'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, October 06, 2012
காமிக்ஸ்களின் காலங்களுக்குச் செல்வோமா!
காமிக்ஸ்களின் காலங்களுக்குச் செல்வோமா!
ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்புகளெல்லாம் படிக்கும் காலங்களில் காமிக்ஸ் பைத்தியமாக திரிந்தேன். அதிலும் முத்து காமிக்ஸ் வெளியிடும் புத்தகங்கள் அனைத்தும் மிக அருமையான கதைகளைக் கொண்டிருக்கும். இதில் வரும் ஹீரோக்கள் பலராக இருந்தாலும் எனக்கு பிடித்த ஹீரோ 'இரும்புக் கை மாயாவி' தான். இதற்காக இவர்கள் வரைந்து வெளியிடும் படங்களும் தத்ரூபமாக இருக்கும். வீட்டில் செலவுக்கு கொடுக்கும் சில்லறை பணங்களை எல்லாம் சேமித்து முத்து காமிக்ஸ் வாங்க பயன் படுத்திக் கொள்வேன்.
நண்பர்கள மத்தியிலும் இதனை சுற்றுக்கு கொடுத்து அவர்களிடம் உள்ள மற்ற புத்தகங்களை இரவல் வாங்கியும் படிப்போம். ராணி காமிக்ஸ் என்று பல பெயர்களில் வந்தாலும் முத்து காமிக்ஸூக்கு ஈடாக இதுவரை தமிழில் புத்தகங்கள் வரவில்லை என்றே நினைக்கிறேன்.
காசு கொடுத்து வாங்கி கட்டுப்படியாகவில்லை என்று எங்கள் ஊர் அரசு லைபரரியில் மெம்பராக சேர்ந்தேன். நுலகத்தின் உறுப்பினர் எண் 451. இன்றும் எனக்கு அது ஞாபகம் இருக்கிறது. அங்கு கணக்கிலடங்காத சிறுவர் புத்தகங்கள் காமிக்ஸூகள் என்று அடுக்கி வைத்திருந்தனர். ஒரு பத்தகம் விடாமல் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். கொஞ்சம் பெரியவன் ஆனதும் தமிழ்வாணனின் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். சங்கர்லால் என்ற பெயரில் தமிழ்வாணன் எழுதிய அழகு தமிழில் வ்ந்த அனைத்து கதைகளையும் ஓரளவு படித்து விட்டேன்.
இன்னும் சற்று பெரியவனான பிறகு மு வரதராசனார் கதைகளுக்கு ரசிகனானேன். கல்லோ காவியமோ, கரித்துண்டு போன்ற பல நாவல்கள் முவ வின் கை வண்ணத்தில் மிக அநாயசமாக கதையின் ஓட்டம் செல்லும். அப்பொழுதெல்லாம் வீட்டில் ஒரு மர்ஃபி ரேடியோ ஒன்று மட்டுமே இருக்கும். அதிலும் அதிகம் இலங்கையின் அழகு தமிழில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்பதும் சிறந்த பொழுது போக்கு. அதை விட்டால் மாலை நேரங்களில் பள்ளி விளையாட்டு திடலில் பேட் மிட்டன் விளையாடுவதும் எனது வழமையான பழக்கங்களில் ஒன்று. அப்போது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். விளையாட்டில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த எனது தாத்தா என்னை திருச்சிக்கு அழைத்துச் சென்று புதிய பேட் ஒன்றை எனக்கு பரிசாக வாங்கித் தந்தார். வலங்கைமான் பள்ளி சார்பாக சென்று ஜெயித்து வந்த சமயம் அது.
இன்னும் சற்று பெரியவனான போது சுஜாதாவின் எழுத்துக்கு ஒரு மாதிரியாக அடிமையாகவே ஆகி விட்டேன் என்று சொல்லலாம். எங்கள் வீட்டுக்கு அந்த காலத்திலிருந்தே கல்கண்டும், ஆனந்த விகடனும் தொடர்ந்து வரும். விகடனில் தொடராக வந்த கரையெல்லாம் செண்பகப்பூ வையும் கனவுத் தொழிற்சாலையும் ஒரு வாரம் விடாமல் தொடர்ந்து படித்து வந்தேன். அதன் பிறகு இன்னும் பெரியவன் ஆனபோது சுஜாதாவின் அறிவியல் சம்பந்தமான கணிணி சம்பந்தமாக கதைகள் கேள்வி பதில்கள் போன்றவற்றை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் அறிவியல் தொடர்கள் முதலில் சற்று புரியாமல் இருந்தாலும் சில காலத்துக்குப் பிறகு விளங்க ஆரம்பித்தது. பெண் எழுத்தாளர்களில் சிவசங்கரி, லெஷ்மி, போன்றவர்களின் கதையும் புஷ்பா தங்கதுரையின்(இவர் ஆண்) கதைகளையும் விரும்பி படிப்பதுண்டு.
தற்போது புத்தகம் படிக்கும் பழக்கமெல்லாம் போய் கிடைக்கும் ஓய்வு நேரங்கள் எல்லாவற்றையும் இணையமே எடுத்துக் கொண்டு விடுகிறது. அன்று இரும்புக் கை மாயாவில் ஆரம்பித்த படிக்கும் பழக்கம் இடையில் சுஜாதாவிடம் வந்து இன்று மற்றொரு இரும்பு மனிதரான பி..ஜெய்னுல்லாபுதீனிடம் வந்து நிற்கிறது. இனி வரும் காலத்தில் யாருடைய எழுத்தைப் படிக்கப் போகிறேனோ அது இறைவன் கையில் உள்ளது. சரிதானே!
---------------------------------------------------
பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணம் ? - Big Bang
ஒரு புரோட்டன் என்பது எத்தனை சிறியது ? அதன் 'ட்'டன்னாவின் புள்ளியின் பரிமாணத்தில் 500,000,000,000 புரோட்டான்களை அடக்க முடியும். அல்லது ,ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு எத்தனை செக்கண்டுகள் உள்ளனவோ, ஏறத்தாழ
அத்தனை புரோட்டான்களை அடக்க முடியும்.
இந்த புரோட்டனை 100 கோடி பாகமாக்கினால் ஏற்படும் அவ்வளவு சிறிய இடைவெளியில் , ஒரு அவுன்ஸ் மேட்டர் என்னும் பருப்பொருளை அடைத்துப் பாருங்கள். நீங்கள் ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கத் தயார் !
பரிமாணமற்ற அத்தனை சிறிய இடத்தில் பிரபஞ்சத்தின் அத்தனை பருப்பொருள்களின் சாத்தியங்களும் அடர்ந்திருந்த அந்த ஆரம்பக் கணத்தை 'ஒருமித்த கணம்' (சிங்குலாரிட்டி singularity ) என்கிறார்கள். அதிலிருந்து ,காரணமின்றி திடீரென அத்தனை சக்தியும் வெடித்துச் சிதறிப் பரவியது.
-சுஜாதா
அதெப்படி காரணமின்றி வெடித்து சிதறும் என்பதை சுஜாதா விளக்கவிலலை. விளக்க ஆரம்பித்தால் இறைவனின ஆற்றலை ஒத்துக் கொண்டது மாதிரி ஆகி விடும். :-)
.


Thank You, brother, for sharing your childhood days to adulthood days with us . Really all our generations are enjoyed the same type of games and habits in our earlier days. when grown up we begun to travel in different routes.
ReplyDeleteசகோ அஜீம் பாஸா!
ReplyDelete//Thank You, brother, for sharing your childhood days to adulthood days with us . Really all our generations are enjoyed the same type of games and habits in our earlier days. when grown up we begun to travel in different routes.//
ஆம். வாழ்க்கையின் சுழற்சியானது நம்மை எங்கெங்கோ கொண்டு சேர்த்து விடுகிறது. அனைத்தையும் சமாளித்து எதிர் கொள்ள நாமும் தயாராகி விடுகிறோம். அவ்வாறு தயாராகாது வீம்பு பிடிப்பவர்களாலேயே வாழ்வின் எதிப்புகளை சமாளிக்க முடியாமல் போய் விடுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
S. Ruban said in Dinamalar....
ReplyDeleteகுஜராத்தில் மோடி முதல்வராகப் பதவியேற்ற பின்னர்தான் அம்மாநிலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வளர்ச்சி கண்டு விட்டதாக அண்மைக் காலமாகப் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் ஊடகங்களில் செய்தி தருவோருக்கு வழங்கப்படும் சலுகைகளின் கனம் என்பது அத்துறையில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சி, இன்று நேற்று வந்ததல்ல. மாறாக, அது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கிய வளர்ச்சியாகும். 1960இல் குஜராத் மாநிலம் உருவாக்கப் பட்டபோது வளர்ச்சியில் எட்டாவது இடத்தில் இருந்தது. 1980-1990 வாக்கில் மூன்றாவது இடத்திற்கு வந்தது. மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995லிருந்து 1999வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப் பட்டது.1994-95இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும் 1995-1999 காலகட்டத்தின் வளர்ச்சி 10.13 விழுக்காடாகவும் இருக்கும்போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999இல்தான் மோடி குஜராத்தின் முதல்வரானார். குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதம் என ஓயாமல் தவறான தகவலை நரேந்திர மோடி கூறி வருகிறார். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமான 9 சதவிகிதத்தைவிட, தனது மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்பது அவர் வாதம். ஆனால், 2006-07ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வு செய்து குஜராத் அரசே அளித்த அறிக்கை, மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.11 என்கிறது. அதைவிட முக்கியமாக, இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கடன்பட்டிருக்கக் கூடிய மாநிலமாக குஜராத் திகழ்கிறது. 2005ஆம் ஆண்டு குஜராத் மீது 70,228 கோடி ரூபாயாக இருந்த கடன், இந்த ஆண்டு 95,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதன்படி 5 கோடி மக்கள் தொகையுள்ள குஜராத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 19,000 ரூபாய் கடன் இருக்கிறது......."ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம்" என்பதற்கொப்ப இத்தனை மோசமான நிலையில் குஜராத்தை வைத்துக் கொண்டு "வளமான குஜராத்" என பம்மாத்துக் காட்டுவது மோடியால் மட்டுமே முடியும்.
சு.பி .சுவாமிகள்,
ReplyDeleteபதிவை படித்ததும் அடடே நம்ம சுவாமிஜி ஒரு சகஜமான ஒரு பொதுவான அனுபவ நிகழ்வையும் பதிவா போட்டு இருக்காரேனு ஆனந்த அதிர்ச்சியுடன் படித்தேன்..ம்ஹூம் அப்படிலாம் சந்தோஷமாகாதேன்னு பின்னூட்டத்தில் மோடிய பிடிச்சு கொண்டு வரார் :-))
பதிவு நல்லா இருக்கு, நானும் ஒரு காமிக்ஸ் பிரியன்...கிட்டத்தட்ட எல்லா காமிக்ஸும் படிச்சு இருக்கேன்.
ராணி காமிக்ஸின் ஜேம்ஸ் பாண்ட் கதை எல்லாம் உங்களை படிக்க விட்டாங்களா வீட்டில், அதில் மேலாடை இல்லா பெண் படம் எல்லாம் வருமே.
இதே போல பொதுவான பதிவுகள் அதிகம் போடுங்க அப்புறம் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது.
தீவிரவாத இயக்கங்களுக்கு,
ReplyDeleteஇந்திய முஜாஹிதீன், டெக்கான் முஜாஹிதீன், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில்,
என பல கற்பனைப்பெயர்களை சூட்டி மகிழ்ந்து வந்த இந்திய போலீஸ்,
தற்போது, தாய்-தந்தை வைத்த பெயரை மாற்றிவிடக்கூடிய அளவுக்கு "பரிணாம வளர்ச்சி"யை கண்டுள்ளது.
>>>> CLICK உலக "தில்லு முல்லு" சாதனை : பெற்றோர் வைத்த பெயரை மாற்றும் உரிமை படைத்த இந்திய போலீஸ்! <<<< TO READ
.
பசு'மாடுகளை "குர்பானி" கொடுக்க வேண்டாம்! : மவுலானா புலந்ஷெஹ்ரி வேண்டுகோள்!
ReplyDeleteமுஸ்லிம்கள் பசுமாட்டுக்கறியை உண்ணவும் வேண்டாம்,
குர்பானிக்காக "பசு"மாடுகளை அறுக்கவும் வேண்டாம்,
என "சஹாரன்பூர் மசாஹிருல் உலூம் மதரசா"வின் பேராசிரியர் மவுலானா முஹம்மத் யாகூப் புலந்ஷெஹ்ரி, வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு மாற்றாக,
எருமை மாடு, ஆடு போன்ற பிற அனுமதிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.
நேற்று முன்தினம் மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் தனது ஜும்ஆ உரையில்,
புலந்ஷெஹ்ரி இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
பசுக்களை அறுப்பதால் நமது நாட்டின் சகோதர மதத்தினர் சங்கடப்படுவதையும்,
அதனால் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆளாவதையும் தவிர்ந்து கொள்ள,
முஸ்லிம்கள் பசுமாட்டை அறுப்பதை விட்டு முற்றாக விலகிக்கொள்வதே நல்லது, என்றும் அவர் தெரிவித்தார். வடமாநிலங்களில் பசு'வின் பெயரால் அடிக்கடி நடத்தப்படும் கலவர பாதிப்புக்களை தவிர்க்கும் பொருட்டு
"தேவ்பந்த்" போன்ற முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில்,
ஹிந்துக்கள் பசுக்களை இறைச்சிக்காக விற்பதையும்,
முஸ்லிம் வியாபாரிகள் பசுக்களை இறைச்சிக்காக வாங்குவதையும்
தடை செய்து தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/552--qq-
வவ்வால்!
ReplyDelete//பதிவு நல்லா இருக்கு, நானும் ஒரு காமிக்ஸ் பிரியன்...கிட்டத்தட்ட எல்லா காமிக்ஸும் படிச்சு இருக்கேன்.
ராணி காமிக்ஸின் ஜேம்ஸ் பாண்ட் கதை எல்லாம் உங்களை படிக்க விட்டாங்களா வீட்டில், அதில் மேலாடை இல்லா பெண் படம் எல்லாம் வருமே.//
நான் அதிகம் படித்தது முத்து காமிக்ஸ். ராணி காமிக்ஸில் நான் படிக்கும் காலங்களில் ஆபாச படங்கள் வந்ததாக ஞாபகம் இல்லை.
//இதே போல பொதுவான பதிவுகள் அதிகம் போடுங்க அப்புறம் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது.//
முயற்ச்சிக்கிறேன்.
சகோ உண்மைகள்!
ReplyDelete//இந்திய முஜாஹிதீன், டெக்கான் முஜாஹிதீன், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில்,
என பல கற்பனைப்பெயர்களை சூட்டி மகிழ்ந்து வந்த இந்திய போலீஸ்,
தற்போது, தாய்-தந்தை வைத்த பெயரை மாற்றிவிடக்கூடிய அளவுக்கு "பரிணாம வளர்ச்சி"யை கண்டுள்ளது.//
படிக்கும் நமக்கே மனது வலிக்கிறதே! சம்பந்தப்பட்ட அந்த இளைஞனின் நிலையை நினைத்துப் பார்த்தேன்.
ஏழை சிறுபான்மையினர் மாணவர் நலன் காப்போம்!
ReplyDelete(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஎச்.டி.(ஐ.பீ.எஸ்(ஓ)
5.10.2012 அன்று சென்னையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உதவித் தலைவரும், முன்னாள் ஓய்வு பெற்ற பெங்களூர் போலீஸ் கமிசனருமான திரு ஹெச். சங்களியனா அவர்கள் சமூதாய அமைப்புகள் சிந்தித்து செயலாற்ற சில செய்திகளை தனது பேட்டியில் சொல்லியுள்ளார். அவர் சொல்லிய செய்தியின் சாராம்சம் கீழே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:
1) சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகையினை இந்த நிதி ஆண்டில் (31.3.2013) தமிழ் நாட்டில் பள்ளிக் கல்வி உதவித் தொகை ரூ 34 கோடியினைப் பெற 2,87,659 மாணவ மாணவியர் தகுதி பெற்றவர். மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 36, 438 பேர்கள் பயன் பெற ரூ 18.88 கோடிகள் ஓதிகீடும், தொழில் கல்வி பயிலும் 2301 பேர்களும் பயன் அடையலாம். அதனைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் கடைசியாகும்(31.10.2012.
சிறுபான்மையினர் கல்வி உதவி பெற தகுதி என்ன என்று பார்க்கலாம்:
1) பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பள்ளிப் படிப்பில் ஐம்பது சத வீத மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.
2) அவர்களுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வருட வருமானம் ரூ ஒரு லக்ஷத்திற்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
3) தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தங்களுடைய பள்ளிப் படிப்பில் ஐம்பது சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அவர்களுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வருட வருமானம் ரூ இரண்டரை லக்ஷத்தினுக்கு மிகையாமல் இருக்க வேண்டும்.
பள்ளி மாணவரின் பெற்றோர் வருட வருமானம் ஒரு லக்ஷம் என்பதும், தொழில் கல்வி கற்கும் பெற்றோர் வருமானம் ரூ இரண்டரை லக்ஷம் என்பதும் எப்போதோ நிர்ணயிக்கப் பட்ட வருமான வரம்பு. அதனை உயர்த்த மைனாரிட்டி கமிசனுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும், அப்படி வந்தால் அதனை கண்டிப்பாக உயர்த்தத் தயார் என்றும் திரு. எச். சங்களியானா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனை முக்கியமாக சமுதாய அமைப்புகள் கையில் எடுத்து வருமான வரம்பை உயர்த்த மனுக்கள் ஒற்றுமையுடன் அனுப்ப வேண்டும்.
------------------
2) தமிழக சிறுபான்மையர் ஆணையகத்திற்கு ஒரு தலைவரும், ஆறு உறுப்பினர்களும் இது வரை நியமிக்கப்படவில்லை. சமுதாய இயக்கங்கள் ஒருங்கிணைத்து சிறுபான்மையினர் ஆணையகத்திற்கு உடனே தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிப்பதோடு, முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் சுழற்சி முறையில் தலைவர் பதவி தரவேண்டு என்று கோரிக்கையினையும் வைக்க வேண்டும்.
3) சிறுபான்மையினர் நலனுக்காக நடத்தப் படும் பாலிடச்னிக்குகள், ஐ.டி.ஐகள் பயிற்சி கருவிகள் பழமை வாய்ந்ததாக சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கேப்ப அவைகளை நவீனப் படுத்த கோரிக்கைகளை வைக்க வேண்டும்.
4) இன்னும் கூட சில முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் மைனாரிட்டி தகுதியினை அரசிடமிருந்தோ அல்லது மைனாரிட்டி கமிசனிடமிருந்தோ பெற வில்லை. சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதி அரசர் பால் வசந்தகுமார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பில் ஒரு தடவை மைனாரிட்டி தகுதிப் பெற்ற கல்வி நிறுவனங்கள் வருடந்தோறும் புதிப்பிக்க வேண்டியத்தில்லை என்று சொல்லியுள்ளார். இதனை கல்வி நிறுவனம் நடத்தும் சிறுபான்மையினர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
5) இது வரை ஒவ்வொரு ஊரிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஆண், பெண், குழந்தைகள், மற்றும் வாக்கு அளிக்கக்கூடிய தகுதி உள்ளவர் பட்டியல், அவர்களுடைய வருட வருமானம், கல்வித் தகுதி போன்ற விவரங்கள் அடங்கிய விவரங்களை சமூதாய இயக்கங்கள் சேகரிக்க வில்லை. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியருக்கு சலுகைகள் வழங்க குரல் எழுப்பி உள்ளார். அதேபோன்று சமூதாய அமைப்புகளும் முனைப்புடன் அதில் ஈடு பட வேண்டும். அப்போது தான் அரசிடமோ அல்லது மைனாரிட்டி கமிசனிடமோ நமது கோரிக்கையினை வைக்க முடியும்.
ஆகவே சமூதாய இயக்கங்கள் மைனாரிட்டி மாணவர்கள் நலன் காத்தும், அவர்களுக்கு சேர வேண்டிய அரசு சலுகை பெற்றும், மாநிலத்தில் சமூதாய மக்கள் அரசியல், கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் உரிய இடத்தினைப் பெற சமூதாய இயக்கங்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன் செயலாற்றலாமா?
AP,Mohamed Ali
அண்ணாச்சி நாம படிச்சது காமிக்ஸா...?
ReplyDeleteஅந்த முனியாண்டி சாமி மீது சத்தியமா சொல்லுங்க அண்ணாச்சி. அப்பதான் நான் நம்புவேன்.
//பங்களாதேஷ் நீதிமன்றங்களும் உப்புக்கு சப்பாணி அல்ல. ஹிலா திருமணம் பற்றி ஏராளமான கதைகளை காது புளிக்க கேட்டுவிட்டார்கள். பங்காள பெண் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்பதை பலமுறை கேட்டுவிட்டார்கள். ஹஜ்ரத் உஸ்மானின் கிலாபத்(அரசு)ஆல் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் பெயரால் நடக்கும் அநீதிகள் அவர்களது மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. அதனால்தான், அந்த பத்வா சட்டத்துக்கு புறம்பானது என்று ஜனவரி 1, 2001இல் பங்களாதேஷ் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.//
ReplyDeleteஇஸ்லாத்தையும் குர்ஆனையும் விளங்காத ஒரு அரை வேக்காட்டின் பதிவு இஸ்லாமியரிடத்தில் எடுபடாது. இருந்தாலும் மற்றவர்கள் தவறாக விளங்கி விடக் கூடாது என்பதற்காக இந்த விளக்கம்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=6J3uE-JyA_U#!
சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஓரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை விவகாரத்து செய்கின்றனர். ஓரே சமயத்தில் மூன்று தலாக் கூற இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படி கூறினால் அதனை ஒரு தலாக் என்றே கருதப்படும்.நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மூன்று தலாக் என்பது ஒரு தலாக் என்று மொத்தமாகவே கருதப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்
தலாக்(விவாகரத்து) பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்:
விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லாவிட்டால் அந்த உரிமையை பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான். இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியைவிட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியை கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்து செத்ததாக உலகை நம்ப வைக்கிறான். விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். இன்னும் சில கணவன்மார்கள் மனைவியை கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துகப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர்.
இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்துக் கொண்டு காலமெல்லாம் கண்ணீர்விடும் நிலைமை ஏற்படுகிறது. இவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைபடுகிறது எளிதாக விவாகரத்து செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது. வேறு சில கயவர்கள் விவாகரத்து பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களை சுமக்க வேண்டும்? என்று நினைத்து மனைவியாக வைத்துக் கொண்டு சின்னவீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் படுத்துகின்றனர்.
இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்த கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்க கணவனை பிடிக்காவிட்டால் கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கட்டாயக் கணவனைக் கொள்கிறாள். உணவில் விஷம் கலந்தோ அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனை தீர்த்துக் கட்டுகிறாள்.
அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல் செய்துவிடுகிறாள். அல்லது கணவனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்றார் (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள் அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஓரேயடியாக விட்டு விடு என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூற்கள்: புகாரி, நஸயீ
எனவே மூன்று முறை சேர்ந்து ஒரே நேரத்தில் சொல்லும் தலாக் மார்க்க ரீதியாக ஒரு தலாக்காகவே கருதப்படும்.
'ராவணன் said...
ReplyDeleteஅண்ணாச்சி நாம படிச்சது காமிக்ஸா...?
அந்த முனியாண்டி சாமி மீது சத்தியமா சொல்லுங்க அண்ணாச்சி. அப்பதான் நான் நம்புவேன்.
7:35 AM'
RAWவணன் அண்ணாச்சி அவர்தான் காமிக்ஸ் படம் பிடிச்சே போட்டுட்டாரே இன்னும்மா நம்பிக்கை வரலே.
ஸலாம்
ReplyDelete//இன்று மற்றொரு இரும்பு மனிதரான பி..ஜெய்னுல்லாபுதீனிடம் வந்து நிற்கிறது.//
எங்க போனாலும் கடைசில இங்க தான் வரணும் ... அதாவது இஸ்லாத்தின் பால் தான் வரணும் ... வந்து தான் ஆகணும் ..வேற போக்கிடம் என்கது ...
இப்பதான் முழுமையா இஸ்லாத்தின் பால் நுழைய ஆரம்பித்து இருக்கிறேன் [ரோம்]
அதுக்கு முன்னாடி நினச்சு கூட பாக்க முடியல ..
சலாம் சகோ மை தீன்!
ReplyDelete//எங்க போனாலும் கடைசில இங்க தான் வரணும் ... அதாவது இஸ்லாத்தின் பால் தான் வரணும் ... வந்து தான் ஆகணும் ..வேற போக்கிடம் என்கது ...
இப்பதான் முழுமையா இஸ்லாத்தின் பால் நுழைய ஆரம்பித்து இருக்கிறேன் [ரோம்] //
சரியாக சொன்னீர்கள். நீங்கள் இருப்பது ரோமிலா! வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஏங்க பாய் இப்படி
ReplyDeleteஇருக்கிறேன் .. என்பது என்னைய குறிக்கும்
இருக்கிறோம் .. என்னையும் உங்களையும்
நம் அனைவரையும் குறிக்கும்
எவ்வளவு கன்பிடேன்ட் இருக்கேன் பாத்தீங்கலா ... சின்ன வயதுள இருந்து தொழுது கிட்டு வணங்கி கிட்டு தான் வந்தமா ...
நான் பழைய ஆள் ... பேரு மாத்திட்டேன் ... மை என்பது இங்கிலீஷ் ல என்னுடைய அப்படி ன்னு குறிக்கும் ... தீன் என்றல் மார்க்கம் ... அப்ப என் மார்க்கம் ... இங்கிலீஷ் அரபிக் படிக்கணும்நு ஆர்வத்துல வச்சது ...
//இருக்கிறேன் .. என்பது என்னைய குறிக்கும்
ReplyDeleteஇருக்கிறோம் .. என்னையும் உங்களையும்
நம் அனைவரையும் குறிக்கும்//
ஓ....நீங்கள் இந்த அர்த்தத்தில் சொன்னீர்களா? நான் தான் தவறாக விளங்கிக் கொண்டேன்.
நன்றி!
நான் ராணி காமிக்ஸ் ல இருந்து தான் ஆரம்பித்தேன்..எனது காலத்தில் முத்து காமிக்ஸ் இருந்த நாபகம் இல்லை..
ReplyDeleteஆனால் தினமலரின் சிறுவர் மலரில் "பல முக மன்னன் joe ", "பிங்கி ஜானி " போன்ற பல கதைகள் என்னை கவர்ந்தது.
ஆனந்த விகடன், சுஜாதா என்று நமக்கிடையே நிறைய ஒற்றுமைகள்...நல்லதொரு nostalgia :)
நாம கறி சாப்பிட ஆரம்பிச்சு 15 லட்சம் வருஷமாச்சாம்!
ReplyDeleteலண்டன்: நீங்க சிக்கன், மட்டன், பிஷ் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு என்று யாராவது கேட்டால்,
நேற்றுதான் கடைசியா சாப்பிட்டோம் அல்லது ஜஸ்ட் இப்பத்தான் முடிச்சுட்டு வந்தேன் என்று சொல்வோம்.
ஆனால் மனிதர்கள் மாமிசம் சாப்பிட ஆரம்பித்து எத்தனை காலமாகிறது என்று உங்களுக்குத் தெரியுமா...
15 லட்சம் வருடங்களாகி விட்டதாம்.
தான்சானியாவில் நடந்த ஆய்வு ஒன்று இதைத் தெரிவிக்கிறது.
வடக்கு தான்சானியாவில் உள்ல ஒல்டுவாய் என்ற பிரதேசத்தில் நடந்த ஆய்வில்தான் இந்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் பகுதிக்கு மனிதகுலத்தின் தொட்டில் என்று ஒரு செல்லப் பெயர் உண்டு.
காரணம், இப்பகுதியில்தான் மனித குலம் குறித்த பல முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்து வருகின்றன.
எனவே இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.
தற்போது 2 இன்ச் அளவிலான ஒரு மனிதனின் மண்டை ஓட்டுத் துண்டை ஆய்வாளர்கள் இப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுரித்து ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான அமெரிக்காவின் சார்லஸ் முசிபா கூறுகையில்,
மனிதர்கள் மாமிசம் சாப்பிடுவது என்பது எப்போது முதல் தொடங்கியது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.
மனிதர்கள் தோன்றிய நாள் முதலே மாமிசம் சாப்பிட ஆரம்பித்திருக்கலாம் என்றுதான் இத்தனை காலம் நாம் நினைத்து வந்தோம்.
ஆனால் தற்போது ஆய்வு முடிவைப் பார்க்கும்போது 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் மாமிசம் சாப்பிட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போது கிடைத்துள்ளது ஒரு குழந்தையின் மண்டை ஓட்டுப் பகுதியாகும்.
15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வேட்டையாடி இறைச்சியை சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
மாமிசம் சாப்பிட்டு வருபவர்கள் திடீரென அதை நிறுத்தி விட்டால் நமது உடலில் போரோடிக் ஹைபரோஸ்டாசிஸ் என்ற சத்துப் பற்றாக்குறைப் பிரச்சினை வரும்.
அந்தப் பிரச்சினை இந்த குழந்தையிடம் இருந்தது அதன் மண்டை ஓட்டை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது.
எனவே இறைச்சி கிடைக்காமல் சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டு வந்ததால் இந்தப் பிரச்சினை வந்து இக்குழந்தை இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
மேலும் நமது மூதாதையர்கள், சத்துக்காக இறைச்சியை சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே இறைச்சியின் தன்மையை அவர்கள் அப்போதே உணர்ந்துள்ளனர் என்பதும் புரிகிறது.
உண்மையிலேயே ஆச்சரியமான தகவல்தான்.!
SOURCE: http://tamil.oneindia.in/news/2012/10/08/world-we-ve-been-eating-meat-1-5-million-years-research-162793.html
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteகீழே கொடுத்த லிங்கை நேரம் இருந்தால் படிக்கவும், இப்படி ஒரு ஆராய்ச்சி நமது மாநிலத்தில் நடக்க போவதாக அநேகம் பேருக்கு தெரியாது, இப்படி ஒன்று நடந்தால் எப்படி பட்ட விளைவுகள் வரும் என்று கணிக்க முடிய வில்லை, ஊடகங்களும் இதை பற்றி வாய் திறக்க வில்லை, நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட நீவ்ற்றோனோ ஆராய்ச்சி பற்றி தெளிவாக ஒரு பதிவு எழுதவும்
http://blogs.scientificamerican.com/observations/2009/11/13/in-2012-neutrinos-melt-earths-core-and-other-disasters/
n.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory