிவிடுவார்கள் .. வாங்க சகோ தேடி பார்ப்போம் நிச்சியமாக எங்கேயாவது கிடைக்கும் .. நான் கூகுளில் தேடுகிறேன் . நீங்கள் யாகூவில் தேடுங்க ஓகே ...

    ReplyDelete
  37. சகோ அஞ்சா சிங்கம்!

    //வாங்க சகோ தேடி பார்ப்போம் நிச்சியமாக எங்கேயாவது கிடைக்கும் .. நான் கூகுளில் தேடுகிறேன் . நீங்கள் யாகூவில் தேடுங்க ஓகே ...//

    சல்லடை போட்டு தேடினாலும் அகப்படாது. ஏனெனில் ஜின்கள் நம் கண்களுக்கு தென்படாது என்று குர்ஆன் கூறுவதால் நம் முயற்சி வீணாகி விடும். :-(

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)