Sunday, September 30, 2012

மற்றுமொரு தலித் கற்பழிப்பு ஹரியானாவில்!



இது அடுத்த கற்பழிப்பு. இங்கு மூன்று கயவர்கள் அதே முறையில் ஒரு தலித் பெண்ணை பலவந்தமாக கற்பழித்து அதே முறையில் மொபைலில் அந்த நிகழ்ச்சியை பரவ விட்டுள்ளார்கள. இதுவும் ஹரியானா மாநிலத்தில்தான் நடந்துள்ளது. போலீஸ் இது வரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சோனிபட் : அரியானா மாநிலத்தில் மூன்று வாரத்தில் 3வது கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம், சோனிபட் அருகே கோகானா எனும் ஊரில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர், 3 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 வாரத்தில் அரியானா மாநிலத்தில் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவம் நடப்பது 3வது முறையாகும். கடந்த செப் 21ம் தேதி திருமணமான பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். அதேபோல் 16 வயது பெண் ஒருவரும் எட்டு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

'எனது கழுத்தை நெரித்தனர். ஒருவன் என் கைகளை பிடித்துக் கொண்டான். மற்றொருவன் என்னை களங்கப்படுத்தினான். காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.' என்று அந்த பெண் குமுறலோடு பேட்டி கொடுப்பது கல் நெஞ்சையும் உலுக்கி விடும்.

இந்த கயவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? பரிதாபத்திற்குரிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை இம்சிப்பதில் இந்த கயவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை.

‘பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).

மனுவின் இந்த சட்டங்கள் தான் அந்த கயவர்களை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுகிறது.

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

அம்பேத்கார்தான் நமது நாட்டின் சட்டத்தை இயற்றியவர் என்று படித்துள்ளேன். நம் நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்கு அம்பேத்காரும் ஒரு காரணமோ? :-)

இப்போ மேல் சாதியினரின் ஆட்சி நம் தமிழகத்தில் நடப்பதால் வறுமை நீங்கி சுபிட்சம் எல்லா வீடுகளுக்குள்ளும் வர ஆரம்பிக்கும். :-)

இதை எல்லாம் நாங்கள் பின் பற்றுவதில்லை என்று பலர் சாதிக்கலாம். ஆனால் இன்றும் மனுவின் சட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கும் சிலரையும் பார்ப்போம்.

மனு தர்ம ஆதரவாளர்கள்

இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.

”1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ (மே 10, 1992) வெளியிட்டுள்ளது”. (மார்க்ஸ்).

ஒருகால் மோடி பிரதமராகி பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுப்ரீம் கோர்டில் மனுவுக்கு சிலை வைக்கப்படலாம். மனு தர்மத்தின் படி ஆட்சியும் நடக்கலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம்....

-----------------------------------------------

சுடுகாட்டில் மின்சார பற்றாக்குறையால் தகனம் பாதிப்பு!

கோவை:உயிரற்றவர்களுக்கும், மின் தடையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில், மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமாக, 12 மின் மயானங்கள் உள்ளன. மின் தடையால், மின் மயானங்களில், சடலங்கள் எரியூட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சொக்கம்புதூரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில், மின் தடையால், 125 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் பழுதாகி விட்டது. இதனால், சடலம் எரியும்போது மின்வெட்டு ஏற்பட்டால், துர்நாற்றப் புகை வெளியேறுகிறது; இப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் தவியாய் தவிக்கின்றனர்.சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது, மின் தடை ஏற்பட்டால், பல மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மின்சாரம் வரும் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது. பாதியில் விட்டுச் செல்லவோ, மயானத்தில் காத்திருக்கவோ முடியாமல் உறவினர்கள் தவிப்பது, பரிதாபகரமானது.

சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயான காப்பாளர் ஜெகன்னாதன் கூறியதாவது:இங்கு, வாரம், 25 சடலங்கள் வருகின்றன. எரியூட்டும் கல்லின் உட்பகுதியில் மின்சார காயில் இருப்பதால், ஒருமுறை எரித்தாலும் அதன் வெப்பம் 24 மணி நேரத்துக்கு கல்லில் இருக்கும்.எனினும், சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டால், புகை வெளியேறுவதை தவிர்க்க முடியாது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாத நிலையில், இப்பிரச்னை குறித்து உறவினர்களிடம் முன்பே கூறி விடுகிறோம். மின் தடையால் பணிகள் தாமதமாகி, சடலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பாப்பநாயக்கன்பாளையம் தனியார் மின் மயான ஊழியர் உண்ணி கூறுகையில், ""இங்கு தினமும், குறைந்தது, 5-6 சடலங்கள் வருகின்றன. இரண்டு மின்தளங்கள் உள்ளன. ஜெனரேட்டர் வசதி இருப்பதால் பிரச்னை இல்லை,'' என்றார்.

தகனம் தடைபடுவது உணர்வுரீதியான விஷயம் என்பதால், மின் மயானங்களில் பழுதாக உள்ள ஜெனரேட்டர்களை சரி செய்ய வேண்டும்; ஜெனரேட்டர் இல்லாத இடங்களுக்கு, அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே, பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பத்திரிக்கை செய்தி
29-09-2012

இவ்வாறு சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முறையை விட மனித உடலை மண்ணில் புதைப்பது சிறந்தது என்பது எனது கருத்து. இந்து மதத்தில் புதைப்பதில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்து மதத்தில் பலர் இறந்த உடலை மண்ணில் புதைப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

மின்சார பற்றா குறை நிலவும் இது போன்ற நாட்களிலாவது எரிப்பதற்கு பதில் புதைப்பது நல்லது என்பது எனது புரிதல். எங்கள் ஊரிலெல்லாம் உடல்களை வரிசையாக அடக்கி விட்டு மீண்டும் இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளியில் தொடங்கிய இடத்துக்கே வருவோம். மண்ணானது உடலை மக்கச் செய்து அடையாளமே இல்லாது செய்து விடும். அந்த மண்ணுக்கும் அந்த உடல் உரமாகி விடுகிறது. சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

21 comments:

  1. Anonymous3:22 AM

    என்னா கற்பழிப்பு கேஸ் லாம் நிறைய உங்க ப்ளாக் ல வருது ...

    ReplyDelete
  2. காஷ்மீர்:

    பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவு செய்யலாம்

    அங்கே இந்திய இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் .

    மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம் .

    தாயின் முன் மகளையும் , மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம் .

    தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் .

    பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம் .

    யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம் .

    விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம்

    தேவையான போது கொன்று புதைக்கலாம் .

    பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

    புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

    இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

    யாரும் கேட்க மாட்டார்கள் .

    இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர்

    இன்று காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள்.

    காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்.

    உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம்,

    காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது

    “ தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை.

    ‘ வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள் ’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார் , கதறுகிறார்.

    ‘ என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை கொன்று விடுங்கள் ’ என்கிறார் அவர் .

    அந்த இராணுவ சிப்பாய வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே ,

    ‘ உன் ஆசைப்படியே நடக்கட்டும் ’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான் .

    தன் காரியத்தைத் தொடர்கிறான்

    ” இதுபோன்ற ஓராயிரம் கதைகளை , காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன .

    இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

    1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 8,000 பேரை காணவில்லை .

    70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர்.

    இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது .


    Source; http://www.inneram.com/


    காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.

    ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,

    அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம்,

    காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.


    CLICK TO >>>>> 1. காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு. கீற்று - அ.முத்துக்கிருஷ்ணன் <<<<>>> 2. மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் <<<<<< TO READ.

    .

    ReplyDelete
  3. காஷ்மீர் காணும் இடமெல்லாம் :

    மரண ஓலங்கள்.

    இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்.

    பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவு.

    அங்கே இந்திய இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் .

    பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவு செய்யலாம்

    மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம் .

    தாயின் முன் மகளையும் , மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம் .

    தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் .

    பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம் .

    யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம் .

    விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம்

    தேவையான போது கொன்று புதைக்கலாம் .

    பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

    புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

    இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

    யாரும் கேட்க மாட்டார்கள் .

    ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,

    அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம்,

    காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.


    Rashtriya Rifles Of Indian Army gang Raped Eighty ladies

    Even A pregnant Lady was not spared.

    An Eighty year old lady was also a victim.



    CLICK TO >>>> Army gang rape in kashmir. <<<<<< see video

    CLICK TO >>>> Indian Army Attack on Hospital in kashmir!!! <<<<<< see video

    CLICK TO >>>> Watch brutality of Indian Army in Kashmir Part1 <<<<<< see video


    CLICK TO >>>> Watch brutality of Indian Army in Kashmir Part 2 <<<<<< see video


    CLICK TO >>>> Watch brutality of Indian Army in Kashmir Part 3 <<<<<< see video

    .

    ReplyDelete
  4. //என்னா கற்பழிப்பு கேஸ் லாம் நிறைய உங்க ப்ளாக் ல வருது ...//

    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மன நிலையில் இருந்து பாருங்கள். எதிர்கால கனவுகளில் சஞ்சரித்த அந்த பெண் இன்று கசங்கிய நிலையில் வீட்டின் ஒரு மூலையில்....எனக்கு மட்டும் இதெல்லாம் எழுத ஆசையா என்ன? நாட்டு நடப்பு அவ்வாறு உள்ளது.

    ReplyDelete
  5. அண்ணச்சி இதுவெல்லாம் உங்கள் அல்லாவின் கருணை. உங்கள் அல்லா ஆசைப்பட்டால் ஒரு கற்பழிப்பு நடக்கும்.

    உங்கள் அல்லா சரியாக இருந்தால் உலகில் எங்குமே கற்பழிப்பு நடக்காது.

    அண்ணாச்சி...கொஞ்சம் உங்கள் அல்லாவிடம் சொல்லி கற்பழிப்பைக் குறைக்கலாமே?

    ReplyDelete
  6. //// Anonymous said...

    என்னா கற்பழிப்பு கேஸ் லாம் நிறைய உங்க ப்ளாக் ல வருது ...////


    ஏன்னா அண்ணாச்சி இருப்பது சவுதியில்.

    அங்கே பணிப்பெண்களை அந்த சவுதிகள் கற்பழிப்பதை தினமும் பார்க்கின்றாரே?

    ReplyDelete
  7. ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

    //‘பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).//

    ---இதற்கு அர்த்தம்... தலை முடியை மழித்து மொட்டை அடிப்பதுதானே..?

    கொடுமையான அநீதி..!

    ReplyDelete
  8. //பதறவைக்கும் வங்காள பௌத்தர்களின் எதிர்காலம் என்று ஒரு பதிவு இடுவீர்கள் எதிர்பார்க்கின்றேன் //

    பவுத்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உண்மையானால் அதை செய்தது முஸ்லிம்களாக இருந்தால் அதனை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்காது.

    பங்காளிகளைப் பொறுத்த வரை அவர்களில் பாதிக்கு மேல் இஸ்லாமிய சிந்தனை அற்றவர்களாகவே உள்ளனர். சவுதியில் அதிகம் குற்ற செயல்களில ஈடுபடுவதும் இவர்களே!

    ReplyDelete
  9. சலாம் சகோ ஆஷிக்!

    //--இதற்கு அர்த்தம்... தலை முடியை மழித்து மொட்டை அடிப்பதுதானே..?

    கொடுமையான அநீதி..!//

    பார்ப்பனர்களிடம் கேட்டால் 'மனு சட்டம் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியது' என்று பீலா விடுவார்கள்.

    ReplyDelete
  10. பெயர் சொல்ல விரும்பவில்லை10:44 AM

    கற்பழிப்பு
    அப்பாவி பெண்ணின் கற்பு போச்சு.

    இதை செய்தது மற்றவன் என்றால்,
    "ஐயோ, உன் உயிரே போச்சு"


    இதை செய்தது அந்தணன் என்றால்,
    "ஹா..ஹா..ஹா.., என் மயிரே போச்சு"


    ##மனுவின் இந்த சட்டங்கள் தான் அந்த கயவர்களை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுகிறது.## ===உண்மை.

    சரியான பெயர் இனி இப்படி இருக்க வேண்டும்.

    "மனுஅநீதி. மனுஅதர்மம்"

    ReplyDelete
  11. Anonymous11:16 AM

    பாலியல் வல்லுறவுக்கு காரணமே கடவுள் தான், அல்லாஹ் - யெகோவா - பிரம்மா தான் !!! அவனைத் தான் நாம் தண்டிக்க வேண்டும் .... !!!

    அவன் தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றான், ( 9:15 ) அவனது விருப்ப படியே நல்லதும் கெட்டதும் நடக்கின்றது, அவற்றை மாற்ற முடியாது ( 10:49 ) அவன் நினைத்தால் துன்பத்தில் நம்மை ஆழ்த்த முடியும் .. ( 2:220 ) துன்பத்தை பொறுமையாக தாங்கிக் கொள்ள வேண்டும் ( 2:153 ) ( 2:177 )

    இனிமேல் பெண்கள் எங்கேனும் பாலியல் தொல்லைக்கு ஆளானால் நினைத்துக் கொள்ளுங்கள், அது கடவுளின் சித்தம் என்று, அதனை மாற்ற முடியாது என்று, அந்த பாலியல் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுங்கல், மறுமை நாளில் எல்லா நன்மைகளும் டபுள் டபுளாக கிடைக்கும் ... !!! ( 34:37 )

    ஆமீன் !!!


    ReplyDelete
  12. சகோ.சுவனப்பிரியன்,

    இதற்கு உங்களுக்கு பலர் எதிர்பதிவு எழுதுவதாக நினைத்துக்கொண்டு...

    முஸ்லிம்கள் செய்த பாலியல் வல்லுறவுகளை கூகுளில் தேடிப்பிடித்து எடுத்துக்காட்டி...

    (அவற்றுக்கு தரப்பட்ட இஸ்லாமிய கோர்ட் தண்டனைகளை மட்டும் வசதியாக மறைத்து விட்டு)

    "பார்த்தீர்களா... இஸ்லாம் இப்படித்தான்..."
    என்பார்கள்...!

    கூட சேர்ந்து பலர் 'ஆமாஞ்சாமி' போட்டு கமென்ட் கும்மி அடிப்பார்கள்.

    பயனில்லை..! பயனே இல்லை..!

    அப்படி எல்லாம் சக மனுஷியை பாலியல் வல்லுறவு செய்ய இஸ்லாம் சொல்கிறது என்று குர்ஆனில் இருந்து ஆதாரம் காட்டவேண்டும்.

    மாறாக... இஸ்லாம் சொல்வது என்ன...?

    அந்நிய பெண்ணை இச்சையுடன் பாக்க கூடாது,

    அந்நிய பெண்ணை தொடக்கூடாது,

    அந்நிய பெண்கள் எதிரில் வந்தால் ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்தி நடக்க வேண்டும்,

    அந்நியப்பெண்ணோடு தனித்து இருக்க கூடாது,

    அந்நிய பெண்ணோடு குழைந்து கூட பேச கூடாது,

    அந்நிய பெண்ணிடம் திரைக்கு வெளியே நின்று பேச வேண்டும்,

    அந்நிய பெண்ணின் வீட்டுக்கு ஆண்கள் இல்லாத வேளையில் செல்ல கூடாது,

    ஒரு பெண்ணின் கற்பின் மீது 4 சாட்சி இன்றி அவதூறு சொன்னாலே... அவதூறு சொல்பவனுக்கு 80 கசையடி தண்டனை,

    இத்தனையும் தாண்டி யாரேனும் பாலியல் வல்லுறவு குற்றம் செய்தால்...

    அவன், திருமணம் ஆகாதவன் எனில்... 100 கசையடி தண்டனை...

    திருமணம் ஆகி இருந்தால்... ஊரார் கல்லடி தந்து மரண தண்டனை..!

    இப்படி ஒரு தண்டனையை பெரும் ஒரு குற்றவாளி...

    "உணர்ச்சிய தூண்டுறா மாதிரி.. அவள் அப்படி ஒரு ஆபாச உடை போட்டு இருந்திருக்கா விட்டால், நான் இப்படி ஒரு குற்றத்தை உணர்ச்சி வேகத்தில் மதியிழந்து செஞ்சிருக்க மாட்டேனே.." என்று நினைத்தால்.. இதுவும் நியாயம்தானே..?

    எனவேதான், பெண்களுக்கு பிரத்தியேக உடைக்கட்டுப்பாடும் சொல்கிறது இஸ்லாம்..!

    ஆனால், 'இந்த உடைக்கட்டுப்பாட்டை மீறுவோருக்கு இவ்வுலகில் இன்ன தண்டனை' என்றெல்லாம் நான் பார்த்த வரை இஸ்லாத்தில் இல்லை.

    ReplyDelete
  13. இக்பால் செல்வன்!

    //அவன் தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றான், ( 9:15 ) அவனது விருப்ப படியே நல்லதும் கெட்டதும் நடக்கின்றது, அவற்றை மாற்ற முடியாது ( 10:49 ) அவன் நினைத்தால் துன்பத்தில் நம்மை ஆழ்த்த முடியும் .. ( 2:220 ) துன்பத்தை பொறுமையாக தாங்கிக் கொள்ள வேண்டும் ( 2:153 ) ( 2:177 )//

    எல்லாம் அவன் செயல் என்று வீட்டிலேயே நீங்கள் உடக்கார்ந்திருப்பதில்லை. வெளியில் சென்று வேலை செய்தால்தான் நாலு காசு பார்க்க முடியும் என்று நமது சிற்றறிவு சொல்கிறது. நன்மை இது தீமை இது என்று அறிவித்து கொடுத்து அதனை சிந்திக்க அறிவையும் நமக்கு இறைவன் கொடுத்துள்ளானே என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்.

    ReplyDelete
  14. ///அவன் தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றான், ( 9:15 ) அவனது விருப்ப படியே நல்லதும் கெட்டதும் நடக்கின்றது, அவற்றை மாற்ற முடியாது ( 10:49 )///

    ---ஊரில் நடக்கும் அநியாயத்துக்கு எல்லாம் கடவுளே காரணம் என்று பிதற்றுபவர்கள்...

    தங்கள் பேச்சில் உண்மையாளர்களாக இருந்தால்...

    நியாயவாதிகளாக இருந்தால்...

    நேர்மையானவர்களாக இருந்தால்...

    உலகில் கெட்ட விஷயம் நடக்கும்போது மட்டும் இதை சொல்லாமல்......

    நல்லது நடக்கும்போதும் சொல்ல வேண்டும்..!


    அதாவது...

    ---தீராத ஒரு நோய்க்கு உடனே தீர்வு தரும் மருந்து ஒன்று யூதனால் கண்டுபிடிக்கப்படும்போது...

    ---அதிநவீன அதிவேக விமானம் ஒன்று கிருஸ்துவனால் உருவாக்கப்படும்போது...

    ---முஸ்லிம் ஒருவன் நாலு பேருக்கு தனது சொத்தில் இருந்து தர்மம் செய்து நல்லது செய்வானேயானால்...

    ---ஒரு ஆப்ரிக்க பாலைவன ஏழை நாடு பணக்கார நாடு ஆகும்போது...

    ---நம் நாட்டில் நன்கு மழை பெய்து எங்கும் விவசாயம் செய்து பசுமை நிரம்பி அமோக மகசூல் அள்ளி, விலைவாசி குறையும்போது...

    இப்போதும் சொல்ல வேண்டும்... இப்படியே....

    அவன் தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றான், ( 9:15 ) அவனது விருப்ப படியே நல்லதும் கெட்டதும் நடக்கின்றது, அவற்றை மாற்ற முடியாது ( 10:49 )

    சொல்வீர்களா...?
    சொல்வீர்களா...?
    சொல்வீர்களா...?

    ReplyDelete
  15. இஸ்லாம் ஊக்கப்படுத்தும் மேற்படி நன்மையான செயலுக்கு தம் அறிவையும் உழைப்பையும் வித்திட்ட நல்லவனுக்கு உரிய நற்கூலி இம்மையிலும் மறுமையிலும் இறைவனிடமிருந்து உண்டு என்றால்...

    தடையுள்ள தீஞ்செயல்கள் என இஸ்லாம் கூறிய, கொலை-கொள்ளை-பாலியல் வல்லுறவு-மோசடி...போன்ற தீமையான செயலுக்கு தம் அறிவையும் உழைப்பையும் வித்திட்ட கெட்டவனுக்கு உரிய தண்டனை, இவ்வுலகில் இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து உண்டு. இல்லையெனில் மறுமையில் நரக நெருப்பில் இறைவனிடம் தண்டனை நிச்சயம் உண்டு..!

    நடுநிலையோடு சிந்திப்போருக்கு இஸ்லாம் எளிதாக விளங்கும்.

    ReplyDelete
  16. //இக்பால் செல்வன் said...

    பாலியல் வல்லுறவுக்கு காரணமே கடவுள் தான், அவனைத் தான் நாம் தண்டிக்க வேண்டும் .... !!! //


    இதை இக்பால் செல்வனின் "கோடங்கி" பதிவில் பின்னூட்டம் இட்டதை உடனடியாக நீக்கிவிடப்பட்டது.


    இங்கே அழுத்தி படியுங்கள்
    இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.




    இங்கே அழுத்தி படியுங்கள்
    இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.



    இங்கே அழுத்தி படியுங்கள்
    இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.



    இங்கே அழுத்தி படியுங்கள்
    இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.



    .

    ReplyDelete
  17. அக்பர்12:06 AM

    சவுதியில் பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தப்பட்டால் 2 சாட்சிகள் காட்ட வேண்டும் என்ற தகவல் உண்மையானதா?
    மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் மார்க்கபந்து சுகவனம் அவர்களே.

    ReplyDelete
  18. கற்பழிப்பு என்பதை விடுத்து வன்புணர்ச்சி என்ற சொல்லால் நீங்கள் கையாளலாமே!

    ReplyDelete
  19. திரு சந்தானம்!

    //கற்பழிப்பு என்பதை விடுத்து வன்புணர்ச்சி என்ற சொல்லால் நீங்கள் கையாளலாமே!//

    கற்பு என்பது என்ன? இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. தனது மனைவியைத் தவிர வேறு பெண்களை நோக்காதது ஆணுக்கு கற்புக்குரிய இலக்கணம். அதே போல் தனது கணவனைத் தவிர வேறு ஆண்களை தவறான நோக்கத்தில் ஏறெடுத்தும் பார்க்காதது பெண்ணுக்கு கற்புக்குரிய இலக்கணம். அது மீறப்படும் போது அது அழிக்கப்படுகிறது சில கயவர்களால். எனவே கற்பழிப்பு என்றாலும் வன் புணர்வு என்றாலும் ஒரே அர்த்தத்தையே தருவதாக எனது புரிதல். மற்றபடி வன் புணர்வு என்று இனி பயன்படுத்த முயற்ச்சிக்கிறேன்.

    ReplyDelete
  20. அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,

    சில நாட்களுக்கு முன்னர்தான் சோனி டீவியில் வரும் இந்த எபிசோடை பார்த்தேன்.... என்னைப் போன்ற ஒருத்தியையே கண்முன் பார்ப்பது போலிருந்தது. ஆனாலும் ஏழ்மையும், பொருளின்மையும் அவளின் வாழ்வை எப்படி சீரழித்து விட்டன.... கருணை ‘தற்கொலைக்காக’ பிச்சை ஏந்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள் இந்த இளம்பெண்.... கண்களில் கண்ணீரோட ஒரு இரவின் தூக்கத்தை தொலைப்பதைத் தவிர இந்தப் பெண்ணுக்காக என்னாலும் எதுவும் செய்யாமல் போனதுதான் இன்னமும் வருத்துகிறது. சுப்ஹானல்லாஹ்....

    http://www.youtube.com/watch?v=CryimsIPgrc

    வீடியோவில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)