Monday, September 10, 2012

ஆணும் பெண்ணும் சமமல்ல: ஹிந்து பத்திரிக்கை சொல்கிறது.



ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார், அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி..

சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை 'முன் மடலின் (frontal lobe) ' தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.



சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.

மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகததில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=print

இது 'தி ஹிந்து' பத்திரிக்கையில் செப்டம்பர் 18 - 2011 அன்று 6 ஆவது பக்கத்தில் வந்த கட்டுரை:

---------------------------------------------------------------------------------

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பத்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34


குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124








49 comments:

  1. மருதன்3:36 AM

    ஹிந்து பத்திரிகை குரான் வசனத்தில் கூறியிருப்பதை போல பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என கூறியிருக்கிறதா?

    தயவுசெய்து விளக்கவும்....

    ReplyDelete
  2. தெரிந்து கொள்ளுங்கள். இதோ வியப்பான உண்மை தகவல்கள்.


    வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    கீழே உள்ள சுட்டியை சொடுக்கி படியுங்கள்.


    1. ****
    பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? அதற்கான காரணத்தை பார்ப்போம்.
    *****


    2. ****
    பெண்களுக்கு மோட்சம் கிடையாது. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.
    *****


    3. ****
    உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?
    *****


    4. ****
    வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?
    *****

    5.**** பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது. *****


    6. ****
    ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து????..ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.
    *****


    7. ****
    தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள்.
    *****


    8. ****
    இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்
    *****


    9. ****
    உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.
    *****


    10.****
    நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்
    *****


    11. ****
    மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?
    *****


    12. ****
    ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
    *****

    .

    ReplyDelete
  3. திரு மருதன்!

    //ஹிந்து பத்திரிகை குரான் வசனத்தில் கூறியிருப்பதை போல பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என கூறியிருக்கிறதா?

    தயவுசெய்து விளக்கவும்....//

    பெண்களுக்கு குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை குர்ஆன் கட்டளையாக்கவில்லை. அதனை கணவனின் தலையில் சுமத்துகிறது. பெண் விரும்பினால் வேலைக்கு செல்வது அவளது விருப்பத்தின்பாற் பட்டது. ஒரு ஆண் குழந்தை பெற வேண்டும் என்று நினைத்தாலும் அவனது உடல் அமைப்பு அதற்கு இடம் தராது. உலகில் இறைவனுக்கு அடுத்து மரியாதை செய்யக் கூடிய ஒரு உறவு தாய்மை. இது பெண்களுக்கே உரிய சிறப்பு. இது போல் அவரவர்க்கு கொடுத்த சிறப்புகளை வைத்து பொறாமை படாமல் சந்தோஷமாக வாழ்க்கை செல்ல வேண்டும் என்று இஸ்லாம் எதிர் பார்க்கிறது.

    ஆண் சம்பாதிப்பதால் தனக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்து விட்டது என்று நினைத்து பெண்ணை இழிவாக நினைக்கவோ அவரகளை துன்புறத்துவதோ அறவே கூடாது என்பதையும் பல வசனங்கள் தெளிவாக்குகிறது. பெண்களின் உடல் கூறு அமைப்பே அவர்கள் வெளியில் சென்று வேலை செய்வதில் பல சிரமங்களைக் கொடுக்கிறது.

    வீட்டையும் பார்த்துக் கொண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு பிறகு வேலைக்கும் செல்வதால் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக அந்த பெண்களே முறையிடுவதை முன்பு நான் பதிவாகவே கொடுத்துள்ளேன். வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்கள் எந்த அளவு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்களே முன்பு பேட்டியாக கொடுத்திருந்தனர்.

    எனவே பெண்கள் அவர்களாகவே விரும்பினால் வேலைக்கு செல்வதை தடுக்கவில்லை. கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலை.

    ReplyDelete
  4. சகோ தமிழன்!

    //தெரிந்து கொள்ளுங்கள். இதோ வியப்பான உண்மை தகவல்கள்.


    வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    கீழே உள்ள சுட்டியை சொடுக்கி படியுங்கள்.//

    நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் அனைத்தும் வேதங்களில் இல்லை என்றே நினைக்கிறேன். ஸ்மிருதிகளில் பின்னால் வந்தவர்கள் எழுதியதாகவே அறிகிறேன். இவற்றை எல்லாம் இன்னும் நீக்காமல் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்து மத பெரியோர்கள் இது போன்ற ஆபாசமான சட்டங்களை எல்லாம் நீக்க பாடுபட வேண்டும்.

    ReplyDelete
  5. Anonymous6:44 AM

    இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை; அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பியதாக விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

    பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

    பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. Anonymous6:53 AM

    -31 டிசம்பர் 2009 தினத் தந்தி

    வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

    `பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

    வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

    ReplyDelete
  7. Anonymous6:54 AM

    …..மிரட்டல்

    ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள்.
    இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

    அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

    பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    இருட்டான இடங்களில்...

    பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப
    வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

    போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,
    உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

    பஸ்களில்

    தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

    அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

    நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

    பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
    இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
    -31 டிசம்பர் 2009
    Dina thandi

    ReplyDelete
  8. ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்பவர்கள் எல்லாம் வேஷ தாரிகளே... அவர்களுக்கே தெரியும் அவர்கள் சொல்வது பொய் என்று....

    ReplyDelete
  9. சகோ சிராஜ்!

    //ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்பவர்கள் எல்லாம் வேஷ தாரிகளே... அவர்களுக்கே தெரியும் அவர்கள் சொல்வது பொய் என்று....//

    உண்மைதான். தெரிந்து கொண்டே பெண்ணியம் பேசுபவர்கள் இவர்கள்.

    ReplyDelete
  10. //
    உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.//

    உலகளவிலான யதார்த்த நிலை உடல் கட்டமைப்பும் மூளை செயல்பாடுகளும்.

    ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கம் சிறப்பாக இருக்கின்றன.தொடருங்கள்.நன்றி.

    ReplyDelete
  11. சகோ ராஜ நடராஜன்!

    //உலகளவிலான யதார்த்த நிலை உடல் கட்டமைப்பும் மூளை செயல்பாடுகளும்.

    ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கம் சிறப்பாக இருக்கின்றன.தொடருங்கள்.நன்றி.//

    வருகைக்கும கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு, ஆனால் ஒருவர் கோருவதை வைத்து அறிவியலில் அது தான் உண்மை என்ற நிலைக்கு வர முடியாது.

    ReplyDelete
  13. சகோ ஆயிஷா ஃபாரூக்!

    //நல்ல பகிர்வு, ஆனால் ஒருவர் கோருவதை வைத்து அறிவியலில் அது தான் உண்மை என்ற நிலைக்கு வர முடியாது.//

    மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது நிரூபிக்கப்படாத ஒரு அனுமானம். ஆனால் இது போன்ற அறிவியல் முடிவுகள் நிரூபிக்கப் பட்டவை. இதற்கு முன்னும் பல அறிஞர்கள் இதனை ஒத்துக் கொண்டுள்ளனர்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. சம்பள பாக்கியை கேட்ட ஊழியரின் கையை வெட்டிய மதுக்கடை உரிமையாளர்

    கார்வா(ஜார்க்கண்ட்): ஜார்க்கண்டில் கடந்த ஓராண்டாக வழங்காமல் உள்ள சம்பள பாக்கியைக் கேட்ட ஊழியரின் கையை கடை உரிமையாளர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சுக்நாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலியார் ராஸ்வர்(40).

    அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் வேலை பார்த்தார். அவரது வருமானத்தை நம்பி தான் அவரது மனைவி, 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    கடந்த ஓராண்டு காலமாக அவருக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

    இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை கடை உரிமையாளர் லால் மணியிடம் தனது சம்பள பாக்கியான ரூ.10,000த்தை கொடுக்குமாறு கேட்டார்.

    அதற்கு அவர் சம்பளத்தை கொடுக்காமல் ஆலியாரின் இடது கையை வெட்டி அவரை அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டார்.

    அந்த வழியாகச் சென்ற கிராமத்தினர் பார்த்து ஆலியாரை சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக ரான்ச்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் சேர்க்கப்பட்டார்.

    http://tamil.oneindia.in/news/2012/09/11/india-labourer-s-hand-chopped-off-demandi-161244.html

    ReplyDelete
  15. நாகூர் மீரான்1:33 AM

    இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு செருப்படியாக ....."பிற மதத்தவர்களிடம் அன்பு"(http://onlinepj.com/katturaikal/pira-mathaththavargalidam-anbu/) என்கிற தலைப்பில் ஒரு பதிவு போடலாமே...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  16. சகோ நாகூர் மீரான்!

    //இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு செருப்படியாக ....."பிற மதத்தவர்களிடம் அன்பு"(http://onlinepj.com/katturaikal/pira-mathaththavargalidam-anbu/) என்கிற தலைப்பில் ஒரு பதிவு போடலாமே...//

    எதிர்ப்பு கண்டிப்பாக இருந்தே தீரும். ஏக இறைக் கொள்கையை சரியாக சொல்லும் போது அங்கு விமரிசனம் வருவது இயற்கையே! விமர்சனம் வந்தால்தான் விளக்கம் பிறக்கும். உங்கள் ஆலோசனையையும் எடுத்துக் கொள்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. Anonymous2:00 AM

    ஹெச். ஜி. ரசூல்

    1) பெண்ணின் உடல் – உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது.
    இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன.

    ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது.

    ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.
    ஐரோப்பியச் சூழலில் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரச்சனைகள் வெள்ளையின, கறுப்பின, லெஸ்பியன் இனப் பெண்களுக்கானது என தனித்தனியாக வேறுபடுத்தியே பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழல்களிலே சாதீய கட்டுமானத்திற்குள் இயங்கும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான பெண்ணியம், மத நிறுவன அமைப்புக்குள் செயலாக்கம் புரியும் பெண்ணியம் என்பதாக இதன் எல்லைகள் மாறுபட்டு விரிவடைந்துள்ளன.

    இவ்வாறாக நுண் நிறுவனங்கள் வழி பெண்ணின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், உயிரியல் தாழ்வு நிலையை மையமாகக் கொண்டு பாலியல் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தப் படுத்துவதும் தொடர்ந்து நிகழ்கிறது.

    இஸ்லாம் கூறும் பெண் சமத்துவத்திற்கு ஆதாரமாக திருமறையின் சிலகருத்துக்களை நாம் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

    1. ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன (அவ்வாறே) பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்தவை உரிமை (திருக்குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 32)

    2. நிச்சயமாக அ(த்தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சிபுரிவதை நான் கண்டேன். இன்னும் அவளுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது. மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் அத்தியாயம் 27 வசனம் 22, 23)

    3. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 187)

    ReplyDelete
  18. Anonymous2:02 AM

    ஹெச். ஜி. ரசூல்

    இஸ்லாமில் அதிகபட்சமாக முன்வைக்கப் படும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமமான விதிமுறைகள், சமமான கடமைகள், சமமான உரிமைகள் பெண் அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுதல் என்பதான இக்கருத்துகளின் அடிப்படையில் சமத்துவக் கோட்பாட்டை நோக்கி உரையாடலை நிகழ்த்தலாம்.

    ஒவ்வொரு பெண்ணும் தான் செய்யும் நற்செயல்களுக்குத் தக்கவே மதிப்பீடு செய்யப்படுகிறாளே அன்றி அவளது கணவன் சார்ந்து பெருமையோ சிறுமையோ அடைவதில்லை என்கிற சுயசார்புத் தன்மையை திருக்குர்ஆன் கூறுகிறது. இறைவனால் மனிதக் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூஹ் மற்றும் லூத் நபிமார்களின் மனைவிமார்கள் அவர்களது செயல்பாட்டு நிலைபாடுகளினால் நரக நெருப்புக்கு ஆளாவார்கள் என்பதும் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்த பிர் அவ்ன் ஆட்சியாளனின் மனைவி, ஆசியா இறைவழிப்பாதையில் தீமையைத் தட்டிக் கேட்டதால் கொடுமைப் படுத்தப்பட்டு உயிரையே தியாகம் செய்த வரலாறும், முன்உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
    இங்கு இஸ்லாமியப் பெண்,இஸ்லாம் அல்லாத பெண் என்பதான இருமை எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டுல்ளன.

    இஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையை பேசியவர்களில் இருபதாம் நூற்றாண்டின் துவக்ககால எகிப்திய அறிஞர்கள் காசீம் அமீன் (1863 – 1908) சலமா மூஸா (1887 – 1958) ஷெய்க் முஹம்மத் அப்தூ (1849) உள்ளிட்டோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஷரீ அத்தை விஞ்ஞானத்தின் துணை கொண்டு அணுகுதல், பெண்களுக்கான கல்வி, சுதந்திரம், சமத்துவம், அறிவுத்துறை தொடர்பான பிரச்சனைப்பாடுகளை பதிவு செய்தல் என்பதாக இது நடந்தேறியது.

    ஈரானிய சமூக அறிஞர் அலிஷரிஅத்திய் பழமைவாதப்பெண், ஐரோப்பிய நாகரீகப் பெண் என்கிற இருவித எல்லைகளையும் விமர்சனப்படுத்தி மூன்றாம் நிலையிலான இஸ்லாமியப் பெண்ணை கட்டமைக்கிறார். பெண் பாலியல் பண்டமாக்கப்பட்டமைக்கு எதிர்வினையையும் ஆற்றுகிறார். மொழியியல் ஆய்வின் அடிப்படையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட கருத்தை சிதைத்து மறு கட்டுமானம் செய்கிறார். ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப் பட்டாள் என்கிற சொல்லாடலை மறுத்து திருக்குர் ஆனிய மூலமொழியில் ஆதமும், ஹவ்வாவும் ஒரே வித இயற்கையிலிருந்து படைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இருப்பதை விவரிக்கிறார்.

    இந்தத் திசை வழியிலேயே பஞ்சாபில் பிறந்த குலாம் அஹ்மத் பர்வேஸ் தெற்காசிய சூழலில் முக்கியமானவராகிறார். திருக்குர்ஆனை நவீனத்துவ பிரதி களாக மாற்றமடையச் செய்யும் முறையியலை இந்தியச் சூழலில் அஸ்கர் அலி இன்ஜினியர் உள்ளிட்டோர் முன்வைப்பதையும் இத்தோடு இணைத்துக் காணவேண்டியுள்ளது.

    அரேபியச் சூழலில் ஏமனில் யூத மதமும், ரோமில் கிறிஸ்தவமும் வழக்கில் இருந்தபோது மக்காவில் குறைஷ், பதூயீன்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள் பகுதியிலிருந்து நபிகள் நாயகத்தின் தோற்றம் நிகழ்ந்தது. யூத, கிறிஸ்தவ சமயங்கள், ஏற்கனவே வேதம் வழங்கப்பட்ட சமயங்கள், குறைஷி மக்கள் இதற்கு மாற்றாக புறச்சமயத்தை சார்ந்த பழங்குடி இன கலாச்சார பின்னணியைக் கொண்டவர்கள். இஸ்லாத்திற்கு முன்பு யூத கலாச்சாரத்தோடு தொடர்புடைய பெரும் வர்த்தகராக இருந்த கதீஜா நாயகியிடம் தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பு நபிகள்நாயகம் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஐரோப்பிய முற்காலச் சூழலில் பெண்களும் சொத்துரிமையை அனுபவித்திருக்கிறார்கள் என்பதற்கான குறிப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  19. Anonymous2:03 AM

    ஹெச். ஜி. ரசூல்

    இஸ்லாமிய பெண்ணின் பொருளியல் சுயசார்புத் தன்மையினை மறுப்பதற்கான தடயங்களை தீனின் கோட்பாடுகளிலிருந்து கண்டெடுப்பது மிக அரிதாகவே இருக்கிறது. இது இருவகைப்பட்ட தன்மை கொண்டதாகும்.

    ஒன்று பெண் சுயமாக சம்பாதிக்கும் செல்வத்தை சுயமாக பயன்படுத்துவதற்கு எந்த விதமான தடையு மில்லை. அவரவர் சம்பாதிப்பது அவரவர்க்கே என்கிற கருத்தாக்கம் மிக அழுத்தமாக சொல்லப்படுகிறது. இதில் ஆணுக்கென்று தனித்த அந்தஸ்து வழங்கப் படவில்லை.

    அதே சமயம் தந்தை வழி சொத்துரிமையை பங்கீடு செய்யும் சூழலில்தான் ஆணுக்கு ரெண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.
    வாரிசுரிமை சொத்தின் பாகப்பிரிவினையில் ஆணுக்கு ரெண்டுபாகம், பெண்ணுக்கு ஒருபாகம் என்பது திருமறையின் விதிமுறை. அக்காலச் சூழலில் பெண் உள்ளிட்ட குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆணைச் சார்ந்திருந்தது. திருமணத்தின் போது மஹர் என்கிற பொருளாதாரச் சொத்து கணவன் மூலமாக பெண்ணுக்கு கிடைக்கிறது என்பதாக இதற்கு விளக்கங்களும் கூறப்படுகின்றன. மஹர் என்பது திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்கு வழங்கும்பணம் அல்லது செல்வமாகும். உடல்ரீதியாக ஆண் பெண்ணிடம் பெறுகிற இன்ப அனுபவத்திற்காக பெண்ணுக்கு வழங்கும் கொடையாகவும் இது சொல்லப்படுகிறது.

    மஹரை செல்வமிருக்கும் ஒருவன் உஹது மலையளவு கூட வழங்கலாம். எதுவும் இல்லாதவன் குர்ஆன் வசனம் சொல்வதைக்கூட மஹராக்கலாம். இத்தகைய நெகிழ்ச்சியான, தீர்மானிக்கப்படாத அளவீட்டை பெண்ணுக்கு வழங்கப்படும் வாரிசுரிமை சொத்துப் பிரிவினையோடு இணைத்துப் பார்ப்பது எப்படி சரியாகும் என்பதான விமர்சனப் பதிவும் இதில் உண்டு.

    இந்நிலையில் ஆணுக்கு ரெண்டு பாகம் பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற இக்கருத்தாக்கம் கூட சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது. ஆணுக்கு அதிக உரிமை பெண்ணுக்கு குறைவான உரிமை என கருதிக் கொண்டிருக்கும் மனோநிலையை இமாம் அபூஹனிபாவின் கருத்தாக்கம் வெகுவில் கலைத்துப்போடுகிறது.
    இமாம் அபூஹனிபா ஆண் பலகீனமானவனா, பெண் பலகீனமானவளா என்ற கேள்வியை கேட்கிறார். அவரிடம் விவாதிக்க வந்த இமாம் ஜாபர் சாதிக் இதிலென்ன சந்தேகம் ஆண்தான் பலமானவன் ஆணுக்கு ரெண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்று கூட திருமறை சொல்வதாக கூறுகிறார். உடனே இமாம் அபூஹனிபா மறுத்துக் கூறுகிறார். நீங்கள் சொல்வது தவறு. திருக்குர்ஆன் கருத்தாக்கத்தின் படி ஆண்தான் பலகீனமானவன். ஏனெனில் பலகீனமான நிலையின் இருப்பவர்க்குத்தானே அதிகம் செல்வம் தேவைப்படும். எனவே ஆண் பலகீனமானவனாக இருப்பதால் இரு பங்கும், பெண் பலமானவளாக இருப்பதால் அவளுக்கு ஒரு பங்கு மட்டும் என்கிறார். இது சொந்த அறிவையும் ஆராய்தலையும் கொண்டு தீர்ப்புச் சொல்லும் ஒரு மாறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.

    ஒரு கோட்பாட்டின் உள்ளார்ந்த சாரம் ஒன்றாகவும் அதன் மேலோட்டமான வடிவம் மற்றொன்றாகவும் செயல்படுகிறது. ஆண்-பெண் சொத்துரிமை சார்ந்த விவாதத்தில் வெளிப்படும் இந்த சொத்துப் பங்களிப்பின் உள்ளார்ந்த சாரம் என்பதே “பலவீனமானவர்களுக்கு அதிக பங்கு” என்பதாகும். இந்த வகையில் இந்தியா உள்ளிட்ட வாழ்வியல் சூழல்களில் அதிகாரத்தின் ஆளுமைகளால் நசுக்கப்படுகிற பலவீன நிலையில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கே அதிக அளவில் சொத்துப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குர்ஆனிய கருத்தாக்கத்தின் சொல்லப்படாத அர்த்தமாகவும் விரிவடைகிறது.

    ReplyDelete
  20. திரு.சு.பி சுவாமிகள்,

    இப்போதெல்லாம் இந்து, தினமலர் என அதிகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போல தெரிகிறது :-))

    அறிவியல் ஆய்வாளர் நிக்ழவு குறித்து பல செய்தித்தாள்களிலும் செய்தி வந்துள்ளது!

    நீங்கள் மேற்கோள் காட்டிய செய்தி ஒரு ஆய்வின் அடிப்படையில் உடலியல்,மற்றும் மூளை சார்பானது, அதனை வைத்து சமூக அங்கீகரம், உரிமைகள் வழங்குவது எப்படி என சொல்லவில்லை,

    ஒரு ஆண் நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம், மேலும் சட்ட சச்சரவுகளில் ஆணின் சாட்சிக்கும், பெண்ணின் சாட்சிக்கும் வேறுபட்ட மதிப்பீடு எல்லாம் வழங்க சொல்லவில்லை.

    ஆனால் அச்சடித்த அரேபிய நூலில் அப்படியெல்லாம் எப்படி எழுதி வைத்தார்கள் என்பதை விளக்க முடியுமா?

    முகமது அய்யா காலத்தில் கார் கண்டுப்பிடிக்கப்படவில்லை ,பின்னர் எப்படி பெண்கள் கார் ஓட்ட தடை விதித்தார்கள் என்பதும் எனக்கு புரியவில்லை விளக்கினால் புண்ணியமாக இருக்கும்.

    ReplyDelete
  21. திரு வவ்வால்!

    //முகமது அய்யா காலத்தில் கார் கண்டுப்பிடிக்கப்படவில்லை ,பின்னர் எப்படி பெண்கள் கார் ஓட்ட தடை விதித்தார்கள் என்பதும் எனக்கு புரியவில்லை விளக்கினால் புண்ணியமாக இருக்கும். //

    அந்த காலத்தில் அனைவரும் ஒட்டகத்தில்தான் பயணப்பட்டனர். அப்படி போனால் பெண் தனியாக செல்வதற்கு தடை இருக்கிறது. தந்தை, அண்ணன், தம்பி, மகன் என்று திருமணம் முடிக்க தடை செய்யப்பட்டவர்களோடு நெடுந்தூரம் பயணம் மேற் கொள்ளலாம். அந்த சட்டத்தையே தற்போதுள்ள வாகனங்களுக்கும் பொருத்திக் கொள்ளலாம். பெண்ள் கார் ஓட்ட இஸ்லாத்தில் தடை இல்லை. கற்புக்கு பாதுகாப்போடு விமானம் ஓட்டினாலும் இஸ்லாம் தடை சொல்லாது.

    நபி அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி),நூல்; புகாரி 1088

    ReplyDelete
  22. திரு வவ்வால்!

    //ஒரு ஆண் நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம், மேலும் சட்ட சச்சரவுகளில் ஆணின் சாட்சிக்கும், பெண்ணின் சாட்சிக்கும் வேறுபட்ட மதிப்பீடு எல்லாம் வழங்க சொல்லவில்லை.//

    1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:
    இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் – 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் – இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதில் முன்னனி வகிக்கின்றனர்.

    முந்தைய காலங்களில் இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமேத் தவிர. இந்து வேதங்கள் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.
    இப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.

    2. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.

    நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.

    குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.
    மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இஸ்லாத்தின் கொள்கைகளில் – செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:
    1. ’ஃபர்லு’- கட்டாயக் கடமைகள்
    2. ‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை
    3. ‘முபாஹ் ‘- அனுமதிக்கப்பட்டவைகள்
    4. ‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.
    5. ‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.
    மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.

    continue.....

    ReplyDelete
  23. திரு வவ்வால்!

    //ஒரு ஆண் நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம், மேலும் சட்ட சச்சரவுகளில் ஆணின் சாட்சிக்கும், பெண்ணின் சாட்சிக்கும் வேறுபட்ட மதிப்பீடு எல்லாம் வழங்க சொல்லவில்லை.//

    3. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.
    இயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.

    யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

    4. கருவிலேயே பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதாலும் – பெண் சிசுவதைகளாலும் – இந்திய மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களே எண்ணிக்கையே அதிகம். மேற்படி நிகழ்வு இல்லையெனில் இந்தியாவிலும் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.
    மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து
    கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

    5. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
    அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.

    ReplyDelete
  24. continue.....

    6. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.

    ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.

    உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.

    மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.

    ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

    இஸ்லாத்தில் ஆண்கள் கூடுதலாக நான்கு பெண்கள்வரை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருந்தாலும் – முக்கியமாக பெண்களின் மானத்தை பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது.

    மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

    ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
    தமிழாக்கம்: அபூ இஸாரா

    ReplyDelete
  25. Anonymous1:00 PM

    பூவண்ணன் says:
    September 11, 2012 at 5:24 pm

    http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

    எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
    அவர் தந்தை சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
    அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.

    One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்

    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்

    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்
    சாதியை விட்டு விலக்கப்பட்டாலும்,ஊரை விட்டு ஒதுக்கப்பட்டாலும் அவருக்கு கீழ் சாதியில் பெண் கிடைப்பது எளிது தான்

    இது தான் சாதி
    சாதி என்பதே அடக்குமுறை தான்
    உயர்ந்த சாதி தனக்கு கீழ் உள்ள சாதிகளை அடிமைகளாக நடத்தும் உரிமை உள்ளது
    அதற்கான சட்டங்களும் அன்று இருந்தன

    ReplyDelete
  26. Anonymous1:25 PM

    பூவண்ணன் says:
    September 11, 2012 at 5:17 pm

    விஜயவாணி கட்டுரை செம காமெடி

    கட்டுரை சாதி எனபது தனி தனி வட்டம் போல இருந்ததாக அவரவர் அவரவர் பிறந்த சாதியின் தொழில் புரிந்து கொண்டு சாதிக்குள்ளேயே மணம் செய்து கொண்டு வாழ்ந்தது போல காட்டும் முயற்சி இப்போது சில ஆண்டுகளாக சாதி ஆதரவாளர்கள்@ஹிந்டுத்வர்களால் முன்னெடுக்கபடுகிறது
    இதை விட பெரிய பொய் கிடையாது

    சாதி என்பதே செய்யும் வேலைகளை குறிக்கும் சொல்.பிறப்பால் இவன் இன்ன தொழில் தான் செய்ய முடியும்,இன்ன செய்ய தகுதியில்லாதவன் எனபது தான் சாதியின் அடிப்படை.மருத்துவர்,பொறியாளர்,முடி திருத்துபவர்,பூஜை செய்பவர்,வணிகம் செய்பவர்,கணக்கு பார்ப்பவர்,போர் வீரர்,சலவையாளர்,மயான தொழிலாளி,ஆடை தைப்பவர் போன்றவற்றின் அடிப்படையில் உருவானது பிரிக்கப்பட்டது சாதி .

    ஒரே சாதிக்குள் திருமணம் எப்படி சாதிக்கு/வர்ணத்துக்கு முக்கியமோ(அது கூட ராஜாக்களுக்கும் ராஜகுருக்களுக்கும்,ஆண்களுக்கும் கிடையாது.நம்பூதிரிகள் வர்மா இன பெண்களை மணந்தாலும் அவர்களின் வாரிசுகள் கோவில் பணி செய்யலாம்.அவர்கள் நம்பூடிரிகலாக தான் கருதப்படுவார்கள்.ஆனால் வேறு வர்ண பெண்களை மணந்தால் அவர்கள் தாயின் வர்ணத்தை சேர்ந்தவர்கள்.தந்தையின் வர்ணத்தை மூன்று,ஐந்து,ஏழு தலைமுறைக்கு வழுவாமல் பின்பற்றினால் தந்தையின் வர்ணத்தை பெறலாம் என்று இருந்தது.ஒரே வர்ணத்துக்குள் திருமணம் என்பதில் பெரிய தடை கிடையாது.ஆண் தனக்கு கீழே உள்ள வர்ணத்தில் உள்ள பெண்ணை திருமணம் செயாவோ,வைத்து கொள்ளவோ தடை கிடையாது.பெண் செய்தால் அவர்களின் வாரிசுகள் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரில் தான் சேர்த்தி )

    சாதிக்கு
    முக்கியம் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தொழில்.
    அதை விட முக்கியம்
    யார் யாருக்கு கீழே
    யார் சொல்லை யார் கேட்க வேண்டும்
    குழப்பம் வரும் போது யார் சொல்லும் முடிவு இறுதியானது

    இப்படி இருக்கும் போது எல்லா சாதிகளும் பிரட்சினைகள் இல்லாமல் சமமாக வாழ்ந்து வந்தன என்று காட்டும் முயற்சிகள் முழு பசுமாட்டை அது போடும் சாணியில் மறைப்பது போல தான்

    ReplyDelete
  27. Anonymous1:26 PM

    பூவண்ணன் says:
    September 11, 2012 at 5:23 pm

    பல நூற்றாண்டுகளாக சாதிக்குள்ளயே திருமணங்கள் நடந்தது போல பலர் பேசுவது வியப்பளிக்கிறது
    அந்த வழக்கம் வெறும் உயர்சாதி பெண்களுக்கு மட்டும் தான்
    தன வர்ணத்திற்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்தவர்களை ஆண்கள் மணந்து கொள்ள எந்த தடையும் இருந்தது இல்லை
    தனக்கு கீழ் உள்ள சாதிகளில் இருந்து பெண்களை மூன்றாவது தாரமாக,இல்லை வைத்து கொள்வதோ சில வருடங்கள் முன் வரை சாதாரணமான வழக்கம்

    ஜெமினி கணேசனும் கலைஞரும் உறவினர்கள்.ஜெமினியின் தாத்தா புதுகோட்டை திவான் மனைவி இறந்ததும் கலைஞரின் அத்தையை குழந்தைகளை பார்த்து கொள்ள வைத்து கொண்டார்.அவர் மகள் தான் தேவதாசி தடை சட்டத்திற்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    எந்த சாதி பெண்ணை வேண்டுமானாலும் வைத்து கொள்வது உயர்சாதியினருக்கு மிகவும் சுலபமாக இருந்த ஒன்று

    இசை மூவர் என்று அழைக்கப்பட்ட மூவரில் D K பட்டம்மாள் பற்றி படியுங்கள்.

    damal krishnasamy pattammaal /madurai shanumugavadivu subbulakshmi /madras lalithaangi vasanthakumaariPattammal was born in an orthodox Brahmin family in Kancheepuram of Tamil Nadu, India.[4] She was named as Alamelu, but fondly called “Patta” as a child prodigy.[5][6] Her father, Damal Krishnaswamy Dikshithar, who was deeply interested in music, inspired her to learn Carnatic music.[7] Her mother, Kanthimathi (Rajammal), although a talented singer herself, was not permitted to sing even for friends or relatives in line with strict orthodox tradition.[7] Despite her orthodox background, Pattammal sang and showed considerable music talent at an early age.[4]

    மெட்ராஸ் லலிதாங்கி /மதுரை சண்முகவடிவு /முத்துலட்சுமி ரெட்டி எல்லாம் சம காலத்தவர்.அவர்களின் தந்தை பிறந்த சமூகத்திலா அவர்கள் வந்தனர்.

    இவர்கள் பெரிய கலைஞராக விளங்கிய அதே காலததவரான DK பட்டம்மாள் அவர்களின் தாயார் பாட கூட அனுமதியில்லாத நிலை ஏன்.
    திராவிட இயக்கம் வந்ததால் இவர்களின் தந்தை என்று google செய்தால் ஒரு பெயர் வருகிறது.
    மதுரை ஷண்முக வடிவுவின் தாயார் அக்கம்மாள் என்று தானே எவ்வளவு google செய்தாலும் வருகிறது

    திரு எம் எஸ் அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தாரே அவர் எந்த சாதியில் வருவார்

    ReplyDelete

  28. திரு காவ்யா!

    //I know only English with Tamil, Hindi and a slight Marati. Arabic s unknown to me.
    Why don’t u translate it into Sanskrit which may benefit more ppl?//

    இவர்களிடம் பதில் இல்லாத போது இது போன்று திசை திருப்பல்களைச் செய்வது புதிதல்லவே! :-)

    மேலும் இந்தியனின் பின்னூட்டத்தில் உள்ள சுட்டியை அரபியில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமாக சகோ பூவண்ணனின் விளக்கத்தையும் அரபிமொழியில் மொழி பெயர்த்தால் வெளங்கிடும். இந்தியர்கள் என்றால் கொஞ்சம் மரியாதை அரபுகளிடம் உண்டு. இதனை எல்லாம் மொழி பெயர்த்து இணையத்தில் விட்டால் இந்தியர்கள் அனைவரும் முக்காடு போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். நம் நாட்டில் நடந்த இன்றும் நடந்து கொண்டிருக்கிற இந்த வர்ணாசிரமக் கொடுமைகளை எல்லாம் தயவு செய்து யாரும் அரபியில் மொழி பெயர்த்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் மண்ணிலேயே இவைகள் மடியட்டும்.

    ஸ்மிதாவும், தங்கமணியும், மலர் மன்னனும் சகோ பூவண்ணனின் பின்னூட்டத்துக்கு தக்க பதிலை தந்து இந்தியர்களின் மானத்தைக் காப்பார்களாக! :-)

    ReplyDelete
  29. சு.பி சுவாமிகள்,

    //அந்த காலத்தில் அனைவரும் ஒட்டகத்தில்தான் பயணப்பட்டனர். அப்படி போனால் பெண் தனியாக செல்வதற்கு தடை இருக்கிறது. //

    இதன் மூலம் சொல்ல வருவது இஸ்லாமிய ஆண்கள் தனியாக செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

    --------
    //1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:
    இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் – 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர்//

    நீங்கள் சொன்னது போல கமிட்டியை எந்த அரசு சட்டத்தின் அமைத்தார்கள் என கூற முடியுமா?

    மேலும் 1950 களில் இப்போதை விட முஸ்லீம்கள் மிக சிறிய எண்ணிக்கையில் தான் இருந்து இருக்க வேண்டும், அப்படி இருந்தும் 4.31% என்கிறீர்கள் :-))

    மேலும் 1954 இல் பலதார மணச்சட்டம் இந்துக்களுக்கு வந்துவிட்டது என நீங்களே சொல்லிவிட்டு 1975 இல் வந்த அறிக்கை என கதை விடுவது எப்படி?

    மேலும் இப்போது நடப்பது 2012 , இதற்கு ஒரு புள்ளி விவரம்,அறிக்கை சிக்கலையா?

    இதை விட காமெடி

    அமெரிக்கா, இங்கிலாந்து என்றே உதாரணம் காட்டுறிங்க அதெல்லாம் இஸ்லாமிய தேசமா?

    அப்புறம் இந்தியாவில் இருக்கவங்க நிலைக்கு என்ன சொல்ல வரிங்க?

    அப்புறம் அரேபிய நாடுகளில் என்ன நிலவரம் அதை சொல்லுங்க?

    //குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. //

    குர் ஆன் வருவதற்கு முன் இஸ்லாம் என்பதே இல்லை. இருந்தது எனபதற்கு என்ன ஆதாரம்?

    மேலும் ஆண் ,பெண் பாலின வேறு பாடு , சிசு அழிப்பு எல்லாம் தற்சமயம் நடப்பது நான் பேசுவது 8 ஆம் நூற்றாண்டு, அதற்கு என்ன பதில்.

    மேலும் பெண் திருமணம் செய்யாமல் காலம் முழுக்க கன்னியாக இருக்கலாம், அப்படி இருந்தால் பொது சொத்து என எந்த மடையன் உமக்கு சொன்னான்.

    திருமணம் என்பதோ ஆண் துனை என்பதோ கட்டாயமில்லை, சுவனம் என்பதெல்லாம் அதற்கு சம்பந்தமில்லை.

    உ.ம்: அவ்வையார்.

    சங்க காலத்திலயே மணம் செய்யாமல் தமிழுக்கு என வாழ்ந்துள்ளார்.

    நீங்கள் எப்படி திருமணம் செய்ய ஆண் கிடைக்கவில்லை எனில் பொது என சொல்ல வந்தீர்கள்?

    மேலும் முகமதியருக்கு நான்கு மனைவிகள் என சொன்ன முகமதுக்கு 14 மனைவிகள் எப்படி?

    சு.பி சுவாமிகள் , ஒன்று நீர் தமிழனாக இரும் அல்லது அரேபிய இஸ்லாமியராக இரும் , இரண்டும் கெட்டானாக பொய் புரட்டு செய்ய வேண்டாம்.



    ReplyDelete
  30. வவ்வால் சுவாமிகள்!

    //இதன் மூலம் சொல்ல வருவது இஸ்லாமிய ஆண்கள் தனியாக செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?//

    ஒரு ஊரில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதால் அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அர்த்தம் ஆகி விடுமா?
    //மேலும் 1954 இல் பலதார மணச்சட்டம் இந்துக்களுக்கு வந்துவிட்டது என நீங்களே சொல்லிவிட்டு 1975 இல் வந்த அறிக்கை என கதை விடுவது எப்படி?//
    சின்ன வீடா வச்சுக்கலாம்ல...முன்னால் முதல்வரிலிருந்து சபாநாயகர் வரை பல மனைவிகளை வைத்திருந்தவர்கள்தானே! ஆனால் சட்டத்துக்காக அவர்களை சின்ன வீடு என்று சொல்லும் கட்டாயத்தில் உள்ளனர். இஸ்லாம் அவர்களை சின்ன வீடு என்று சொல்லி சிறுமைபடுத்தாமல் அவர்களை திருமணம் செய்து கொண்டு சமூக அந்தஸ்து கொடுக்கச் சொல்கிறது. உங்கள் கடவுள்களுக்கே இரண்டு மூன்று மனைவிகள் இருந்ததில்லையா?
    http://www.hinduwebsite.com/hinduism/h_polygamy.asp
    ramayana is an epic that sescribes the pastimes of rama.
    rama chose to have only one wife, even when his father (king) had four (and as a kshatriya king it was okay.)
    that has set the example to follow for the hindus.
    Go back still further – to 1961 – and the census records polygamy to be highest among adivasis, Buddhists, Jains, and Hindus, with Muslims right at the end. Engineer says the law matters only up to a point. "With both survey results coming out after the Hindu Marriage Act was passed in 1955, it shows that bigamy is basically a problem of a male-dominant culture than religion."
    http://articles.timesofindia.indiatimes.com/2009-09-13/view-from-venus/28089629_1_hindu-man-hindu-marriage-act-bigamy
    //குர் ஆன் வருவதற்கு முன் இஸ்லாம் என்பதே இல்லை. இருந்தது எனபதற்கு என்ன ஆதாரம்?//

    ஆதமிலிருந்து ஏசு நாதர் வரை அனைவரும் முஸ்லிம்களாகவே வாழ்ந்தார்கள் என குர்ஆன் கூறுகிறது..

    //மேலும் பெண் திருமணம் செய்யாமல் காலம் முழுக்க கன்னியாக இருக்கலாம், அப்படி இருந்தால் பொது சொத்து என எந்த மடையன் உமக்கு சொன்னான்.//

    நிதானத்துக்கு வந்தவுடன் அதனை யார் சொன்னது என்று படித்து பாரும். இதை சொன்னது ஜாகிர் நாயக். அவரிடம்தான் கேட்க வேண்டும். ஒளவையார் போன்ற ஒரு சிலர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் உலக நடப்பின் படி ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் ஒரு பெண் முடிக்க வில்லை என்றால் அந்த பெண்ணை பற்றி ஜாடை மாடையாக குத்தலா எத்தனை பேச்சுக்கள் சமூகத்தில் பேசப்படுகின்றன. சிலர் கவுரமாக இருந்து விடுவர். பெரும்பாலான பெண்மணிகள் தங்களின் உணர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவர்? அதற்கு வழி என்ன?

    திருமணம் என்பதோ ஆண் துனை என்பதோ கட்டாயமில்லை,////

    தண்ணியடித்துக் கொண்டு கண்ட ஆண்களோடும் அல்லது ஆண்கள் கண்ட பெண்களோடும் சுத்துவதுதான் நல்லது என்கிறீரா?

    //மேலும் முகமதியருக்கு நான்கு மனைவிகள் என சொன்ன முகமதுக்கு 14 மனைவிகள் எப்படி?//

    அந்த திருமணங்கள் எல்லாம் எதற்காக என்பதற்கு நிறைய விளக்கங்கள் கொடுத்தாகி விட்டது.

    //சு.பி சுவாமிகள் , ஒன்று நீர் தமிழனாக இரும் அல்லது அரேபிய இஸ்லாமியராக இரும் , இரண்டும் கெட்டானாக பொய் புரட்டு செய்ய வேண்டாம்.//

    மொழியால் தமிழன்: இனத்தால் திராவிடன்: பின்பற்றும் மார்க்கத்தால் இஸ்லாமியன்: பிறந்த தாய் நாட்டால் நான் ஒரு இந்தியன்: முஸ்லிமாக வாழ்வதால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'எல்லோரும் ஒரு தாய் மக்கள்' என்ற கொள்கைகளை பின் பற்றுபவன். மேலும் முகமது நபியை எனது தலைவனாக வழி காட்டியாகவும் கொண்டுள்ளவன்.

    ReplyDelete
  31. நாகூர் மீரான்9:52 PM

    //சு.பி சுவாமிகள் , ஒன்று நீர் தமிழனாக இரும் அல்லது அரேபிய இஸ்லாமியராக இரும் , இரண்டும் கெட்டானாக பொய் புரட்டு செய்ய வேண்டாம்.//

    மொழியால் தமிழன்: இனத்தால் திராவிடன்: பின்பற்றும் மார்க்கத்தால் இஸ்லாமியன்: பிறந்த தாய் நாட்டால் நான் ஒரு இந்தியன்: முஸ்லிமாக வாழ்வதால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'எல்லோரும் ஒரு தாய் மக்கள்' என்ற கொள்கைகளை பின் பற்றுபவன். மேலும் முகமது நபியை எனது தலைவனாக வழி காட்டியாகவும் கொண்டுள்ளவன்.//

    சகோ. சுவனபிரியன்

    நீங்க எவ்வளவு தான் அறிவா பதில் சொன்னாலும் இந்த தலைகீழ் ஜந்து கேக்குற கேள்விய பாத்திங்களா...அது அறிவுக்கு தக்க தான் கேள்வி வரும்.இதுகளுக்கு பதில் சொல்லி அல்லாஹ் கொடுத்த அமானித நேரத்தை விரையம் செய்ய வேண்டாம்...இந்த ஜந்துக்களுக்கு பக்கம் பக்கமா பதில் சொல்லுறது தேவை இல்லாதது..நீங்க என்ன சொன்னாலும் சூடு ஆறுனதுக்கு அப்பறம் மறுபடியும் வருங்க...இவர்களை தவிர்ப்பது நல்லது....

    மதுரையில் ஒரு இளம்பெண் இணைய தளத்தில் இஸ்லாத்தை அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்று, மேலும் அதை முறைப்படி அறிந்து கொள்ள குடும்ப எதிர்ப்பையும் மீறி நீதி மன்ற துணையுடன் மதரசாவில் சேர்ந்துள்ளார் ..அந்த சகோதரியின் மன உறுதிக்காக நாம் துஆ செய்வோம்....எதற்கு சொல்கிறேன் என்றால் இணைய தளத்தில் மக்கள் நல்லது எது பித்தலாட்டம் எது என்று அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த ஜந்து கூட்டங்கள் தங்களுக்கு என்று ஒரு நாலு பேர் சேர்ந்து கொண்டு தங்களை தாங்களே திருப்தி பட்டு கொள்கின்றனர்....கிணற்று தவளைகள் ...
    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  32. Anonymous10:40 PM

    சகோ வவ்வால், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சகோ சுவனப்பிரியன் தரும் பதில்களால் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்கிறேன்.அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் உங்களின் சில கேள்விகள் உங்கள் அறிவை மீறி செல்கிறதா?அல்லது பகுத்தறிவாளர்களில் சிலரைப்போன்று எல்லாம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்ற தளைக்கணமா? என்று தெரியவில்லை? தெளியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.மேலும் உங்கள் கருத்துக்கு எதிராக யார் karuththu கூறினாலும் அவர்களை madaiyan என்று கூறும் நீங்கள் பண்பாளர்தானா? கேள்விகளுக்கு sagao suvanappiriyan போல் பதில் கூறுவது ஆரோக்கியமானதா? ungalaipol பதில் கூறுவது ஆரோக்கியமானதா?
    kalam.

    ReplyDelete
  33. அனானி,

    //மேலும் உங்கள் கருத்துக்கு எதிராக யார் karuththu கூறினாலும் அவர்களை madaiyan என்று கூறும் நீங்கள் பண்பாளர்தானா//

    திருமணம் செய்யாத பெண்ணை பொது சொத்து என சொல்வது பெண்ணினத்தையே இழிவு செய்வது,அப்படி சொல்பவர் கண்டிப்பாக மடையனே.

    நான் சொன்னது சு.பி.யை அல்ல. அக்கருத்தை யார் சொன்னார்களோ அவரை.சரியாக தமிழ் படிக்க கற்றுக்கொள்ளுங்கள்,அதற்குள் அறிவுரை சொல்ல வரவேண்டாம்.

    மதக்கருத்துக்கள் மட்டுமே தெரிந்துக்கொண்டு உலகில் எல்லாம் தெரியும் என பேசும் மதவாதிகளின் தலைக்கனமா இது :-))

    ---------------

    சு.பி.சுவாமிகள்,

    அப்போ ஜாகீர் நாயக் தான் இஸ்லாத்துக்கும் எல்லாமுமா? மேலும் அவர் தான் குரானை உருவாக்கினாரா?

    இஸ்லாமிய பெண்களை பொது சொத்து ஆக்கலாம், ஆனால் அனைத்து பெண்களையும் எப்படி பொது சொத்து ஆக்கலாம் என சொல்வீர்கள், அதனை கேட்டு கல்லால் அடிக்க மாட்டார்கள் மற்றவர்கள் :-))

    வழக்கம் போல இஸ்லாமிய அல்லாத பெண்களை அனைவரையும் இழுவுப்படுத்தும் விதமாக ,

    //தண்ணியடித்துக் கொண்டு கண்ட ஆண்களோடும் அல்லது ஆண்கள் கண்ட பெண்களோடும் சுத்துவதுதான் நல்லது என்கிறீரா?
    //

    இஸ்லாமிய பெண்களும் மது,கண்ட ஆண்களுடன் சுற்றுகிறார்கள், ஒரு முறை மாலை வேலையில் மெரினா பீச்சுக்கு வந்து பார்க்கவும், பல இஸ்லாமியப்பெண்கள் புர்க்காவுடன் பொதுஇடத்தில் சரசம் செய்துக்கொண்டு இருப்பதைக்காணலாம்.

    இதனை கூட நீங்கள் மற்ற பெண்கள் அனைவரையும் ,மது ,பிற ஆண்களுடன் சுற்றுவதாக சொன்னதால் சொன்னேன்.

    எனவே எல்லா சமூகத்திலும் எல்லா வகையான மக்களும் இருப்பார்கள், மதம் ஒன்றே அனைவரையும் ந்ல்வழிப்படுத்திவிடாது.

    50 ஆண்களை மணந்து ஏமாற்றிய பெண் பெயர் ஷஹானாஸ் என்ற் தான் செய்தியில் படித்தேன், படத்தில் வேறு புர்க்கா போட்டுக்கொண்டு காட்சியளிக்கிறார்.

    உண்மை என்ன என நீங்கள் தான் சொல்ல வேண்டும் :-))

    மீண்டும் சொல்கிறேன் இஸ்லாம் அல்லாத பெண்களை எல்லாம் இழிவாக சொல்லிக்கொண்டிருந்தால் ,நானும் இது போல பல உதாரணங்களை சொல்ல வேண்டியாதகிவிடும்.

    ReplyDelete
  34. //வழக்கம் போல இஸ்லாமிய அல்லாத பெண்களை அனைவரையும் இழுவுப்படுத்தும் விதமாக ,

    //தண்ணியடித்துக் கொண்டு கண்ட ஆண்களோடும் அல்லது ஆண்கள் கண்ட பெண்களோடும் சுத்துவதுதான் நல்லது என்கிறீரா?//

    நான் சொன்னது திருமணமே தேவையில்லை என்று சொன்ன உங்களைப் பார்த்துதான். அதை பொதுவாக என்று ஏன் திரிக்க வேண்டும்?

    எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளார்கள் என்பதை நானும் மறுக்கவில்லை. இந்த தவறுகளிலிருந்து மீள்வதற்கு சிறந்த கேடயமாக திருமணம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

    ReplyDelete
  35. //இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு செருப்படியாக ....."பிற மதத்தவர்களிடம் அன்பு"..//

    அடடா! என்ன அழகு இந்த வாக்கியம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!

    ReplyDelete
  36. பெண்களுக்கு மூளை கம்மி. பெர்னாட்ஷா மாதிரி எந்த காலத்திலும் ஒரு பெண் வரமுடியாது............

    ReplyDelete
  37. //அடடா! என்ன அழகு இந்த வாக்கியம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!//

    தருமி சார்! கடுமையான இது போன்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இது தவிர்க்கப்பட வேண்டியது.

    ReplyDelete
  38. Anonymous8:22 AM

    Homosexual's brain is different from Hetrosexual's brain. I can provide you links. Why do you have to condemn someone who is naturally different!

    ReplyDelete
  39. சுவனப்பிரியன் அவர்களே,
    வவ்வால் உங்கள் விவாதங்கள் பார்த்தேன். ஒரு கேள்வி. தனி மனிதன் விமர்சனம் ஜாதி மதம் தவிர்ர்து இதற்க்கு பதில் கொடுங்க்ளேன்.

    ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டால் என்ன?

    ஆண்கள் மாதிரி பெண்களும் சின்ன வீடு அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணவர்களை வைத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  40. திரு நம்பள்கி!

    //ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டால் என்ன?

    ஆண்கள் மாதிரி பெண்களும் சின்ன வீடு அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணவர்களை வைத்துக் கொள்ளலாமா?//

    1. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்திருந்தால் – ஒவ்வொரு மனiவிக்கும் பிறக்கும் குழந்தைகள் இவருக்குத்தான் பிறந்தது என்பதை அடையாளம் காண்பது எளிது. இவர்தான் இந்தக் குழந்தையின் தந்தை என்று அடையாளம் காண்பதும் – இவர்தான் இந்த குழந்தையின் தாய் என அடையாளம் காண்பதும் மிக எளிது. அதே சமயத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் – குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை – இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது இயலாத ஒன்று. குழந்தைகளின் தாயும் – தந்தையும் – இன்னார்தான் என்று அடையாளம் – கண்டு கொள்ளும் விஷயத்திற்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்குகிறது. தனது பெற்றோர் இன்னார்தான் என்று அறியாத குழந்தைகள் – குறிப்பாக தனது தந்தை இன்னார்தான் என அறியாத குழந்தைகள் – மனோநலம் குன்றியவர்களாக மாறுகிறார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை.

    மேற்கூறப்பட்ட காரணங்களினால்தான் விலைமாதுகளுக்குப் பிறந்த குழந்தைகளின் – குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டு – அதனால் பிறந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது – ஒரே குழந்தைக்கு – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகப்பனாரின் – பெயர்களை சொல்லக்கூடிய நிலை உருவாகலாம். ஆனால் சமீபத்திய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக – மரபணுச் சோதனை செய்து – ஒரு குழந்தையின் தாய் இன்னார்தான் என்றும் – ஒரு குழந்தையின் தந்தை இன்னர்தான் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதும் நான் அறிந்தவிஷயம். எனவே நான் எடுத்து வைத்த இந்த வாதம் கடந்த காலத்துக்குப் பொருந்துமேத் தவிர – இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது.

    2. ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது – ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

    3. ஓரு ஆண் – பல பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளை செய்ய உடலியல் ரீதியாக ஆணுக்கு அந்த பணி மிக எளிதானதாகும். பல ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்ணால் – மனைவி என்ற முறையில் தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஓரு பெண் – மாதவிலக்காகும் கால கட்டங்களில் – மனோ ரீதியாகவும் – நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் – ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    4. பல கணவர்களை கொண்டிருக்கும் ஒரு பெண் – ஒரே கால கட்டத்தில் – பல ஆண்களுடன் உடல்உறவு கொள்வதால் – பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் – எந்தவித பாவமும் செய்யாத – மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்னை பல பெண்களை மணந்து கொள்ளும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதில்லை.

    உதாரணத்திற்கு, ஓர் ஆண் பத்து பெண்களுடன் ஓர் ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்தப் பத்து பெண்களும் பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வாய்ப்பிருக்கின்றது. அதே சமயத்தில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் பத்து குழந்தைகளைப் பெற முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

    ஒரு மருத்துவரான தாங்கள் என்னை விட அதிகம் இதில் உள்ள சாதக பாதங்களை சிறந்த முறையில் அறிய முடியும்.


    ReplyDelete
  41. //பெண்களுக்கு மூளை கம்மி. பெர்னாட்ஷா மாதிரி எந்த காலத்திலும் ஒரு பெண் வரமுடியாது............//

    :-(

    ReplyDelete
  42. நிறைய அடிச்சு உட்டுடுரிக்கீங்க. உதாரணம்., பால் வினை நோய்; ஒரு ஆண் பல பெண்; ஒரு பெண் பல் ஆண் ; ஒரு வித்யாசம் இல்லை. எல்லாம் ஒன்னு தான்!

    ஆணதிக்கம் வருமுன் ஒரு பெண் பல ஆண்களுடன் குடும்பம் நடத்தியுள்ளார்கள் அகில உலகத்திலும். இதற்க்கு பெயர் Polyandry -- polygamy-இன் எதிர்பதம். இஅதற்கு நான் ஒரு தனி பதிவு போடுகிறேன்!

    ReplyDelete
  43. சு.பி.சுவாமிகள்,

    வழுக்கலாக சொல்லி மதப்பிராச்சாரம் செய்வதே உங்கள் வேலை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறீர்கள்.

    குரான் மட்டும் தான் என சொல்லிவிட்டு ஜாகிர் நாயக் சொன்னதை நீங்கள் ஏன் தூக்கி பிடிக்க வேண்டும். அதனை தவறு என சொல்லக்கூடவில்லையே.

    ஆன் பெண் விகிதாராச்சாரம் காட்ட இஸ்லாமிய தேசமல்லாத நாட்டினை எதற்கு உதாரணம் காட்டணும், மேலும் அமெரிக்கா, ஐரோப்பாவில் எல்லாம் பெண் கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் என நிலையில்லை, திருமணம் செய்யாத பெண் பொது சொத்தும் அல்ல.


    பெண்களைப்பற்றி பொதுவாக சொல்லவில்லை என்றால் என்னிடம் அப்படி சொல்லக்காரணம் என்ன? திருமணம் ஆகாத பெண்கள் அப்படித்தான் செய்வார்கள் என யார் சொன்னது?

    // பெரும்பாலான பெண்மணிகள் தங்களின் உணர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவர்? அதற்கு வழி என்ன?
    //

    அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.


    திருமணம் செய்து இந்தியாவில் விட்டு விட்டு அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்வதால், பெண்கள் எப்படி தனியாக உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்களோ அப்படி இருப்பார்கள் , இல்லை கணவன் வெளிநாட்டில் இருக்கிறான் என எல்லாம் தகாத வழியில் உணர்வுகளை தீர்த்துக்கொள்கிறார்கள் என சொல்வீர்களா?

    திருமணம் ஆகாத பெண்ணை பொது சொத்து என சொல்பவனும் மடையன்,அதை வைத்து பேசுபவனும் மடையன் தான்.

    இஸ்லாம் என்ற ஒரெ ஒரு மதமாக உலகில் இல்லை, பலக்கலவையாக இருக்கு ஆளுக்கு ஒரு நீதி சொல்லிக்கொண்டு அடித்துக்கொண்டு சாவதில் முன்னணியில் இருக்கும் மதம் குறித்து பெருமைக்கொள்வதில் என்ன பயன்?

    ReplyDelete
  44. //திருமணம் ஆகாத பெண்ணை பொது சொத்து என சொல்பவனும் மடையன்,அதை வைத்து பேசுபவனும் மடையன் தான்.//

    இது எந்த நோக்கத்தில் சொல்லப்பட்டது என்பதைக் கூட விளங்கிக் கொள்ளாதவன் கண்டிப்பாக மடையனாகத்தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  45. //மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.

    ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.// -ஜாகிர் நாயக்!

    இதை எந்த சூழ்நிலையில் சொல்கிறார் என்பதை முதலில் பார்ப்போம். ஒரு பெண் தனது 20 வது அல்லது 25 ஆவது வயதிலோ திருமணம் முடிப்பதாக வைத்துக் கொள்வோம். திருமணம் முடித்த பெண்ணை எந்த ஆணும் அவ்வளவு ஈசியாக சீண்ட மாட்டான். கிண்டல் கேலிகளிலிருந்து தப்பிக்கிறாள்.

    ஒரு பெண் 35 அல்லது 40 வயதாகியும் திருமணத்தை தேவையில்லாமல் தள்ளிப் போட்டால் சமூகத்தில் உள்ள ஒரு சில பொறுக்கிகள் அந்த பெண்ணை பல வகையிலும் துன்புறுத்துவதை நாம் பார்த்தே வருகிறோம். 'பொது சொத்து' என்று அவர் சொல்வது இந்த பெண்களை ஈவ் டீஸிங் பண்ணும் ஆண்களை நோக்கியே சொல்கிறார். அந்த பெண்ணே ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக திருமண பந்தத்தில் நுழைந்து விட்டால் கயவர்களின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்கிறாள். இதை வைத்தே ஜாகிர் நாயக் 'பொது சொத்து' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினாரே யொழிய திருமணம் ஆகாத பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல.

    ReplyDelete
  46. //நிறைய அடிச்சு உட்டுடுரிக்கீங்க. உதாரணம்., பால் வினை நோய்; ஒரு ஆண் பல பெண்; ஒரு பெண் பல் ஆண் ; ஒரு வித்யாசம் //

    Following are the demerits of polyandry:

    1) Firstly, polyandry may lead to extra-marital relation, as all the husbands will not be satisfied by a wife.

    2) Secondly, a woman has to satisfy the sexual urge of several husbands that may have serious effect on her health.

    3) Thirdly, the woman may suffer several general diseases.

    4) Fourthly, Polyandry sometimes leads to the problem of sterility or barrenness.

    5) Fifthly, it causes harm to married life and gives rise to several psychological problems.
    http://www.preservearticles.com/201104296029/what-are-the-merits-and-demerits-of-polyandry.html

    ReplyDelete
  47. Anonymous1:56 PM

    //Homosexual's brain is different from Hetrosexual's brain. I can provide you links. Why do you have to condemn someone who is naturally different!//

    I take it that you do not want to respond :-)

    ReplyDelete
  48. தருமி said...
    //இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு செருப்படியாக ....."பிற மதத்தவர்களிடம் அன்பு"..//

    அடடா! என்ன அழகு இந்த வாக்கியம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!

    சுவனப் பிரியன் said...
    //அடடா! என்ன அழகு இந்த வாக்கியம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!//

    தருமி சார்! கடுமையான இது போன்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இது தவிர்க்கப்பட வேண்டியது.///


    இஸ்லாத்திற்கு வராத மக்களை முஸ்லிம்கள் கொல்வதாக எழுதப்பட்ட பதிவுக்ககத்தான் "பிற மதத்தவர்களிடம் அன்பு" என்கிற இஸ்லாமிய பார்வையை பதிவிட கோரினேன்.. தாயை பற்றி பழித்து பேசினால் கோபம் வர வேண்டும்...."செருப்படி" என்கிற சொல்லுக்கு மாற்று எனக்கு தெரியவில்லை இப்பொழுதும்...

    ReplyDelete
  49. Anonymous8:00 AM

    //ஆதமிலிருந்து ஏசு நாதர் வரை அனைவரும் முஸ்லிம்களாகவே வாழ்ந்தார்கள் என குர்ஆன் கூறுகிறது//
    நல்ல நகைச்சுவை, எந்த குரானை சொல்கிறீர்கள். முகமது என்ற நவதானிய வியாபாரி வஹீ வருது வஹீ வருது என்று கூறி கொண்டாரே அந்த புத்தகத்தையா, திரு சுவனம், அது உங்களுக்கு வேண்டுமானால் வேத புத்தகமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அது ஒரு புத்தகம் அவ்வளவே. நீங்கள் வேண்டுமென்றால் அதை பிடித்து தொங்கி கொண்டிருக்கலாம். அதில் அப்படி சொல்லி இருக்கிறது இப்படி சொல்லி இருக்கிறது என்று அடுத்தவர்களிடம் திணிக்காதீர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)