Friday, October 12, 2012

சிலந்தி, குளவியால் டார்வினசத்துக்கு மற்றுமொரு பின்னடைவு!


படத்தில் இருப்பது 97 லிருந்து 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சிலந்தி யும் குளவியும். சிலந்தி அதனுடைய வலையில் தவறி விழுந்த குளவியை சாப்பிட போகையில் அப்படியே குளவியும் சிலந்தியும் நின்று விட்டன! ஏன்? இதை ஒரேகான் பல் கலைக் கழக அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் பர்மா ஆய்வின் போது இவற்றை கண்டு ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அவ்வாறு ஆராயும் போது நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு தனது வலையில் விழுந்த குளவியை சிலந்தி தாக்கப் போகுமுன் இரண்டுமே மரப் பிசினால் மூடப் பட்டு விட்டன என்று தெரிந்து கொண்டுள்ளார்கள்.



'இந்த இளம் சிலந்தி குளவியை சாப்பிடுவதற்குள் மரப் பிசினால் இழுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பல மில்லியன் வருடங்கள் ஆகியும் அதன் உருவ அமைப்புகளில் எந்த மாற்றமும் தென் படாதது எனககு ஆச்சரியத்தையே உண்டாக்குகிறது.' என்கிறார் ஜார்ஜ் பைனர். இவர் ஒரேகான் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் பணி புரிந்த உலக பிரசித்திப் பெற்ற பூச்சியியல் நிபுணராவார்.

.

இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த இரு உயிரினமும் இன்று நாம் பார்க்கும் அதே அளவில் அதே எண்ணிக்கையுடைய கால்கள் மற்றும் பல உறுப்புகளோடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்டார்வினின் பல தியரிகளை குப்பை கூடைக்கு அனுப்ப நேரம் நெருங்கி விட்டதையே காட்டுகிறது. இனிமேல் யாரும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் என்ற விட்டலாச்சாரியா(டார்வினின்) சொம்பை தூக்கிக் கொண்டு பரிணாமப் பாடம் நடத்த வேண்டாம். ஆமாம. சொல்லிபுட்டேன்.


This picture shows a nearly intact fossil of Fuxianhuia protensa. The inset shows the fossilized brain in the head of another specimen. The brain structures are visible as dark outlines. Credit: Specimen photo: Xiaoya Ma; inset: Nicholas Strausfeld Complex brains evolved much earlier than previously thought, as evidenced by a 520-million year old fossilized arthropod with remarkably well-preserved brain structures. Representing the earliest specimen to show a brain, the fossil provides a "missing link" that sheds light on the evolutionary history of arthropods, the taxonomic group that comprises crustaceans, arachnids and insects.

Read more at: http://phys.org/news/2012-10-complex-brains-evolved-earlier-previously.html#jCp

சுமார் 520 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சியினத்தில் சிக்கலான மூளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய உயிரினங்களில் இருப்பது போன்றே உள்ளது. ஆக, உயிரினங்கள் முதன் முதலாக தோன்றிய காலக்கட்டத்திலேயே மூளை அமைப்பு சிக்கலாக இருப்பது பரிணாமவாதிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அக அமைப்பிலோ புற அமைப்பிலோ எந்த மாற்றங்களையும் கொள்ளாது பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு எப்படி உயிரினங்கள் இருந்ததோ அதே அமைப்பிலேயே இன்றும் அவை காணப்படுகின்றன. பரிணாமம் உண்மையிலேயே நடந்திருந்தால் பரிணாமம் அடைந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்கள் லட்சக் கணக்கில் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்களை இவர்கள் சமர்ப்பிக்காத வரை பாடப் புத்தகங்களில் உள்ள பரிணாமம் சம்பந்தமான பகுதிகளை நீக்க அரசு உத்தர விட வேண்டும். உலக அளவில் இந்த நகைச்சுவை இன்று வரை அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோரால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பரிணாமவியலை நிரூபிக்கிறேன் என்று உலகில் பல நாடுகளில் பல விஞ்ஞானிகள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கே தெரியும் தங்களின் ஆராய்ச்சியின் முடிவு என்ன எனபது. இருந்தாலும் வேலை போய் விடுமே என்று இன்று வரை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை செல்வந்த நாடுகள் வறிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு திருப்பி விட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம் .:-)

http://phys.org/news/2012-10-complex-brains-evolved-earlier-previously.html

http://www.24dunia.com/english-news/shownews/0/Ancient-Spider-Attack-On-Wasp-Trapped-In-Amber/15384148.html

http://gizmodo.com/5950032/holy-crap-heres-a-100+million+year+old-spider-eating-a-wasp
http://dvice.com/archives/2012/10/spider-attacks.php

http://oregonstate.edu/ua/ncs/archives/2012/oct/fossil-ancient-spider-attack-only-one-its-type-ever-discovered

பரிணாமவியலில் ஓரளவு பல பதிவுகளை எழுதிய சகோ ஆஷிக் பூச்சியினங்களைப் பற்றி முன்பு எழுதிய அழகிய ஒரு இடுகையை பாருங்கள். மேலும் பல விளக்கங்கள் கிடைக்கும்.

32 comments:

  1. சலாம் சகோ.சுவனப்பிரியன்

    //பரிணாமம் உண்மையிலேயே நடந்திருந்தால் பரிணாமம் அடைந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்கள் லட்சக் கணக்கில் நமக்கு கிடைத்திருக்க வேண்டும்.//

    fact...fact..fact...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    உயிரினங்களில் பெரும்பான்மை பூச்சிகள் தான். ஆனால் இவை எப்படி தோன்றின என்பது குறித்து பரிணாமத்தில் தெளிவான விளக்கம் கிடையாது. அதிலும் பறக்கும் பூச்சிகள், இறக்கையை மடக்கி வைக்கும் பூச்சிகள் (உதாரணம் கரப்பான் பூச்சி) போன்றவற்றின் தோன்றலுக்கும் விளக்கங்கள் கிடையாது.

    சிறிய அளவு டைனாசர்களில் இருந்து அவற்றின் முன்னன் கால்கள் சிறகுகலாக மாறி பறவைகள் வந்தன (இதுக்கும் ஆதாரம் கிடையாது) என்று அள்ளி விடும் பரிணாமவியலாளர்கள், பறவைகளுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே தோன்றிய பூச்சிகளின் பறக்கும்தன்மைக்கு தெளிவான விளக்கம் எதையும் இதுவரை தந்ததில்லை.

    ஆக, உலகின் பெரும்பான்மை உயிரினங்கள் தோற்றத்திற்கு பரிணாமத்தின் பதில் பூஜ்ஜியம். டாட்....

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  3. சலாம் சகோ நாகூர் மீரான்!

    //fact...fact..fact...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. சலாம் சகோ ஆஷிக்!

    //சிறிய அளவு டைனாசர்களில் இருந்து அவற்றின் முன்னன் கால்கள் சிறகுகலாக மாறி பறவைகள் வந்தன (இதுக்கும் ஆதாரம் கிடையாது) என்று அள்ளி விடும் பரிணாமவியலாளர்கள், பறவைகளுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே தோன்றிய பூச்சிகளின் பறக்கும்தன்மைக்கு தெளிவான விளக்கம் எதையும் இதுவரை தந்ததில்லை. //

    இனியும் தர மாட்டார்கள். ஏனெனில் அப்படி ஒரு நிகழ்வு நிகழ சாத்தியமே இல்லை என்கிறபோது வெறும் அனுமாநங்களை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். படித்த அறிவாளிகள் பலரும் இந்த டார்வினின் பரிணாமவியலை இன்னும் நம்பிக் கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. //இனிமேல் யாரும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் என்ற விட்டலாச்சாரியா(டார்வினின்) சொம்பை தூக்கிக் கொண்டு பரிணாமப் பாடம் நடத்த வேண்டாம். ஆமாம. சொல்லிபுட்டேன்.//

    சொம்பே இல்லையாம்....
    எங்கே போய் தூக்குவாங்க....

    அருமையான பதிவு...
    மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  6. சகோ ஆஷா ஃபர்வீன்!

    //சொம்பே இல்லையாம்....
    எங்கே போய் தூக்குவாங்க....//

    கற்பனைகள், அநுமானங்கள் என்ற சொம்பு என்று கூட வைத்துக் கொள்ளலாம். :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. சலாம் ,

    யூதர்களுக்கு சனிக்கிழமை மீன் பிடிக்க போக கூடாது என்று கூறியும் யூதர்கள் சென்றதால் அவர்கள் குரங்குகளாக உருமாற்ற பட்டதாக அல் குர்ஆன் கூறுகிறது.....அவ்வாறு குரங்குகளாக மாற்றப்பட்டவர்களை கண்டு தான் டார்வின் குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக கூறி உள்ளாரா..?

    அந்த அத்தாட்சிகள் காணக்கிடைக்கிறதா...?

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  8. சகோ நாகூர் மீரான்!

    //யூதர்களுக்கு சனிக்கிழமை மீன் பிடிக்க போக கூடாது என்று கூறியும் யூதர்கள் சென்றதால் அவர்கள் குரங்குகளாக உருமாற்ற பட்டதாக அல் குர்ஆன் கூறுகிறது.....அவ்வாறு குரங்குகளாக மாற்றப்பட்டவர்களை கண்டு தான் டார்வின் குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக கூறி உள்ளாரா..?//

    அவ்வாறு உருமாற்றப்பட்டவைகள் இனப்பெருக்கம் செய்ய இயலாது. அதோடு அந்த இனம் அழிந்து விடும். உருவ ஒற்றுமைகள் ஒன்றை மட்டுமே வைத்து டார்வின் தனது கற்பனை குதிரையை ஓட விட்டதே பரிணாமவியல்.

    ReplyDelete
  9. masha alaah ...
    மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.alquran

    ReplyDelete
  10. சகோ இது நம்ம ஆளு!

    //masha alaah ...
    மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.alquran //

    'மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்க எதிர் வாதம் புரிகிறான்'
    -குர்ஆன் 36;77

    குர்ஆன் வசனத்தை நாம் சொல்லும் போது மறக்காமல் வசன எண்களை குறிக்க மறக்க வேண்டாம். அவ்வாறு செய்யவில்லை எனில் அது பின்னாளில் பல குழப்பங்களை உண்டு பண்ணி விடும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. லக்னோ: உ.பி., மாநிலம் கான்பூரில், ஓட்டல் வெயிட்டர் ஒருவரை, அம்மாநில பா.ஜ., இளைஞரணி துணைத்தலைவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராத் படூரியா என்ற அவர், நேற்றிரவு கான்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த சென்றுள்ளார். தனது காருக்கு உணவை கொண்டு வருமாறு கூறிய விராத், அதற்கு மறுத்த வெயிட்டரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவத்தின் போது விராத் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் விராத் கைது செய்யப்பட்டார். அடையாள அட்டை கேட்டதற்காக டோல்கேட் ஊழியரை துப்பாக்கி காட்டி காங்கிரஸ் எம்.பி., மிரட்டிய சம்பவம் நடந்துள்ள நிலையில், பா.ஜ., தலைவர் வெயிட்டரை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    -----------------------------

    புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் வதேராவைத் தொடர்ந்து ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
    சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே குழு உறுப்பினராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த அக்டோபர் 2ம் தேதி தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசுகையில், இனி வரும் நாட்களில் நாட்டின் முக்கிய இருவர் குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு டி.எல்.எப்., நிறுவனத்திற்கும் இடையேயான பரிவர்த்தனையில், வதேரா சில சலுகைகளை பெற்றுக்கொண்டதாகவும், அதற்கு பிரதிபலனாக டி.எல்.எப்., நிறுவனத்திற்கு சாதகமாக வதேரா நடந்து கொண்டதாகவும் தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியளித்தார்.
    அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் அனைத்தும் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருப்பதாக வெளியாகி வரும் கருத்துக்களை மறுக்கும் விதமாக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக துவக்க கெஜ்ரிவால் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இம்முறை கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், பிரபல தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலருமான அஞ்சலி தமானியா கட்காரி குறித்த திடுக்கிடும் தகவல்களை வரும் 16ம் தேதி வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

    அஞ்சலி தமானியா, கடந்த மாதம் மகாராஷ்டிராவில் அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டதில் ரூ. 70 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி அதிர்ச்சியளித்தவர். இவ்விவகாரத்தில், தன்னை அணுகிய கட்காரி தரப்பு, மகாராஷ்டிர அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருடன் கட்காரிக்கு வர்த்தக தொடர்புகள் இருப்பதால் இதுகுறித்த ஆவணங்களை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அஞ்சலி கூறியுள்ளார். இதற்காக அஞ்சலி மீது கட்காரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கட்காரி குறித்து அஞ்சலி எந்த விதமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்போகிறார் என்பது குறித்து அறிய ஆவலுடன் நாடு தயாராகி வருகிறது.

    அக்டோபர் 13,2012
    தின மலர்

    ReplyDelete
  12. அருமை சகோ. பரிணாமவாதிகளை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. பணத்தையும் காலத்தையும் விரையம் செய்கிறார்கள். தொடர்ந்து இதுபோல் பதிவிட்டு பரிணாமவாதிகள் முகத்தில் கரிபூசுவோம்.

    ReplyDelete
  13. உங்கள் பதிவிற்கு தமிழ்மணம் ஓட்டு போடமுடியவில்லையே. ஏன்? எப்படி போடுவது?

    ReplyDelete
  14. சகோ துரை டேனியல்!

    //அருமை சகோ. பரிணாமவாதிகளை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. பணத்தையும் காலத்தையும் விரையம் செய்கிறார்கள். தொடர்ந்து இதுபோல் பதிவிட்டு பரிணாமவாதிகள் முகத்தில் கரிபூசுவோம்.//

    நல்ல சிந்தனையாளர்களில் பலர் பரிணாமவியலை நம்புவது எனக்கு ஆச்சிரியத்தையே தருகிறது.

    //உங்கள் பதிவிற்கு தமிழ்மணம் ஓட்டு போடமுடியவில்லையே. ஏன்? எப்படி போடுவது?//

    http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1194946

    இந்த லிங்கில் சென்று ஓட்டளியுங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. அண்ணாச்சி..நீங்க சொன்னா கரெக்ட்டா இருக்கும்

    ஒங்கள யாரு படைத்தார் என்று எனக்குத் தெரியாது அண்ணாச்சி.

    ஆனால்...மனித குலத்தை மட்டுமல்ல இந்த அண்டம் அனைத்தையும் படைத்தது நம் முனியாண்டி சாமிதான் என்பது உங்களுக்குத் தெரியாதா அண்ணாச்சி?

    ReplyDelete
  16. அண்ணாச்சி ஒங்க பீஜே எப்படி கீறார்?

    ReplyDelete
  17. பதிலுரைக்கு நன்றி. தங்கள் ஆலோசனைப்படியே தாங்கள் கொடுத்திருந்த லிங்கில் சென்று தமிழ்மணம் ஓட்டு போட்டு விட்டேன். நன்றி!

    ReplyDelete

  18. இக்பால் செல்வன்!

    //உதாராணத்துக்கு இயேசுவோ, முகம்மதுவோ, கிருஷ்ணரோ, இராமரோ வாழ்ந்தமைக்கான சான்றுகள் இதுவரை இல்லை, ஏனெனில் அவர்கள் வாழ்ந்தமைக்கான படிமங்களோ, எச்சங்களோ, மரபியல் சான்றுகளோ நிறுவப்படவில்லை. அறிவியல் சான்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் அவர்கள் இந்த உலகில் வாழ்ந்தார்களா என்பதே கேள்விக் குறியான ஒரு விடயமாகும் ? //

    இங்கு முகமது நபி வாழ்ந்ததைக் குறித்தோ ஏசு நாதர் வாழ்ந்ததைக் குறித்தோ கேள்வி எழுப்பப்பட வில்லை. ஒரு செல் உயிரிலிருந்து பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து இன்று மனிதனாக மாறியதாக பரிணாமவியல் சொல்கிறது. அதை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள். கேம்பிரியன் யுகத்திலிருந்து நாம் வாழும் இன்றைய காலம் வரை பல மில்லியன் வருடங்கள் சென்று விட்டன. இத்தனை காலத்திலும் நீங்கள் சொல்லும் பரிணாமம் பல உயிரினங்களிலும் பல மில்லியன மடங்கு ஒவ்வொரு யுகத்திலும் நடந்திருக்க வேண்டும். முழுவதும் காட்ட முடியவில்லையானாலும் வாலோடு உள்ள மனிதன் அல்லது குரங்கிலிருந்து மனிதனுக்கு பத்து வகையான பரிணாமங்கள் நடந்திருந்தால் அதில் ஒன்றிரண்டின் நிலைகளின் படிமங்களாவது இன்று வரை கிடைத்திருக்க வேண்டும். இன்று வரை பரிணாமவியல் ஆய்வாளர்களால் இடைப்பட்ட இனங்களை ஏன் கொண்டு வர முடியவில்லை?

    //'' விலங்குகள் தமது அங்கங்களை இழப்பது பரிணாமத்தின் ஒரு கூறே, குறிப்பாக தமது சக்தி விரயங்களை குறைத்துக் கொள்ளவே அப்படி நடைப் பெறும். முக்கியமாக குகைகளில் நெடுங்காலம் வாழும் விலங்குகள் தலைமுறைகள் தாண்டி தமது பார்வைப் புலன்களை இழப்பதும் இயல்பான ஒன்றே '' என்றார். //

    இதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. ஒரு இருட்டறையில் ஒருவனை 10 வருடம் அடைத்து வைத்தால் அவனது பார்வைத் திறன் பறி போய் விடும். இரண்டு நாள் ஒரு இருட்டறையில் இருந்து விட்டு திடீரென சூரியனின் ஒளியை பார்க்கும் ஒருவர் இதனை நன்கு உணர முடியும். இதை யாரும் மறுக்கவில்லை.

    அதே போல் பழங்கால ஆதி மனிதன் 10 அடிக்கு மேல் இருந்தவன் படிப்படியாக குறைந்து இன்று 6 அடியிலும் 5 அடியிலும் வந்து நிற்கிறான். இதனையும் நாம் யாரும் மறுக்கவில்லை. ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் எலும்புக் கூடுகள் கிடைத்து அதனை உறுதி செய்கின்றன. ஆனால் ஊர்வன பறப்பனவாக மாறியதற்கும் நான்கு காலில் நடந்த உயிரினம் பிறகு இரண்டு காலில் நடந்து குரங்கு மனிதனாக மாறி அதிலும் உடலில் குரோமசோம்களின் மாற்றம் ஏற்பட்டதை உறுதி படுத்திய ஆய்வுகள் எங்கே? இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

    சிறிய அளவு டைனாசர்களில் இருந்து அவற்றின் முன்னன் கால்கள் சிறகுகலாக மாறி பறவைகள் வந்தன (இதுக்கும் ஆதாரம் கிடையாது) என்று அள்ளி விடும் பரிணாமவியலாளர்கள், பறவைகளுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே தோன்றிய பூச்சிகளின் பறக்கும்தன்மைக்கு தெளிவான விளக்கம் எதையும் இதுவரை தந்ததில்லை.

    இந்த கேள்விகளுக்கு சமாளிப்புக்காக முகமது நபியையும் ஏசுவையும் உதாரணத்துக்கு கொண்டு வருவதால் அது பதிலாகாது. உங்கள் பதிலை படித்தவுடன் ஒரு கதை ஞாபகம் வந்தது.

    'தென்னை மரத்துல ஏண்டா ஏறுனே!'

    'புல்லு புடுங்க'

    'தென்னை மரத்துல ஏதுடா புல்லு'

    'சும்மா தொண தொணங்கப் படாது. அதான் எறங்குறன்ல' :-)

    என்று ஏதாவது பதிலை கொடுத்து பரிணாமக் கொள்கையை நிலை நிறுத்தப் பார்க்கிறீர்கள். எதையோ நினைத்து எங்கோ தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான நடந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. சகோதரர்.மதுமதி அவர்களின் தளத்திலே நாத்திகவாதிகள் உலகில் மூன்றாம் இடத்தில இருப்பதாக ஒரு புள்ளிவிவர பட்டியலை மனோரமா இயர் புக் வெளியிட்டுள்ளதாக பதிவு இட்டுள்ளார்.. ..

    http://www.madhumathi.com/2012/10/Howmanymillionsofatheistsintheworld.html

    அதற்கு மறுப்பு தெரிவித்து நான் இட்ட பின்னூட்டம் ஒன்றை இங்கு மீள் பதிவு செய்கிறேன்...நான் அறிந்த வரை சகோ.மதுமதி நடுநிலையாளர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்....

    அந்த புள்ளி விவரம் இதோ ...

    1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)
    2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
    3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
    4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
    5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
    6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
    7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
    8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)
    9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
    10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)
    11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
    12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
    13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
    14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
    15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)
    16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
    17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
    18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
    19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
    20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
    21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்
    22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்

    இதற்கு நான் இட்ட மறுப்பு ...

    ***********************************

    சகோ.மதுமதி

    தாங்கள் குறிப்பிட்ட மக்கள் தொகை மொத்தம் 666 .77 கோடி என அறிகிறேன்...ஒரு குறிப்பிட்ட மக்களை கருத்து கணிப்புக்காக இல்லாமல் மொத்த உலக மக்களின் கணக்கையும் காட்டியிருப்பதாகவே தெரிகிறது...ஒருவன் இந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என மதங்களை பின்பற்றினால் அவர்களை கண்டறிவது அரசு உதவியுடன் ஓரளவு சாத்தியமே....ஆனால் நாத்திகம் என்பது
    எந்த அரசு கசட்டிலும் இருப்பதாக தெரியவில்லை ...அவர்களை எவ்வாறு கண்டறிவார்கள்...நாத்திகம் பேசுவோர் தான் நாத்திகன் என்று பதிந்து கொள்ள உலக அளவில் வாய்ப்பு இருந்தால் தான் இந்த புள்ளி விவரம் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவு ஒப்புக்கொள்ளலாம் ...

    செங்கொடி, இக்பால் செல்வன், சார்வாகன் போன்றவர்கள் அரசு கசட்டிலுள்ள மதம் சார்ந்த தங்களின் பெயரையே மாற்றாமல் தன்னை நாத்திகர் என்று சொல்லி திரிகிறார்கள்..அவர்கள் உங்கள் கணக்கு படி உள்ள புள்ளி விவரத்தில் எந்த அடிப்படையில் வருவார்கள்....110 கோடியிலா ..அல்லது 130 கோடியிலா ....அல்லது 210 கோடியிலா ...அல்லது 90 கோடியிலா...தமிழ் நாட்டில் மட்டுமே நாத்திகம் பேசுவோர் எத்தனை பேர் என்று கணக்கெடுக்க முடியுமா...???

    ""நிச்சயமாக நாத்திகர்கள் சார்ந்த இந்த புள்ளி விவரங்கள் போலியானவையே...""

    இது உங்களது தளத்தில் எனது முதல் பின்னூட்டம் ...முதல் பின்னூட்டமே எதிர் கருத்தாக இருப்பதற்கு வருந்துகிறேன்....

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    **********************************

    ReplyDelete
  20. //முதலில் ஆதி மனிதனின் 10 அடி எலும்புக் கூடுகள் எங்கே எப்போது கிடைத்துள்ளன எனக் கூற முடியுமா ? நல்ல காமடி பண்றீங்க சார் நீங்க.. படித்த உங்களைப் போன்றோரே இப்படியான சதிக் கோட்பாடுகளைப் பரப்ப நினைத்தால் பாமரர் பாடு அதோ கதி தான் !!!//

    ஹி ....ஹி....இது சம்பந்தமாக இன்னும் இரண்டொரு நாளில் தனி பதிவே வரும்.

    முதலில் நான் பின்னூடடத்தில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு சமாளிக்காமல் நேரிடையான பதிலை ஆதாரத்துடன் தரவும். (உங்களிடம் பதில் இருந்தால்)

    ReplyDelete
  21. //உங்களுக்கான பதில் கொடுக்கப்பட்டு விட்டது, இது வரைக் கண்டறிந்த படிமங்களில் இடைநிலை விலங்குகளுக்கான படிமங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.. கிடைக்கவில்லை என்பதால் பரிணாமம் பொய் என்றாகி விடாது, படிமம் என்பது பல தரவுகளின் ஒன்று, மரபுக் கூறுகள், பரிணாம மனோவியல் உட்பட பல்வேறு இன்ன பிற தரவுகள் - பரிணாம வளர்ச்சியை நிரூபிக்கின்றன ... !//

    ஆக..ஆதாரமில்லாமல் வெற்று நம்பிக்கை. :-)))))))))

    ReplyDelete
  22. உங்க நம்பிக்கை எல்லாமே 8000 வருடங்களுக்கு முன்னால் தோன்றியது என்றுதானே? அப்புறம் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அப்போ 8000 வருடங்களுக்கு முன்னால் படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டதெல்லாம் பொய்யா?

    அந்தப் படிமத்திலுள்ள வண்டும், சிலந்தியும் இப்போ இருக்கிற வண்டும், சிலந்தியும் ஒன்றுதான் என்று எப்படி உறுதியாக நிறுவுகிறீர்கள்?

    ReplyDelete
  23. //அந்தப் படிமத்திலுள்ள வண்டும், சிலந்தியும் இப்போ இருக்கிற வண்டும், சிலந்தியும் ஒன்றுதான் என்று எப்படி உறுதியாக நிறுவுகிறீர்கள்?//

    இதை நான் நிறுவவில்லை. படிமங்களை ஆய்ந்து அறிக்கை வெளியிட்டது அறிவியல் அறிஞர்கள். உண்மையில் பரிணாமம் நடந்து ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமித்து இருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வண்டும் சிலந்தியும் கண்டிப்பாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும். எந்த மாற்றமும் இல்லாமல் இன்று நாம் பார்க்கும் வடிவிலேயே இருப்பதால் பரிணாம வாதம் இட்டுக்கட்டப் பட்டது என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமல்ல இதுபோல் எண்ணற்ற ஆய்வு முடிவுகள் பரிணாம வாத்தை பொய்யாக்குகின்றன.

    இந்த கேள்விகளை எல்லாம் பரிணாமத்தை ஆதரிப்பவர்களிடம் சென்று கேளுங்கள். பதில் தெரியாமல் விழிப்பார்கள்.

    ReplyDelete
  24. சகோதரர் குஜால்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //உங்க நம்பிக்கை எல்லாமே 8000 வருடங்களுக்கு முன்னால் தோன்றியது என்றுதானே? //

    என்ன கூத்து இது? யார் இப்படியெல்லாம் சொல்கின்றார்கள்? உலகம் தோன்றி பில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்பதில் முஸ்லிம்களுக்கு கருத்து வேற்றுமை இல்லையே....நான் சொல்வதை நம்பவில்லை என்றால் The chronicle of HIgher education சொல்வதை கேளுங்கள்.

    Young Earth Creationism, which claims that the earth is 10,000 years old (or younger), is virtually absent in the Islamic world. Muslims generally accept the earth's being 4.5 billion years old. - The chronicle of HIgher education, Does Islam Stand Against Science?, dated 19th June 2011.

    புரிகின்றதா? நீங்க வேறு மத நம்பிக்கையை பார்த்துவிட்டு அது போன்றே இஸ்லாமிலும் இருக்குமென்று நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

    முஸ்லிம்களின் நம்பிக்கை எளிதானது. அது என்னவென்றால், உலகம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதிலும், உயிரினங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியில் இருக்கின்றன என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், இவை படிப்படியாக தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்பதும் இந்த படைப்புகளுக்கு பின்னால் இறைவன் இருக்கின்றான் என்று நம்புவதுமே இஸ்லாமிய நம்பிக்கையாகும். அதனை நிரூபிக்கும்படியாகவே நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடைத்துள்ளன.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  25. //...உண்மையில் பரிணாமம் நடந்து ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமித்து இருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வண்டும் சிலந்தியும் கண்டிப்பாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும். ...///

    இதைத்தான் சொல்லுவது டாவினின் பரிணாமக்கொள்கை பற்றி சரியாகத் தெரியாமல் கதை விடக்கூடாதென்று. பரிணாமக்கொள்கையில் டி விரீஸின் விகாரக்கொள்கையும் சேர்த்து புதிய டாவினிசம் என்றொன்றும் இருக்கிறது.
    பரிணமம் எனும்போது உயிர்கள் பரிணாமம் அடைந்து இன்னொன்றாக மாறும் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர ஒரிஜினல் அழிந்து போகும் எனச் சொல்லப்படவில்லை. பரிணாமம் அடையும் உயிர் அச்சூழலுக்கு முற்றாக இசைபாக்கம் அடைந்திருந்தால் அவை தொடர்ந்து உயிர்தப்பிப்பிழைக்கும் முக்கிய உதாரணம் சுறா மீன்கள். இவை கடந்த 75 மில்லியன் ஆண்டுகளாக மாறவில்லை. காரணம் ஆழ்கடற் சூழலுக்கு அவை முற்றாக பரிணாமம் அடைந்து விட்டன மற்றும் அச்சூழலில் சுறாக்களுக்கு எதிரிகள் இல்லை!
    சு.பி முதலில் பரிணாமக் கொள்கையை முதலில் படியுங்கள் !
    அதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர் George Poinar, Jr எங்கே சொன்னார் சிலந்தியின உருவ அமைப்புகளிலும் மாற்ரம் ஏற்படவில்லை என. அவர் சொன்னது அம்பர் (ஒரு வகை மரப் பிசின்) பிசினில் அகப்பட்ட சிலந்திக்கோ குளவிக்கோ எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் மரப்பிசின் பாதுகாத்துள்ளது என்ற ஆச்சர்யமே அன்றி சிலந்தி 100 மில்லியன் ஆண்டுகளாக மாறவில்லை என்றல்ல! மேலும் George Poinar, Jr சொல்கிறார் இந்த சிலந்தியும் குளவியும் உலகில் இருந்து மறைந்து விட்டனவாம் (Researchers say both the spider and the wasp belong to extinct genera) !

    கீழே இதனை கண்டுபிடித்த ஆராச்ச்சியாளர் பணியாற்றும் பல்க்லைக்கழக (ஒரிகன் பல்கலைக்கழகம்) இணையத்தலத்தில் வந்த செய்திக்குறிப்பு, மற்றும் ஆராய்ச்சியாலரின் அவதானங்கள் !
    இதில் எங்காவது உங்கள் கப்சா இருக்கிரதா என பூதக்கண்ணாடி வைத்துத் தேடியும் தெரியவில்லை.
    http://oregonstate.edu/ua/ncs/archives/2012/oct/fossil-ancient-spider-attack-only-one-its-type-ever-discovered

    ReplyDelete
  26. //...அந்தப் படிமத்திலுள்ள வண்டும், சிலந்தியும் இப்போ இருக்கிற வண்டும், சிலந்தியும் ஒன்றுதான் என்று எப்படி உறுதியாக நிறுவுகிறீர்கள்?...///

    இவர் எங்கே நிறுவுகிறார். ஆராய்ச்சியாளர் சொல்லாததை தானே சொல்கிறார். ஆராய்ச்சியாளர்கள் கட்டிரையில் சொல்கிறார்கள் இந்த சிலந்தி இனமும் குளவி இனமும் அழிந்து விட்டதென்று.
    “..Both the spider and the wasp belong to extinct genera and are described in the paper...”

    ReplyDelete
  27. @இக்பால் செல்வன்

    //எனதுக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் .. படிமத்தில் காணப்பட்ட கணுக்காலிகளுக்கு மூளையில் மூன்று பாகங்கள் உள்ளன, இன்றையக் காலக் கட்டத்தில் கணுக்காலிகளுக்கு மூளையில் இரு பாகங்களே உள்ளன .. அந்த ஒரு பாகம் எங்கே போய்விட்டது ? கடவுள் கொண்டு போய்விட்டாரா ? காக்கா தூக்கிக் கொண்டுப் போய்விட்டதா ?//

    சகோ. இக்பால் செல்வன்

    நாம் வீட்டிலே ஆடுகள் வளர்திருப்போம்...அது உடலில் ரோமங்கள் எப்படி இருக்கும்...பனி பிரதேசங்களில் வாழக்கூடிய ஆடு வகைகளுக்கு ரோமங்கள் எப்படி இருக்கும்...இரண்டுமே ஆடு வகைதான் அதற்காக இரண்டு ஆட்டு தோள்களையும் எடுத்து வைத்து கொண்டு பரிணாமம் பேச முடியாது...ஏனெனில் உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்து ஒன்றை ஆப்ரிக்காவிலும் ஒன்றை அண்டார்டிகாவிலும் வளர்க்க விருப்ப படுகிறீர்கள் என்றால் அண்டார்டிகாவில் குளிர் அதிகம் என்பதால் ஒரு சொர்டர் கொடுத்து அனுப்புவதில் ஆச்சர்யம் இல்லை..அதுபோல் வாழ்கின்ற இடத்திற்கு தகுந்தவாறு உயிரிகளின் உடல் அமைப்பு அமைக்கப் பட்டுள்ளது ...(உதாரணம் - பாலைவனத்தில் வாழும் ஒட்டகம்(நீர் கிடைப்பது அரிது என்பதால்) நீரை சேமித்து கொள்ளும் தன்மை)

    எல்லா உயிரிகளிலும் வெரைட்டி உண்டு..நீங்கள் குறிப்பிட்ட கணுக்கலிகள் உட்பட ......

    உங்களுக்கு ஒரு ஐடியா தர்றேன்....

    ""மாற்றான் படத்திலே இரண்டு சூரியாவுக்கு ஒரு இதயம் இருக்கிறதே....!!!!! இருவருக்கு ஒரு இதயம் என்பது மனித பரிணாமத்தில் ஒரு மைல் கல் ...பரிணாமம் வென்று விட்டது..."" என்று நீங்கள் அடுத்த பதிவு போடலாம்....

    இது இப்படி அது அப்படி என்று நீங்கள் கூற வேண்டாம்...பரிணாமம் , திரைப்படம் இரண்டுமே கற்பனையே....இந்த ஒரு ஒற்றுமை போதும் ..பதிவை ஆரம்பிங்கள் ...வாழ்த்துக்கள்

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  28. ஊர் சுற்றி!

    //பரிணாமக்கொள்கையில் டி விரீஸின் விகாரக்கொள்கையும் சேர்த்து புதிய டாவினிசம் என்றொன்றும் இருக்கிறது.
    பரிணமம் எனும்போது உயிர்கள் பரிணாமம் அடைந்து இன்னொன்றாக மாறும் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர ஒரிஜினல் அழிந்து போகும் எனச் சொல்லப்படவில்லை. //

    புதிய டார்வினிசமா? :-) என்ன சார் இது பழைய டார்வின் சொன்ன கருத்துகளே நிரூபிக்க முடியாமல் சார்வாகனிலிருந்து இக்பால் செல்வன் வரை குழப்பத்தில் இருக்கிறார்கள். இதில் புதிய டார்வினிசம் வந்து எதை சாதிக்கப் போகிறது?

    முதலில் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்த பல நிலைகளின் படிமங்கள் பல லட்சங்கள் பல கோடிகள் இதுவரை கிடைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு படிம ஆதாரமே இதுவரை உலகில் எங்கும் ஏன் கிடைக்கவில்லை.? என்று இக்பால் செல்வனிடம் கேட்டால் திரு திரு என்று முழிக்கிறார். அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால்தானே உங்களுக்கு படிமம் கிடைக்கும். எனவே அடிப்படையே ஆட்டம் காணுகிறது.

    டைனோசர்களின் முன் கால்களே பறவைகளுக்கு இறக்கைகளாக பரிணமித்தது என்ற ஒரு காமெடியும் பரிணாமவியலில் உண்டு. பறவையினத்துக்கு பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே பூச்சியினங்களுக்கு பறக்கும் தன்மை உள்ளதே! அதனை வழங்கியது யார்? அது பரிணாமம் அடைந்தது எப்படி? என்பதற்கு பரிணாமவியலின் ஆதாரம் கேட்டேன். அதற்கும் திரு திரு முழிப்புதான்.

    இப்பொழுது நீங்கள் சொல்லும் புதிய டார்வினிசம் என்றால் என்ன? பழைய டார்வினசத்துக்கும் புதிய டாரிவினசத்துக்கும் என்ன வேறுபாடு? இதற்காவது படிம ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளீர்களா? விளக்கம் தேவை.

    இதற்கெல்லாம் பதில் கிடைத்து விட்டால் நானும் உங்களோடு சேர்ந்து டார்வின் புகழ் பரப்ப வந்து விடுகிறேன். :-)

    ReplyDelete
  29. //புதிய டார்வினிசமா? :-) என்ன சார் இது//

    சார்ல்ஸ் டாவின் தனது கூர்ப்புக்கொள்கையில் உயிரினங்களில் திடீரெனத் தோன்றும் சில வேறுபாடுகள் பற்றிய விளக்கங்களைக் கொடுக்க தவறிவிட்டார். இவை எப்படி ஏற்பட்டன என டி விரீஸ் என்பவர் தனது விகாரக்கொள்கை மூலம் விளக்கம் சொன்னார். இவை இரண்டும் சேந்ததே நியோ டாவினிசம் (தமிழில் புதிய டாவினிசம் எனச்சொன்னேன்) நீங்கள் புதிதாக ஒரு டாவினிசம் முளைத்திருப்பதாய் கற்பனைக்குதிரையை ஓட்ட ஆரம்பித்து விட்டீர்கள்!


    //முதலில் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்த பல நிலைகளின் படிமங்கள் பல லட்சங்கள் பல கோடிகள் இதுவரை கிடைத்திருக்க வேண்டும்.///

    கிடைக்காமலும் போகலாம், இனிமேலும் கிடைக்கலாம். இன்று மரப்பிசினில் சிக்கிய சிலந்தியும் குளவியும் 100 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் கிடைத்தது போல!


    //டைனோசர்களின் முன் கால்களே பறவைகளுக்கு இறக்கைகளாக பரிணமித்தது என்ற ஒரு காமெடியும் பரிணாமவியலில் உண்டு.///

    இங்கேதான் உங்கள் காமெடி ஆரம்பிக்கிறது. முதலில் பரிணாமம் ஒரு திசையில் நடப்பதல்ல, கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு இனத்தில் சிறகுகள் முதலில் வந்து விட்டது என்பதற்காக இன்னொரு இனத்தில் மில்லியன் வருடங்களுக்கு பின்னரும் வரலாம். பரிணாமவியலின் அடிப்படைக் கருத்து தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் என்பது. பரிணாமக்கொள்கை ஒன்றும் ஒரு புத்தகத்தில் இத்தனையாம் பந்தியில் ஒருவர் இப்படிச்சொன்னார் அதுதான் கடவுளின் வேதவாக்கு என எழுதப்பட்ட குறுகிய கொள்கை அல்ல. அது மிகப்பரந்து பட்டது அதனைப்புரிந்து கொள்ள அடிப்படைக் கலங்கல் எப்படிச் செயற்படுகின்றன என்பதில் இருந்து சுற்றுச்சூழல் எப்படி மாற்ரம் பெறுகிறது என்பது வரை பொருத்திப்பார்க்க வேண்டும்!


    //இதற்கெல்லாம் பதில் கிடைத்து விட்டால் நானும் உங்களோடு சேர்ந்து டார்வின் புகழ் பரப்ப வந்து விடுகிறேன். :-)///

    நீங்கள் ஒன்றும் பரப்பத்தேவை இல்லை டாவின் புகழ் உலகெங்கும் ஏலவே பரம்பி உள்ளது!


    //நாம் வீட்டிலே ஆடுகள் வளர்திருப்போம்...அது உடலில் ரோமங்கள் எப்படி இருக்கும்...பனி பிரதேசங்களில் வாழக்கூடிய ஆடு வகைகளுக்கு ரோமங்கள் எப்படி இருக்கும்...இரண்டுமே ஆடு வகைதான் அதற்காக இரண்டு ஆட்டு தோள்களையும் எடுத்து வைத்து கொண்டு பரிணாமம் பேச முடியாது////

    இதனைத்தான் பரிணாமத்தின் தக்கன பிழைத்தல் தகாதன அழிதல் கருத்து சொல்கிறது.
    பனிப்பிரதேசத்தில் உரோமம் குறைந்த ஆட்டுக்குட்ட்டி பிறந்தால் அது இறந்து விடும். குறைந்த உரோம உயிரணு அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும் சாத்தியம் அற்றுப்போகும். பல பல சந்ததிகளுக்குப் பின்னர் உரோமங்கள் மிகுந்த ஆடுகளே காணப்படும். உரோமம் மிகுந்த ஆடுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டில் விட்டுப்பாருங்கள் உடல் வெம்மையால் இறந்து போகும்!
    உங்களை அறியாமலே டாவினிசத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் பார்த்தீர்களா?

    //.அதுபோல் வாழ்கின்ற இடத்திற்கு தகுந்தவாறு உயிரிகளின் உடல் அமைப்பு அமைக்கப் பட்டுள்ளது ...(உதாரணம் - பாலைவனத்தில் வாழும் ஒட்டகம்(நீர் கிடைப்பது அரிது என்பதால்) நீரை சேமித்து கொள்ளும் தன்மை) /////

    மிகச்சரி ! டாவினின் கொள்கை இங்கேயும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது!
    நீரைச் சேமிக்க முடியாத ஒட்டகம் இறந்து போகும்! அதன் உயிரணுக்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாது!

    ReplyDelete
  30. எனக்கொரு விடயம் புரியவில்லை டாவினிஸம் தோற்றால் அறிவியலே தோற்றுவிட்டது என்று அர்த்தமா? கொள்கைகள் உருவாக்கப்படுவதில் பல படிகள் உள்ளன அதில் இறுதிப்படி "புதிய அறிவின் முன்னிலையில் மாற்றி அமைக்கக்கூடிய கொள்கைகளை உருவாக்கல்"என்பதுதான்.துப்பாக்கி கண்டுபிடிக்கும்போது துப்பாக்கிக்குண்டுகள் மனித உடலை துளைக்காது என்று நம்பப்பட்டது...டாவினிஸம் உயிர் தோன்றுவது எவ்வாறு என்று கூறுவதில் தோற்றுவிட்டது என்று ஒப்புக்கொண்டுவிட்டால்...அடுத்து வேறு ஒரு கொள்கையை உருவாக்கவேண்டியதுதான்...ஆராய்ச்சி செய்து உருவாக்கவேண்டும்...நீங்கள் டாவினிஸம் தோற்றுவிட்டது என்று கூவுவதினூடாக எதை முன்னிறுத்த முய்ல்கின்றீர்கள் அல்லாவையா?

    ReplyDelete
  31. //எனக்கொரு விடயம் புரியவில்லை டாவினிஸம் தோற்றால் அறிவியலே தோற்றுவிட்டது என்று அர்த்தமா? //

    நன் அப்படி சொல்லவில்லையே! நிரூபிக்கப்படாத பரிணாம தத்துவத்தை ஏன் பாடப் புத்தகங்களில் வைக்க வேண்டும்? முதலில் நிரூபித்து விட்டு பிறகு சேர்த்து கொள்ளுங்கள்.

    அறிவியலை நான் மிகவும் நேசிக்கிறேன். அறிவியல் அறிஞர்களை மதிக்கவும் செய்கிறேன்.

    //.நீங்கள் டாவினிஸம் தோற்றுவிட்டது என்று கூவுவதினூடாக எதை முன்னிறுத்த முய்ல்கின்றீர்கள் அல்லாவையா?//

    கடவுளை மறுப்பதற்காக நாத்திகர்களால் இன்று வரை பில்டப் கொடுக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். அது தவறு என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அதைத்தான் நானும் செய்கிறேன்.

    ReplyDelete
  32. டார்வின் கொள்கை என்பது ஓர் கொள்கையே அன்றி விதி அல்ல . அறிவியலில் விதி என்பது மாறாதது. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது.(நியூட்டனின் விதி போல) கொள்கை எனபது மாறக்கூடியது. நாளையே டார்வின் கொள்கை தவறு என்று கூட அறிவியல் ரீதியாக ஆதாரத்துடன் நிறுவப்படலாம். அதை அறிவியலும் அனுமதிக்கிறது. எனவே பரிணாமக்கொள்கை பற்றிய விவாதங்களை அறிவியல் முழு மனதுடன் வரவேற்கிறது. இதற்கு மதச்சாயம் யாரும் பூசக்கூடாது என்பதுதான் என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)