Monday, November 30, 2015

காஃபிர் என்று எங்களை இழிவு படுத்தலாமா?



// இந்தியரின் பிணத்திற்கு காஃபீர் என்று எழுதி இந்தியாவில் ஒப்படைத்தது எல்லாம்…//

காஃபிர் என்றால் இழிவான ஏசும் சொல் என்று சிலர் நினைக்கிறார்கள்.இதில் உண்மையில்லை. காஃபிர் என்றால் கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அது ஏசுகின்ற சொல்லாக கருத முடியும்.

காஃபிர் என்ற அரபுப் பதத்தின் பொருள், ”மறுப்போர்’ அல்லது “நிராகரிப்பவர்” அதாவது ஒரு கடவுள் கொள்கையை மறுப்பவர், என்றே பொருள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக்கொள்கையை மறுப்பதனால், அவர்களை “மறுப்பவர்-காபிர்’ என்று அழைப்பது இழிவு படுத்தவோ, அல்லது இரண்டாம் தரப்பினராக கருதுவதாகவோ நிச்சயமாக இல்லை.

இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால், இஸ்லாத்தை மக்களிடம் போதித்த முகம்மது நபிகளின் தாயார் ஆமினா, தந்தை அப்துல்லாஹ், மற்றும் சிறிய தகப்பனார் அபூ தாலிப் ஆகிய அனைவருமே காஃபிர் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. நபிகள் நாயகத்தின் பெற்றோரை காஃபிர் என்று கூறி இழிவு படுத்துவதாக சொல்லமுடியுமா?

எவராக இருப்பினும் ஓர் இறைக் கொள்கைக்கு மாறுபடுபவர்களை இஸ்லாமிய மறுப்பாளர் அல்லது நிராகரிப்பவர் என்ற பொருளில் காஃபிர் என்று அரபிப் பதத்தில் சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய அரபுப் பதத்தில் குறை காணும் நண்பர் திரு.பாண்டியன் தனது மதம் தன்னை எவ்வாறு அழைக்கிறது என்பதை அறிவாராக! பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான். சூத்திரன் என்பவன் யார்? மனு கூறுகிறார்.

யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்,யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்படுபவன்,பிராமணரிடம் பக்தியாக ஊழியம் செய்பவன்.,விபச்சாரி மகன்,விலைக்கு வாங்கப்பட்டவன்,ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன்.(-மனு.அத்.5. சுலோ.415.)

இந்த நாலு வர்ணம் தவிர்த்து, பிராமனால் படைக்கப்படாத அவர்ணமாக அய்ந்தாவது வருணமாக பஞ்சமர்கள் என்ற பிரிவும் உண்டு. நம்ம மகாத்மா காந்தி பெரிய மனசு பண்ணி இவர்களை கடவுளின் புதல்வர்கள் “ஹரிஜன்” என்று சிறப்பு பெயரிட்டு அழைத்ததும் அறிந்ததே. இவர்களுக்குள் சண்டாளர் என்னும் உட்பிரிவும் உண்டு.

தன்னை கீழ்ச்சாதி, சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் என்று எப்படி அழைத்தாலும், அடித்தாலும் வலி தாங்கும் திரு.பாண்டியன், “மனிதர்களே! நீங்கள் அனைவரும் ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் பிறந்தவர்கள், பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம், அனைவரும் சகோதரர்களே..” என்று கொள்கை பிரகடனப்படுத்தும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தலாமா?

-ஷாலி

5 comments:

  1. நபிக்கு நபிபட்டம் கிடைக்கும் முன்னே அவர்களின் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் இப்படி இருக்க அவர்கள் எவ்வாறு காபிர் ஆவார்கள் ?

    ReplyDelete
  2. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!



    Download / Pdf

    http://bit.ly/2l1Mbk2

    ReplyDelete
  3. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!



    Download / Pdf

    http://bit.ly/2l1Mbk2

    ReplyDelete
  4. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!

    ReplyDelete
  5. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!



    Download / Pdf

    http://bit.ly/2l1Mbk2

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)