Sunday, January 03, 2016

நபிகள் நாயகத்தின் வழியை நாம் பின்பற்ற வேண்டும் - தலாய்லாமா



உலகில் உள்ள பவுத்தர்களின் மாநாடு மைசூரில் நடைபெற்றது. திபெத்தின் பவுத்த மதகுரு தலாய்லாமா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் 'உலகம் அமைதி பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசிக் கொண்டே வந்தவர் திடீரென.....

'நாம் வன்முறையைக் கைவிட வேண்டும். இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் வழியை பின் பற்ற வேண்டும். விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக குர்ஆனை இறைவன் மனித குலத்துக்கு தந்திருக்கிறான். நபிகள் நாயகம் அன்பு, அமைதி, நீதியை வாழ்வில் நிலைநாட்டியவர். மனித குலம் அனைத்திற்கும் ஒரு முன் மாதிரியாக தெரிகிறார்'

என்று பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இது சபையில் இருந்த பலராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் அமைப்பு தலாய்லாமாவுக்கு குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை கொடுத்தது.

“The Prophet Muhammad’s (PBUH) life is the best example for the entire humanity.”

“We should follow the path shown by the Prophet Muhammad (PBUH) in order to establish global peace and to end terrorism and tyranny from the world. The Prophet Muhammad’s (PBUH) message of Peace, love, justice and religious tolerance will always be a leading light for the whole humanity”, he added.

http://www.siasat.com/news/end-terrorism-we-should-follow-path-prophet-pbuh-dalai-lama-895214/
01-01-2016

8 comments:


  1. தாலாய் லாமாவுக்கு மிகவும் வயதாகி வயதாகி விட்டது.அவர் எனவே அவரது மூளையின் செயல்பாடுகள் மந்தமாகி விட்டது. அன்பினால், அன்பினால் மட்டும் உலகின் பெரும்பகுதியை வென்றவா் கௌதம புத்தா. முகம்மது பிறப்பிற்கு 1000 ஆண்டுகளுக்கு மேல் மூத்தவா்.நாளந்தா மற்றும் தட்சசீலம் போன்ற அற்புதமான பல்கலைக்கழகங்களை நிறுவி மக்கள் தொண்டு ஆற்றியவா்கள் புத்தாின் சீடா்கள். கௌதமனின் சீடா் மகம்மதுவை பின்பற்றச் சொல்வது வஞசக புகழ்ச்சியாகும். முஸ்லீம்கள் போல் நாமும் சற்று வாள் எடுக்க வேண்டும். குறைந்த பட்ச வன்முறை தேவை என்று மாநாட்டில் உள்ள மக்களுக்கு எடுத்து இயம்புகின்றாா் என்றே நான் பொருள் கொள்கின்றேன். மகம்மது வின் பெயா் இருக்கும் வரை இரத்தக் குளியல் மண்ணுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

    ReplyDelete

  2. இப்படியும் இசுலாமிய உலகம் உள்ளது. படிக்க ஆச்சாியமாக உள்ளது.தாங்களும் படிக்கலாம்
    அகமியம் என்ற வலைதளத்தில் இருந்து எடுத்தது

    இறைவனைப் பற்றி அறியாமல் தாத்துக்கும் பாத்துக்கும், படைப்புக்கும், படைத்தவனுக்கும், இடையேயானதொடர்புகளை உணராமல் அமல் செய்யக்கூடிய தற்கால வழி தவறிய கூட்டங்களுக்கு கசப்பாக அமையலாம்.எனவே இதை வாசிக்கக் கூடியவர்கள் இறை அறிவை கற்றுக் கொள்ளும் நோக்குடன் படிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
    பிரஹ்ம ஜீவ ஐக்கியம்
    மூலம்
    1.
    நானல் லாது நீயல்ல
    நீயல் லாது அவனல்ல
    அவனல் லாது தானல்ல
    தானல் லாது வேறல்ல

    2.
    நானே மறைந்து நீயானாய்
    நீயே மறைந்து அவனானாய்
    அவனே மறைந்து தானானாய்
    தானே மறைந்து அணுவானாய்

    3.
    அணுவா யிருந்து அருவானோம்
    அருவா யிருந்து உருவானோம்
    உருவா யிருந்து ஒன்றானோம்
    ஒன்றா யிருந்து பலவானோம்

    4.
    பலவா யிருந்து ஜகமானோம்
    ஜகமா யிருந்து ஜடமானோம்
    ஜடமா யிருந்து வடிவானோம்
    வடிவா யிருந்து பெயரானோம்

    5.
    பெயரா யிருந்து மகத்தானோம்
    மகத்தாயிருந்து உணர்வானோம்
    உணர்வா யிருந்து அறிவானோம்
    அறிவா யிருந்து வளமானோம்

    6.
    வளமா யிருந்து குணமானோம்
    குணமா யிருந்து குணியானோம்
    குணியா யிருந்து குறியானோம்
    குறியா யிருந்து இனமானோம்

    7.
    இனமா யிருந்து குலமானோம்
    குலமா யிருந்து யுகமானோம்
    யுகமா யிருந்து தொகையானோம்
    தொகையா யிருந்து பொருளானோம்

    8.
    பொருளாய்த் தற்பதக் கலையானோம்
    கலையாய்த் தொம்பதக் கிளையானோம்
    கிளையாய் அசிபத நிலையானோம்
    நிலையாய் நின்றே மிளிர்வானோம்

    9.
    மிளிர்வா யிருந்து தெளிவானோம்
    தெளிவா யிருந்து நிறைவானோம்
    நிறைவா யிருந்து நிஜமானோம்
    நிஜமா யிருந்து நிகரானோம்

    10.
    நிகரா யிருந்து சுகமானோம்
    சுகமா யிருந்து சுயமானோம்
    சுயமா யிருந்து தொடரானோம்
    தொடரா யிருந்து தொனியானோம்

    11.
    தொனியா யிருந்து மொழியானோம்
    மொழியா யிருந்து இயலானோம்
    இயலா யிருந்து இசையானோம்
    இசையா யிருந்து நடமானோம்

    12.
    நடமா யிருந்து உறவானோம்
    உறவா யிருந்து கருவானோம்
    கருவா யிருந்து வினையானோம்
    வினையா யிருந்து வித்தானோம்

    13.
    வித்தாய் முளையாய் விளைவானோம்
    விளைவிக்கும் பொருள் விரிவானோம்
    விரிவாய் கொத்தாய் சுவையானோம்
    சுவையாய்ப் பயனாச் சத்தானோம்

    14.
    சத்தா யிருந்து வானானோம்
    வானா யிருந்து வளியானோம்
    வளியா யிருந்து கனலானோம்
    கனலா யிருந்து புனலானோம்

    15.
    புனலா யிருந்து நிலமானோம்
    நிலமா யிருந்து பயிரானோம்
    பயிரா யிருந்து உயிரானோம்
    உயிரா யிருந்து உயர்வானோம்

    16.
    உயர்வா யிருந்து ஒளியானோம்
    ஒளியா யிருந்து வெளியானோம்
    வெளியா யிருந்து உளமானோம்
    உளமா யிருந்து மனமானோம்

    17.
    மனமா யிருந்து மகிழ்வானோம்
    மகிழ்வா யிருந்து நனவானோம்
    நனவா யிருந்து நனவானோம்
    கனவா யிருந்து நினைவானோம்

    18.
    நினைவா யிருந்து மதியானோம்
    மதியா யிருந்து வரவானோம்
    வரவா யிருந்து விரவானோம்
    விரவா யிருந்து திரமானோம்

    19.
    திரமா யிருந்து திடமானோம்
    திடமா யிருந்து பரிவானோம்
    பரிவா யிருந்து அமைவானோம்
    அமைவா யிருந்து தரமானோம்

    20.
    தரமா யிருந்து லயமானோம்
    லயமா யிருந்து பதியானோம்
    பதியா யிருந்து பரமானோம்
    பரமும் நீ-நான் ஒன்றானோம்.
    .......................
    -முற்றும்.-

    இக்கவிதைகளுக்கான விரிவுரைகளும் அது சார்ந்த மெஞ்ஞான விளக்கங்களும் தொடர்ந்து எமது அகமியம் இணையத்தளத்தில் வெளிவரவுள்ளன...அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete

  3. சுவாசப்பயிற்சி இருந்தால் தூக்கமும்வணக்கமே
    -இன்று உலகலாவிய ரீதியில் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மூச்சுப் பயிற்சி பிரபல்யம் அடைந்து வருகின்றது நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், உயிர்காக்கவும் இப் பயிற்சி அவசியம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இஸ்லாமிய வழியில் எவ்வளவு அவசியம் என்பதை விளக்குகின்றது இக்கட்டுரை.- ஆசிரியர்.

    அல்லாஹ்வின் அஸ்மாக்களில் “ஹூ” என்பது ஒன்றாகும் “ஹுவ” என்பது அவன், அது என்ற பொருள் தரக்கூடியதாகும். ஹுவ என்பது அல்லாஹ்வையும் அவனது வுஜூதையுமே காட்டுகின்றது. இதனால்தான் இறைவன் தனது மறையில் லாஇலாக இல்லாஹூ என்று “அன்னைத் தவிர எதுவும் இல்லை, இருப்பது அனைத்தும் அவனே என்று கூறுகின்றான்.

    எனவே, பிரபஞ்சம் என்பது பார்வைக்கு தனித்தனியான பொருளாகத் தெரிந்தாலும் யாதார்த்த்த்தில் அனைத்தும் அவனாகவே இருக்கின்றான். ஆகவே எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் எமது உள்ளத்தில் அவனையே நினைவு படுத்தியவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் அவனைக் கண்டு பேரின்பம் பெற முடியும்.

    “நான்” என்று தனியாக ஒரு பொருள் இல்லை, எல்லாம் அவனாகவே இருக்கிறான் என்ற தத்துவத்தை உள்ளத்தில் நினைவு படுத்தி வருவதனால் மோட்ச நிலையே அடைய முடியும் அந்த நிலையிலேதான் இறைவனின் ஷுஹூதைப் பெற முடியும்.

    ஞானபிதாவுக்கு பொன்னாடை போர்த்தும் ஈழத்து கஸ்ஸான்

    “அல்லாஹ் எங்கோ இருக்கிறான் நாம் எங்கோ இருக்கிறோம் என்று வாயினால் மாத்திரம் அல்லாஹ் அல்லாஹ் என்பதனாலோ , ஹூ என்பதனாலோ எந்தப் பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. அப்படியானால் இதுவரை நமக்கு ஏதாவது ஏற்பட்டிருக்க வேண்டும்வெள்ளை மாளிகையாக இருக்க வேண்டிய எமது இதயக்கமலம், பாழடைந்த வீடாக விஷ ஜந்துக்கள் வாழக்கூடிய வனமாக மாறியிருக்கின்றது.
    எனவே, அல்லாஹ்வுடைய கோலங்களில் நானும் ஒன்றே, அவனே என்னாக வெளியாகியிருக்கிறான் எனது செயலும், எனது தாத்தும் அவனே நான் எதுவும் அற்ற அப்தாக அடிமையாக இருக்கிறேன் என்று தன்னிலிருக்கும் “நான்” என்ற உணர்வையும், மமதையையும் பிடிங்கி எரித்து விட்டு, “நான்- இல்லை” அவனே என்ற உணர்வோடு உளப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும்போது ஞானக் கண் திறக்கும்.

    அப்போது தான் யார்? என்பதும், தன் தலைவன் யார்? என்பதும் தெரிவதோடு பிறவிப் பயனையும் பெற முடியும்.

    நாம் விழிப்பில் அல்லாஹ்வை திக்று செய்து வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தூக்கத்திலும் இருக்க முடியும்.

    “ஒரு முஃமினுடைய தூக்கம் வணக்கம்” என்று அண்ணல் நபீ (ஸல்) சொல்லிப் பகர்ந்துள்ளார்கள். இதன்படி நித்திரையை நாம் சுத்த வணக்கமாக்கிக் கொள்வது எப்படி?

    ஒரு நாளைக்கு 21600 தடவைக்கு மேல் நாம் சுவாசிக்கின்றோம். சுவாசத்திற்கு (மூச்சுக்கு) உயிருண்டு உயிரோடு தொடர்பான சுவாசத்தை அல்லாஹ்வின் நினைவின்றி விட்டோமானால் 21600 உயிர்களை கொலை செய்த பாவிகளாகவே ஆவோம்.

    எனவே, எமது அவயங்களை ஒரு வேளையைத் தொடர்ந்து செய்வதற்கு பழக்கப்படுத்திக் கொள்வதுபோல் சுவாசத்தையும் பயிற்சிகள் மூலம் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். அந்நிலை ஏற்படுமாயின் நாம் உறங்கும் போதும் வணக்கத்திலேயே இருப்போம்.

    நாம் சுவாசிக்கும் போது ஹூ,ஹூ என்ற திக்ரை (நானில்லை, அவனே இருக்கின்றான்) உள்ளத்தில் நிறுத்தி ஒவ்வொறு மூச்சையும் “ஹூ,ஹூ”............... என்று விடுவோமானால், நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும் சுவாசம் ஹூ என்றே வெளியேறும் இதனால் வணக்கம் செய்து கொண்டிருப்பவர்களாகவே கருதப்படுவோம்.

    நாம் உறங்கும்போது சுவாசம் மாத்திரம் தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். நாம் பயிற்ச்சி உள்ளவர்களாக இருந்தால் நித்திரையிலும் சுவாசம் ஹூ திக்றுடனயே வெளியேறும்.

    அதேபோன்று “சக்றாத்” துடையத வேளையில் அனைத்தும் செயலிழந்து நிற்கும்போது மூச்சு மாத்திரமே வேலைசெய்து கொண்டிருக்கும். உயிருடன் இருக்கும்போது சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டவர்களால்தான் அச்சந்தர்ப்பத்திலும் திக்றில் ஈடுபட முடியும்.

    எனவே, உறங்கும்போதும், வியாபாரம் செய்யும் போதும் எந்த வேலைகளில் ஈடுபடும்போதும் அல்லாஹ்வின் நினைவில் இருக்க வேண்டுமானால் “நான்” என்ற உணர்வு இருக்கக் கூடாது. நான் இல்லை எனக்கென்று தனியான வுஜுத் உள்ளமை இல்லை அவனே எல்லாமாய் இருக்கிறான் என்ற நியத்துடன் ஹூ, ஹூ என்ற சுவாசப் பயிற்சியைச் செய்துவந்தால் நாம் வணக்கத்தில்தான் இருந்து கொண்டிருப்போம்.
    -ஆதாரம் அகமியம் என்ற இசுலாமிய சுபி சாா்பு இணையம்

    ReplyDelete
  4. இஸ்லாம் ஈன்ற பெண் புலவர் ஞானிகளில் இளையான்குடியில் தோன்றிய கச்சிப்பிள்ளையம்மாளும் ஒருவர்.அந்த அம்மா எழுதிய ஒரு பாடல். படிக்க அதிசயமாக இருக்கின்றது.தாங்களும் படிக்கலாமே.

    பள்ளியில் வந்து தொழுதல்லவோ வானோர்
    பாத்திஹா ஓதி துஆஇரப்பார்
    பள்ளியை விட்டுமேல் பார்த்திடில் அங்கே
    பரமசிவன் வீடு தோணுதடி - நேர்
    திறமுடன் கும்மி அடியுங்கடி

    ஈஸ்வரன் வீடங்கே தோணுமடி - அதில்
    ஏகப்பயமாய் இருக்குமடி
    ஆசைவைத்து பயமற்றுநீ சென்றிடில்
    அந்த இருளும் மறையுமடி - இடை
    வந்த திரையும் விலகுமடி

    நானும் நீயுமே நேசமானார் - பர
    நாதாந்த வீட்டிலே சேர்ந்திடலாம்
    ஞான வீடாளும் அத்தானைக்கண்டு நாம்
    நாடிக்கொள் காபகௌசியடி - சென்று
    தேடியே கும்மியடிங்கடி.
    ( பெண் சித்தா் போல் கவிதை நடை அமைப்பு உள்ளது கவனிக்கத்தக்கது )

    ReplyDelete
  5. இவ்வாறு பாடும் அவர் ஞானிகளின் மரபுப்படி ஜீவாத்மாவை காதலானாகவும் பரமாத்மாவைக் காதலியாகவும் உருவகப் படுத்திப் பாடுகின்றார்.

    உச்சித மூலத்திலே புவி
    மெச்சிய வாலையடி அம்மணி
    மெச்சிய வாலையடி

    உச்சித ஊஞ்சலிலே அவள்
    உட்கார்ந்ததைப் பாரடி - அம்மணி
    உட்கார்ந்ததைப் பாரடி

    நானாகித் தானாகி ஊமை
    தான்வந்து நின்றதடி - அம்மணி
    தான்வந்து நின்றதடி

    அத்தானென் றூமைதன்னை வாலை
    அழைத்து மகிழ்வுடனே அம்மணி
    அழைத்து மகிழ்வுடனே

    உத்தம ஊஞ்சலிலே ஊமையை
    உட்கார வைத்தானடி - அம்மணி
    உட்கார வைத்தானடி

    செம்பிருந்த பாலை ஊமைக்கு
    சிந்தாமல் ஊட்டினளே - அம்மணி
    சிந்தாமல் ஊட்டினளே

    இன்பம் மிகுந்தே இரு பேரும்
    ஏகாந்த மாய்இருந்தே - அம்மணி
    ஏகாந்த மாய்இருந்தே

    அன்புடன் ஆடுகின்ற ஊஞ்சலில்
    ஆட்டத்தைப் பாரடி நீ அம்மணி
    ஆட்டத்தைப் பாரடி நீ

    வாலையும் ஊமையாய் ஆடிய
    வாஞ்சையைப் பாரடி நீ - அம்மணி
    வாஞ்சையைப் பாரடி நீ

    மெய்ஞ்ஞான ஊஞ்சலில் ஊமையாகிய இறைகாதலனும் இறைவனாகிய வாலையும் கலந்துறவாடிக் களித்ததை இவ்வாறு பாடும் அவர் மெய்ஞ்ஞானக் கும்மியில்,

    ReplyDelete

  6. இத்தகவல்களை அனைவரும் அறிய வைக்க வேண்டும். மறைக்க வேண்டாம்

    அல்லாஹு என்றே அகிலமெல்லாம் போற்றுகின்ற
    வல்லானை எந்நாளும் வாழ்த்துவமே - பொல்லாத
    அஞ்ஞான மாயை அறுத்தொதுக்கும் வாளனைய
    மெய்ஞ்ஞான மாலைசொல்ல வே.

    இவ்வாறு இறைவனைப் புகழ்ந்து அவனின் பேரருள் துணை வேண்டித் தம் நூலைத் துவக்கும் அவர் மெய்ஞ்ஞானக் குறவஞ்சியில் இறைவனைப் பாடும் பாடல்கள் அற்புதமாக உள்ளன. அவர் பாடுகின்றார்:

    அண்டத்துக் கப்பால் அறிந்ததைச் சொல்லடி சிங்கி - அந்த
    ஆகாயத்துள்ளே அரண்மனை தோன்றுமோ சிங்கா
    அரண்மனைக்குள்ளிருந்(து) ஆளுவதாரடி சிங்கி- அங்கே
    அருவுருவில்லாத அரசன் ஒருவனே சிங்கா
    ஆளும் மகராஜன் அங்கே இருப்பானோ சிங்கி - அவன்
    அங்கிமிருப்பதோ டெங்கும் பராபரம் சிங்கா
    எங்கும் பராபரம் என்றான தென்னடி சிங்கி -அது
    தங்கிய சோதியின் தன்மய மாகுமே சிங்கா
    தன்மய மாகிய சங்கதி என்னடி சிங்கி -அது
    தானே தானே நின்று தம்பிரானாச்சுது சிங்கா
    அந்தப் பிரானைக் கண்(டு) அப்புறம் என்னடி சிங்கி - இனி
    அப்பரத்துக்(கு) அப்பால் ஆருமில்லையடா சிங்கா
    ஆனால் ஒருவரும் அவ்விடத்தில் இல்லையோ சிங்கி - அங்கு
    தானா தனாதந்த னாதாந்த நாதமே சிங்கா

    ReplyDelete

  7. பரவாயில்லையே.வெளியிட்டு விட்டீா்களே! நன்றி.

    யுதா்கள் குறித்த கடிதத்தை வெளியிடவில்லை.ஐஸ காடையா்களுக்க ஈஸ்ரவேல தாய்நாடு என்பது படு போக்கிாித்தனமான அண்டப்புளுகு

    ReplyDelete

  8. ஆச்சாியமாக உள்ளது. ஆசீக் முஹம்மது அலி ஜின்னா போன்ற வா்களை காணவில்லையே ஏன் ஏன் ஏன் ? எங்கே அவர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)