'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, May 06, 2014
பார்பனரான ஆனந்தன் இஸ்லாமியராக மாறிய வரலாறு!
'நான் ஒரு பார்பன சாதியில் பிறந்த வைதீக குடும்பத்தை சார்ந்த ஒரு இந்து. எனது தந்தை அரசு வேலையில் உள்ளவர். ஒரு கிறித்தவரின் உந்துதலால் எனக்கு குர்ஆன் கிடைத்தது. அந்த குர்ஆனை படிக்க படிக்க எனக்குள் இருந்த பல தேடல்களுக்கான விடை கிடைத்தது. உடன் முஸ்லிமாக மாறினேன். வீட்டுக்கு சென்று நான் முஸ்லிமாக மாறிய செய்தியை சொன்னேன். எனது தாயார் திட்டினார். எனது தந்தை என்னை கொல்ல வந்தார். எனது சொந்தங்கள் எல்லாம் என்னை தாறுமாறாக அடித்தனர். முடிவில் எனது தந்தை 'இப்படி பண்ணிட்டியேடா' என்று தனது தலையிலேயே தனது கைகளால் அடித்துக் கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். இன்ஜினியரான எனது சான்றிதழ்களை எனது சொந்தங்கள் தீயிட்டு கொளுத்தி விட்டனர். வெறும் 130 ரூபாயோடு வீட்டை விட்டு வெளியேறி கோயம்பத்தூரில் உடலால் உழைத்து எனது வருமானத்தை பெருக்கிக் கொண்டேன். எவ்வளவோ கஷ்டங்களை பல ஆண்டுகளாக அனுபவித்தேன். அவ்வளவு கஷ்டத்திலும் இஸ்லாத்தின் மீதான எனது ஈடுபாடு இன்னும் இறுக்கமானது. தற்போது எனது முயற்சியால் 27 பேருக்கு உண்மை இஸ்லாத்தை விளக்கி அவர்களை முஸ்லிம்களாக மாற்றியிருக்கிறேன். எனது பள்ளியிலும் கல்லூரியிலும் எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் இருந்தும் ஒருவரும் எனக்கு இஸ்லாத்தை போதிக்கவில்லை. அப்படி அவர்கள் அன்றே போதித்திருந்தால் 27 பேர் என்ற இந்த எண்ணிக்கை 200 ஐயும் தாண்டியிருக்கும்.'
//“பார்மாக் அரச குடும்பத்தினர் தங்கள் நாட்டிலிருந்து பலரை மருத்துவம் மற்றும் மருந்து தயாரிப்பு முறைகளை அறிந்து வரும்படி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவிலிருந்து இந்து கல்வியாளர்களை பாக்தாதிற்கு வரவழைத்து அவர்களைத் தங்களின் மருத்துவ மனைகளில் முக்கிய பதவிகளில் நியமித்தனர். அவர்களின் மூலமாகப் பல முக்கியமான இந்திய அறிவியல், மருத்துவ, கணித புத்தகங்கள் சமஸ்கிருதத்திலிருந்து அராபிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன…..”//
ReplyDeleteநமது நாட்டுக்கு வந்து நமது நாட்டின் கல்வியறிவை அரபுலகில் பரப்பினார்கள் என்றால் அது நமக்கு பெருமைதானே… அதிலும் நமது இந்தியர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தியதாகவும் கட்டுரை சொல்கிறது. இது ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாரசீக மொழியிலிருந்தும் அரபியில் பல்வேறு புத்தகங்கள் இதே ஏழாம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. பாரசீக மொழியும், சமஸ்கிரத மொழியும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர மொழிகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆரியபட்டர் காலம் தொட்டு வானியலில் நமது இந்தியர்கள் சிறந்த இடத்தையே பெற்றிருந்திருக்கிறார்கள்.
ஆனால் ஆறாம் நூற்றாண்டிலேயே குர்ஆன் முகமது நபிக்கு அருளப்பட்டு விட்டது. அதில் சொல்லப்பட்ட வானியல் ஆய்வுகள் அனைத்தும் இன்றைய அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதற்கும் வேத நூல்கள் இறைவனால் அருளப்பட்டுள்ளது. அந்த இறை செய்தியை அடிப்படையாக வைத்தே ஆரியபட்டரின் ஆய்வுகளும் இருந்திருக்க வேண்டும். திருக்குறளும் ஒரு காலத்தில் இறை வேதமாக இருந்திருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன்.