Wednesday, September 19, 2012

மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?


மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?

நமது வரலாற்று பாடங்களில் அக்பரைப் பற்றி மிக சாந்த சொரூபி. மத சார்பற்று நடந்து கொண்டார். அவரைப் போன்ற ஒரு முஸ்லிம் அரசரை நாம் எங்கேயும் பார்க்க முடியாது என்ற கருத்துக்களையே நாம் படித்து வந்திருப்போம்.

'அக்பருடைய சமய கோட்பாடு அவருக்கு அழியாப் புகழை தந்தது' என எட்டாம் வகுப்பு பாடநூலில் 88 ஆம் பக்கத்திலும் பிளஸ் 2 வரலாற்று பாட நூலில் 141-142 ஆம் பக்கங்களிலும் இன்னும் வரலாறு நெடுக அக்பரை பற்றி புகழ்ந்தே நமது வரலாறு புனையப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாராட்டு மொழிகளுக்கு கொஞ்சமேனும் அருகதை உடையவர்தானா இந்த அக்பர் என்பதை வரலாற்று ஆதாரங்களோடு பார்ப்போம்.

அக்பருடைய அரசவை எழுத்தரான பதௌனி அரசவையில் தான் கண்ட காட்சிகளை 'முன் தகாபு த் தவாரிக் பகுதி 2' ல் விபரமாக குறித்துள்ளார். இனி அவற்றை பார்ப்போம்.

தனது 25 ஆவது ஆண்டின் துவக்க நாளன்று அக்பர் பொது மக்கள் முன்னிலையில் சூரியனுக்கும் தீபத்திற்கும் சாஷ்டாங்கம் செய்தார். மாலையில் தர்பாரின் விளக்குகள் ஏற்றப்படும் போது அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.

-பக்கம் 262.

இஸ்லாம் பன்றியையும் நாயையும் அசுத்தமான பிராணிகளாகக் கருதுவதற்கு மாற்றமாக அவர் அவற்றை அந்தப் புரத்திலும் கோட்டையிலும் வைத்திருந்தார்.

-பக்கம் 314

காட்டு மிருகங்களான புலி, கரடியின் மாமிசம் உண்பது அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் அவை வீரத் தன்மை வாய்ந்த மிருகங்கள் எனக் கூறப்பட்டது.

-பக்கம் 315

அக்பர் தனது உச்சி முடியை மட்டும் நீக்கி விட்டு தலையைச் சுற்றிலும் முடியை வளர விட்டார். ஏனெனில் மரணத்தின் போது மாசற்ற படைப்பின் ஆன்மா உச்சி வழியாகவே வெளியேறும் என அவர் நம்பினார்.

-பக்கம் 335

அரண்மனையில் சூதாட்ட விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. பேரரசரோ சூதாடுபவர்களுக்கு வட்டிக்குப் பணத்தைக் கடனாக வழங்கினார்.

-பக்கம் 349

ஐந்து நேரத் தொழுகை, நோன்பிருத்தல் மற்றும் முகமது நபிகளுடன் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகளும் மூடத்தனங்கள் என்று வர்ணிக்கப்பட்டன. மனிதனின் அறிவே மதத்தின் அடிப்படை ஆதாரமாகக் கருதப்பட வேண்டுமே யொழிய நபியவர்களின் வழிமுறைகளல்ல என எடுத்துரைக்கப்பட்டது.

-பக்கம் 215

அக்பர் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல மாறுதல்களை புகுத்தினார். அரசருக்குரிய மரியாதையுடன் அவரைப் பார்ப்பது சமயக் கட்டளையாகவே கருதப்பட்டது. அவர் தனது முகத்தை 'காஃப இ முரத்தத்' (விருப்பங்களின் மூலம்) 'கிப்லா இ ஹாஜத்' (தேவைகளின் இலக்கு) என்றும் வர்ணித்தார்.

-பக்கம் 266

'ஜமீன் போஸ்' (தரையை முத்தமிடுதல்) எனும் பெயரில் அரசருக்கு 'சஜ்தா' (சாஷ்டாங்கம்)செய்வது கட்டாயமாக்கப்பட்டு அரசரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

-பக்கம் 311

அஹமத், முஹம்மத், முஸ்தஃபா போன்ற பெயர்கள் குற்றத்திற்குரியனவாகக் கருதப்பட்டன. இதன் மூலம் அந்தப்புரத்தில் உள்ள அரசிகளையும் அரண்மனைக்கு வெளியிலுள்ள இறை மறுப்பாளர்களையும் அரசர் திருப்தி படுத்த முயன்றார்.

-பக்கம் 314

கடவுள் வணக்கத்தின் போது தங்க ஆபரணங்கள் ஆண்கள் அணிவதும் பட்டாடை உடுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.

-பக்கம் 316

ஹிஜ்ரா ஆண்டு கைவிடப்பட்டு அக்பர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டை (ஹிஜ்ரி 963) துவக்கமாகக் கொண்டு புதிய ஆணடுக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

-பக்கம் 316

அரபு மொழி வாசிப்பதும் பயில்வதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய சட்டங்களும் திருக்குர்ஆன் விரிவுரைகளும் முகமது நபி அவர்களின் நடைமுறைகளும் தவறானவைகளாக போதிக்கப்படடன.

-பக்கம் 316

இரவு நேரங்களில் நடைபெற்ற சமூகக் கூட்டங்களின் போது முகமது நபி அவர்களின் தோழர்களைப் பற்றி பேசப்படும் தகாத வார்த்தைகளை என்னால் இங்கு விவரிக்க இயலாது. அந்த அளவு அருவறுக்கத் தக்கவையாகவும் ஆபாசமாகவும் இருக்கும். அந்நேரங்களில் நான் செவிடனாக இருந்திருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றும்.

-பக்கம் 318

இவ்வாறு அக்பர் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் பகைவராக மாறியதற்குக் காரணம் அவர் தன்னை இறைத் தன்மை பொருந்தியவராகக் காட்டிக் கொண்ட போது பிராமணர்கள் அவரை 'இராமன், கிருட்டினன் மற்றும் இன்னும் பல இந்து அவதாரங்களைப் போன்ற ஒரு அதிசய பிறவி என்று புகழ்ந்தனர். உலகை ஆள வந்தவர் என்றும் இவ்வையகத்து மாந்தர்க்கு வழி காட்ட வந்த அவதார புருஷர் எனவும் போற்றி புகழ்ந்தனர்.

-பக்கம் 326

ஆனால் முஸ்லிம்களோ அவரை மனிதனாகவே மதித்தனர். ஒரு முறை என்னை (பதௌனி) அரசருக்கு சாஷ்டாங்கம் செய்யுமாறு காதர் ஜஹான் பல முறை கேட்டுக் கொண்ட போதும் அதற்கு நான் கீழ்படியவில்லை.

-பக்கம் 389

அக்பருடைய பேரரசை நெருப்பு பெருகி வளர்ந்த போது பிராமணர்கள் அதற்கு எண்ணெய் வார்த்தனர். முஸ்லிம்களோ அந்த ஜூவாலையை அணைக்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அக்பர் சிறிது சிறிதாக பிராமணியத்தின் வலையில் விழத் துவங்கினார். மக்களுக்கு தரிசனம் அளிக்க அவர் காட்சி மண்டபத்துக்கு வருகையில் அவர் நெற்றியில் ஹிந்துவைப் போன்று திலகமிட்டிருந்தார். பிராமணர்களால் ஆசீர்வதித்து அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாபரணங்கள் அவரது மணிக் கட்டுகளில் காணப்பட்டன. அத்துடன் அவரை விடவிலலை. பீர்பால் அக்பருக்கு பிராமணர்களின் பூமாலை அணிவிக்க முயலும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு அக்பரின் மேலிருந்தது.


-பக்கம் 262, 268

மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.

பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.

இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. (வர்ணாசிரம கோட்பாடு எவ்வாறு புகுத்தப்படுகிறது பாருங்கள்)
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.

அக்பர் பிராமணர்கள் பக்கமே சாயட்டும். இந்து மதத்துக்கே செல்லட்டும். இதனால் இஸ்லாத்துக்கு எந்த வகையிலும் குறைவு வந்து விடாது. ஆனால் தனக்கு கீழ் உள்ள மற்ற மக்களும் இவர் கொள்கைபடி இஸ்லாத்தை விட வேண்டும். இஸ்லாமிய நம்பிக்கைகளை புறம் தள்ள வேண்டும் என்று சொல்ல இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார். ஆனால் நமது வரலாற்று பாடநூல்களோ இந்த செய்திகள் எதையும் பதியாமல் இவரை பத்தரை மாற்று தங்கம் போல் காட்டுவதுதான் உச்ச கட்ட காமெடி. அதே நேரம் இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட, அகண்ட பாரதத்தை உண்டாக்கிய ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் இந்து மதத்தின் எதிரியாகவும் காட்டி அன்று முதல் இன்று வரை வெறுப்பு விதைத்து வருகிறார்கள்.

கோவி கண்ணன், சார்வாகன், இக்பால் செல்வன், வவ்வால் போன்றவர்களுக்கு இயல்பிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு உண்டாகி இருக்க காரணம் நமது நாட்டு வரலாற்று பாட நூல்களில் இது போன்ற வரலாற்று திரிபுகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை படித்ததன் விளைவே! பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே! 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே! பெரியார், அண்ணாவிலிருந்து சமீபத்தில் இறந்த ஹேமந்த் கர்கரே வரை, மேலும் குஜராத் பெண் அமைச்சர் கம்பி எண்ணும் அளவுக்கு கொண்டு வந்த அந்த இரு பெண்கள் வரை அனைவரும் இந்து சமுதாய மக்களே!

இனி வரும் காலங்களிலும் நமது இந்தியாவில் அந்த 20 சதமான மக்கள் நினைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை முறியடிக்கும் கருவிகளாக மற்ற 80 சதவீதமான மக்களே இருப்பர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதே போல் இந்து மத தெய்வங்களை கிண்டலடிப்பது அவர்களை பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளால் ஏசுவது போன்றதையும் சில இஸ்லாமியர்கள் ஆர்வத்தில் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த சென்னை ஆர்ப்பாட்டத்தில் கூட சிலர் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். இதை குர்ஆன் தடை செய்கிறது. அழகிய முறையில் விவாதிக்கவே குர்ஆன் கட்டளையிடுகிறது. அவர்கள் நமக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும் நம்மிடம் உண்மை இருப்பதால் நாம் அழகிய முறையிலேயே கண்ணியமாக பதிலளிப்போம். நமது செயல்களால் இஸ்லாத்தின் பால் அவர்களுக்கு மதிப்பை உண்டு பண்ண செய்வோம்..

நமது நாடு குறுமதியாளர்களின் நயவஞ்சக திட்டங்களில் வீழ்ந்து விடாமல் சாதி இன மத பேதமற்ற அமைதியான சூழலில் இன்னும் பல்லாண்டு சென்று உலக முடிவு நாள் வரை சிறந்தோங்க வேண்டும் என்று அந்த எல்லோருக்கும் பொதுவான ஏக இறையை பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.

118 comments:

  1. thanabal12:16 AM

    ///நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார்///

    இதை சௌதி மன்னனிடம் போய் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. thanabal12:16 AM

    ///நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார்///

    இதை சௌதி மன்னனிடம் போய் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. திரு தனபால்!

    //இதை சௌதி மன்னனிடம் போய் சொல்லுங்கள்.//

    சவுதியில் பல இந்து நண்பர்கள் குடும்பத்தோடு 15 வருடம் 20 வருடமாக இருக்கின்றனர். இங்கு எந்த இந்து நண்பரையும் பள்ளிக்கு தொழ வா என்று கட்டாயப்படுத்துவதில்லை. மேலும் சவுதி வருவதற்கு முன்பே சவுதி அரசின் மத கொள்கைகளுக்கு உட்பட்டே வேலை செய்ய வருகிறேன் என்று கையொப்பம் இட்டு விட்டே மற்ற மதத்தவர் வருகின்றனர். எனவே இரண்டையும் எவ்வாறு ஒன்றாக்க முடியும்?

    ReplyDelete
  4. திரு தருமி!

    வெள்ளைக்காரன் இங்கு வந்து வியாபார நோக்கில் புகுந்து பிறகு ஆட்சியை பிடித்து இங்கிலாந்தை செழிக்க வைத்தான். அவனது நாட்டுக்கே திரும்பியும் விட்டான்.

    ஆனால் மொகலாயர்கள் ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்த போது இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது. சேரனுக்கு சோழன் அந்நிய நாட்டவன். பாண்டியனுக்கு சோழன் அந்நிய நாட்டவன். இது போன்ற சின்ன ஊர்களெல்லாம் நாடுகளாகாது என்பதை விளக்கி மொகலாயர்கள் ஆப்கானிஸ்தானம் முதற்கொண்டு அகண்ட பாரத்தை உண்டாக்கினார்கள்.

    இந்திய பெண்களை மணந்து இந்திய ரத்தத்தோடு இணைந்த வாரிசுகளை உருவாக்கினார்கள். 1000 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆண்டு பல மூடப் பழக்கங்களை ஒழித்தார்கள். முடிவில் இந்த நாட்டிலேயே தங்கள் உயிரையும் விட்டு இங்கேயே அடக்கமும் செய்யப்பட்டார்கள்.

    எனவே வெள்ளையர்களையும் மொகலாயர்களையும் ஒன்றாக்கி பார்க்காதீர்கள்.

    ReplyDelete
  5. நீ ரதியாய் இருப்பதனால் நாலடியில் உடை உடுத்தி நடு வீதியிலே நடப்பதிலே இல்லையடி பெண்ணுரிமை ! ...

    அறியாமையின் காரணமாகவோ வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரியிறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகிவிட்டது.

    தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

    மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

    பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை?

    அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறை நிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.
    .

    இங்கு சொடுக்கி >>>> இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? கொடுமைப்படுத்துகிறதா? ஹிஜாப் (பர்தா) <<<<< படிக்கலாம்


    .

    ReplyDelete
  6. //இஸ்லாம் பன்றியையும் நாயையும் அசுத்தமான பிராணிகளாகக் கருதுவதற்கு மாற்றமாக அவர் அவற்றை அந்தப் புரத்திலும் கோட்டையிலும் வைத்திருந்தார்.//

    இந்த இரண்டு விலங்குகள் மட்டும் என்னைய்யா பாவம் செய்தது?

    ReplyDelete
  7. திரு விஜய்!

    //இந்த இரண்டு விலங்குகள் மட்டும் என்னைய்யா பாவம் செய்தது? //

    நாய்களை காவலுக்காகவும் வேட்டைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இறைவன் தடுத்ததனால் அந்த விலங்குகளை துன்புறுத்துவதோ வேறு சிரமங்களை அந்த மிருகங்களுக்கு கொடுப்பது ஆகாது.

    ஏன் தடுத்தான் என்பதை இறைவனே அறிவான்.

    ஆனால் நாய் எச்சில் மூலம் பல நோய்கள் பரவுவதை மருத்துவம் சுட்டிக் காட்டுகிறது. வீட்டில் சுதந்திரமாக உலவினால் பாத்திரங்களில் அதன் எச்சில் பட்டால் அதன் மூலம் பல நோய்கள் நமக்கு தொற்ற வாய்ப்புள்ளது.

    பன்றி கறியினால் மனித உடம்புக்கு எவ்வளவு தீங்குகள் வருகின்றது என்பதை பல பதிவுகளில் நானே விளக்கியிருக்கிறேன். மருத்துவர்களும் பன்றியை தூரமாக்கவே சொல்கின்றனர்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. //நாய் எச்சில் மூலம் பல நோய்கள் பரவுவதை மருத்துவம் சுட்டிக் காட்டுகிறது. வீட்டில் சுதந்திரமாக உலவினால் பாத்திரங்களில் அதன் எச்சில் பட்டால் அதன் மூலம் பல நோய்கள் நமக்கு தொற்ற வாய்ப்புள்ளது.//

    நோய்களைப் பரப்புவதில் வேறு சில விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சி இனங்களும் உள்ளனவே.. உதாரணம் கொசு, ஈ, கோழி, எலி etc ...

    ReplyDelete
  11. தருமி ஐயா,

    //இஸ்லாமிய படையெடுப்பாளர்களை இஸ்லாமியர்கள் பெருமைப்படுத்துவது பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.//

    வரலாற்றை உண்மையான வரலாறாக எழுதி இருந்தால் இத்தகைய பதிவுகளுக்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. அதனால் நம் நாட்டில் எந்த மத பிரச்சினையும் இருந்திருக்காது . மேலும் மொகலயர்களை பெருமை படுத்த வேண்டிய எந்த அவசியமும் இங்குள்ள முஸ்லிம்களுக்கு கிடையாது. மேலும் நல்லதை கெட்டதாகவோ அல்லது கெட்டதை நல்லதாகவோ சித்தரிக்க எங்களுக்கு இஸ்லாம் கற்று தரவும் இல்லை. வரலாறுகளை திரித்து மாற்றி சுவனப்பிரியன் குறிப்பிட்ட 20 சதவிகிட இந்து மக்களை மூளை சலவை செய்து வைத்து அவர்களை இந்திய மண்ணின் மைந்தர்களம் முஸ்லிம்களை அன்னியர் போலவே பார்க்க வைத்திருக்கும் இந்துத்துவ சக்திகளின் சதியை முறியடிப்பதே இத்தகைய பதிவுகளின் நோக்கம்.

    ReplyDelete
  12. //நோய்களைப் பரப்புவதில் வேறு சில விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சி இனங்களும் உள்ளனவே.. உதாரணம் கொசு, ஈ, கோழி, எலி etc ...//

    கொசு, ஈ, எலி போன்றவற்றை நாம் வளர்ப்பதில்லை. அதுவாக வீட்டிற்குள் வந்து விடும். எனவே தான் அதற்கான தற்காப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். கோழி உணவுக்காகவும், அது தரும் முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பரவும் நோய்களை மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். பன்றி நாய்களோடு ஒப்பிடும் போது கோழி அந்த அளவு தீங்கு தருவதில்லை.

    நமது கார்ப்பரேஷனில் அடிக்கடி நாய்களை பிடிப்பதும் பன்றிகளை பிடிப்பதும் நாம் பார்த்து வருகிறோம். இதன் தீமைகளை உணர்ந்தே கார்ப்பரேஷனும் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது.

    ReplyDelete
  13. சகோ ராஜகிரியார்!

    //வரலாற்றை உண்மையான வரலாறாக எழுதி இருந்தால் இத்தகைய பதிவுகளுக்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. அதனால் நம் நாட்டில் எந்த மத பிரச்சினையும் இருந்திருக்காது . மேலும் மொகலயர்களை பெருமை படுத்த வேண்டிய எந்த அவசியமும் இங்குள்ள முஸ்லிம்களுக்கு கிடையாது. மேலும் நல்லதை கெட்டதாகவோ அல்லது கெட்டதை நல்லதாகவோ சித்தரிக்க எங்களுக்கு இஸ்லாம் கற்று தரவும் இல்லை. வரலாறுகளை திரித்து மாற்றி சுவனப்பிரியன் குறிப்பிட்ட 20 சதவிகிட இந்து மக்களை மூளை சலவை செய்து வைத்து அவர்களை இந்திய மண்ணின் மைந்தர்களம் முஸ்லிம்களை அன்னியர் போலவே பார்க்க வைத்திருக்கும் இந்துத்துவ சக்திகளின் சதியை முறியடிப்பதே இத்தகைய பதிவுகளின் நோக்கம்.//

    நான் கொடுக்கும் பதிலை விட இன்னும் அழகாக நேர்த்தியாக பதில் தருகிறீர்கள். இந்த முறையிலேயே தொடரவும்.

    மொகலாயர்களை தூக்கி பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை. வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை சுட்டிக் காட்டுவதே இந்த பதிவின் நோக்கம். அதையே நானும் திரு தருமிக்கு கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  14. பாலா3:39 AM

    பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே! 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே! பெரியார், அண்ணாவிலிருந்து சமீபத்தில் இறந்த ஹேமந்த் கர்கரே வரை, மேலும் குஜராத் பெண் அமைச்சர் கம்பி எண்ணும் அளவுக்கு கொண்டு வந்த அந்த இரு பெண்கள் வரை அனைவரும் இந்து சமுதாய மக்களே!////அட..... யாரு சுவன பிரியரா பேசுறது? நம்பவே முடியலையே....

    ReplyDelete
  15. நல்ல நகைச்சுவை பதிவு விளா நோக சிரித்தேன் . நன்றி
    த.ம. 0 ..........................வேலை செய்யவில்லை ..................:)

    ReplyDelete
  16. Anonymous4:14 AM

    //ஆனால் மொகலாயர்கள் ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்த போது இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது. சேரனுக்கு சோழன் அந்நிய நாட்டவன். பாண்டியனுக்கு சோழன் அந்நிய நாட்டவன். இது போன்ற சின்ன ஊர்களெல்லாம் நாடுகளாகாது என்பதை விளக்கி மொகலாயர்கள் ஆப்கானிஸ்தானம் முதற்கொண்டு அகண்ட பாரத்தை உண்டாக்கினார்கள். //

    Aditha kollaikku innoru peyar tharukiraar suvanapiriyan

    ReplyDelete
  17. Anonymous4:14 AM

    //கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)//

    Suvanapiriyan ithu muthalil unkalukku.

    ReplyDelete
  18. Anonymous4:16 AM

    //சவுதியில் பல இந்து நண்பர்கள் குடும்பத்தோடு 15 வருடம் 20 வருடமாக இருக்கின்றனர். இங்கு எந்த இந்து நண்பரையும் பள்ளிக்கு தொழ வா என்று கட்டாயப்படுத்துவதில்லை. மேலும் சவுதி வருவதற்கு முன்பே சவுதி அரசின் மத கொள்கைகளுக்கு உட்பட்டே வேலை செய்ய வருகிறேன் என்று கையொப்பம் இட்டு விட்டே மற்ற மதத்தவர் வருகின்றனர். எனவே இரண்டையும் எவ்வாறு ஒன்றாக்க முடியும்? //

    Saudiyil Hindu Gods padathai airportileye pudungureengale. Ethukku?

    Appadi kaiyeluthu poda sollum kevala naaduthane saudi?

    ReplyDelete
  19. சு.பி.சுவாமிகள்,

    இந்தியாவில் இருக்கும் 99% இஸ்லாமியர்கள் ,மற்ற மதத்தினரோடு இணக்கமாகவே இருக்கிறார்கள், புதிதாக முகமது அய்யாவே சொல்லாத வகாபி என சொல்லிக்கொண்டு ,மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் தான் இஸ்லாமிற்கு கெட்ட பெயர் உருவாக்குகிறார்கள்,அவர்கள் உருவாக்கும் கெட்டப்பெயரை மற்ற இஸ்லாமியர்கள் துடைக்கிறார்கள் எனலாம்.

    இந்தியாவில் ஹஜ் பயணத்திற்கு மட்டுமே மானியம் கொடுக்கப்படுகிறது, மற்ற மதத்தினரின் புனிதப்பயணம் எல்லாம் அவரவர் சொந்த காசில் தான்.

    மேலும் வரலாறு தெரியாமல் , திரிக்கப்பட்ட வரலாற்றினை பேசும் உங்களுக்கு சில கேள்விகள்.

    /////நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார்///

    முகமது அய்யா இஸ்லாமை தோற்றுவித்தார், பின் ஏன் காபிபா என சொல்லி அரச பதவியும் வகித்தார், அவருக்கு பின் காலிபா முறையில் ஆட்சியும் செய்யப்பட்டது ஏன்?

    பின்னர் மீண்டும் காலிபா ஆட்சி முரை ஏன் ஒழிக்கப்பட்டது, முகமது அய்யாவே ஏற்படுத்திய காலிபா முறையை எப்படி சாதாரண மனிதர்கள் மாற்றியமைத்து , முகமது அய்யாவை இழிவு படுத்தலாம்.

    மீண்டும் வளைகுடா நாடுகளில் காலிபா ஆட்சியை கொன்டு வர சொல்லித்தான் பாருங்களேன் :-))

    --------

    அக்பர் ,இஸ்லாமியராக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ,அரசர் அவருக்கு சரிய எனப்பட்டதை செய்கிறார், மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே பின் தொடர்வார்கள், அக்பர் செய்தது சரி இல்லை எனில் அப்போதே கலவரம்,புரட்சி ஏற்பட்டு இருக்காதா?


    அக்பர் உருவாக்கிய ஆட்சி நிலமும், அவுரங்க சீப் உருவாக்கிய ஆட்சி நிலமும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு தான், இன்னும் சொல்லப்போனால் அவுரங்க சீப் காலத்தில் அவரது ஆட்சிக்குட்பட்ட இடம் என பெயரளவில் தான் நிறைய இருந்தது.

    சிவாஜி, அகோம்ஸ் , கோல்கொண்டா, பிஜாப்புர் என அவரது காலம் முழுக்க தன்னாட்சி என சொல்லி பிரிந்தே இருந்தார்கள், மீண்டும் அடக்க போர் என அவுரங்க சீப்பின் ஆட்சியின் பெரும்பகுதி சண்டையிலே போயிற்று. இதனால் பொருளாதாரம், நிர்வாகம் சீர் குலைந்து போனது எனவே தான் அவுரங்க சீப் இரந்த 10 ஆண்டுகளில் மொகல் சம்ராஜ்யம் காணாமல் போனது.

    அவுரங்க சீப் காலத்திலும் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நாடே உருவாகவில்லை, அவர் டெல்லியில் பேரரசர், மற்ற பகுதிகள் எல்லாம் சிற்றரசர்கள், அவர்களுக்கு என தனி கொடி, கொள்கை,மதம் ,ராணுவம் எல்லாம் உண்டு.

    ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவினை பிடித்தார்களோ, அப்படியான நாட்டை பிடிக்க வந்தவர்களே முகலாயர்களும், அவர்களை மட்டும் போற்ற வேண்டுமா?

    வெள்ளைக்காரனால் மதமாற்றப்பட்டு உருவான கிருத்தவர்கள் எப்படி இந்தியாவில் இருக்கிறார்களோ, அப்படியே மதம் மாறிய இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள்.

    வெள்ளையர் ஆண்டதை கேவலம் என சொல்லிவிட்டு ,மொகலாயர்கள் ஆண்டதை பெருமைப்படுத்த பார்ப்பது ஏன்?

    --------
    //கோவி கண்ணன், சார்வாகன், இக்பால் செல்வன், வவ்வால் போன்றவர்களுக்கு இயல்பிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு உண்டாகி இருக்க காரணம் நமது நாட்டு வரலாற்று பாட நூல்களில் இது போன்ற வரலாற்று திரிபுகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை படித்ததன் விளைவே! //

    மற்றவர்கள் பற்றி நான் சொல்ல முடியாது, என்னைப்பொறுத்த வரையில் மத மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன். அது இஸ்லாமா,இந்துத்துவமா என வேறுபாடு இல்லை.

    நாத்தீகம் என சொல்லி பார்ப்பணியத்தை மட்டும் குறை சொல்லும் போலி நாத்திகவாதிகளை நீங்கள் எப்படி ஆதரிக்கிறீர்கள்?

    நான் அப்படியான போலி நாத்தீகவாதியல்ல.எனவே நீங்கள் இப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை.



    ReplyDelete
  20. //அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை நாம் மதத்தின் காரணத்திற்காக பெருமைப்படுத்துவது தவறு...பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.//

    சொன்னதையே சொல்லிக்கொண்டே இருங்கள். இந்தக் கூற்றைப் புரிய முடியாதவர்களுக்கு எதை, எத்தனை தடவை சொன்னாலும் ஏது பயன்? தூங்கினால் தானே எழுப்ப முடியும்!!

    சிந்திக்க மாட்டீர்களா?

    ReplyDelete
  21. சலாம் சகோ.அக்பர்.....

    உய்..உய்..உய்.. ஊய்...ஊய்...ஊய்...ஊய்...ஊய்...

    இந்த பதிவை படித்து விசில் அடிக்க ஆசையா இருக்கு..! ரொம்ப நாளா அக்பரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று ஆசை..! ரொம்ப நன்றி.. சகோ.

    ///"மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?"///---இதில் என்ன சந்தேகம்..???

    எப்போது ஒரு முஸ்லிம், இஸ்லாமை பின்பற்ற வில்லையோ.. அப்போதே அவனை முஸ்லிம் அல்லாதவருக்கு பிடித்து விடுமே..!

    அஜ்மல் கசாபை கூட தூக்கில் போட ரொம்பவும் யோசிக்கிறார்கள் தெரியுமா..? இஸ்லாம் சொன்னதுக்கு விரோதமா நடந்த அவன் மேலே அவ்ளோ பாசம்..! :-))

    ReplyDelete
  22. திரு தருமி!

    நீங்கள் அனுப்பிய ஹதீது குர்ஆனுக்கு மாற்றமாக உள்ளதால் அதனை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அந்நிய பெண்ணை கை குலுக்குவதற்கு கூட தடை விதிக்கும் ஒரு மார்க்கம்: ஆணும் பெண்ணும் தனித்து ஒரு இடத்தில் இருக்க தடை விதிக்கும் மார்க்கம்: குழந்தைகள் தத்து எடுத்தாலும் அவர்களின் உண்மையான தாய் தந்தையரையே அவர்களை விளிக்க பயன்படுத்தப் பட வேண்டும் என்று கூறும் மார்க்கம் ஒரு பெண்ணின் மார்பில் பால் அருந்த முகமது நபியின் கட்டளை வந்திருக்கும என்று எவராலும் நம்ப முடியுமா? இது யூதர்களின் சதி வேலை என்பது நன்றாக தெரிகிறது. சில ஹதீதுகளில் அறிஞர்கள் தாம் கேள்விப்பட்ட சில விபரங்களை தகவலுக்காக குறித்து வைப்பர். குர்ஆனில் இவ்வாறு எந்த இடத்திலும் இது போன்ற சட்டங்கள் உள்ளதை உங்களால் காட்ட முடியாது. ஏனெனில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.

    ReplyDelete
  23. "சலாம் சகோ.சுவனப்பிரியன்...."

    ----என்று ஆரம்பித்திருக்க வேண்டும்..! சாரி..!

    அக்பர் போஸ்டில் ரொம்ப இன்வால்வ் ஆகிட்டேன் போல....

    ஹோய்...ஹோய்...ஹோய்...
    :-)))))

    ReplyDelete
  24. சு.பி,

    சுவாமிகள்,

    அக்பர் நல்லவரா ,கெட்டவரா என்பதற்கு உங்கள் அளவு கோல் மதம் போல இருக்கிறது.

    அவர் மதத்தினை பின்ப்பற்றவில்லை, என்பதை வைத்து நல்லவர் இல்லை ,வரலாறு தவறு என சொல்லும் கூமுட்டை தனத்தினை என்னவென்பது.

    ஆட்சி ,நிர்வாகம் சரி இல்லை, அநியாய வரி விதித்தர்,கொலை செய்தார் அதை மறைத்துவிட்டு வரலாறு நல்லவர் என சொல்கிறது என குறை சொன்னால் பொறுத்தம்.

    அப்படி குறை சொல்லாமல் இஸ்லாமியராக இல்லை ,எனவே கெட்டவர் ,வரலாறு சரி இல்லை என்பது மத வெறியே.

    -------------

    முந்தைய பின்னூட்டத்தில் சில எழுத்துப்பிழைகள்.

    முகமது உருவாக்கிய காலிபா ஆட்சி முறையை ஏன் வளைகுடா நாடுகள் பின் பற்றவில்லை?

    எனக்கேட்டேன்.

    ReplyDelete
  25. வவ்வால்!

    //ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவினை பிடித்தார்களோ, அப்படியான நாட்டை பிடிக்க வந்தவர்களே முகலாயர்களும், அவர்களை மட்டும் போற்ற வேண்டுமா?//

    எல்லோருமே நாட்டை பிடிக்க வந்தவர்கள்தான். ஆனால் எந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரும் இந்த நாட்டில் தங்கி விடவில்லை. இந்த நாட்டு மக்களை திருமணம் முடித்து கொள்ளவில்லை. இந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படவும் இல்லை.

    நான் முகலாயர்களை தூக்கிப் பிடிக்கவில்லை. அவர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் வித்தியாசம் உள்ளது என்றுதான் சொன்னேன்.

    முகலாயர்களுக்கு முன்னால் சேரனுக்கு சோழன் அந்நியன் தானே! பாண்டியனுக்கு பல்லவன் அந்நியன் தானே! முகலாயர்கள் வந்து இந்த நாட்டை ஒன்றாக்கியவுடன் தான் சேர சோழ பாண்டிய பல்லவ மராட்டிய அரசுகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் வருகிறார்கள். இதற்கு உங்களின் பதில் என்ன?

    ReplyDelete
  26. //முகமது உருவாக்கிய காலிபா ஆட்சி முறையை ஏன் வளைகுடா நாடுகள் பின் பற்றவில்லை?

    எனக்கேட்டேன். //

    முகமது நபி தனது வாழ்நாளில் தனக்கு பிறகு ஆட்சி எந்த முறையில் அமைய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஆட்சிக்கு அஸ்திவாரமாக குர்ஆன் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அது கலீபா முறையோ, அரசர் போன்ற முறையோ அல்லது ஜனநாயக முறையில் தேர்தலோ எப்படி ஆட்சி நடந்தாலும் அதற்கு அடிப்படை குர்ஆனாக இருக்க வேண்டும்.

    தனக்கு பின்னால் யார் தலைமைக்கு வருவது என்பதற்கு சூசகமாக சில விஷயங்களை நபியவர்கள் கூறினார்கள். அதன்படி அபுபக்கர் அடுத்த ஆட்சியாளராக வந்தார்.

    ReplyDelete
  27. சலாம் சகோ ஆஷிக்!

    //அஜ்மல் கசாபை கூட தூக்கில் போட ரொம்பவும் யோசிக்கிறார்கள் தெரியுமா..? இஸ்லாம் சொன்னதுக்கு விரோதமா நடந்த அவன் மேலே அவ்ளோ பாசம்..! :-))//

    அவனை தூக்கில் போட தாமதமாவதற்கு காரணம் இதுதானா? :-(

    ReplyDelete
  28. வவ்வால்!

    //அவர் மதத்தினை பின்ப்பற்றவில்லை, என்பதை வைத்து நல்லவர் இல்லை ,வரலாறு தவறு என சொல்லும் கூமுட்டை தனத்தினை என்னவென்பது.//

    அவர் இந்து மதத்துக்கு சென்றதை நான் விமரிசிக்கவில்லை. அதற்கான பதிலை அவர் இறைவனிடம் சொல்லிக் கொள்வார். ஆனால் தனக்கு கீழுள்ள மக்களும் இஸ்லாத்தை விட வேண்டும் என்று வற்புறுத்தியதைத்தான் இங்கு விமரிசிக்கிறேன். இது கூட விளங்காமல் கூமுட்டைதனத்தை எல்லாம் ஹி...ஹி....நீங்கள் பேசினால் எப்படி....?

    ReplyDelete
  29. Hello sir oru kelvi kekkuran badhil solluga neega hindhu and muslim colapration nu solriga unma thaana? (na ketta kelvi ku artham puruchu badhil solluga ) unga thalaimurai muslim ah mathunadhula unga kollu thatha illa paati yaravadhu oruthar hindhu iedhu unmai thaana? Hehehehehe unmaiya badhil solluga

    ReplyDelete
  30. //இது யூதர்களின் சதி வேலை என்பது நன்றாக தெரிகிறது. //

    உங்களின் இந்த ‘நேர்மை’ எனக்கு மிகவும் பிடிக்கின்றது!

    ReplyDelete
  31. //சில ஹதீதுகளில் அறிஞர்கள் தாம் கேள்விப்பட்ட சில விபரங்களை தகவலுக்காக குறித்து வைப்பர்//

    ஆயிஷா சொன்னதாக உள்ள ஹதீஸ் இது.

    உங்களுக்கு வேண்டாத, பதில் சொல்ல முடியாத ஹதீஸ்களை யூதர்களின் சதி என்று சொல்லும் நேர்மை நல்லா இருக்கு.

    அதுதான் ஒரு பதிவில் இப்படிப்பட்ட ஹதீஸுகள் இருக்கின்றனவே.. மதத்திற்கு அசிங்கமாக இல்லையா என்று கேட்டிருந்தேன். ‘வழக்கம்போல்’ மெளனமாகி விட்டீர்கள். பேச்மாமல் ஹதீஸை ஓரங்கட்டி விட்டு, குரானை மட்டும் கையில் எடுக்காமலிருப்பதற்குக் காரணம் கேட்டிருந்தேன்.

    சரி.. சரி.. உடுங்க .. வேணும்கிறதை வச்சுக்குவோம். வேண்டாம்னா இருக்கவே இருக்காங்க யூதர்கள். ஆமா இதில் கிறித்துவர்களை ஏன் சேர்க்கவில்லை?

    ReplyDelete
  32. சுல்தான்கள் சாம்ராஜ்யத்தை பற்றி எதுவும் சொல்ல வில்லையே செல்லம் .அவர்களும் முமின்தானே ..அலாவுதீன் கில்ஜி ...............எவளவு கேவலமான வரலாறு தெரியுமா ....? ஆண்மை யுள்ள ஒரு மன்னன் அக்பர் மாதிரி தான் இருப்பான் .

    ReplyDelete
  33. . எந்த கிறித்துவனும் மதத்தைக் காரணமாகக் கொண்டு நம்மை அடக்கி ஆண்ட கிறித்துவ ஆங்கிலேயனைப் பெருமைப் படுத்தியது கிடையாது. அதுபோலவே நம்மை அடக்கி ஆண்ட இஸ்லாமிய படையெடுப்பாளர்களை இஸ்லாமியர்கள் பெருமைப்படுத்துவது பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்................./////////////////////

    தருமி ஐயா......

    ReplyDelete
  34. சு.பி.சுவாமிகள்,

    //எல்லோருமே நாட்டை பிடிக்க வந்தவர்கள்தான். ஆனால் எந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரும் இந்த நாட்டில் தங்கி விடவில்லை. இந்த நாட்டு மக்களை திருமணம் முடித்து கொள்ளவில்லை. இந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படவும் இல்லை.
    //

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனைவரும் இங்கு ஒரு பதவியின் கீழ் தான் ,அது பணிக்காலம் போல , வேலை முடிந்தால் , அடுத்த வேலைக்கு போவது போல நாடு திரும்பிவிடுவார்கள். ஆனால் விருப்பப்பட்டு இங்கே தங்க விரும்பினால், தங்கவும் செய்தார்கள்.

    முல்லைப்பெரியாரை கட்டிய பென்னி குயிக், தனக்கான அரசு வேலை அது ,கட்டினாலும் கட்டாவிட்டாலும் சம்பளம், உண்டு, ஆனால் வேலை என நினைக்காமல் முடிக்க தனது சொந்த பணத்தினை போட்டு கட்டினார், அவரது கல்லறை இந்தியாவில் தான் உள்ளது.

    அது போல பலரும் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    கால்டு வெல் , வீரமா முனிவர் எல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொண்டவர்கள்.

    பிரிட்டீஷ் காலத்தில் தான் , ,மின்சாரம், சாலை, ரயில்,கல்வி,மருத்துவம் , தொலைப்பேசி என அனைத்தும் வந்தது.

    எனவே எல்லாவற்றையும் மொத்தமாக கோன்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

    நாடு பிடிக்க வருபவர்கள் செய்வதை யாராக இருந்தாலும் செய்வார்கள், முகலாயர்களும் சரி , வெள்ளையர்களும் சரி அப்படித்தான்.

    ஆனால் வெள்ளையர்களால் நாட்டுக்கு சில நன்மைகள் ஆவது கிடைத்தது.

    மதம் மாற சொல்லி யாரையும் கொல்லவில்லை, மதம் மாறசொல்லி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தியது வரலாறு இப்போ வந்து இல்லைனு நீங்க சொன்னா மாறிடுமா?

    முகலாயர்கள் ஆண்ட போதும் சரி ஆண்டுவிட்டு போனப்போதும் சரி ஒரே நாடாக இந்தியா உருவாகவில்லை, இன்னில் ஏன் ஏன் வெள்லைக்காரன் கட்ட பொம்மன், ஜான்சி ரானி,சிராஜ் உத்தவுலா என எல்லாரிடமும் சண்டைப்போட்டான்.

    அவுரங்க சீப் இறந்தவுடன் ,அவரது மகன் பகதூர் ஷா-1 இன் காலத்திலேயே அனைத்து சிற்றரசர்களும் தனியாக பிரிந்து வழக்கம் போல சுயாட்சிமிக்க அரசர்களாக ஆகிவிட்டார்கள்.

    வரலாற்றினை சரியாக படிக்கவும், படிச்சாலும் சிலருக்கு புரியவில்லை எனில் ஒன்றும் செய்ய முடியாது :-))

    ----------
    //அவர் இந்து மதத்துக்கு சென்றதை நான் விமரிசிக்கவில்லை. அதற்கான பதிலை அவர் இறைவனிடம் சொல்லிக் கொள்வார். ஆனால் தனக்கு கீழுள்ள மக்களும் இஸ்லாத்தை விட வேண்டும் என்று வற்புறுத்தியதைத்தான் இங்கு விமரிசிக்கிறேன். இது கூட விளங்காமல் கூமுட்டைதனத்தை எல்லாம் ஹி...ஹி....நீங்கள் பேசினால் எப்படி....//

    500 ஆண்டு ஆச்சு இன்னுமா அக்பர் சுவனத்தில் பதில் சொல்லாம இருக்கார் :-))

    அவர் இஸ்லாத்தினை விட சொல்லி வற்புறுத்தி,கொலை செய்தாரா?

    மேலும் இந்துவாகிட்டேனு சொன்னாரா?

    இப்போ இப்தார் விருந்து வைக்கும் அரசியல்வாதிகள் அன்று மட்டும் தலையில் தொப்பி வைத்து போஸ் கொடுப்பதில்லையா?

    அது போல அக்பரும் ஒரு ஆட்சியாளராக பெரும்பான்மை மக்களை மகிழ்விக்க நெற்றியில் பொட்டு வைத்து தரிசனம் கொடுத்தால் இந்து என்பதா?

    நீங்கள் எதிர்ப்பார்க்கும் பரிசுத்த இஸ்லாமியராக இல்லை எனில் எப்படி நல்லவரா,கெட்டவரா என கேட்கலாம்? கேள்வியே தப்பு என்பதால் தான் கூமுட்டை தனம் என்கிறேன்.

    நீங்கள் கேள்வி கேட்பதாக இருந்தால் அக்பர் இஸ்லாமியா? இந்துவா எனக்கேட்டிருக்க வேண்டும் :-))

    ReplyDelete
  35. Anonymous7:50 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்.
    அக்பரை வவ்வால் வகையறா தூக்கி பிடிக்கிறதுக்கு இதுதான் காரணமா?அக்பர் ஒரு முஸ்லிம் பேராச்சே அவருடைய ஆட்சியை ஆஹா ஓஹோ ன்னு புகழ்ந்து முட்டு குடுக்குறாங்கலேன்னு பார்த்தேன்.
    kalam.

    ReplyDelete
  36. சுவனப் பிரியன் said...
    // அவர் இந்து மதத்துக்கு சென்றதை நான் விமரிசிக்கவில்லை. அதற்கான பதிலை அவர் இறைவனிடம் சொல்லிக் கொள்வார். ஆனால் தனக்கு கீழுள்ள மக்களும் இஸ்லாத்தை விட வேண்டும் என்று வற்புறுத்தியதைத்தான் இங்கு விமரிசிக்கிறேன். இது கூட விளங்காமல் கூமுட்டைதனத்தை எல்லாம் ஹி...ஹி....நீங்கள் பேசினால் எப்படி....?//

    முகமது நபி செய்யாததையா அக்பர் செய்துவிட்டார். முகமதுக்கு ஒரு நியாயம் அக்பருக்கு ஒரு நியாயமா.? // இது கூட விளங்காமல் கூமுட்டைதனத்தை எல்லாம் ஹி...ஹி....நீங்கள் பேசினால் எப்படி....?// //

    மதம் உங்கள் அறிவுக்கண்ணை குருடாக்கிவிட்டது எனபதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னைப்பொறுத்தவரை முகமதுவும் சரி, அக்பரும் சரி இறைவனை உணர்ந்தவர்களாகத்தான் இருக்க கூடும்.
    உங்களுக்கு ஏக இறைவன் அறிவுப்பார்வை அளிக்க வேண்டுகிறேன்.
    http://onameen.blogspot.com/
    இந்த தளத்திலிருந்து அகப்பார்வை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  37. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அக்பரின் முகமூடியை கிழித்தெறிந்து
    அவரின் சுய ரூபத்தை விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  38. என்ன தருமி ஐயா,
    //சொன்னதையே சொல்லிக்கொண்டே இருங்கள். இந்தக் கூற்றைப் புரிய முடியாதவர்களுக்கு எதை, எத்தனை தடவை சொன்னாலும் ஏது பயன்? தூங்கினால் தானே எழுப்ப முடியும்!! //
    எத்தனை தடவை சொன்னாலும் புரியாமல் தேய்ந்து போன CD போல மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக் கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்வது ஐயா? பதில் சொல்லி கொண்டே இருக்க வேண்டிய இருக்கிறது.
    //சிந்திக்க மாட்டீர்களா?//
    செம காமெடிங்க ஐயா. மனித வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு நல்வழி காட்டும் இஸ்லாம் சிந்திப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்று கீழ்கண்ட வசனங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
    23:68. “(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா?...”
    6:98. “உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.”
    இன்னும் ஏராளம்… ஏராளம்… உதாரணத்திற்கு இரண்டு மட்டும்…
    அப்படி பட்ட இஸ்லாத்தை வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களை பார்த்து சிந்திக்க மாட்டீர்களா என்று கேட்கின்றீர்களே. இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா?
    சரி போகட்டும். மற்றவர்களை சொல்லும் நீங்கள் அதை கொஞ்சமாவது செய்யலாமே.

    ReplyDelete
  39. // இந்தியாவில் ஹஜ் பயணத்திற்கு மட்டுமே மானியம் கொடுக்கப்படுகிறது,//

    ஹை…யோ… மிஸ்டர் வவ்வால் ஹஜ் பயணத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்றும், அதில் எவ்வளவு மானியம் என்றும் கூற முடியுமா?

    //மற்ற மதத்தினரின் புனிதப்பயணம் எல்லாம் அவரவர் சொந்த காசில் தான்.//

    அடடா நீங்கள் எந்த காலத்தில் இருக்கின்றீர்கள்?

    ReplyDelete
  40. //அக்பர் ,இஸ்லாமியராக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ,அரசர் அவருக்கு சரிய எனப்பட்டதை செய்கிறார்,//

    ஆமாம் ஆமாம். அதனால் தான் அனார்களி கூட உயிரோடு சமாதி வைக்கப் பட்டாள்.

    // மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே பின் தொடர்வார்கள், அக்பர் செய்தது சரி இல்லை எனில் அப்போதே கலவரம்,புரட்சி ஏற்பட்டு இருக்காதா?//

    இதே அளவுகோல் மற்ற மொகலாய மன்னர்களுக்கு பொருந்தாதோ? இல்லை 'சும்மா' தெரிஞ்சுக்க தான் கேட்டேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் வவ்வால்.

    ReplyDelete
  41. SALAM,

    வரலாற்று உண்மைகள் ஆச்சரிய படவைகின்றது ....சுவனபிரியன் வரலற்றுபிரியனாக மாறிவிட்டாரே ....எதுவாக இருந்தாலும் சமூக சிந்தனையுடன் கூடிய உங்கள் கட்டுரைகள் அருமை

    என் தளத்தில் தற்போதைய சூடான பதிவுகள்:
    1.நபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video attached
    2.விநாயகத் சதூர்த்தி என்று ஒன்று உண்டா?ஹிந்து நண்பர்களே சொல்லுங்கள்

    http://tvpmuslim.blogspot.in

    ReplyDelete
  42. வவ்வால்!

    //முல்லைப்பெரியாரை கட்டிய பென்னி குயிக், தனக்கான அரசு வேலை அது ,கட்டினாலும் கட்டாவிட்டாலும் சம்பளம், உண்டு, ஆனால் வேலை என நினைக்காமல் முடிக்க தனது சொந்த பணத்தினை போட்டு கட்டினார், அவரது கல்லறை இந்தியாவில் தான் உள்ளது.

    அது போல பலரும் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    கால்டு வெல் , வீரமா முனிவர் எல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொண்டவர்கள்.//

    பென்னி குயிக், கால்டு வெல், வீரமாமுனிவர் போன்றோர் ஆங்கிலேயராக இருந்தாலும் இந்த மணணின் மீது கொண்ட பாசத்தை காரணமாக வைத்து எந்த அளவு மதிக்கிறேனோ அதே அளவு ஒளரங்கசீப்பையும் மதிக்கிறேன். பாபரையும் ஹூமாயூனையும், பகதூர்ஷா வையும் மதிக்கிறேன்.

    //அவர் இஸ்லாத்தினை விட சொல்லி வற்புறுத்தி,கொலை செய்தாரா? //

    ஒரு மன்னர் கட்டளையிட்டாலே போதுமே.....அதற்கு அந்த காலத்தில் என்ன மதிப்பு என்து நமக்கு தெரியாதா?

    //500 ஆண்டு ஆச்சு இன்னுமா அக்பர் சுவனத்தில் பதில் சொல்லாம இருக்கார் :-))//

    உலக முடிவு நாளுக்கு பிறகு இறைவன் முன்னால் விசாரணை உண்டு என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அவர் சுவனத்திலதான் உள்ளதாக எப்படி கண்டு பிடித்தீர்கள்? :-)

    ReplyDelete
  43. //இந்தியாவில் ஹஜ் பயணத்திற்கு மட்டுமே மானியம் கொடுக்கப்படுகிறது, மற்ற மதத்தினரின் புனிதப்பயணம் எல்லாம் அவரவர் சொந்த காசில் தான்.//

    ஹஜ் பயணம் என்பது வசதியானவர்ளுக்கு மட்டுமே கடமையானது. அதற்கு உதவிப் பணம் கேட்டு எந்த முஸ்லிமும் போராடவில்லை. மன் மோகன் சிங்கிடம் சொல்லி அதை நிறுத்தி விட்டு மத்திய மாநில கல்வி நிறுவனங்கள் அற்றும் அரசு வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநித்துவம் கொடுக்கச் சொல்லுங்கள். அதுதான் தற்போது முஸ்லிம்களுக்கு தேவை.

    ReplyDelete
  44. Anonymous10:13 AM

    தமிழ் விக்கிப்பீடியாவிலும் "வினவு" வலைத்தளத்தின் அபத்தங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆதாரம்:

    http://ta.wikipedia.org/s/hr6

    http://ta.wikipedia.org/s/19iu

    - பாஹிம்

    ReplyDelete
  45. திரு வேல் வாஸ்!

    //Hello sir oru kelvi kekkuran badhil solluga neega hindhu and muslim colapration nu solriga unma thaana? (na ketta kelvi ku artham puruchu badhil solluga ) unga thalaimurai muslim ah mathunadhula unga kollu thatha illa paati yaravadhu oruthar hindhu iedhu unmai thaana? Hehehehehe unmaiya badhil solluga //

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் 90 சதவீதமான பேரின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அனைவரும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்களே! கடற்கரையோரம் உள்ள ஒரு சில முஸ்லிம்களின் மூதாதையர் மாத்திரமே அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களும் இந்திய பெண்களை மணந்து இந்திய ரத்தமாகி விட்டனர்.

    ReplyDelete
  46. சு.பி.சுவாமிகள்,

    நீங்கள் வெறும் பரபரப்புக்காக மட்டுமே இப்படி எழுதிக்கொண்டுள்ளீர்கள் என்பது தெரியும், ஆனாலும் ஒருவர் நல்லவரா ,கெட்டவரா என தீர்மானிக்க அவர் பின்ப்பற்றும் மதத்தினை எந்த அளவுக்கு கடைப்பிடித்தார் என்பது தான் அளவுகோல் எனில், நீங்கள் யாரையும் மதம் சார்ந்து குறை சொல்லவே கூடாது.

    மோடி அவர் மதத்தினை தூக்கி பிடிக்கிறார் எனவே அவர் நல்லவர்.

    ராஜ பக்சே அவர் மதத்தினை தூக்கி பிடிக்கிறார் அவர் நல்லவர்.

    இஸ்ரேலியர்கள் அவர்கள் மதத்தினை தூக்கி பிடிக்கிறார்கள் அவர்களும் நல்லவர்கள் .

    சரியா சொல்லிட்டனா? :-))

    அக்பர் கெட்டவர் என சொல்ல 1000 குறைகள் காட்ட முடியும் ,வரலாற்றில் இருக்கிறது, ஆனால் அவற்றை சொன்னால் அனைத்து முகலாய, மற்றும் சுல்தான்களும் அதனையே செய்துள்ளார்கள் என்பதால் நீங்கள் அதனை சொல்லவில்லை என்பதும் அறிவேன்.

    அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கும் வழியை கையாண்டீர்கள்.

    இப்பவும் ஒருவர் நல்லவரா என தீர்மானிக்க மதத்தினை பின்ப்பற்றுவது தான் அளவு கோலா என்பதற்கு பதில் காணோம்.

    ஒருங்கிணைந்த இந்தியா முகலாயர் காலத்தில் உருவாகவில்லை என்பதையும் சொன்ன பிறகு சத்தம் காணோம்.

    இன்னும் சொல்லப்போனால் அரேபியர்களின் ஆரியர்களின் வகையில் பின் தங்கிய நாடோடிக்குழு என்பதற்கே மானிடவியல் ஆதாரம் இருக்கு. அதெல்லாம் 3000 ஆண்டுக்கு முன்னால் கதை.

    இஸ்லாமுக்கு முன்னால் அரேபிய இலக்கியம்,கல்வெட்டு என எதுவும் இல்லையா? அவற்றில் என்ன இருந்தது என்றாவது தெரியுமா?

    மிக கவனமாக "pre islamic history" ஐ மறைத்து விட்டு மட்டுமே இஸ்லாமிய பெருமை பேச முடியும்,ஆனால் அது வரலாற்று திரிப்பாக மட்டுமே இருக்க முடியும்.
    -----------

    உங்களுக்கு சுவனம் கிடைக்கும் என நம்பும் போது அக்பருக்கு கிடைக்காமலா போயிருக்கும் என்ற நம்பிக்கை தான்.:-))

    ReplyDelete
  47. சு.சுவாமிகள்,

    //இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் 90 சதவீதமான பேரின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அனைவரும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்களே! கடற்கரையோரம் உள்ள ஒரு சில முஸ்லிம்களின் மூதாதையர் மாத்திரமே அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களும் இந்திய பெண்களை மணந்து இந்திய ரத்தமாகி விட்டனர்.//

    நீங்களே சொல்லிட்டிங்க வேலை மிச்சம், எப்படி மதம் மாறினார்கள், எல்லாம் கொலை மிரட்டலுக்கு பயந்து தானே.

    அப்படி இல்லை என மறுக்க ஏதேனும் தரவு வைத்துள்ளீர்களா?

    விக்கிப்பீடியாவில் எந்த இஸ்லாமிய படை எடுப்பை பற்றி படித்தாலும் இதனை காணலாம், விக்கிப்பீடியாவில் போய் எல்லாவற்றையும் மாற்றலாமே ,ஏன் எனில் அது அனைவருக்கும் பொது ,திற மூல கலை களஞ்சியம். அதில் தவறான இஸ்லாமிய வரலாறு இருக்கலாமா?, இங்கே வீணாக கட்டுக்கதை பதிவு போடுவதற்கு அதனை செய்தால் ஒரு வேளை உங்களுக்கு சுவனம் கிடைத்தாலும் கிடைக்கும் :-))

    ReplyDelete
  48. திரு புரட்சி மணி!

    //முகமது நபி செய்யாததையா அக்பர் செய்துவிட்டார். முகமதுக்கு ஒரு நியாயம் அக்பருக்கு ஒரு நியாயமா.?//

    முகமது நபி அன்றைய அரபுகள் பெண்களை கொடுமைபடுத்தியும் குடியிலும், அடிமை வாழ்க்கையிலும், தீண்டாமை பாராட்டியும், விபசாரத்திலும், வட்டியிலும் மூழ்கி கிடந்தவர்களை ஏக இறைவனை வணங்க வைத்து அந்த மக்கள் செய்து வந்த அனைத்து அனாச்சாரங்களையும் தனது காலத்திலேயே ஒழித்துக் காட்டினார்.

    ஆனால் அக்பரோ ஏற்கனவே சிறந்த வாழ்வு வாழ்ந்து வரும் முஸ்லிம்களை திரும்பவும் வர்ணாசிரம தர்மத்துக்கு அழைத்து செல்ல ரொம்பவும் பிரயாசைப்பட்டார்.

    //இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.//

    அக்பரின் தீன் இலாஹி மதம் அச்சு அசலாக மனு தர்மத்தை ஒத்து வருவதை பாருங்கள். ஏனெனில் அக்பருக்கு பின்னால் இருந்து இயக்கியவர்கள் பிராமணர்களே!

    இப்பொழுது சொல்லுங்கள். அக்பர் செய்தது சரியா? நல்ல வேலையாக அக்பரோடு அவரது மதத்தையும் சமாதி கட்டியாகி விட்டது. இல்லை என்றால் இஸ்லாத்திலும் பல சாதிகள் வேர் விட்டிருக்கும்.

    //உங்களுக்கு ஏக இறைவன் அறிவுப்பார்வை அளிக்க வேண்டுகிறேன்//

    பிரார்த்தனைக்கு நன்றி. உங்களுக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  49. சலாம் சகோ அஜீம் பாஸா!

    //அக்பரின் முகமூடியை கிழித்தெறிந்து
    அவரின் சுய ரூபத்தை விளக்கியதற்கு நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  50. Thiru Dharumi!

    //உங்களுக்கு வேண்டாத, பதில் சொல்ல முடியாத ஹதீஸ்களை யூதர்களின் சதி என்று சொல்லும் நேர்மை நல்லா இருக்கு.

    அதுதான் ஒரு பதிவில் இப்படிப்பட்ட ஹதீஸுகள் இருக்கின்றனவே.. மதத்திற்கு அசிங்கமாக இல்லையா என்று கேட்டிருந்தேன். ‘வழக்கம்போல்’ மெளனமாகி விட்டீர்கள். பேச்மாமல் ஹதீஸை ஓரங்கட்டி விட்டு, குரானை மட்டும் கையில் எடுக்காமலிருப்பதற்குக் காரணம் கேட்டிருந்தேன்.//

    குர்ஆனின் சில வசனங்களுக்கு முகமது நபி தான் விளக்கமளிக்க முடியும். அந்த விளக்கம் குர்ஆனுக்கு உட்பட்டிருந்தால் அது முகமது நபியின் விளக்கம். குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு விளக்கம் இருந்தால் அது யூதர்களின் கை வரிசை என்று எளிதில் விளங்கிக் கொள்ளலாம். very simple!

    ReplyDelete
  51. சலாம் சகோ கலாம்!

    //அக்பரை வவ்வால் வகையறா தூக்கி பிடிக்கிறதுக்கு இதுதான் காரணமா?அக்பர் ஒரு முஸ்லிம் பேராச்சே அவருடைய ஆட்சியை ஆஹா ஓஹோ ன்னு புகழ்ந்து முட்டு குடுக்குறாங்கலேன்னு பார்த்தேன்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  52. //நீங்களே சொல்லிட்டிங்க வேலை மிச்சம், எப்படி மதம் மாறினார்கள், எல்லாம் கொலை மிரட்டலுக்கு பயந்து தானே.//

    சில ஆண்டுகளுக்கு முன் நம் காலத்தில் மதம் மாறிய ஏ.ஆர் ரஹ்மானும், பெரியார் தாசனும்(கருத்தம்மா புகழ்) கொலை மிரட்டலுக்கு பயந்து தான் மதம் மாறினார்களா?

    //விக்கிப்பீடியாவில் எந்த இஸ்லாமிய படை எடுப்பை பற்றி படித்தாலும் இதனை காணலாம், விக்கிப்பீடியாவில் போய் எல்லாவற்றையும் மாற்றலாமே ,ஏன் எனில் அது அனைவருக்கும் பொது ,திற மூல கலை களஞ்சியம். அதில் தவறான இஸ்லாமிய வரலாறு இருக்கலாமா?, இங்கே வீணாக கட்டுக்கதை பதிவு போடுவதற்கு அதனை செய்தால் ஒரு வேளை உங்களுக்கு சுவனம் கிடைத்தாலும் கிடைக்கும் :-))//

    நாளைக்கே விக்கி பீடியாவில் 'வவ்வால் ஒரு ஆன்மீக குரு. சென்னையில் யாரும் சென்று தீட்சிதை பெற்றுக் கொள்ளலாம்' என்று ஒரு பதிவு எழுதி அதனையும் ஏற்ற முடியும்.:-)

    இன்னுமா விக்கி பீடியாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். :-)

    ReplyDelete
  53. //அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கும் வழியை கையாண்டீர்கள்.//

    அலாவுதீன் கில்ஜியை பாராட்டி நான் எந்த பதிவும் இடவில்லையே!

    //மோடி அவர் மதத்தினை தூக்கி பிடிக்கிறார் எனவே அவர் நல்லவர்.

    ராஜ பக்சே அவர் மதத்தினை தூக்கி பிடிக்கிறார் அவர் நல்லவர்.

    இஸ்ரேலியர்கள் அவர்கள் மதத்தினை தூக்கி பிடிக்கிறார்கள் அவர்களும் நல்லவர்கள் .//

    மோடி இந்து மதத்தை பின் பற்றுவதற்கும் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் இந்து மதத்தை பின்பற்றுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

    இந்த வித்தியாசத்தை புரிந்து கொண்டாலே உங்களுக்கு பல விளக்கங்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  54. //எப்படி மதம் மாறினார்கள், எல்லாம் கொலை மிரட்டலுக்கு பயந்து தானே.//
    //நீங்களே சொல்லிட்டிங்க வேலை மிச்சம், எப்படி மதம் மாறினார்கள், எல்லாம் கொலை மிரட்டலுக்கு பயந்து தானே.//

    சில ஆண்டுகளுக்கு முன் நம் காலத்தில் மதம் மாறிய ஏ.ஆர் ரஹ்மானும், பெரியார் தாசனும்(கருத்தம்மா புகழ்) கொலை மிரட்டலுக்கு பயந்து தான் மதம் மாறினார்களா?

    இவ்விருவர் இருக்கட்டும். இன்றைய காலத்தில் உலகலாவிய அளவில் தினம் தினம் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யார் கொலை மிரட்டல் விடுத்தது? அவ்வளவு ஏன்? நம் தமிழகத்தில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

    http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3

    அவர்களை யார் மிரட்டியது? மிஸ்டர் வவ்வால் விளக்குவாரா?

    சரி ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். அவ்வாறு மிரட்டலுக்கு பயந்து மாறினார்கள் என்றால் அவர்கள் எத்தனை நாளுக்கு அதில் நிலைத்து இருக்க முடியும்? சில காலங்களுக்கு பிறகு அவர்கள் ஏன் தங்களின் பழைய மதத்திற்கு மீளவில்லை.

    நான் பள்ளியில் படிக்கும் போது கூட ஒரு செய்யுள் பாடல் படித்து இருக்கிறேன் (பாடல் சரியாக நினைவில்லை).அதில் ஒருவர் கட்டாய படுத்தப்பட்டு (வவ்வால் மொழியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு) தான் வணங்கும் சிலையை கல்லால் அடிக்க வைக்க படுவார். அவரும் வெளியில் உயிருக்கு பயந்து அச்சிலையை கல்லால் அடிப்பார். ஆனால் தான் மிரட்ட பட்டு அடிக்க வைக்கப்படுவதால் அக்கல்லை பூவாக நினைத்து ஏற்றுக் கொள்ளுமாறு அச்சிலையிடம் பிரார்த்தித்து பாடுவதாக அச்செய்யும் புனையப் பட்டிருக்கும்.

    அதனால் மிஸ்டர் வவ்வால் விக்கிபீடியாவே உலகம் என்றிருக்காமல்-முன் முடிவுகளின்றி இஸ்லாத்தையும், வரலாற்றையும் ஆராயுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  55. வவ்வால்!

    ராஜகிரியார் கொடுத்த அழகிய விளக்கத்தை பார்த்தீர்கள்தானே!

    அப்படியே அவர் கொடுத்த சுட்டியில் சென்று இந்த மாதத்தில் மட்டும் எத்தனைபேர் தமிழகத்தில் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர் என்ற பட்டியலை பார்க்கவும். இவர்களை யார் மிரட்டியது என்று தற்போது அவர்கள் விலாசத்திலேயே சென்று விசாரித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  56. சு.பி சுவாமிகள்,

    //சில ஆண்டுகளுக்கு முன் நம் காலத்தில் மதம் மாறிய ஏ.ஆர் ரஹ்மானும், பெரியார் தாசனும்(கருத்தம்மா புகழ்) கொலை மிரட்டலுக்கு பயந்து தான் மதம் மாறினார்களா?//

    உம்ம சந்தர்ப்பவாதத்தினை என்னவென்பது, ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி வழியை பின்ப்பற்றுறார் அவர் இஸ்லாம்மியரே இல்லைனு இதே பதிவுலகில் சில இஸ்லாமியர்கள் குறை சொன்னப்போ எங்கே போயிருந்தீர்?

    இப்போ மட்டும் உதாரணம் காட்ட ஏ.ஆர் .ரெஹ்மான் வேண்டுமா? ஒரு சிலர் தானாக மாறலாம் அதுக்காக எல்லாம் தானாக ஆயிற்று எனலாமா?

    இந்து மதத்திற்கு இப்போவும் சில வெள்ளையர்கள் மாறிக்கிட்டு இருக்காங்க, எனவே இந்து மதம் சூப்பர்னு சொல்லிடலாமா?

    குஷ்பு இந்துவை கலியாணம் செய்து கொண்டு இந்துவாகிடுச்சு எனவே இஸ்லாமியர்கள் எல்லாம் இந்துவாக ஆசைப்படுறாங்கன்னு சொல்லிடலாமா?

    சில தனிப்பட்ட உதாரணங்களை பொதுமைப்படுத்தி பெருமை பட்டுக்க ஏன் ஆசைப்படுறிங்க?

    //நாளைக்கே விக்கி பீடியாவில் 'வவ்வால் ஒரு ஆன்மீக குரு. சென்னையில் யாரும் சென்று தீட்சிதை பெற்றுக் கொள்ளலாம்' என்று ஒரு பதிவு எழுதி அதனையும் ஏற்ற முடியும்.:-)//

    இணையத்தில் தேடினால் முதலில் விக்கி பக்கங்கள் தான் வரும் ,நீங்கள் நம்பவில்லை என சொன்னாலும் நிறைய பேர் நம்புவார்கள்.

    என்னைப்பற்றி வந்தால் நான் உடனே மறுத்து மாற்றிவிடுவேன், நீங்கள் இங்கே வெட்டியாக கதை விடாமல் போய் உண்மையை விக்கியில் ஏற்றி வைக்கலாமே?

    அப்படி செய்யாமல் வெட்டி நாயம் பேசுவதிலிருந்து என்ன பயன், மேலும் ஆதாரம் இல்லை என நினைக்க வைக்கிறதே.விக்கியில் ஒரு பக்கம் ஏற்றப்பட்டால் உண்மை இல்லை என்றால் உடனே மறுப்புகள் வரும் ,பதிவு திருத்தப்படும் எனவே தரவுகள் காட்ட வேண்டும்.
    ---------
    அலாவுதீன் கில்ஜியை பாராட்டவில்லை ஆனால் அவர் செய்த அநியாத்தை ஒன்றும் சொல்லவில்லை எனில் ஏற்பதாக தானே பொருள்.

    அவுரங்க சீப் செய்ததும் மோடி செய்தது போன்று தான் எனவே மற்ற முகலாய மன்னர்களின் செயலுக்கும் அவுரங்க சீப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
    -----------------------------
    இப்பவும் ஒருவர் நல்லவரா என தீர்மானிக்க அளவு கோல் மதப்பிடிப்பு தான் அடிப்படையா என்பதற்கு பதிலே சொல்லவில்லை, நான் மூன்றாம் முறையாக கேட்கிறேன், எனவே ஆம் ,இல்லை என பதில் கூறவும்.

    அப்படி பதில் சொல்லவில்லை எனில் இப்பதிவு கூமுட்டைத்தனமானது என நான் சொன்னதை நீங்கள் ஏற்பதாக ,அனைவருக்கும் அறிவிக்கிறேன் :-))
    ----------------
    //அவ்வளவு ஏன்? நம் தமிழகத்தில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள். //

    ஹி..ஹி அப்படி எனில் இன்னும் ஏன் மைனாரிட்டி என சொல்ல வேண்டும் :-))

    இஸ்லாம் நோக்கி போவதை விட கிருத்துவம் நோக்கி நிறைய பேர் போகிறார்களே அதனை என்ன சொல்வது?

    என்னைப்பொறுத்த வரை எல்லா மதமும் அறிவை மழுக்குபவையே.வாழும் போது அமைதியாக வாழாமல் இறந்த பின் சொர்க்கம் என மடத்தனமாக வன்முறை செய்வது முட்டாள் தனம்.

    சொர்க்கம் இப்பூயில்,நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கு!

    ReplyDelete
  57. ////நீங்கள் இங்கே வெட்டியாக கதை விடாமல் போய் உண்மையை விக்கியில் ஏற்றி வைக்கலாமே?////--

    --இவரு திருப்பி திருப்பி அதையேத்தான் கேக்குறார்...! இவருக்கு இந்த சின்ன விஷயமே புரியலே..!

    சகோ.சுவனப்பிரியன் அவரின் தளத்தில் எழுதி வச்சதை எவரும் வந்து அழிக்க முடியாது.

    ஆனால்... விக்கிக்கு சென்று தப்பா உள்ளது எல்லாத்தையும் உக்கார்ந்து வேலை மெனக்கெட்டு மாத்தி சரியான வரலாறை அழகா எழுதி வச்சாலும்... ஆயிரம் வாவ்வாலு உள்ளனர்... உடனே படை எடுத்து வந்து, இத அழிச்சிட்டு... பழசை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வச்சுட்டு த்தான் மறுவேலை பார்க்குங்க.

    இப்போ என்னா பண்றது..?

    தலைகீழே தொங்கிக்கொண்டு இருக்கும் சகோ.வவ்வால் அவர்கள் இதுக்கு, நேரா நின்னு சிந்திச்சு... ஒரு நல்ல தீர்வு சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  58. அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்,,,,
    @ முஹம்மது பாஹிம்
    தகவலுக்கு மிக்க நன்றி...விக்கியிலும் வினவின் பித்தலாட்டங்கள்.. சகோ பாஹிம், பின்தொடருங்கள் ,விடாதீர்கள் .
    @ சுவனப்பிரியன்
    தலைப்பு..அக்பர் நல்லவரா?,கெட்டவரா?..என்பதைவிட
    அக்பர் உண்மையான முஸ்லிமா ?,இல்லையா ? என்றிருக்கலாம் என்பதே என் எண்ணம் ....
    சரி அக்பர் எப்படியாவது போகட்டும் விடுங்கள் ..உங்களுக்கு மறுபடியும் பிசியான வேலை
    வந்திடுச்சி..#1 பிரஞ்சு பத்திரிக்கையின் அசிங்கமான "அந்த" கார்டூன் #2 இஸ்லாமிக் டிரஸ் கோடு
    பற்றி கிண்டலடிக்கும் மாற்று மார்க்க சகோஸ் கவனிக்கவும் , மகாராஷ்டிரா மும்பையில் நடக்கும் கணபதி பந்தலில்
    ஆபாசமாக பெண்கள் உடை அணிந்து வரக்கூடாது என்று விழாக்குழுவினர் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறார்கள்....இந்த இரண்டு சப்ஜெக்ட்களைப்பற்றி உங்க ஸ்டைலுல
    அடிச்சு ஆடுங்க ..... டிபென்சுக்கு நாங்க இருக்கோமில்ல ..!!
    --

    ReplyDelete
  59. வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

    நேரம் கிடைக்கும் போது அந்த பக்கமும் வருகிறேன்.

    புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு எந்த நிர்பந்தமோ மிரட்டலோ தரப்படுவதில்லை என்பதை சற்று விபரமாக விளக்குங்களேன் வவ்வாலுக்கு.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  60. //இப்பவும் ஒருவர் நல்லவரா என தீர்மானிக்க அளவு கோல் மதப்பிடிப்பு தான் அடிப்படையா என்பதற்கு பதிலே சொல்லவில்லை, நான் மூன்றாம் முறையாக கேட்கிறேன், எனவே ஆம் ,இல்லை என பதில் கூறவும்.

    அப்படி பதில் சொல்லவில்லை எனில் இப்பதிவு கூமுட்டைத்தனமானது என நான் சொன்னதை நீங்கள் ஏற்பதாக ,அனைவருக்கும் அறிவிக்கிறேன் :-))//

    ஒரு அரசர் தனது கீழ் உள்ள குடி மக்களை நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும். இந்துவோ முஸ்லிமோ அனைவரையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும். அவர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அதில தவறும் பட்சத்தில் அந்த அரசர் கெட்ட அரசராக பார்க்கப்படுவார். அக்பரின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதாரத்தோடு கொடுத்துள்ளேன். இவர் நல்லவரா கெட்டவரா என்பதை படிக்கும் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  61. ராஜகிரியாரே!

    முடிந்தால் உங்களின் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.

    ReplyDelete
  62. அக்பர் கெட்டவர் தான்.

    அப்பாவைக் கொன்று அரியணை ஏறிய அவுரங்கசீப் தான் 'ரொம்ப' நல்லவர்.

    ReplyDelete
  63. //கோவி கண்ணன், சார்வாகன், இக்பால் செல்வன், வவ்வால் போன்றவர்களுக்கு இயல்பிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு உண்டாகி இருக்க காரணம் நமது நாட்டு வரலாற்று பாட நூல்களில் இது போன்ற வரலாற்று திரிபுகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை படித்ததன் விளைவே!//

    என் பெயரை இங்கு தேவையற்று இழுத்ததற்கு கடுமையான கண்டனம். நான் செய்வது விமர்சனம் மட்டுமே, அதுவும் இஸ்லாமியர்கள் குறித்தது இல்லை, அதன் உட்பிரிவான சுவனப்பிரியன் & நான்கு பேர் பின்பற்றும் வஹாபி இயக்கம் பற்றிய விமர்சனம் மட்டுமே, எல்லோருக்கும் தெரியும் வெறும் வஹாபியம் மட்டுமே இஸ்லாம் இல்லை, ஆனாலும் உங்களைப் போன்றோர் வஹாபியம் மட்டும் தான் இஸ்லாம் என்று தொடர்ந்து திரித்துவருகிறீர்கள், எனது வஹாபியம் தொடர்பான விமர்சனங்களை இஸ்லாமிய எதிர்ப்பு என்று திரிக்கிறீர்கள்.

    உங்களைப் போன்றோர்களுடன் விவாதம் செய்வது குறித்து நான் பரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  64. Anonymous6:28 PM

    //இது போன்ற சின்ன ஊர்களெல்லாம் நாடுகளாகாது என்பதை விளக்கி மொகலாயர்கள் ஆப்கானிஸ்தானம் முதற்கொண்டு அகண்ட பாரத்தை உண்டாக்கினார்கள்.//

    இது தான் இருப்பதிலேயே செம தமாசு! விலக்கி உண்டாக்குனாங்களா? ஓ, பிரியாணி சமைத்ததைத் தான் இப்படிச் சொல்லுறீங்களா?

    ஆரம்பத்தில் நீர் தந்த பில்டப்பை பார்த்து நான் கூட அக்பர் ஏதோ பல போர்களை நிகழ்த்தி அதில் பல அடிமைகளைப் பிடித்து வந்து கற்பழித்தார், சிறுமியருடன் உறவு கொண்டார் அப்படின்னு எல்லாம் வரும்ன்னு எதிர்பார்த்தேன். பார்த்தா சூரியனைக் கும்பிட்டாராம், நாய் வளர்த்தாராம், திலகமிட்டுக் கொண்டாராம். த்தூ வெக்கமாக இல்லை உமக்கு இப்படிய்ல்லாம் பரப்புரை செய்ய! போரிட்டுப் பிடித்த நாட்டில் ரத்தத்துடன் ரத்தம் கலந்தார்கள் என்றால், இப்படி கலாச்சாரத்துடன் கலப்பது எவ்வகையில் தவறாகும்? நீர் சொன்னதிலேயே நியாயமான ஒரு கருத்து என்னவென்றால், தன் காலில் விழுந்து கும்பிடச் சொன்னது மற்றும் சில மனிதர்களை ஒதுக்கி வைத்தது. அது உண்மையோ பொய்யோ, ஆனால் அது தவறானது.

    பள்ளிப் பாடத்தில் படித்ததை விடவும் இப்போது அக்பரை மிகவும் பிடிக்கிறது! அல்லாஹூ அக்பர்! மிக்க நன்றி பிரியன்!

    ReplyDelete
  65. //அவ்வளவு ஏன்? நம் தமிழகத்தில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள். //

    ஹி..ஹி அப்படி எனில் இன்னும் ஏன் மைனாரிட்டி என சொல்ல வேண்டும் :-))
    அட்றா சக்கை…பதில் இல்லை என்றால் இப்படியா திசை திருப்ப வேண்டும் மிஸ்டர் வவ்வால்?
    இங்கு விவாதம் மிரட்டலைப் பற்றி. உலகலாவிய அளவிலும், தமிழகத்திலும் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களை யார் மிரட்டியது என்பதற்கு பதில் தாருங்கள்.


    //இஸ்லாம் நோக்கி போவதை விட கிருத்துவம் நோக்கி நிறைய பேர் போகிறார்களே அதனை என்ன சொல்வது?//
    நிஜம்..மாவா(!?)… சொல்லவே இல்லை.

    ஆனாலும் மிஸ்டர் வவ்வால். அவர்களையும் யாரும் மிரட்டுவது இல்லை.

    ReplyDelete
  66. Anonymous9:37 PM

    பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள்

    http://www.virakesari.lk/article/world.php?vid=118

    - பாஹிம்

    ReplyDelete
  67. குர் ஆன் ,ஹதீஸ் பற்றி சிந்தனை சிற்பி பெரியவர் தருமியின் புரிதல்கள்....

    //இந்நிலையில் இஸ்லாமியக் கோட்பாடுகளில் ஹதீஸுகளின் நிலைபற்றிப் பேசவே இக்கட்டுரை.//

    // பல இஸ்லாமியருக்கு எது குரானில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை; எது ஹதீஸிலிருந்து கொடுக்கப்பட்ட கட்டளை என்பது தெரியாது //

    //குரான் ஒரு முழுமையான,சிறப்பான, விளக்கமான நூல் (Quran is a complete, perfect and full detailed book.) என்பதற்கான குறிப்புகள் 6:19,38,114,115; 50:45, 12:111 என்ற வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. 6: 115 –ல் ’உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் முழுமையாக உள்ளன. (பிறகு எதற்கு ஹதீஸ்?)//

    இங்கு குர் ஆன் மற்றும் ஹதீஸ்களை பற்றி பெரியவர் தருமி புரிந்துள்ள விதத்தை பாருங்கள்...இஸ்லாத்தை விமர்சிக்க நான் ஒரு அறிவு ஜீவி இருக்கிறேன் என்று இவர் கிளம்பியதை வரவேற்கிறேன் ..ஆனால் அதற்கு கொஞ்சமாவது அடிப்படை அறிவு இருப்பது நல்லது... குர் ஆன் என்பது இறைவனின் கட்டளை என்பதை அறிந்துள்ளார்..வாழ்த்துக்கள்...ஆனால் ஹதீஸ் என்பதையும் கட்டளை என்று புரிந்துள்ளார்..சகோ.தருமி அவர்களே.. ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் அவர்கள் செய்ததும் ,அவர்கள் அனுமதித்ததும் ஆகும் .."தொழுகையை நிலை நாட்டுங்கள்" என்று குர் ஆன் கூறுகிறது...ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்பதை இறைவன் குர் ஆனில் கூறவில்லை.. நபிகள் நாயகம் தான் சொல்லி தந்திருக்கிறார்கள் ....அதனால் தான் இறைவன் "அழகிய முன் மாதிரி "என்று நபியை குறிப்பிடுகிறான்...முன் மாதிரி என்றால் செயல்படுத்தி காட்ட வேண்டும்... ஆக இஸ்லாம் என்பது இறைவனின் கட்டளையாகவும் நபி அவர்களின் வழிமுறையாகவும் இருக்கிறது....continue..

    ReplyDelete
  68. continued...

    இந்த லட்சணத்தில் பஞ்ச டயலாக் போல அடிக்கடி, தவிர இறுதியாகவும் இரண்டு பாய்ண்ட்டுகளை முன் வைக்கிறார்....

    //மீண்டும் – இரு குறிப்புகளும் ஒரு கேள்வியும்:
    இரு குறிப்புகள்:
    · அல்லா தன் வார்த்தைகள் மட்டுமே முக்கியம் என்றார். ஆனாலும், ஹதீஸுகள் கிளைத்துள்ளன.
    · முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன. ///

    முதலிலேயே அவரது அறியாமையை தெளிவு படுத்தியதால் இந்த பாயண்டுகளை கேட்டதில் ஆச்சர்யம் இல்லை தான்.. முதல் பாய்ந்டுக்கனா பதிலை முன்பே சொல்லிவிட்டதால்...அதாவது குர் ஆனின் செயல் முறையே ஹதீஸ் என்பது...

    இரண்டாவது பாய்ண்டை பாப்போம்...நபியுடைய காலத்தில் குர் ஆணையும் குறித்து வைத்து கொள்வார்கள் நபியுடைய வழிமுறையையும் குறித்து வைத்து கொள்வார்கள்.. இதை குறிப்பதற்கு என்றே "திண்ணை தோழர்கள்" என்ற சிலர் இருந்தனர்..இவர்களுக்கு இது தான் வேலை...அப்படி குறிப்பதால் ஒன்றுக்கொன்று கலந்து விட வாய்ப்பு இருப்பதால் என்னுடைய வழிமுறையை குறிக்க வேண்டாம் என்றார்கள்,கவனிக்க... இங்கு நோக்கம் குர் ஆனின் பரிசுத்த தன்மையை நிலைநாட்டுவதே ...அதனால் அவர்கள் குர் ஆணை மட்டுமே குறித்து வைத்து கொண்டார்கள்..ஹதீஸை பொறுத்தவரை மனனமிட்டு கொண்டார்கள்..பின்னாளில் எழுத்து வடிவத்தில் குர் ஆன் தொகுக்கப்பட்ட பின்பு நபி அவர்களின் வழிமுறையை தெரிந்து கொள்ள அன்று உயிரோடு இருந்த சகாபிய,தாபியீன்கள், தபே தாபிஈன்களை தேடி புறப்பட்டவர்களே புகாரி ,முஸ்லிம் இன்னபிற நூல்களின் ஆசிரியர்கள்.. ஆனால் புகாரி முஸ்லிம் இமாம்களை பற்றி தருமியின் அறிவை பாருங்கள் ...

    //இன்றையக் கிறித்துவம் பால் எழுதிய குழப்பவாதத்தால் மாறியது போலவே, சுன்னி இஸ்லாமியராலும், புகாரி போன்றவர்களாலும் இன்றைய இஸ்லாம் திரிந்து விட்டது.

    இஸ்லாமியர்கள் ஹதீஸிற்காகவும் சுன்னாவிற்காகவும் தங்கள் உண்மையான மதத்தைத் திரித்து விட்டார்கள். இப்போதுள்ள இஸ்லாமியம் Bukhari, Moslem, Nesaay, Termethy, Abu-Daoud போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் மதமாக மாறிவிட்டது. அல்லா முகமதுவிற்குக் கொடுத்த இஸ்லாமியம் இல்லை அது.//

    குர் ஆனின் கட்டளையை செயல்படுத்துவது எப்படி என்று உலகுக்கு சொல்ல முனைந்தவர்களை இந்த அறிவு கொழுந்து.. கிருஸ்தவ மதத்தை திரித்த பாலுடன் ஒப்பிடுகிறது... ஹதீஸ் குறித்து வைக்கபடாத ஒரே காரணம் தான் இன்று பல பொய்யான ஹதீஸ்கள் உருவாக காரணமானது... எப்படி...? சுரைக்காய் விக்கிறவன் என்ன பண்ணினான்..சுரைக்காய் தின்றால் சுவர்கத்திற்கு செல்லலாம் என்று நபி சொன்னதாக திரித்தான்...இவ்வாறு இறை அச்சம் அற்ற கயவர்கள் அவர்களுக்கு ஏற்றதாக திரித்து கூறினர்.. இதை தடுத்து தூய ஹதீஸ்களை பெறவே தங்களது வாழ்வை இழந்து ஹதீஸ்களை சேகரிக்க சென்றவர்களை இவர் எப்படி அறிந்திருக்கின்றார்...

    இவ்வாறு இவரது சிந்தனை முழுக்க அபத்தம் கொட்டி கிடக்கிறது...ஆதாரம் இல்லாத இட்டு கட்ட பட்ட செய்திகளை கொண்டும இன்னும் தவறான இவரது சிந்தனையை கொண்டும் பதிவை போட்டு இருக்கிறார்..இதில் இவருக்கு நக்கல் நையாண்டி வேறு..இன்னும் அந்த பதிவு பின்னூட்டத்தில் "அய்யயோ வேற...அம்மா வேற. ..."குர் ஆனுக்கும் ஹதீசுக்குமே வித்தியாசம் தெரியல....இவரெல்லாம் என்னத்த புரிந்து என்னத்த விமர்சனம் செய்ய.... அட போங்கப்பா...

    நகைப்புடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete


  69. சுவனப் பிரியன் said...
    // இப்பொழுது சொல்லுங்கள். அக்பர் செய்தது சரியா? நல்ல வேலையாக அக்பரோடு அவரது மதத்தையும் சமாதி கட்டியாகி விட்டது.//

    அக்பர் செய்தது சரி என்று நான் வாதிடவில்லை....இருவரும் மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துதான் சில விடயங்களை செய்தார்கள். அதை ஏற்று கொண்டவர்களும் உண்டு... எதிர்த்தவர்களும் உண்டு. என்னைப்பொருத்த வரை இருவரையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.என்ன அக்பர் தன்னை இறைத்தூதன் என்றும் இதுதான் இறைவேதம் என்று ஒரு புத்தகமும் தரவில்லை அவ்வளவுதான்.
    முகமது என்ன செய்தார் என்பதை பகடு, செங்கொடி போன்ற பிற தளங்களில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


    //இல்லை என்றால் இஸ்லாத்திலும் பல சாதிகள் வேர் விட்டிருக்கும்.//
    இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த பொய்யை சொல்ல முடியுமோ சொல்லுங்கள்.....

    //சில ஆண்டுகளுக்கு முன் நம் காலத்தில் மதம் மாறிய ஏ.ஆர் ரஹ்மானும், பெரியார் தாசனும்(கருத்தம்மா புகழ்) கொலை மிரட்டலுக்கு பயந்து தான் மதம் மாறினார்களா?//
    தென்னகத்தில் நடந்தது வேறு வட இந்தியாவிலும், பாகிஸ்தானிலும்,காஷ்மீரிலும் உலகின் பிற பகுதிகளில் நடந்ததும் நடப்பதும் வேறு.

    இந்த வித்தியாசத்தை புரிந்து கொண்டாலே உங்களுக்கு பல விளக்கங்கள் கிடைக்கும். நான் சொல்வது சரிதானே?

    //இந்துவோ முஸ்லிமோ அனைவரையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும். அவர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அதில தவறும் பட்சத்தில் அந்த அரசர் கெட்ட அரசராக பார்க்கப்படுவார். //
    முஸ்லிம்களையும், யூதர்களையும், infidels இவர்களையும் ஒன்றாகத்தான் குரான் பார்க்கிறதா?



    பிற இசுலாமியர்கள் செய்யும் தவறை இசுலாமியர்கள் சுட்டி காட்டாமல் அதற்க்கு சப்பை கட்டு கட்டுவதே, மௌனம் சாதிப்பதுமே இசுலாமியர்களின் பலமும் பலவீனமும்.

    இந்தியாவில் இருந்த குழந்தைகள் திருமணம், சதி, ஜாதி இவற்றை ஒழிக்க இந்துக்கள் பாடு பட்டனர் படுகின்றனர்...ஆனால் இசுலாமில் இருக்கும் தவறை இசுலாமியர்களே சுட்டி காட்டினாலும் அதை ஏற்கும் பக்குவம் இசுலாமியர்களுக்கு இல்லை.

    இசுலாமை காலத்திற்கு ஏற்றாற்போல் சீர்திருத்த வேண்டுமே ஒழிய....ஆயிரத்து நானுறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் தான் அனைவரும் வாழ வேண்டும் என்று பிற இசுலாமியர்களை கட்டாயப்படுத்துவது சீர்திருத்தம் ஆகாது.
    நன்றி

    ReplyDelete

  70. @இராஜகிரி
    நீங்கள் கொடுத்த தொடுப்பில்

    //தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.//

    அது ஏன் தூய என்ற வார்த்தை....வெறும் இசுலாம் என்று சொன்னால் மட்டும் போதாதா? ஒருவேளை தூய இசுலாம்....தூய்மையற்ற இசுலாம் என்று உண்டா என்ன?
    melum உங்கள் பார்வைக்கு
    102 Muslims Convert to Hinduism at Noida ,Uttar Pradesh-January,2012
    http://www.youtube.com/watch?v=XOKPzcQyXQA
    over 2 lakh people converts back to hinduism in year 2011 by VHP
    http://www.globalhinduism.com/news/2012/01/over-2-lakh-people-converts-back-to-hinduism-in-year-2011-by-vhp/
    முகமது நபி சொன்னது போல்
    உங்களுக்கு உங்கள் மதம் எங்களுக்கு எங்கள் மதம் என்று அனைவரும் இருந்துவிட்டால் நாட்டில் மத பிரச்சனயே வராது. ithai உங்கள் sagotharargalai kadaipidikka solveergalaa?

    ReplyDelete
  71. //என் பெயரை இங்கு தேவையற்று இழுத்ததற்கு கடுமையான கண்டனம். நான் செய்வது விமர்சனம் மட்டுமே, அதுவும் இஸ்லாமியர்கள் குறித்தது இல்லை, அதன் உட்பிரிவான சுவனப்பிரியன் & நான்கு பேர் பின்பற்றும் வஹாபி இயக்கம் பற்றிய விமர்சனம் மட்டுமே, எல்லோருக்கும் தெரியும் வெறும் வஹாபியம் மட்டுமே இஸ்லாம் இல்லை, ஆனாலும் உங்களைப் போன்றோர் வஹாபியம் மட்டும் தான் இஸ்லாம் என்று தொடர்ந்து திரித்துவருகிறீர்கள், எனது வஹாபியம் தொடர்பான விமர்சனங்களை இஸ்லாமிய எதிர்ப்பு என்று திரிக்கிறீர்கள்.//

    நான் இதை உங்களின் தவறாக சொல்லவில்லை கோவி கண்ணன். உங்களுக்கு சிறு வயதிலிருந்தே தவறான வரலாறுகளை பாடநூல்களாக தந்தது நமது அரசு செய்த தவறு.

    நானே கூட சிறு வயதில் ஒளரங்கசீப்பை பற்றி 'ஒரு கொடுங்கோலன்' என்ற நினைப்பிலேயே வாழ்ந்தேன். தற்போதுதானே உண்மை தெரிகிறது?

    இஸ்லாமிய கருத்துகளைப் பற்றி இதற்கு முன் நிறைய விமரிசனங்களை வைத்துள்ளீர்கள். ஆயிஷா திருமணம், ஜைனப் திருமணம், குர்ஆனின் வரலாறு போன்றவற்றில் நிறைய விமரிசனங்களை வைத்துள்ளீர்கள். இது வரவேற்கப்பட வேண்டியதே! கேள்வி பிறந்தால்தானே பதில் பிறக்கும்.

    தொடர்ந்து விமர்சனங்களை வையுங்கள்

    ReplyDelete
  72. //குர் ஆனின் கட்டளையை செயல்படுத்துவது எப்படி என்று உலகுக்கு சொல்ல முனைந்தவர்களை இந்த அறிவு கொழுந்து.. கிருஸ்தவ மதத்தை திரித்த பாலுடன் ஒப்பிடுகிறது...//

    நாகூர் மீரான்,

    திருவாளப்புத்தூர் முஸ்லீமின் மேதமை எனக்கு ஏற்கெனவே தெரியும். நீங்களும் அந்த ‘அள்வு’ தான் இப்போது தான் புரிந்தது. நன்றி.

    இனி விலகிச் செல்கிறேன்.

    ReplyDelete
  73. //குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு விளக்கம் இருந்தால் அது யூதர்களின் கை வரிசை என்று எளிதில் விளங்கிக் கொள்ளலாம். very simple! //

    இந்த very simple நேர்மை எனக்குப் பிடிக்கிறது. ஆனாலும் இந்த ஹதீஸை வைத்து இஸ்லாமிய நாடுகளில் நடந்த குடுமி பிடிச் சண்டை நிறைய நடந்துள்ளதே! அது எப்படி நடந்தது?

    ReplyDelete
  74. //இஸ்லாம் நோக்கி போவதை விட கிருத்துவம் நோக்கி நிறைய பேர் போகிறார்களே அதனை என்ன சொல்வது?//

    தெரிந்த விஷயம் தான். ஆனால் இதைக் கூறினால் கிறித்துவத்திற்குத் துணை போகிறேன் என்ற கூற்று வருமாதலால் இதுவரை இதுபற்றி ஏதும் கூறியதில்லை. ஆனால் இது உண்மை.


    ReplyDelete
  75. //
    ஒரு அரசர் தனது கீழ் உள்ள குடி மக்களை நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும். இந்துவோ முஸ்லிமோ அனைவரையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும்.//

    ஆஹா .. மிக நல்ல விஷயம். இது பற்றி நான் எழுதியவை கீழுள்ள பதிவில்; பாருங்கள்.

    http://dharumi.blogspot.in/2011/02/479-co.html என்ற பதிவில் ”ஆளுக்கொரு சட்டம்: ” என்று ஒரு பத்தி எழுதியுள்ளென். வாசிக்க ...

    மேலும் அப்பதிவில் ...

    //இஸ்லாமியத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியான வரி என்பது பற்றி நான் சொன்னது: ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம். //

    ReplyDelete
  76. தருமி ஐயா,

    //இஸ்லாமியத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியான வரி என்பது பற்றி நான் சொன்னது: ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம். //

    கொஞ்சம் அந்த தேய்ந்து போன CD-யை மாற்றுங்களேன்.

    ReplyDelete
  77. அக்பரின் டவுசரை கிழித்துவிட்டீர்கள்...!பட்டா பட்டியை உருவிவிட்டீர்கள்...!என்று விசில் எல்லாம் அடிக்கின்றார் ஒரு பாய்...! காரணம் அக்பர் இந்துகளை நேசித்தார். அதனால் அவரை உங்களுக்கு பிடிக்காது!

    கௌரி முகமது,தைமூர்,பாபர்,இவர்களை எல்லாம் உங்களுக்கு பிடிக்கும் காரணம் நான் சொல்ல வேண்டியது இல்லை உங்களுக்கே தெரியும்!

    ReplyDelete
  78. ///எல்லோருமே நாட்டை பிடிக்க வந்தவர்கள்தான். ஆனால் எந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரும் இந்த நாட்டில் தங்கி விடவில்லை. இந்த நாட்டு மக்களை திருமணம் முடித்து கொள்ளவில்லை. இந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படவும் இல்லை.///
    கோவா,பாண்டிச்சேரி,கேரளாவில் பிரிட்டிஷ்சார் இந்திய பெண்களை திருமணம் முடித்து ஆங்கிலோஇந்தியன் என்று ஒரு இனமே இருக்கின்றது...சுவனம் நீங்கள் இந்திய வரலாற்றை நன்கு படிக்கவும் கண்டபடி உளறாதீர்கள்

    ReplyDelete
  79. //திருவாளப்புத்தூர் முஸ்லீமின் மேதமை எனக்கு ஏற்கெனவே தெரியும். நீங்களும் அந்த ‘அள்வு’ தான் இப்போது தான் புரிந்தது. நன்றி.

    இனி விலகிச் செல்கிறேன்.//

    என்ன தருமி சார்...விளக்கமளித்தால் விலகி செல்கிறேன் என்கிறீர்கள்...நபியை மக்கான ஆள் என்றீர்கள், இன்னும் இஸ்லாத்தை விமர்சிக்கிறீர்கள்...இருந்தாலும் நான் விலகி செல்லவேண்டும் என்று நினைக்கவில்லையே...நீங்கள் கேள்வி கேட்பதை நான் வரவேற்கிறேன் என்று தானே சொல்லுகிறேன்...ஆனால் அபத்தமான கேள்விகளை அல்ல...நல்ல நல்ல கேள்விகள் எவ்வளவோ இருக்கிறது...கேளுங்கள் நல்ல விதமாக பதிலளிக்க தயாராகவே
    நாம் இருக்கிறோம்... என்ன எனது பின்னூட்டத்தில் மரியாதை குறைவாக எதையாவது கண்டீர்களா..?நபியையும் இஸ்லாத்தையும் நீங்கள் விமர்சனம் செய்வதை விடவா..?அடுத்த உள்ளங்களை கேலி செய்பவர்கள் தானும் கேலி செய்ய படுவோம் என்பதை அறியாதவரா நீங்கள்...சரி இனி "உங்களிடத்தில் மட்டும் " நான் குறைத்து கொள்கிறேன்..

    என்னை யாரும் வெறுப்பதையோ விலகி செல்வதையோ நான் விரும்புவதில்லை...என்னை வெறுத்தால் பின் எப்படி நான் சொல்வதை மதிப்பீர்கள்....அழகிய கேள்விகள் நாகரீகமாக கேட்கபடுவதையும் பதில் சொல்லுவதையுமே விரும்புகிறேன்...ஆனால் சிலருக்குரிய பதில்களின் தரத்தை அவர்களே நிர்ணயிக்கின்றனர்...நாமல்ல...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  80. சகோ.சுவனப்பிரியன் அக்பர் பற்றிய உங்கள் பதிவு அருமை ...இங்கு நிறைய இஸ்லாமல்லாத பின்னூட்டங்கள் அக்பரை போற்றுகின்றன...இந்த நேரத்தில் எனக்கு ஒரு நபி மொழி நினைவுக்கு வருகிறது...

    "யூதர்களும் நசாராக்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீங்கள் ஏற்று கொள்ளும் வரை உங்களை திருப்தி கொள்ளவே மாட்டார்கள் "

    இந்த மக்கள் அக்பரை போற்றுவதிலேயே தெரிகிறது ..அக்பர் நல்லவரா ,கெட்டவரா என்று ? ....இவர்கள் போற்றிய இன்ன பிற முஸ்லிம் பெயர் தாங்கிகள் சல்மான் ருஸ்டியும், தஸ்லிமா நஸ்ரினும் ஆயிற்றே...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  81. சகோ. திருவாளப்புத்தூர் முஸ்லீம். அஸ்ஸலாமு அலைக்கும்.

    நீங்கள் என்னதான் ஆதார புர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் விளக்கம் கொடுத்தாலும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
    இவர்கள் கொடுக்கப் படும் விளக்கங்களை atleast வாசிக்கின்றார்களா என்று கூட எனக்கு சந்தேகம் வருகிறது. இருப்பினும் சொல்வது நம் கடமை சொல்லிக் கொண்டே இருப்போம்.

    அதே சமயம் மாநபிகளின் வழி வந்த நாம் நம்முடைய விளக்கங்களின் போது இஸ்லாத்தின் வரைமுறைகளை எள்ளளவும் மீறி விடலாகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்கள் எவ்வளவு தான் நம்மை துாற்றினாலும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ள படி பொறுமையை கையாண்டு அவர்களை மன்னித்து அழகிய முறையில் எடுத்துரைக்க வேண்டும்.

    ”வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை” என்னும் குர்ஆன் வசனத்தை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

    அதனால் ”--- SORRY தருமி” என்பது போன்றவற்றினை தவிர்த்து கொள்ளுமாறு அன்புடன் கூறிக் கொள்கிறேன்.

    சகோ. சுவனப்பிரியன்,
    தயவு செய்து அந்த வார்த்தைகளை திருத்தி வெளியிடவும்.

    ReplyDelete
  82. Anonymous3:23 AM

    திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...



    தருமி said...
    //ஆயிஷா சொன்னதாக உள்ள ஹதீஸ் இது.

    உங்களுக்கு வேண்டாத, பதில் சொல்ல முடியாத ஹதீஸ்களை யூதர்களின் சதி என்று சொல்லும் நேர்மை நல்லா இருக்கு.

    அதுதான் ஒரு பதிவில் இப்படிப்பட்ட ஹதீஸுகள் இருக்கின்றனவே.. மதத்திற்கு அசிங்கமாக இல்லையா என்று கேட்டிருந்தேன். ‘வழக்கம்போல்’ மெளனமாகி விட்டீர்கள். பேச்மாமல் ஹதீஸை ஓரங்கட்டி விட்டு, குரானை மட்டும் கையில் எடுக்காமலிருப்பதற்குக் காரணம் கேட்டிருந்தேன்.

    சரி.. சரி.. உடுங்க .. வேணும்கிறதை வச்சுக்குவோம். வேண்டாம்னா இருக்கவே இருக்காங்க யூதர்கள். ஆமா இதில் கிறித்துவர்களை ஏன் சேர்க்கவில்லை?//

    அய்யா தருமி,

    பதில் சொன்ன கேள்விக்கெல்லாம் எத்தன தடவையா பதில் சொலுறது.
    கேள்வி மட்டுமே கேட்க தெரிந்த அறிவாளியே நீங்கள் விரும்புகிற பதிலை சொன்னால் தான் தாங்கள் திருப்தியடைவீர்கள் உங்களை திருப்த்திபடுத்த இறை கோவத்திற்கு ஆளாக நாங்கள் தயார் இல்லை.

    ஆமா,என் கேள்விக்கு பதில் சொல்லல,என் கேள்விக்கு பதில் சொல்லலன்னு சொல்லுறிங்களே தருமி,
    நான் சொன்ன பதிலுக்கும்,கேட்ட கேள்விக்கும் என்ன பதில்???????
    வழக்கமா எஸ்கேப் பாலிசியை கடைபிடிப்பவர் தானே நீங்கள்.நேர்மையை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு....சும்மா அரச்ச மாவையே அறைகிறது ஒன்னும் வெலன்காதவன்கிட்ட ஓகே வெலன்குனவங்ககிட்டையுமா?
    போய் உங்க கேள்விக்கு நான் சொன்ன பதிலை கண்ணாடி போட்டு படிச்சிட்டு வந்து அடுத்தவங்க பதிவுக்கு அப்றமா பதில் சொல்லாம்..

    http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html

    http://tvpmuslim.blogspot.in/2012/05/blog-post_09.html

    ReplyDelete
  83. அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ்,
    // புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு எந்த நிர்பந்தமோ மிரட்டலோ தரப்படுவதில்லை என்பதை சற்று விபரமாக விளக்குங்களேன் வவ்வாலுக்கு.//
    இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமோ, மிரட்டலோ இல்லை என்று சகோ வவ்வாலுக்கு நன்றாக தெரிந்திருந்தும், லூசுத்தனமாக பேசுவது அவரின் அறியாமைதான் காட்டுகிறது ....
    நல்லவை எங்கே கிடைத்தாலும் அைதத் ேதடிப் ெபற்றுக் ெகாள்பவர்களாகேவ ெபரும்பாலான மனிதர்கள் உள்ளனர். குறிப்பாக ஆன்ம��கத்தின் பால் மனிதர்களின் ேதடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு ேதடியைலயும் மக்களுக்கு நல்ல ஆன்மிக வழி ெதன்படுமானால் தயக்கமில்லாமல் அ��வழியில் ெசல்ல அவர்கள் தயாராகேவ உள்ளனர். அைமதிையத் ேதடியைலயும் மக்களின் பார்ைவயில் இஸ்லாம் சிறந்த வாழ்க்ைக ெநறியாகத் ெதன்படுகிறது. அதன் ெகாள்ைககள் அறிவுப்��ர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன. இதன் காரணமாக அவர்கைள இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில ெகாள்ைககளும், ேகாட்பாடுகளும் தவறானைவ; காலத்துக்கு ஒ��வாதைவ என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் சந்ேதகங்கைள உ��ய விதத்தில் ெதளிவுபடுத்தினால் அவர்கைள இஸ்லாம் முழுைமயாக ஈர்க்கும்...
    இப்படி இவர்கள் அறியாமையினால் கேட்கும் கேள்விகளுக்கு, முஸ்லிம்களும் ஒரு வகையில் காரணம் என்றுதான் சொல்வேன். மெத்த படித்த முஸ்லிம்கள் சரியான முறையில், அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பின்னடைகிறார்கள் என்பதே என் கருத்து. தீனுல் இஸ்லாத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு. நாம்தான் அதற்காக முயற்சி செய்வதில்லை...
    ஒருவேளை சந்தேகங்களை தீர்த்து வைத்துவிட்டால், இன்ஷால்லாஹ் நாளைக்கே சகோ வவ்வால் இஸ்லாமிய அறிஜர் ஆகி, சுவனப்பிரியன் அவரிடம் மார்க்க சந்தேகங்களை கேட்கலாம் ....அப்படியே நடக்க துவா செய்வோம்...ஆமின்

    ReplyDelete
  84. சகோ. புரட்சிமணி.
    //தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.//

    அது ஏன் தூய என்ற வார்த்தை....வெறும் இசுலாம் என்று சொன்னால் மட்டும் போதாதா? ஒருவேளை தூய இசுலாம்....தூய்மையற்ற இசுலாம் என்று உண்டா என்ன?//

    ஏனெனில், இஸ்லாத்தின்படி இன்று உலகில் காணும் அனைத்து மதங்களும் ஒரு காலத்தில் இஸ்லாமாகத் தான் இருந்தது. முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு கொடுக்கப் பட்டதும் இஸ்லாம் தான். சில காலங்களுக்கு பிறகு அது மனித கரங்களால் மாசடந்தது. நாளடவில் அது வெவ்வேறு மதங்களாக பரிணமித்து விட்டது. எனவே இறைவனும் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக தொடர்ச்சியாக நபிமார்களை அனுப்பிக் கொண்டே இருந்தான். அந்த வகையில் இறுதி நபியாக அனுப்பப் பட்டவர் தான் முஹம்மது (ஸல்). குர்ஆனை இறைவனே பாதுகாப்பதாக வாக்களித்து, அதுபோலவே இன்று வரை அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இருப்பதால் தான் அது இன்னும் துாய இஸ்லாமாக இருக்கிறது.

    மற்றொரு காரணமும் அதில் உண்டு. இன்று முஸ்லிம்களில் சிலர் இஸ்லாம் காட்டித் தராத – இஸ்லாத்திற்கு எதிரான செயல்களையும் வணக்க வழிபாடுகளையும் இஸ்லாத்தின் பெயரால் செய்கின்றனர். அவற்றையெல்லாம் தவிர்த்து இஸ்லாமிய கோட்பாடுகளை மட்டும் பின்பற்றுதலையும் அது குறிக்கும்.


    மற்றபடி நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் குறித்து…(அவற்றின் நம்பகத் தன்மை குறித்து எனக்கு சந்தேகங்கள் உண்டு)

    பொதுவாகவே இந்து சகோதரர்கள் – முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள், எதற்கு சொல்கிறார்கள் என்பதை நிதானமாக சிந்திக்காமல் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்னும் ஒரே நோக்கிலேயே செயல் படுகிறார்கள். நீங்களும் அவ்வகையிலேயே சுட்டிகளை கொடுத்துள்ளீர்கள்.

    நான் சுட்டி கொடுத்ததன் காரணம் உலகலாவிய அளவிலும் தமிழகத்திலும் ஏராளமானோர் இஸ்லாத்தினை ஏற்ற வண்ணமேயுள்ளனர். அவர்களை யாரும் மிரட்டவும் இல்லை, நிர்பந்திக்கவும் இல்லை என்பதற்கான ஆதாரமாக தானேயொழிய வேறு எவரும் எந்த மதத்திற்குமே மாறுவதில்லை என்று சொல்வதற்காக அல்ல.

    உங்களுக்கான விளக்கமாகவே கீழ்கண்ட வசனம்.

    ”அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை” (அல் குர்ஆன்)

    பிகு: என்னிடம் கொடுத்த சுட்டியை வேறு எவருக்கும் கொடுத்து விடாதீர்கள். ஏனெனில், இஸ்லாத்திற்கு மாறியவுடன் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் அங்கிருந்து முந்தைய மதத்திற்கோ அல்லது வேறு மதத்திற்கோ மாறமுடியாது-கொன்று விடுவார்கள் என்று பொய்களையும் புரட்டுகளையும் கூறி அப்பாவிகளை மிரட்ட முடியாது.

    ReplyDelete
  85. சு.பி,சுவாமிகள்,

    //ஒரு அரசர் தனது கீழ் உள்ள குடி மக்களை நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும். இந்துவோ முஸ்லிமோ அனைவரையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும். அவர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அதில தவறும் பட்சத்தில் அந்த அரசர் கெட்ட அரசராக பார்க்கப்படுவார். //

    நேரா பதில் சொல்லாமல் சுத்தி சொல்றேன்னு நீங்களே ஆப்பு வச்சுக்கிட்டிங்களே ...ஹையோ...ஹையோ!!!

    உங்கள் அளவு கோலின் படி பார்த்தால் அக்பரே அனைத்து மொகலாய/இஸ்லாமிய மன்னர்களிலும் சிறந்தவர்,அவுரங்க சீப் எல்லாம் அக்பர் அருகில் வர முடியாது.

    அனைத்து மதத்தினரயும் சமமாக பார்த்தார், சமண,புத்த,கிருத்துவ மதங்களுக்கும் கொடை கொடுத்தார்.

    இன்னும் ஒரு படி மேலே போய், ரோமன் கத்தோலிக் கிருத்துவர்களுக்கும்,புராட்டஸ்டண்ட்களுக்கும் சண்டை வந்த போது, ஐரோப்பாவில் புராட்டஸாடண்ட்கள் தாக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தனர்,அக்பரிடம் உதவி கேட்டார்கள், குறிப்பாக ஸ்பெயின் அப்போது கடல் வழியில் பல புராட்ட்ஸ்டண்ட் கப்பலை தாக்கி அழித்தது,எனவே அக்பர் ஸ்பெயின் மன்னர் பிலிப்-2க்கு கடிதம் அனுப்பி தாக்குதை நிறுத்த சொன்னார்.

    ஜெயின்கள் பண்டிகை காலத்தில் மாமிசம் வெட்ட தடை விதித்தார்.ஒரு ஜெயின் துறவி சொன்னதால் மாமிசம் சாப்பிடுவதை விட்டார்.

    இஸ்லாமியர்களுக்கும் அவர் சாதகமாக இல்லைனு நீங்கள் சொல்லலாம் ஆனால் அப்படி இல்லை, ஹஜ் செல்ல ஏழைகளுக்கு நிதி வழங்கினார், சிறப்பு கப்பல்களை இயக்கினார், அக்பரே4 முறை ஹஜ் செய்துள்ளார், அப்புறம் எப்படி அவரு இஸ்லாத்தை இழுவு பண்னார் சொல்வீங்க.

    இப்படி பல மதத்தினருக்கும் இணக்கமாக இருந்து நாட்டை அமைதியாக ஆண்டதால் தான் அக்பர் தி கிரேட் எனப்பட்டர்(அக்பர் என்றாலும் கிரேட் தான்)

    இதெல்லாம் ஏதோ இந்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதிட்டாங்க ,திரிச்சுட்டாங்க என சொல்வீங்க, உண்மைகள்னு ஒருத்தர் அடிக்கடி ஸ்மித்.ஏ.வின்ஸ்டன் என ஒரு வெள்ளைக்காரரை உதாரணம் காட்டுவாரே அவரே எழுதி இருக்கார், அக்பர் தி கிரேட் என்ற நூலில்.

    அப்புறம் ஏன் ஃபிடோயின் அக்பரை கரிச்சு கொட்டினார் எனில் ,அக்பர் தீவிரமான இஸ்லாமியராக இல்லை, அவரது குருவாக சுலே-இ.குல் என்ற சூஃபி மார்க்க குருவை வைத்திருந்தார் .

    இஸ்லாமியர்க்ளீடையே இருந்த அஷ்ராப்,அஜ்லப் வேறுபாட்டை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை கொடுத்தார்.

    எனவே தான் தீவிர இஸ்லாமியரான ஃபிடோயினுக்கு அக்பரை பிடிக்கவில்லை.

    ஒரு மன்னராக அக்பர் நல்லவராக இருந்துள்ள போது எப்படி கெட்டவர் ஆவார் ?

    இப்பவும் ஒரு பகுத்தறிவாளனாக என்னால் அக்பர் மீது 100 குறைகளை சொல்ல முடியும், ஆனால் நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு நல்லவரை மதத்தின் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களே :-))

    இப்பதிவின் மூலம் உங்களது மத வெறி தான் வெளிப்படுகிறது. இதனைப்படிப்பவர்களே அதனை உணர்வார்கள்.

    ReplyDelete
  86. இராஜகிரியார் said...

    //முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு கொடுக்கப் பட்டதும் இஸ்லாம் தான். சில காலங்களுக்கு பிறகு அது மனித கரங்களால் மாசடந்தது.//

    விவிலியம் அறுநூறு வருடங்களுக்குள் மாசடைந்துவிட்டது ஆனால் 1400 வருடங்களாக குரான் மாசடையவில்லை என்று கூறுவது இசுலமாமியர்கள் நாம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் அதையே மற்றவர்களும் நம்ப வேண்டும் என்பதுதான் மடமை.

    // குர்ஆனை இறைவனே பாதுகாப்பதாக வாக்களித்து, அதுபோலவே இன்று வரை அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இருப்பதால் தான் அது இன்னும் துாய இஸ்லாமாக இருக்கிறது/

    சார் இது உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. இன்று தமிழில் இருக்கும் குரான்களை எடுத்து நீங்களே பாருங்கள் அதில் எத்தனை வார்த்தைகள் மாறியுள்ளன என்பது தெரியும் எனவே அல்லா குரானுக்கு பாதுகாப்பளிக்க தவறி விட்டார் என்று கூறுவீர்களா?

    அதுவும் அல்லாமல் முன்பிருந்த நூல்களை அல்லது இசுலாமை ஏன் அவர் பாதுகாக்க தவறினார். ஒரு புத்தகத்தை பாதுக்காக முடியவில்லை என்று கூறுவது அல்லாவை சிறுமை படுத்துவது ஆகாதா ?


    ///மற்றொரு காரணமும் அதில் உண்டு. இன்று முஸ்லிம்களில் சிலர் இஸ்லாம் காட்டித் தராத – இஸ்லாத்திற்கு எதிரான செயல்களையும் வணக்க வழிபாடுகளையும் இஸ்லாத்தின் பெயரால் செய்கின்றனர். அவற்றையெல்லாம் தவிர்த்து இஸ்லாமிய கோட்பாடுகளை மட்டும் பின்பற்றுதலையும் அது குறிக்கும்.//

    தூய இசுலாமிற்கு இது நல்ல விளக்கம்.

    //பொதுவாகவே இந்து சகோதரர்கள் – முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள், எதற்கு சொல்கிறார்கள் என்பதை நிதானமாக சிந்திக்காமல் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்னும் ஒரே நோக்கிலேயே செயல் படுகிறார்கள். நீங்களும் அவ்வகையிலேயே சுட்டிகளை கொடுத்துள்ளீர்கள். //

    சகோதரா உங்கள் புரிதல் தவறு. முந்தைய பின்னூட்டத்தில் நீங்கள் என்ன கூறியுள்ளீர்கள் தெரியுமா?


    //இன்றைய காலத்தில் உலகலாவிய அளவில் தினம் தினம் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யார் கொலை மிரட்டல் விடுத்தது? அவ்வளவு ஏன்? நம் தமிழகத்தில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

    அவர்களை யார் மிரட்டியது? மிஸ்டர் வவ்வால் விளக்குவாரா?

    சரி ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். அவ்வாறு மிரட்டலுக்கு பயந்து மாறினார்கள் என்றால் அவர்கள் எத்தனை நாளுக்கு அதில் நிலைத்து இருக்க முடியும்? சில காலங்களுக்கு பிறகு அவர்கள் ஏன் தங்களின் பழைய மதத்திற்கு மீளவில்லை. ///

    என்று கூறியுள்ளீர்கள். அதனால் தான் இசுலாமியர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய சுட்டியை தந்துள்ளேன். இப்பொழுது அவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டுதான் முன்பு இசுலாமை ஏற்றார்கள் என்று ஒத்துக்கொள்வீர்களா?

    //பிகு: என்னிடம் கொடுத்த சுட்டியை வேறு எவருக்கும் கொடுத்து விடாதீர்கள். ஏனெனில், இஸ்லாத்திற்கு மாறியவுடன் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் அங்கிருந்து முந்தைய மதத்திற்கோ அல்லது வேறு மதத்திற்கோ மாறமுடியாது-கொன்று விடுவார்கள் என்று பொய்களையும் புரட்டுகளையும் கூறி அப்பாவிகளை மிரட்ட முடியாது.//

    இன்று (இன்றுதான் நாளை எப்படி என்று சொல்ல முடியாது) என் (நம்?) இந்திய திருநாட்டின் நிலை வேறு பிற இசுலாமிய நாடுகளின் நிலை வேறு. இங்கும் இசுலாமை விமர்சித்தற்கும் விமர்சனத்தை பகிர்ந்ததர்க்கும் பலர் பல இன்னல் பட்டுள்ளார்கள்.
    நன்றி

    ReplyDelete
  87. சகோ. புரட்சிமணி.

    //விவிலியம் அறுநூறு வருடங்களுக்குள் மாசடைந்துவிட்டது ஆனால் 1400 வருடங்களாக குரான் மாசடையவில்லை என்று கூறுவது இசுலமாமியர்கள் நாம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் அதையே மற்றவர்களும் நம்ப வேண்டும் என்பதுதான் மடமை.//

    இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் இல்லை சகோதரரே…
    சுமார் 1400 வருடங்களுக்கு முன்னால் முதன் முதலில் தொகுக்கப் பட்ட குர்ஆனின் அரபி மொழியிலான இரு பிரதிகள் இன்றும் தாஷ்கண்டிலும், இஸ்தான்புல்லிலும் பத்திரமாக பாதுகாக்க பட்டு வருகிறது. இந்த பிரதிகளோடு இன்றைக்கு உள்ள குர்ஆனை நீங்களோ அல்லது யார் வேண்டுமானாலும் மிக சுலபமாக ஒப்பிட்டு பார்த்து பரிசோதித்துக் கொள்ளலாம்.

    தமிழிலும் மற்ற ஏனைய மொழிகளிலும் உள்ளவை யாவும் மொழி பெயர்ப்புகள் ஆகும். இவை அனைத்துமே முல மொழியில் உள்ள குர்ஆனிலிருந்தே மொழி பெயர்க்கப் பட்டு வருகின்றன. நான் ஏற்கனவே கூறியது போல் இது இறைவனால் பாதுகாக்க படுகிறது.

    15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

    "We have, without doubt, sent down the Message; and We will assuredly Guard it (from corruption)."
    [Al-Qur’an 15:9]

    இதுவே இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று.
    சகோதரரே.. இன்னும் இந்த உண்மையையும், துாய இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் ஏன்?

    //அதுவும் அல்லாமல் முன்பிருந்த நூல்களை அல்லது இசுலாமை ஏன் அவர் பாதுகாக்க தவறினார். ஒரு புத்தகத்தை பாதுக்காக முடியவில்லை என்று கூறுவது அல்லாவை சிறுமை படுத்துவது ஆகாதா ?//

    கீழ்கண்ட வசனத்தை நோக்குங்கள். இவ்வுலகில் தோன்றிய அனைத்து சமுதாயத்தவருக்கும் அவரவர் மொழியிலேயே துாதர்கள் அனுப்பப் பட்டு இருந்தனர்.

    14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்...”

    ஆனால் அவற்றில் சில சட்டங்கள் அந்த சமுதாயத்தவர்களுக்கு மட்டுமே அருளப் பட்டிருந்தன.

    அதனால் அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

    ஆனால் குர்ஆன் உலக சமுதாயத்தினர் அனைவருக்காகவும் பொதுவாக அருளப்பட்ட காரணத்தினால் உலக அழிவு நாள் வரை இறைவன் பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். கீழே தரப்பட்டுள்ள வசனங்களை பாருங்கள்.

    25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.

    5:3. “…இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்..’

    இதனால் தான் இது இன்னும் – என்றென்றும் துாய இஸ்லாமாகவே இருக்கும்.

    அவர் அது சொல்கிறார் இவர் இது சொல்கிறார் என்றில்லாமல் குர்ஆனை கையில் எடுங்கள். முன் முடிவுகளின்றி ஆராய்ந்து பாருங்கள். இஸ்லாத்தினை குறித்த குறைந்த பட்ச அடிப்படை அறிவு இல்லாமல் போகிற போக்கில் துாற்றி விட்டு செல்லாதீர்கள்.

    மற்ற விடயங்களுக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த பின்னுாட்டத்தில் விளக்கம் தருகிறேன்.

    ReplyDelete
  88. சகோ. புரட்சிமணி.

    //பொதுவாகவே இந்து சகோதரர்கள் – முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள், எதற்கு சொல்கிறார்கள் என்பதை நிதானமாக சிந்திக்காமல் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்னும் ஒரே நோக்கிலேயே செயல் படுகிறார்கள். நீங்களும் அவ்வகையிலேயே சுட்டிகளை கொடுத்துள்ளீர்கள். //

    சகோதரா உங்கள் புரிதல் தவறு. முந்தைய பின்னூட்டத்தில் நீங்கள் என்ன கூறியுள்ளீர்கள் தெரியுமா?


    //இன்றைய காலத்தில் உலகலாவிய அளவில் தினம் தினம் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யார் கொலை மிரட்டல் விடுத்தது? அவ்வளவு ஏன்? நம் தமிழகத்தில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

    அவர்களை யார் மிரட்டியது? மிஸ்டர் வவ்வால் விளக்குவாரா?

    சரி ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். அவ்வாறு மிரட்டலுக்கு பயந்து மாறினார்கள் என்றால் அவர்கள் எத்தனை நாளுக்கு அதில் நிலைத்து இருக்க முடியும்? சில காலங்களுக்கு பிறகு அவர்கள் ஏன் தங்களின் பழைய மதத்திற்கு மீளவில்லை. ///

    என்று கூறியுள்ளீர்கள். அதனால் தான் இசுலாமியர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய சுட்டியை தந்துள்ளேன். இப்பொழுது அவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டுதான் முன்பு இசுலாமை ஏற்றார்கள் என்று ஒத்துக்கொள்வீர்களா?//


    எனக்கு சிரிப்பு தான் வருகிறது போங்கோ…

    மீண்டும் நான் முன்பு குறிப்பிட்ட தவறையே தான் செய்கிறீர்கள் சகோதரரே.. மறுப்பு தெரிவிப்பதில் தான் அவசரம் காட்டி இருக்கிறீர்கள்.
    கிட்டத் தட்ட ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவ்வளவெல்லாம் போக வேண்டாம். குறைந்த பட்சம் நீங்கள்
    புகழும் அக்பர் காலத்திலாவது மீண்டும் இந்து மதத்திற்கு மாறி இருக்கலாமே. அவர் தான் இந்துக்களை நல்ல விதத்தில் நடத்தினாரே. பிறகு ஏன் மாறவில்லை. யாருக்கு பயந்து?

    மீண்டும் ஔரங்கசீப் காலத்தில் மிரட்டப் பட்டார்கள் என்று கூறுவீர்களாயின், அவருக்குபின் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக யாருக்கு பயந்து மாறவில்லை.

    சரி போகட்டும். சுதந்திரத்திற்கு பிறகாவது மாறி இருக்கலாமே. ஏன் மாறவில்லை?

    அதுவும் போகட்டும். இதே மபி-யை பிஜேபி ஆட்சி செய்த காலத்தில் யார் இவர்களை மிரட்டியது? 2012 வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

    சரி அதுவும் போகட்டும். Atleast மாறியவர்களாவது நாங்கள் மிரட்டப் பட்டிருந்தோம். இப்பொழுது தான் மீண்டுவர சரியான சூழ்நிலை(?) உள்ளது என்றாவது கூறினார்களா?

    அந்த சுட்டியில் இந்துக்களோடு சோ்ந்து தொப்பி போட்ட முஸ்லிம்களும்(?) மதச் சடங்குகள் செய்வது போலல்லவா இருக்கிறது? நான் ஏற்கனவே கூறியது போல அதில் எனக்கு சந்தேகங்கள் உள்ளது. இருப்பினும் நாம் இங்கு விவாதிக்கும் “மிரட்டலுக்கு“ சம்பந்தம் இல்லாததால் நான் அதை பற்றி எதுவும் இங்கு கூற விரும்பவில்லை.

    இறுதியாக,

    ”அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை” (அல் குர்ஆன்)

    உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு. (அல் குர்ஆன்)

    இதுதான் இஸ்லாம். மிகமிக எளிமையானது. இலகுவானது. யாரையும் நிர்பந்திக்கக் கூடாது என்ற சட்டங்கள் உள்ள இஸ்லாத்தினை, அதன் கோட்பாடுகளுக்கு முரண்பாடாக அதே இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தித்தார்கள் என்பது அபத்தம்.

    ReplyDelete
  89. This comment has been removed by the author.

    ReplyDelete
  90. சகோ. புரட்சிமணி.

    //என் (நம்?) இந்திய திருநாட்டின்//

    மொகலாயர் காலத்திற்கெல்லாம் போக வேண்டாம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றினையாவது கண்களில் எந்த கலர் கண்ணாடியும் இல்லாமல் ஆராயுங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆணித்தரமான பதில் கிடைக்கும்.

    இன்று தேசபக்தி பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் பலர் வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசி நாட்டை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கெதிராக வெகுண்டெழுந்து தங்கள் உடல் பொருள் ஆவி என்று தங்கள் சதவீதத்திற்கும் மேல் தியாகம் செய்து சுதந்திரம் வாங்கி கொடுத்த சமுதாயமய்யா எங்கள் சமுதாயம்.

    எங்களை பார்த்து எவ்வளவு இளக்காரமாக ஒரு ?-ல் தேசபக்தியை கேவலப் படுத்துகிறீர்?

    தெரிந்து கொள்ளுங்கள்…

    மார்க்த்தினால் முஸ்லிம்,

    இனத்தால் திராவிடன்,

    மொழியால் மறத்தமிழன்,

    தேசத்தால் இந்தியன்.

    இவை எல்லாமும் சேர்ந்த மற்றெந்த மதத்தினரையும், இனத்தவரையும், மொழியினரையும், தேசத்தவரையும் துாற்றாத, வெறுக்காத மனிதாபிமானமுள்ள மனிதன்.

    எங்கள் தேசபக்தியை நாங்கள் எவருக்கும் நிருபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் இந்த தேசத்தை கட்டியெழுப்பியதில் மற்ற அனைவரையும் விட பெரும் பங்காற்றியது/பங்காற்றுவது முஸ்லிம்கள் என்பது அனைவருக்கும் ஏன் உங்களுக்கும் கூட மிக நன்றாகவே தெரியும்.

    ReplyDelete
  91. இராஜகிரியார் said...
    //எனக்கு சிரிப்பு தான் வருகிறது போங்கோ…

    மீண்டும் நான் முன்பு குறிப்பிட்ட தவறையே தான் செய்கிறீர்கள் சகோதரரே.. மறுப்பு தெரிவிப்பதில் தான் அவசரம் காட்டி இருக்கிறீர்கள்.//


    மேற்கூறியவற்றை நான் கூறியதாக நினைத்து ஒரு முறை படித்து கொள்ளுங்கள்.

    // கிட்டத் தட்ட ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவ்வளவெல்லாம் போக வேண்டாம். குறைந்த பட்சம் நீங்கள்
    புகழும் அக்பர் காலத்திலாவது மீண்டும் இந்து மதத்திற்கு மாறி இருக்கலாமே. அவர் தான் இந்துக்களை நல்ல விதத்தில் நடத்தினாரே. பிறகு ஏன் மாறவில்லை. யாருக்கு பயந்து?

    மீண்டும் ஔரங்கசீப் காலத்தில் மிரட்டப் பட்டார்கள் என்று கூறுவீர்களாயின், அவருக்குபின் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக யாருக்கு பயந்து மாறவில்லை. //

    நல்ல கேள்வி. உங்களை ஒருவர் மிரட்டி இசுலாமில் சேர்க்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் வாழ்நாளுக்குள் முடிந்தால் பழைய மதத்திற்கு மாறுவீர்கள். ஆனால் இசுலாமியர்கள் ஆட்சி செய்ததோ பல ஆண்டுகள் பின்பு எப்படி இவர்கள் தங்களது தாய் மதத்திற்கு திரும்பி இருக்க முடியும்? தந்தை மகனுக்கு பேரனுக்கு என்று சொல்லி கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் கேட்டது போல் அவர்களால் தாய் மதத்திற்கு திரும்ப முடியவில்லை. இப்பொழுது புரிகிறதா?


    //இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் இல்லை சகோதரரே…
    சுமார் 1400 வருடங்களுக்கு முன்னால் முதன் முதலில் தொகுக்கப் பட்ட குர்ஆனின் அரபி மொழியிலான இரு பிரதிகள் இன்றும் தாஷ்கண்டிலும், இஸ்தான்புல்லிலும் பத்திரமாக பாதுகாக்க பட்டு வருகிறது.//

    இதைத்தான் அல்லா பாதுகாக்கிறார் என்கிறீர்களா? :)

    இல்லை தமிழ் பிரதிகள் அதனோடு ஒத்து போகும் என்கிறீர்களா? அப்படி எனில்
    // இன்று வரை அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இருப்பதால் தான் அது இன்னும் துாய இஸ்லாமாக இருக்கிறது //
    என்ற கருத்தை மாற்றி கொள்லுங்கள். ஏன் எனில் தமிழ் குரான்களில் பல வார்த்தைகள் மாறியுள்ளன.
    ஆங்கில குரானுக்கும் தமிழ் குரானுக்கும் சில இடங்களில் பொருள் வேறுபாடு கூட உண்டு. நீங்களே
    சோதித்து பாருங்கள்

    ReplyDelete
  92. இராஜகிரியார் said...

    //இறுதியாக,

    ”அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை” (அல் குர்ஆன்)

    //உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு. (அல் குர்ஆன்)

    இதுதான் இஸ்லாம். மிகமிக எளிமையானது. இலகுவானது. யாரையும் நிர்பந்திக்கக் கூடாது என்ற சட்டங்கள் உள்ள இஸ்லாத்தினை, அதன் கோட்பாடுகளுக்கு முரண்பாடாக அதே இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தித்தார்கள் என்பது அபத்தம்.//


    9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

    4-89. நம்பிக்கை கொண்டவர்களே) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும்

    நிராகரிபோராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதயே
    அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாவின் பாதையில் புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள்
    எடுத்துக் கொள்ளாதீர்கள் ; (அல்லாவின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்து விட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்லுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் -அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.

    நாம சமாதான உடன்படிக்கையில இருக்கோம் :)

    நன்றி

    ReplyDelete

  93. இராஜகிரியார் said...
    ////எங்களை பார்த்து எவ்வளவு இளக்காரமாக ஒரு ?-ல் தேசபக்தியை கேவலப் படுத்துகிறீர்?//
    உங்கள் ஒருவரை பார்த்துதான் கேட்டேன். நீங்கள் ஏன் 'எங்களை' என்கிறீர்கள். இந்தியாவை கேவலமாக சித்தரிக்கும் பதிவுகளை உங்கள் சகோதரர் இட்டதை நீங்கள் படிக்க வில்லையா? அதனால் தான் அந்த ?
    உங்களின் தேசப்பற்றை நான் வரவேற்கிறேன். பல இசுலாமியர்கள் ராணுவத்தில் ரத்தம் சிந்தியுள்ளனர் அதை அறிவேன். என்னுடைய அந்த ? உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    //ஏனென்றால் இந்த தேசத்தை கட்டியெழுப்பியதில் மற்ற அனைவரையும் விட பெரும் பங்காற்றியது/பங்காற்றுவது முஸ்லிம்கள் என்பது அனைவருக்கும் ஏன் உங்களுக்கும் கூட மிக நன்றாகவே தெரியும்.//
    உணமைதான் மறுப்பதற்கில்லை. எப்படி சில சுயநலவாத இந்துக்கள் இருந்தனரோ அவ்வாறே சில இசுலாமியர்களும் இருந்தார்கள் எனபதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் தானே. எந்த சமுதாயத்திலும் நூறு சதவீதம் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நான் கூறவில்லை. இந்துக்களிலும் தேசத்த்ரோகிகள் இருந்தார்கள் இசுலாமிலும் இருந்தார்கள் எனபதுதான் என் நிலைப்பாடு.

    //இவை எல்லாமும் சேர்ந்த மற்றெந்த மதத்தினரையும், இனத்தவரையும், மொழியினரையும், தேசத்தவரையும் துாற்றாத, வெறுக்காத மனிதாபிமானமுள்ள மனிதன்.//

    இதுதான் இதுதான் சகோ அனைத்து மனிதர்களிடமும் இருந்து வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. இந்த பிரார்த்தைனையை நீங்களும் செய்யுங்கள்.
    இந்த விவாதத்தின் மூலம் உங்களை பற்றி அறிய முடிந்தது.
    நன்றி :)

    ReplyDelete
  94. Anonymous12:32 PM

    http://www.nambalki.com/2012/09/1_21.html

    //'இந்து நாடாக' இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது; அப்படி அணிவது மாபெரும் குற்றம்.

    இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்.

    இந்த அசிங்கத்தை அவமானத்தை அவலத்தை அடக்குமுறையை எதிர்த்து நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் "கிருத்துவத்திற்கு மாறினார்கள்." அவர்கள் ஜாதிப் பெண்கள் முலைகளை அன்னியரின் பார்வையில் இருந்து மறைக்க போராடினர். இது தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது (ஆதாரம்; தமிழ் விக்கிபீடியா)'//

    மார்க்கம் முன்பு எப்படி இருந்தது? என்பதை மருத்துவர் நம்பள்கி அவர்கள் மிக விரிவாக படங்களோடு வெளியிட்ட பதிவை பார்த்துக் கொள்ளவும. இஸ்லாம் இந்தியாவில் வளர இதுவும் ஒரு காரணம்.


    ReplyDelete
  95. இராஜ கிரியார்,

    ஏன்யா ரொம்ப நோண்டி ஆப்பு வாங்கிக்க அலையுறீர்?

    ஏழாம் நூற்றாண்டுக்கு அப்புறம் தான் இஸ்லாம் தோன்றியது, ஆனால் அதுக்கு முன்னாடி இருப்பதுக்கு எல்லாம் உரிமை கொண்டாடிக்கிறதே என்ன நியாயம்?

    எவன் வேண்டுமானாலும் புத்தகம் போட்டு எல்லாம் எனக்கு அப்புறம்தான்னு சொல்லிக்கலாம், அதை நம்புரது ஒருத்தனோட அறிவை பொறுத்து.

    உனக்கு அறிவில்லை என்றால் ஊரில் இருக்கவன் எல்லாம் அப்படியா?

    7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மத்திய அரேபியால் என்ன புடுங்கிட்டு இருந்தாங்கன்னு தெரியுமா?

    ஆனால் அதற்கு முன்னரே விவசாயம், இலக்கியம், நெசவுன்னு கலாச்சாரமா இங்க இருந்தாங்க.

    நெசவு தொழிலே தெரியாத மத்திய அரேபியாவில எதை வச்சு புர்க்கா போட்டு இருப்பாங்கன்னு கேட்ட உமது பதில் என்ன?

    துணி , முத்து, தங்க ஆபரணம் என இந்திய பகுதியில் இருந்து தான் எல்லாம் அங்கே போச்சு. அதை வாங்கி பயன்ப்படுத்தியது அங்கு இருந்த அரச, பணக்கார குடும்பம், மற்றவங்க எல்லாம் திறந்த மேனி தான் :-))

    இடுப்புல மட்டும் ஒரு வட்டுடை :-))


    சும்மா புர்க்கா ,கூர்க்கானு இப்போ சொன்னா போதுமா, 7 ஆம் நூற்றாண்டு முன்னர் மத்திய அரேபியாவின் வரலாறு,இலக்கியம் , கல்வெட்டு என்ன சொல்லுதுனு போய் படியும்.

    நிர்வாணமா திரிஞ்சுட்டு மூஞ்சு மூடுவது பற்றி பேசினால் பழைய வரலாறை வெளியிட வேண்டி வரும் :-))

    ReplyDelete
  96. சகோ. புரட்சிமணி.

    //நல்ல கேள்வி. உங்களை ஒருவர் மிரட்டி இசுலாமில் சேர்க்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் வாழ்நாளுக்குள் முடிந்தால் பழைய மதத்திற்கு மாறுவீர்கள். ஆனால் இசுலாமியர்கள் ஆட்சி செய்ததோ பல ஆண்டுகள் பின்பு எப்படி இவர்கள் தங்களது தாய் மதத்திற்கு திரும்பி இருக்க முடியும்? தந்தை மகனுக்கு பேரனுக்கு என்று சொல்லி கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் கேட்டது போல் அவர்களால் தாய் மதத்திற்கு திரும்ப முடியவில்லை. இப்பொழுது புரிகிறதா?//

    புரிகிறது புரிகிறது. உங்களுக்கு எவ்வளவு விளக்கமாக கூறினாலும் விளங்காது என்பது புரிகிறது.

    எப்படி எப்படி?

    // தந்தை மகனுக்கு பேரனுக்கு என்று சொல்லி கொண்டிருக்க மாட்டார்கள்//

    சாதாரணமாக இரு குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினை கூட குறைந்தபட்சம் ஒரு சில தலைமுறைகளுக்கு தெரியும். இரத்தில் ஊறிப் போன மதம் சம்பந்தமான விஷயங்கள் பற்பல தலைமுறைகளுக்கு கொழுந்து விட்டு எரியும் சகோதரரே. பதில் கூறுகிறேன் பேர்வழி என்று இப்படியெல்லாம் மழுப்பக் கூடாது.

    ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட ஔரங்கசீப் காலத்தில் மிரட்டி மதம் மாற்றப் பட்டவர்கள் ஔரங்கசீப் காலத்திலேயே இறந்து விட்டார்களா என்ன? ஔரங்கசீப் ஒன்றும் பலநுாறு ஆண்டுகள் ஆளவில்லையே. ஒரு 50 ஆண்டுகள் மட்டும் தானே ஆண்டார்? பிறகு எப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போனது?

    சரி போகட்டும். மகனுக்கும் பேரனுக்குமே தெரியாதது இத்தனை ஆண்டுகள் கழித்து 2012-ல் எப்படி தெரிந்தது?

    எப்படி பார்த்தாலும் உங்கள் (பொய்) வாதங்கள் சொதப்புகின்றதே. மறுப்பு மட்டுமே கொடுப்பது என்று முடிவு செய்து விட்டீர்கள். கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டாவது கொடுங்கள். சொதப்புவதாவது கொஞ்சம் குறையும்.

    ReplyDelete
  97. //இதைத்தான் அல்லா பாதுகாக்கிறார் என்கிறீர்களா? :)

    இல்லை தமிழ் பிரதிகள் அதனோடு ஒத்து போகும் என்கிறீர்களா? அப்படி எனில்
    // இன்று வரை அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இருப்பதால் தான் அது இன்னும் துாய இஸ்லாமாக இருக்கிறது //
    என்ற கருத்தை மாற்றி கொள்லுங்கள். ஏன் எனில் தமிழ் குரான்களில் பல வார்த்தைகள் மாறியுள்ளன.
    ஆங்கில குரானுக்கும் தமிழ் குரானுக்கும் சில இடங்களில் பொருள் வேறுபாடு கூட உண்டு. நீங்களே
    சோதித்து பாருங்கள்//

    மீண்டும் அவசரப் படாமல் நான் என்ன கூறியுள்ளேன் என்று சற்று நிதானமாக வாசித்து பாருங்கள்.

    ReplyDelete
  98. //என்னுடைய அந்த ? உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.//

    பரவாயில்லை சகோதரரே. நீங்கள் விளங்கி கொண்டாலே போதுமானது.

    //இதுதான் இதுதான் சகோ அனைத்து மனிதர்களிடமும் இருந்து வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. இந்த பிரார்த்தைனையை நீங்களும் செய்யுங்கள்.//

    நிச்சயமாக. பொய்களையும் புரட்டுகளையும் கூறி மக்களை பிரித்து மத/அரசியல் இலாபம் தேடும் கயவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி மக்கள் அவர்களை புறந்தள்ளச் செய்து மனித குலத்தினில் ஒற்றுமையை ஏற்படுத்தி அமைதியான வாழ்விற்கு வழிவகுப்போம்.

    ReplyDelete
  99. வவ்வால்!

    //7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மத்திய அரேபியால் என்ன புடுங்கிட்டு இருந்தாங்கன்னு தெரியுமா?

    ஆனால் அதற்கு முன்னரே விவசாயம், இலக்கியம், நெசவுன்னு கலாச்சாரமா இங்க இருந்தாங்க.//

    ஏழாம் ஆம் நாற்றாண்டு வரை எல்லாம் போக வேண்டாம். மொகலாயரும் வெள்ளைக் காரனும் வந்ததற்குப் பின்பு தான் பல பெண்களுக்கு மார்பில் துணி போட உரிமையே வருகிறது. அதற்கு முன்னால் மார்புக்கு கூட வரி போட்ட கொடுமை உலகில் எங்குமே கிடையாது. இந்த லிங்கில் சென்று தொடரை படித்து இஸ்லாத்துக்கு முன்னால் நம் நாட்டு நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளவும்.

    http://www.nambalki.com/2012/09/1_21.html

    ReplyDelete
  100. @ சகோ.புரட்சிமணி,

    வேண்டுமென்றே ஒரு சமூகத்தின் பால் ஏற்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக மறைக்கப்பட்ட அவர்களின் வரலாற்றை, காழ்ப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக திரிக்கப்பட்ட அவர்களின் வரலாற்றை ஒருவர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். அதனை சிலர் ஆதரிக்கின்றனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்றால்... உடனே இவர்களின் தேசப்பற்று பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவீர்களா..? திரித்தவர் மேல் அல்லவா கோபம் கொள்ள வேண்டும்..!

    இது நியாயமா..? இது நேர்மையா..? மாறாக, வரலாறு திரிக்கப்பட்டதற்காக திரித்த சமூகத்தின் பிரிதிநிதியாக மன்னிப்பு அல்லவா கேட்டிருக்க வேண்டும்..! அதுவன்றோ மனிதத்தன்மை..!? அதுவல்லவோ மாண்பு..?!

    நீங்கள் ஒன்றை அவசியம் அறிந்திருக்க வேண்டும். 1947 ஆகஸ்டு 15 க்கு பின்னர்தான் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்ற நாடு அதிகாரபூர்வமானது..! அப்போது அந்நாட்டின் எல்லையில் உள்ளோர் அனைவரும் இந்தியர்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அதிகாரத்தில் உள்ளோருக்கு உரியது..!

    ஆனால்... தனது பொறுப்புக்கு எதிராக....

    அப்போது, அதிகாரத்தில் இருந்த படேல்-ராஜாஜி போன்ற ஃபாசிஸ்டுகள், முஸ்லிம் இந்தியர்களை பாகிஸ்தானுக்கு தொரத்த வேண்டி... கராச்சிக்கு இலவச ரயில்கள் விட்ட செயல் கேவலமன்றோ..?

    ஆனாலும், அதில் தேச விரோதிகள் ஏறி கராச்சிக்கு சென்று விட்டனர். அதேநேரம், அதில் ஏறாமல் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் 'இதுதான் எனது தேசம், இதுதான் எனது மண்' என்று தங்கள் சுதேசியத்தை- தேசப்பற்றை உலகுக்கு நிரூபித்தவர்கள்.

    எனவே, நாங்கள் தான் தேசபக்தியை நிரூபிக்காத முஸ்லீம் அல்லாத மற்றவரை பார்த்து தேசபக்தி பற்றி கேள்வி கேட்க வேண்டும்.

    ஆனாலும், முஸ்லிம்கள் அப்படி ஒருபோதும் தனது சக குடிமகனை பார்த்து அப்படி மனம் புண்படும்படி கேட்டது இல்லை..!

    எனினும், தங்களின் செயல் தவறு என்று உணர்ந்ததால்... நீங்கள் மனிதரில் உயர்ந்தவர் ஆகிவிட்டீர்கள். தங்களுக்கு இறைவனின் பேரருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  101. Anonymous2:51 PM

    //7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மத்திய அரேபியால் என்ன புடுங்கிட்டு இருந்தாங்கன்னு தெரியுமா?

    ஆனால் அதற்கு முன்னரே விவசாயம், இலக்கியம், நெசவுன்னு கலாச்சாரமா இங்க இருந்தாங்க.//


    இக்பால் செல்வன் said...

    மிக அருமையான பதிவு சகோ. ஏற்கனவே தெரிந்த விடயம் என்றாலும் நினைவு மீட்டல் செய்ய வேண்டியே உள்ளது !!! இந்தியா இந்து மத நாடாக இருந்திருந்தால் இன்னும் பல கொடுமைகள் அரங்கேறி இருக்கும் ... ! நம்பூதிரிகள் நாயர் பெண்களை எல்லாம் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் வேறு சட்டங்கள் இருந்தனவாம் .. இன்று தமிழுலகில் நம்பூதிரிகளுக்கு புகழ்பாடும் நாயர்மார்கள் இவற்றை மறந்தார்களோ / மறைத்தார்களோ .. !!!

    நாடார் இனப் பெண்களின் அவல நிலையை நினைத்தால் என்ன சொல்வது, ஒரு பெண்ணின் மார்பை மறைக்கவே அவளுக்கு உரிமை நல்காது, வரிகள் விதித்தமை எல்லாம் கொடுமையில் கொடுமை ... !!! இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாராம் கடவுள், பத்மநாபஸ்வாமி கோவிலில் படுத்துக் கொண்டே ..த்துக் கொண்டு இருந்தாரோ !!! ச்சா .. !!! இப்படியான கொடுமைகள் பல இடங்களிலும் நடந்ததே .. இலங்கையில் கூட தொடியாக்கள் என்ற தலித்கள் மார்பு சீலை போடப்படாமல் வைக்கப்பட்டனர் என்றும், இந்தியாவெங்கும் பல அடக்கப்பட்ட சாதிய பெண்களை கட்டாயப்படுத்தி புணர்ந்துக் கொண்டார்கள் ஆதிச்சச் சாதி வெறியர்கள் ( அவர்கள் செய்தமைக்கு நான் வெட்கப்படுகின்றேன் ) ... !!!

    கடவுள் எல்லாம் பெண் பாதிக்கப்படும் போது சேலைக் கொடுப்பது கதைகளில் மட்டும் தான். கோவிலிலேயே கற்பழிப்பு நடந்தால் கூட கடைக்கண்ணால் ரசித்துப் பார்க்கும் வெறியன் தானே இவர்களின் கடவுள்கள் ... !!!
    September 21, 2012 11:08 AM

    ReplyDelete
  102. சு.பி.சுவாமிகள்,

    நம்பள்கி தான் சரித்திர ஆசிரியரா அப்போ, நாளைக்கு அவரே இஸ்லாமியர்கல் குலத்தொழில் விபச்சாரம்னு சொன்னால் ஏற்றுக்கொள்வீரா?

    மேலும் துணி போட்டாங்க ,போடலை என்பதை விட ,அப்படி மூடி இருந்தா தான் பெண்களின் கற்பும் ஒழுக்கம் இருக்கும்னு சொல்லிக்வில்லையே, ஆனால் நிர்வாணமா திரிஞ்ச ஒரு நாட்டில் இருந்து உருவான மதம் மூட சொன்னது என 2012 இலும் சொல்லிக்கொண்டு இருப்பது ஏன்?

    அக்காலத்தில் இருந்த பலவற்றையும் இந்தியாவில் மாற்றிக்கொண்டாயிற்று , அப்போ இஸ்லாமிய புர்க்காவையும் இப்போ மாற்றிக்கொள்ளலாமே. ஏன் இன்னும் பழமையே பேசிக்கொண்டு?

    ராபெர்ட் கிளைவ், டல்ஹவுசி, ரிப்பன் பிரபு பற்றி எல்லாம் என்ன நினைக்கிறீர்கள், ஒருங்கினைந்த இந்தியாவை உருவாக்கினார்கள், இந்தியாவுக்காக பாடுபட்டார்கள் என பெருமித உணர்வு கொண்டு பதிவுப்போடுவேன் என்கிறீர்களா?

    ஒன்றும் பெருமிதமாக பதிவு போட்டது போல தெரியலையே?

    மதத்தின் பெயரால் தேசத்தை இழிவாக பேசுவது புனித தொழில் :-))

    கண்டிப்பாக சுவனம் கிடைக்கும்!!!

    ReplyDelete
  103. சகோ. புரட்சிமணி.

    //நாம சமாதான உடன்படிக்கையில இருக்கோம் :)//

    நீங்கள் குறிப்பிட்ட வசனங்கள் எதற்காக எந்த சூழ்நிலையில் இறக்கப்பட்டது என்ற வரலாற்றையும் சேர்த்து பார்க்கும் போது மிக எளிதாக விளங்கி கொள்ளலாம்.

    இந்த வசனங்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவர்களை மக்காவிலிருந்து விரட்டிய மக்கா காஃபிர்களுக்காக சொல்லப்பட்டது. ஊரை விட்டு விரட்டியதும் அல்லாமல் மதினாவுக்கும் வந்து முஸ்லிம்களை கொலை செய்ய திட்டமிட்டனர் மக்கா காஃபிர்கள். இவர்களிடமே கடுமையாக நடந்து கொள்ள இறைவன் கட்டளையிடுகிறான். மேலும் பல உறவினர்கள் இரு தரப்பிலும் இருந்ததால் ரகசியங்கள் பரிமாறப்பட்டு விடக் கூடாது என்பதால் அத்தகையோரை நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

    உதாரணமாக அநியாயமாக உங்கள் சொந்த ஊரில் உங்களுக்கு சொல்லெணா துன்பங்களும், துயரங்களும் கொடுத்து ஊரைவிட்டு விரட்டி உங்கள் சொத்துக்களையும் அபகரித்து கொண்டு பின்னும் உங்களை கொல்லவந்தால் அவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் புரட்சிமணி? கொஞ்சியா குலாவுவீர்கள்? நமக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?

    இவ்வளவுக்கு பின்னும் கூட போர்களுக்கு எவ்வளவு கட்டுபாடுகள் உள்ளன என்று பின்வரும் வசனங்களை பாருங்கள்.

    போரை முதலில் துவக்கக் கூடாது என்று கட்டளையே இடுகிறது குர்ஆன் 2:190, 9:12,13

    எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போர் செய்யக் கூடாது என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது.8:61

    'கொல்லுங்கள், வெட்டுங்கள்' என்ற வசனம் போர்க்களத்தில் போரிடும் போது நமக்கு இருக்க வேண்டிய உணர்வை அந்த வசனங்கள் சொல்லுகின்றன. போர்க்களத்தில் அவ்வாறு இருந்தால்தான் போரில் வெற்றி பெற முடியும்.

    அந்த போரிலும் பெண்கள், சிறுவர்கள், மத குருமார்கள், வயோதிகர்களை கொல்லக் கூடாது என்றும் கட்டளை வருகிறது.

    அதனால் தான் உங்களிடம் அன்புடன் கேட்டு கொள்கிறேன். எந்த முன்முடிவுகளுமின்றி குர்ஆனையும், இஸ்லாத்தினையும் அணுகி ஆராயுங்கள்.

    ReplyDelete
  104. இராஜகிரியார் said...
    //புரிகிறது புரிகிறது. உங்களுக்கு எவ்வளவு விளக்கமாக கூறினாலும் விளங்காது என்பது புரிகிறது. //
    இதே எண்ணமே எனக்கும் உங்களை பற்றி எனக்கும் ஏற்ப்படுகிறது.

    //சரி போகட்டும். மகனுக்கும் பேரனுக்குமே தெரியாதது இத்தனை ஆண்டுகள் கழித்து 2012-ல் எப்படி தெரிந்தது?//

    அவர்கள் முன்னோர்கள் எப்பொழுது மதம் மாறினார்கள் அவர்கள் ஏன் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறினார்கள் என்று தெரியாமல் இது பற்றி கூறுவது உங்களுக்கும் சரி எனக்கும் சரி சிரமமே.

    //எப்படி பார்த்தாலும் உங்கள் (பொய்) வாதங்கள் சொதப்புகின்றதே. மறுப்பு மட்டுமே கொடுப்பது என்று முடிவு செய்து விட்டீர்கள். கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டாவது கொடுங்கள். சொதப்புவதாவது கொஞ்சம் குறையும்.//
    யாருடைய வாதங்கள் பொய் எனபது நடுநிலை வாதிகள் அறிவர்.

    ReplyDelete
  105. இராஜகிரியார் said...
    //மீண்டும் அவசரப் படாமல் நான் என்ன கூறியுள்ளேன் என்று சற்று நிதானமாக வாசித்து பாருங்கள்//
    ஒரு வார்த்தை கூட மாறாமல் அல்லா பாதுகாக்கிறார் என்று நீங்கள் தான் கூறினீர்கள்.வார்த்தைகள் பொருள்கள் மாறியுள்ளன என்றால் இப்படி கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவதி அடியேனும் புரிந்துகொள்ளும்படி கூறுங்கள்.

    ReplyDelete
  106. இராஜகிரியார் said...
    //நிச்சயமாக. பொய்களையும் புரட்டுகளையும் கூறி மக்களை பிரித்து மத/அரசியல் இலாபம் தேடும் கயவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி மக்கள் அவர்களை புறந்தள்ளச் செய்து மனித குலத்தினில் ஒற்றுமையை ஏற்படுத்தி அமைதியான வாழ்விற்கு வழிவகுப்போ//
    நிச்சயம் சகோ :)

    ReplyDelete

  107. முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
    வாங்க சகோ நலமா :)
    உங்களோட பேசி ரொம்ப நாளாச்சு
    //இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்றால்... உடனே இவர்களின் தேசப்பற்று பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவீர்களா..? திரித்தவர் மேல் அல்லவா கோபம் கொள்ள வேண்டும்..!//
    அப்படி இல்லை சகோ நான் ஒட்டுமொத்தமாக கேள்வி கேட்கவில்லை அவர் ஒருவரைத்தான் கேட்டேன்.
    சில பல இசுலாமியர்கள் இந்தியாவை விட சவூதி தான் தனது தாய் நாடு போல் பேசுவதையும், இந்தியாவை கேவலப்படுத்துவது போல் பதிவிட்டதையும், நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதுமட்டுமல்ல இன்று தமிழ் பேசும் அனைவரும் இந்தியர்கள் அல்ல பிற நாட்டு குடிகளும் உள்ளனர். அதையும் கொஞ்சம் மனதில் வையுங்கள். பிறர் மனதை புண்படுத்துவது என்பதை நான் என்றுமே செய்ய மாட்டேன் அறியாமல் செய்தாலும் அதற்காக வருந்தவே செய்வேன்.


    //அப்போது, அதிகாரத்தில் இருந்த படேல்-ராஜாஜி போன்ற ஃபாசிஸ்டுகள், முஸ்லிம் இந்தியர்களை பாகிஸ்தானுக்கு தொரத்த வேண்டி... கராச்சிக்கு இலவச ரயில்கள் விட்ட செயல் கேவலமன்றோ..?//
    சகோ மதத்தால் ஒரு நாட்டை துண்டாடியது எனபது மன்னிக்க முடியாத செயல். அதற்க்கு சர் சயேத் அகமது கான் முதல் மவுண்ட் பேட்டன் வரை ஜின்னா , நேரு, காந்தி, பட்டேல் என பாலரும் காரணம். என்னால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாத மன்னிக்க முடியாத நிகழ்வாகவே இதை நான் காண்கிறேன். இதற்க்கு இந்துக்கள் மட்டுமே காரணம் என்று கூறுவதுதான் இசுலாமியர்கள் செய்யும் தவறு. சில பல இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று ஏற்றுக்கொண்டால் எந்த பிரைச்சனையும் வராது.

    இருப்பினும் இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமே. இதை எப்படி சரி செய்வது என்றே தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால் சொல்லுங்கள். சேர்ந்து செயல்படுவோம்.

    //எனினும், தங்களின் செயல் தவறு என்று உணர்ந்ததால்... நீங்கள் மனிதரில் உயர்ந்தவர் ஆகிவிட்டீர்கள்.//
    இதெல்லாம் பெரிய வார்த்தை சகோ.

    //தங்களுக்கு இறைவனின் பேரருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்.//
    நன்றி சகோ.நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன், நீங்கள் இறைவனை உணரவேண்டும் காண வேண்டும் என்று.
    நன்றி :)

    ReplyDelete
  108. இராஜகிரியார் said...
    //இந்த வசனங்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவர்களை மக்காவிலிருந்து
    விரட்டிய மக்கா காஃபிர்களுக்காக சொல்லப்பட்டது. ஊரை விட்டு விரட்டியதும் அல்லாமல் மதினாவுக்கும்
    வந்து முஸ்லிம்களை கொலை செய்ய திட்டமிட்டனர் மக்கா காஃபிர்கள். இவர்களிடமே கடுமையாக நடந்து கொள்ள
    இறைவன் கட்டளையிடுகிறான். மேலும் பல உறவினர்கள் இரு தரப்பிலும் இருந்ததால் ரகசியங்கள் பரிமாறப்பட்டு விடக் கூடாது
    என்பதால் அத்தகையோரை நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.//
    நீங்கள் கூறிய நிகழ்விற்கும் அந்த வசனத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை . ஒருமுறை நன்றாக படித்து பாருங்கள்.
    அந்த வசனம் அல்லாவின் பாதையை ஏற்றுகொண்டவர்களுக்கு ஏற்றுக்கொள்ளதவர்களை பற்றி கூறுவது போல் தான் உள்ளது

    மேலும் நீங்கள் கூறுவது போல எடுத்து கொண்டாலும் (இல்லை இல்லை நீங்கள் கூறியது போல்
    தான் இந்த வசனம் இருக்க வேண்டும் எனபதே எனது வேண்டுதல். இந்த மாதிரி சில வசனங்களைத்தான் தீவிரவாதிகளை
    உருவாக்குவதற்காக சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என நினைக்கின்றேன்) இந்த காலத்திற்கு அது எந்த வகையில் பயன்படும்.
    அந்த வசனம் இந்த காலத்திற்கு தேவையற்றது தானே?. இதைதான் கூறுகிறேன் இசுலாமில் சில பல விடயங்கள்
    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல இல்லை எனவே அவற்றை விட்டு விட வேண்டும்.
    சில பல நல்ல விடயங்கள் இக்காலத்திற்கு பொருந்தும்படியும் உள்ளன எனவே அவற்றை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்று.
    காலத்திற்கு ஏற்றார் போல தேவையற்றதை சீர் திருத்தி தேவையானதை ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதானே நியாயம்.
    எல்லா மதங்களும் இதை செய்கின்றன. இசுலாமும் இதை செய்தால் இசுலாமும் உணமையிலேயே
    அமைதி மார்க்கமாக மாறும் அமைதி மார்க்கமாக அனைவராலும் பார்க்கப்படும்.
    மாற்றத்தை ஏற்க்காததே இசுலாமின் தவறே தவிர இசுலாம் தவறான மார்க்கம் அல்ல என்பதே என்னுடைய புரிதல்

    நன்றி சகோ

    ReplyDelete
  109. சகோ. புரட்சிமணி.

    //சரி போகட்டும். மகனுக்கும் பேரனுக்குமே தெரியாதது இத்தனை ஆண்டுகள் கழித்து 2012-ல் எப்படி தெரிந்தது?//

    அவர்கள் முன்னோர்கள் எப்பொழுது மதம் மாறினார்கள் அவர்கள் ஏன் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறினார்கள் என்று தெரியாமல் இது பற்றி கூறுவது உங்களுக்கும் சரி எனக்கும் சரி சிரமமே.//

    அவர்கள் முன்னோர்கள் மிரட்டப் பட்டு மதம் மாறினார்கள் என்றும், பின்பு மீண்டும் தற்போது தான் இந்து மதத்திற்கு மாறுவதற்கான சூழ்நிலை(?) ஏற்பட்டது என்றும் நான் சொல்லவில்லை. நீங்கள் தான் எவ்வித ஆதாரமும் தராமல் கூறினீர்கள்.

    ////எப்படி பார்த்தாலும் உங்கள் (பொய்) வாதங்கள் சொதப்புகின்றதே. மறுப்பு மட்டுமே கொடுப்பது என்று முடிவு செய்து விட்டீர்கள். கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டாவது கொடுங்கள். சொதப்புவதாவது கொஞ்சம் குறையும்.//
    யாருடைய வாதங்கள் பொய் எனபது நடுநிலை வாதிகள் அறிவர்//

    மிக மிக சரியாக சொல்லியுள்ளீர்கள். :-)

    ReplyDelete
  110. சகோ. புரட்சிமணி.

    //ஒரு வார்த்தை கூட மாறாமல் அல்லா பாதுகாக்கிறார் என்று நீங்கள் தான் கூறினீர்கள்.வார்த்தைகள் பொருள்கள் மாறியுள்ளன என்றால் இப்படி கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவதி அடியேனும் புரிந்துகொள்ளும்படி கூறுங்கள்.//

    ஆஹா.. ஆஹா… அருமையான வரவேற்க்கத்தக்க அணுகுமுறை. இவ்வித்திலேயே எல்லாவற்றையும் அணுகினீர்கள் என்றால் அனைத்து உண்மைகளையும் விளங்கி கொள்ளலாம்.

    சுவனப்பிரியன் & சகோஸ். இதுபற்றி நிறைய ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. எனது நேரக் குறைவினால் தங்களில் யாராவது சகோ. புரட்சிமணிக்கு அதற்கான சுட்டிகளை தந்துதவ முடியுமா? நன்றி.

    ReplyDelete
  111. சகோ. புரட்சிமணி,

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/143-pathukakapadum-quran/

    நம் விவாதம் சம்பந்தமான ஓரிரண்டு விளக்கங்கள்.

    http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/quran_vetham_enbathrku_atharam/
    http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/islam_valal_parapapatathu_en/

    மேற்கொண்டு விவரங்கள் தேவைப்பட்டால் கூறுங்கள்... இன்ஷா அல்லாஹ் தருவருதற்கு முயற்சிக்கின்றேன்.

    ReplyDelete
  112. சகோ இராஜகிரியார் நீங்கள் கொடுத்த சுட்டியில் சொல்லும்படி ஒன்றும் இல்லை.
    அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் கவளி கற்க வில்லை என்கிறார். முகமது நபியை தவிர உடன் இருந்தவர்கள் கல்வி கட்ர்வர்கலாகத்தான் தெரிகிறது. உதாரணம் நபியை கொள்ள வந்த உமர், அவர் தங்கை, மற்றும் நபியின் வளர்ப்பு மகன் அலி. கதீஜா கூட கல்வி கற்றிருக்க வாய்ப்புகள் உண்டு...இருப்பினும் ஆதாரம் தான் இல்லை. இவரது மாமாவும் கல்வி கற்றவர் தான்.

    மூல மொழில் பாதுகாக்கப்படுகிறது ....அதாவது அரபியில் இதைத்தானே ஆதாரமாக அவர் சொல்கிறார்.
    இரண்டாயிரம் வருடங்களாக திருக்குறள் இல்லையா ஏன் அதற்க்கு முன்பே தொகுக்கப்பட்ட சங்க இலக்கியங்கள். குறிப்பாக தொல்காப்பியம்.

    மேலும் நபி அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது அலி மற்றும் பிறரால் தான் இது தொகுக்கப்பட்டது. எனவே அவர்கள் எழுதியதில் கூட சில பிழைகள் இருக்கலாம்.
    குரான் இறைவேதம், ஒரு வரிகூட மாறாமல் இருக்கின்றது என்று
    ஒரு இசுலாமியராக இதை நீங்கள் நம்பலாம் தவறில்லை. ஆனால் என்னைப்பொருத்த வரை இது மூட நம்பிக்கை. இப்படி கூறுவதற்கு என்னை மன்னிக்கவும் சகோ, நான் உண்மையாக நினைப்பதை கூறுகிறேன் பிறர் இசுலாமியர்கள் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல.
    நபி மொழிகளை குரானை நான் இறைவனை உணர்ந்தவரின் மொழிகளாக பார்க்கிறேனே தவிர இறைவன் தந்த வேதமாக அல்ல.
    சில (மூட) நம்பிக்கைகளால் நன்மை என்றால் அதை ஏற்ப்பதில் தவறில்லை......ஆனால் அது நன்மைக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
    நன்றி சகோ.
    பி.கு. நீங்கள் கொடுத்து ஒலி வடிவ கருத்துக்களை நான் கேட்கவில்லை. எனக்கு அந்த வசதி குறைவு.
    ---------------------------------------
    ஐயா சுவனம் என்னுடைய பல கேள்விகளை காணவில்லையே ஏன்?
    வாழ்க உங்கள் கருத்து சுதந்திரம்.
    நன்றி

    ReplyDelete
  113. புரட்சி மணி,

    //குரான் இறைவேதம், ஒரு வரிகூட மாறாமல் இருக்கின்றது என்று
    ஒரு இசுலாமியராக இதை நீங்கள் நம்பலாம் தவறில்லை. ஆனால் என்னைப்பொருத்த வரை இது மூட நம்பிக்கை.//

    100% மூட நம்பிக்கையே தான்.


    கர்பலா யுத்தத்திற்கு அப்புறம்(படுகொலை) எல்லா குரானும் எரிக்கப்பட்டு , உம்மயத் இனக்குழு தலைவரானா உமர் அவர்களின் ஆணைப்படி ஒரு குரான் தொகுக்கப்பட்டது , அதனை உம்மயத் குரான் என்றே வரலாற்றில் சொல்லப்படுகிறது, அது தான் இறுதி வடிவம் என உமரே தீர்ப்பு கொடுத்துக்கொண்டார்.

    எனவே மனிதர்களால் மாசுப்படுத்தப்படாத குரான் என்பதே கட்டுக்கதையாகும்.

    புர்க்கா என்பதெல்லாம் கர்பலா யுத்தத்திற்கு அப்புறமே இஸ்லாத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டது. மசூதிக்கு பெண்கள் வருவது தடை செய்யப்பட்டது, வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.


    கர்பலா யுத்தத்தில் ஆயீஷா தனியாக ஒட்டகத்தில் ஏறி சண்டைக்கு தலைமை தாங்கியதாலே பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டு , அவர்கள் அடக்கப்பட்டார்கள்.

    இதெல்லாம் வரலாற்று நூலில் பலரும் சொன்னது, அதை எல்லாம் இவர்கள் பேச மாட்டார்கள் :-))

    ReplyDelete
  114. சகோ. புரட்சிமணி,

    நேர குறைவினால் தான் நான் அந்த சுட்டிகளை தந்திருந்தேன். 2 & 3 வது சுட்டிகளை பார்த்திருந்தீர்கள் என்றால் மேற்கொண்டு தகவல்கள் கிடைத்திருக்கும். ஆனால் தங்களுக்கு அந்த வசதி குறைவு(!) என்பதால் சில நாட்கள் டைம் கொடுங்கள். இறைவன் நாடினால் தங்களுக்கு தேவையான விளக்கங்கள் தர முயற்சிக்கின்றேன்.

    அதே சமயம் தற்போது தங்களுடைய எழுத்துக்களிலும், அணுகுமுறையிலும் நிறைய கண்ணியம் தெரிகிறது (நம் விவாதத்தின் உபயம்?). இதே முறையில் - சிண்டு முடிந்துவிடும் சில விஷமிகளின் வலையில் வீழாமல் நிதானமாக சிந்தித்து நடந்தோமானால் நமது (நன்றாக கவனிக்கவும்) தாய்நாட்டினை சாதி, மத etc. பிரச்சினைகள் இல்லாத நல்லரசு நாடாக கட்டமைக்க முடியும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் சுவனப்ரியன் அவர்களுக்கு தங்களின் கட்டுரை படித்தேன்..

      அக்பர் மீதான உங்கள் வெறுப்புணர்சி பச்சையா தெரியுது..

      இஸ்லாத்தை ஒதிக்கியதாலா?


      #அதற்காக நான் பார்ப்பனனுக்கு Support பண்ணி பேசலை..


      Delete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)