Monday, February 10, 2014

யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

அனுபமா சுப்ரமணியன்: ஒரு வதந்தி நிலவுகிறதே! டைரக்டர் அமீர் தான் உங்களின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் அவர்தான் உங்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று இஸ்லாத்துக்கு மாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறதே!

யுவன் சங்கர்: (பலமாக சிரிக்கிறார்) நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்கள். என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. இது அவரவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். உங்களின் உள் மனதில் இறை நம்பிக்கையில் ஏற்படும் சில மாற்றங்களே தற்போது என்னுள் நடந்துள்ளது. இது தான் உண்மையும் கூட.

அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?

யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.

அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!

யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.

அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

யுவன் சங்கர்: இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர். இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன். தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.

அனுபமா சுப்ரமணியம்: 'யுவன் சங்கர் ராஜா' என்ற உங்களின் இந்த பெயரும் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?

யுவன் சங்கர்: இது பற்றிய செய்தியை விரைவிலேயே வெளியிடுவேன்.



அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17


ஆம். இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் 'இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.

வாளால் இஸ்லாம் உலகமெங்கும் பரப்பப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு 'எது வேண்டும?' என்று ஒளரங்கஜேப் கேட்டதாக நமது வரலாற்று புத்தகங்களில் ஏகத்துக்கும் கதை அளந்திருப்பார்கள். அந்த கதைகள் அனைத்தும் கற்பனைளே என்பதற்கு இந்த பேட்டி மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

--------------------------------------------------------

ஹூஸைனீ எனும் அன்ஸாரீ ஒருவருக்கு கிறிஸ்தவர்களான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் தொடர்ந்தும் இருக்கப் போவதாக பிடிவாதமாக இருந்தனர். எனவே, அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவ நிர்ப்பந்திக் கட்டுமா என நபி அவர்களிடம் அவர் வினவியபோது நபியவர்கள் அவரைத் தடுத்தார்கள்.அப்போது இந்த வசனம் இறக்கப்பட்டது.

“மார்க்கத்தில் பலவந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழியானது தெளிவாகிவிட்டது”
குர்ஆன்: (2:256)


எனவே எவரையும் அவரின் வறுமையையும், சிரமத்தையும், இயலாமையையும் காரணமாக்கி அதன் மூலம் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் இணைக்க முற்படுவது குர்ஆனின் கட்டளைக்கே மாற்றமானது என்பதை விளங்குகிறோம். இதன்படி மொகலாயர்கள் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தினம் போரிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மத மாற்றம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை அதை அவர்கள் விரும்பவும் இல்லை என்பதை விளங்குகிறோம்.





28 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    தமிழ்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அண்ணன்...

    ஜசாக்கல்லாஹ்

    ReplyDelete
  2. Anonymous9:54 AM

    இளையராஜாவின் பாவலர் குடும்பம் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் பல பிராமண குடும்பங்களை தங்களது கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மூலம் காப்பாற்றி இருக்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவர் வெளியேறுவது மன கஷ்டம் கொடுக்கத்தான் செய்யும். தனி மனித விருப்பம் என்பது வேறு. பொது வாழ்க்கை என்பது வேறு. இடையில் சிறிது காலம் பிராமண பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதன்படி கல்யாணம் செய்து விவாகரத்து ...பின் பெரியார். ...கடவுள் மறுப்பு கொள்கையில் ஈடுபாடு ...இப்போது புது மார்க்கம். ஆனால் ஒன்று குரான் படிப்பவர்கள், அரபி மொழி மற்றும் இசை கேட்பவர்கள் படிப்பவர்கள் அதற்கு அடிமை யாகி விடுவார்கள் என்பது திண்ணம். அவைகளுக்கு அப்பேற்பட்ட சக்தி இருப்பது உண்மை. படித்து விட்டால் மீள்வது மிக கடினம். எங்கிருந்தாலும் வாழ்க

    பஞ்சு மணி

    தினமலர் வாசகர் கடிதம்

    ReplyDelete
  3. Nice translation brother
    ... masha allah

    ReplyDelete
  4. Anonymous10:10 AM

    mister panju avargal intha ulagathuku ennamo solla varar vali vidungo.

    ReplyDelete
  5. Anonymous10:11 AM

    டிவிட்டரில் என்னவொரு வில்லத்தனம்! :-)

    அதிஷா ‏@athisha 9h
    டே உன்னால முஸ்லிமாதான் மாறமுடியும். ஐயராவோ முதலியாராவோ செட்டியாராவோ மாறமுடியாதுடா.. #சாதிடா #வெறிடா.. #சிங்கம்டா


    ReplyDelete
  6. Anonymous11:30 AM

    Yaathi veriye neeye vaithu kol yaara iven sinne pulle thanma

    ReplyDelete
  7. Anonymous12:47 PM

    Islam is a way good life.
    Quran is the no.1 holy book in the world. Pure god words. This is 1400 years old book. It contains many miracles. Quran is speak about science(physics, chemistry, biology).
    You just see what is islam.
    Non muslim Brothers Please just read translation on your mother tongue. You will realised it. This is true. Android apps also available on play store.

    ReplyDelete
  8. Anonymous9:14 PM

    Welcome to the most pureful Religion ISLAM, May Allah give u the peaceful and prosperous life... Gud luck bro...

    ReplyDelete
  9. அல்லாஹ் .. யுவனுக்கு ஈமானில் அதிக உறுதியை தா ... மொழி பெயர்ப்பு தமிழில் நன்றாக உள்ளது ...

    ReplyDelete
  10. பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்!

    எனது பதிவுலக வரலாற்றில் நேற்றுதான் கூகுளில் 1800 ஹிட்ஸ் பெற்றுள்ளேன். இது வரை 1000க்கு மேல் தாண்டியதில்லை. இந்த செய்தி இதன் மூலம் பலரையும் சென்றடைந்துள்ளது.

    எல்லா புகழும் இறைவனுக்கே!

    ReplyDelete
  11. ansar from Sri Lanka12:47 AM

    May Allah, show his guidance to all the persons, who have a soft corner in their heart about Islam, this remarkable opportunity, to taste the true meaning of life.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் பல பத்திரிக்கைகல் இல்லாதது பொல்லாததை எல்லாம் விஷமாக கக்கி கொண்டு இருக்க, இந்த விஷயத்தில் தெளிவு படுத்திய சுவன பிரியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுடைய ஈமானை பலபடுத்தி உங்கள் வாழ்வில் நிம்மதியை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் பல பத்திரிக்கைகல் இல்லாதது பொல்லாததை எல்லாம் விஷமாக கக்கி கொண்டு இருக்க, இந்த விஷயத்தில் தெளிவு படுத்திய சுவன பிரியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுடைய ஈமானை பலபடுத்தி உங்கள் வாழ்வில் நிம்மதியை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  14. ஆனந்த் சாகர்1:18 AM

    ///அல்லாஹ் .. யுவனுக்கு ஈமானில் அதிக உறுதியை தா ...///

    போச்சுடா, யுவனை பயங்கவாதியா மாற்றாமல் விடமாட்டீங்க போலிருக்கே?

    ReplyDelete
  15. ஆனந்த் சாகர்1:29 AM

    //ஆனால் ஒன்று குரான் படிப்பவர்கள், அரபி மொழி மற்றும் இசை கேட்பவர்கள் படிப்பவர்கள் அதற்கு அடிமை யாகி விடுவார்கள் என்பது திண்ணம்.//

    அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. பயங்கரவாதம் மற்றும் பொய் மூலம் மட்டுமே இஸ்லாம் பரவியது, இன்றும் பரப்பப்படுகிறது.

    //அவைகளுக்கு அப்பேற்பட்ட சக்தி இருப்பது உண்மை. படித்து விட்டால் மீள்வது மிக கடினம்.//

    அப்படி எந்த சக்தியும் குரானுக்கு இல்லை. இன்று உலகளவில் நிறைய முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் நிச்சயமாகக் குர் ஆனோடு தொடர்புள்ளவர்கள் அல்ல.
    முஸ்லிம் பெயர் கொண்டவர்க ளெல்லாம் குர் ஆனோடு தொடர்புடைய வர்கள் அல்ல. குரானோடு தொடர்பு டையவர்கள் ஒரு போதும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற மாட்டார்கள். இதுதான் நிதர்சனம்

    ReplyDelete
  17. // இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் 'இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.// அகிலத்தின் இறைவனே!!ஈமானையும் இறையச்சத்தையும் நேர்வழியையும் நம் அனைவருக்கும் அதிகப்படுத்துவாயாக!!!

    ReplyDelete
  18. Anonymous2:34 AM

    Qur'anai purindhu nengal islam aerka karanamana valla allah vai puhalhiren.maranam nerungum podhu than mahathana vetri tharum maarkam islam aenbadhu aellrkum puryum.vaalal parappapattadhalla islam anbal aandavanal uruvakkapattadhu.islama aetra isai kalaignaruk vaalthukkal

    ReplyDelete
  19. என்னைப்பொருத்தவரை அரபி மொழி படித்து அதன் மூலம் குரானையும் உணர்ந்து அரபி மொழிபெயர்ப்பாளனாகியுள்ளேன், குரான் ஒரு தெளிவான மனப்பான்மையை தருகிறது, அந்த தெளிவில் நீங்கள் இஸ்லாமியராக மாறினாலும் சரிதான் மனிதனாக மாறினாலும் சரிதான்,

    ReplyDelete
  20. சுண்டல் பிரியன்4:48 AM

    ஏன் ஒவ்வொரு மனிதனுக்கும் இப்படி கனவுகளை உண்டாக்கி அவனை தனது அடிமையாக்க அல்லாவால் முடியவில்லை?ஏன் சன்னி பிரிவு அமெரிக்க கையால் சவுதி ஆட்சியாளர்கள் கனவில் தோன்றி சக இஸ்லாமியர்களான ஷியா பிரிவினரை துன்புறுத்தாதே என்று அல்லா சொல்லவில்லை?

    ReplyDelete
  21. Anonymous4:50 AM

    உண்மையா குரான் வெர்ஷன் என்று அனைத்து இஸ்லாமியர்களும் ஏற்றுகொள்ளும் ஒரு பிரதி இங்கே இருக்கிறதா?அரபி மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பிரதியும் முற்றிலும் வேறு மாதிரி இருப்பதை உணரவில்லையா?அடைப்புக்குறிகள் இடம் மாறுதல் வார்த்தைகள் அர்த்தம் மாறுதல் என்று ஆயிரம் குரான் வெர்ஷன்கள் உள்ளன.இறை வேதம் இறைவன் வாக்குதான் குரான் எனில் ஏன் ஒரு தெளிவான பொட்டில் அடித்தாற்போல ஒரு மொழிபெயர்ப்பை யாராலும் உருவாக்க இயலவில்லை?ஒருவர் ஏற்றுகொண்ட வெர்ஷனை இன்னொருவர் ஏற்பதில்லை.இதுல உங்க மார்தட்டல் வேற...செம காமெடி

    ReplyDelete
  22. Anonymous4:52 AM

    இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்'/////.....'
    காலம் காலமாய் ஒருவேளை சோற்றுக்கும் வக்கில்லாத ஏழைகளை அல்லா தேர்ந்தெடுக்காமல் கொழுத்த பணக்காரர்கள் புகழ் பெற்றவர்கள் /எதிர்காலத்தில் புகழ் பெற போகிறவர்களை மட்டும் அல்லா சூஸ் பண்ணுவதன் மர்மம் என்ன?காலம் காலமாய் மசூதி வாசலில் பிச்சைகாரனாகவே வாழ்து சாகும் இஸ்லாமியர்களுக்கு அல்லா செய்ததென்ன?ஒண்ணுமில்ல@@

    ReplyDelete
  23. அண்ணாச்சி....எனக்கு யுவனுக்கு கொடுத்ததுபோல் 100 கோடி வேண்டாம்... வெறும் 10கோடி போதும்... நாளையே நான் உங்களைப் போல் அல்லாவுக்கு ஜெ..என்று கூறுவேன்.
    …நம்ம முனியாண்டி கோவிலில் சாமியாடிய உங்கள் குடும்பமே காசுக்காக மாறிவிட்டீர்கள். நான் என்ன சாதாரணம்...

    ReplyDelete
  24. அண்ணாச்சி.....ஒன்னே ஒன்னு சொல்லனும்...

    …நம்ம முனியாண்டி சாமியை மதிக்காதவன் எவனாயிருந்தாலும் அழிந்துபோவான்.

    …இது ஒங்க அல்லாவுக்கும் சேத்துதான்....

    ReplyDelete
  25. Assalamu alaikkum

    ReplyDelete
  26. Anonymous8:52 AM

    அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  27. Anonymous8:52 AM

    அல்லாஹு அக்பர்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)