
சவுதி அரேபியா தற்போது தனது நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கும் முகமாகவும், முறையான அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை முறைப்படுத்தவும் சில சட்டங்களை சமீப காலமாக கடுமையாக்கியிருக்கிறது. இதனால் புனித நகரங்களான மெக்கா மெதினாவில் தெருக்களை சுத்தம் பண்ண ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சிலரது அடையாள அட்டைகள் இன்னும் புதிக்கப்படாததால் சட்டத்துக்கு பயந்து பல பங்களாதேசத்தவர் வேலைக்கு வரவில்லை.
ஆட்கள் வேலைக்கு வராததால் மதினாவின் தெருக்களில் குப்பைகள் அதிகமாக சேர ஆரம்பித்தன. இது தொடர்ந்தால் சுற்று சூழலுக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த தன்னார்வ தொண்டர்கள் அந்த குப்பைகளை அகற்றுவதில் ஈடுபட ஆரம்பித்தனர். தற்போது சவுதிகளும் தெருக்களை கூட்டி தங்கள் வீதிகளை அழகாக வைக்க முயற்சிப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
நமது நாட்டில் இது போன்ற வேலை செய்பவர்களை தோட்டிகள் என்று ஒரு சாதியாக ஒதுக்கி வைத்திருப்போம். இந்துக்களிலேயே அவர்களோடு திருமண உறவு முதற் கொண்டு எந்த உறவுகளை பேணாததைப் பார்க்கிறோம். அவர்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை.
ஆனால் சவுதியில் அதே வேலை செய்து வரும் பங்களாதேசத்தவர்கள் ஒவ்வொரு நேர தொழுகையிலும் அதே சீருடையோடு பள்ளியில் தோளோடு தோள் உரசி நின்று தொழும் காட்சியை தினமும் பார்க்கலாம். இந்த சகோதரத்துவத்தை கற்பித்தது இஸ்லாம். அதனை நடைமுறை படுத்தியவர் நபிகள் நாயகம்.
பல கோடிகளுக்கு அதிபதிகளான இந்த இளைஞர்கள் தேவை ஏற்படும் போது களத்தில் இறங்கி எந்த வேலையையும் செய்யத் துணிவதற்கு இஸ்லாம் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
திருடாமல், பொய் பேசாமல், மற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்காமல் எந்த தொழிலையும் செய்யலாம்: அது கேவலம் இல்லை என்பதை இந்த இளைஞர்கள் நிரூபித்து வருகிறார்கள். நாம் கூட நமது தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் அரசையே எதிர்பார்க்காமல் நம்மால் முடிந்த பொது வேலைகளை செய்து சுற்றுப் புறத்தை தூய்மையாக்க முயற்சிப்போமாக!
தகவல் உதவி
சவுதி கெஜட்
திரு பாண்டியன்!
ReplyDeleteநீங்கள் சொல்லும் இந்த கதைகள் எந்த அளவு இட்டுக் கட்டப்பட்டது என்பதை இனி பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி ‘உமைமா’ என்பாரின் மகள் ‘ஜைனப்’ அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
‘அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் – எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் ‘உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!’ என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)
ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தலாக் கூற வேண்டாம்!’ என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
இதே வசனத்தின் இறுதியில் ‘அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் ‘தலாக் கூற வேண்டாம்’ என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் ‘அவர் தலாக் கூற வேண்டும்’ அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண இந்த சுட்டியைப் பார்வையிடவும்.
http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_02.html