'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, April 27, 2014
56 இஞ்ச் மார்பளவு இந்நாட்டுக்கு தேவையில்லை - பிரியங்கா காந்தி!
'இந்த நாட்டை வழி நடத்திச் செல்ல 56 இஞ்ச் அகன்ற மார்பு கொண்டவருக்கு எந்த அவசியமும் ஏற்படப் பொவதில்லை. இந்த நாட்டை வழி நடத்த அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய பரந்த மனப்பான்மைக் கொண்ட நெஞ்சுரம் மிக்க ஒருவரே இந்நாட்டை ஆளத் தகுதியானவர்'
-பிரியங்கா காந்தி நரேந்திர மோடிக்கு பதில்!
'56 இஞ்ச் மார்பளவு கொண்ட எனக்கு இந்த நாட்டை ஆளும் தகுதி உள்ளது' - நரேந்திர மோடி
மார்பளவு அதிகம் உள்ளவர்தான் இந்த நாட்டை ஆளத் தகுதியானவர் என்றால் தாராசிங் என்றோ பிரதமர் ஆகியிருப்பார். இந்த முறை எப்படியும் பிரதமராகி விடலாம் என்று கனவு கண்ட வந்த மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் மிகப் பெரிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. 150 இடங்கள் வந்தாலே அதிகம் பிஜேபிக்கு. தோல்வி பயத்தில் என்ன பேசுவதென்றே தெரியாமல் உளறிக் கொட்டுகிறார் மோடி.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)