'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, April 14, 2015
நக்ஸல்பாரி தலைவர் டி என் ஜோய் இஸ்லாத்தை தழுவினார்!
நக்ஸல் இயக்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான டி என் ஜோய் தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். சென்ற திங்கட்கிழமை முக நூல் மூலமாக தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
'எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் ஜோய். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் நான் வைத்துக் கொண்ட பெயர் நஜ்மல் பாபு. பாபரி மசூதி இடிப்புக்குப் பின் இந்து மதத்தில் இந்துத்வாவின் கை ஓங்கி வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். நான் எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் சேரப் போவதில்லை. தனித்தே இயங்குவேன்' என்று கூறுகிறார்
1970 லிருந்து நக்ஸல் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் ஜோய் எமர்ஜென்ஸி நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தீவிரவாத பாதையிலிருந்து விலகி அன்பையும் பண்பையும் போதிக்கும் தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட ஜோய் என்ற அஜ்மலை இரு கரம் நீட்டி அரவணைப்போம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
14-04-2015
படுகொலைகள் செய்து அனுபவப்பட்டவா்களுக்கு இசுலாம் பொருத்தமான இடம்தான். இசுலாமில் இணைந்த உடனேபாபரி மசூதி இடிப்புக்குப் பின் இந்து மதத்தில் இந்துத்வாவின் கை ஓங்கி வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். இப்படி பேசுவது ஏன் ? அரேபிய மதவாதிகளின் இரட்சகரா இவர் ? இவர் வங்க தேசத்தில் ஒழிந்து வாழ்ந்தாா். இந்திய அரசின் தண்டனையிலிருந்து தப்பிக்க ஏதோ நாடகம் ஆடுகின்றாா். முதலில் தான் செய்ய படுகொலைகளுக்கும் நாசவேலைகளையும் ஒப்புக் கொண்டு அரசின் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாரா ?
ReplyDelete