'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, January 25, 2016
சகோதரர் யூனுஸூக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது!
சென்னையின் மழை வெள்ள பாதிப்பில் பல உயிர்களை காப்பாற்றி தனது வீட்டையும் தங்காலிக தங்குமிடமாக்கிய சகோதரர் யூனுஸூக்கு அவரது செயலை பாராட்டி 'அறிஞர் அண்ணா' விருது வழங்கப்பட்டது.
சகோதரா்யுனுஸ்க்கு அளித்த பாராட்டும் அங்கிகாரமும் தகுதியானதுதான்.அதற்காக அரசை
ReplyDeleteபாராட்ட வேண்டும். சென்னை வெள்ள நிவாரணப்பணியில் பல அமைப்புகள் மிக
அருமையாகச் செயல்பட்டன. சேவாபாரதி அமைப்பின் சாா்பில் திரு.ராஜசேகா் திரு
வினாயகம் போன்றவா்கள் மகத்தான முறையில் செயல்பட்டாா்கள்.மற்றும் ஜெயின்
சபையைச் சாா்ந்தவா்கள்.மற்றும் பலா் அருமையாக தொண்டு செய்துள்ளாா்கள்.
இவர்களையும் அரசு கண்ணியப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால்
அரசு தவறு செய்து விட்டது.இவர் ” முஸ்லீம் ” எ்னபதால்
முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளாா் என்று என் மனம் சொல்கின்றது. ஒருவேளை தவறாகக்
கூட இருக்கலாம்.
ReplyDeleteவெள்ள நிவாரணப்பணியில் தௌஹித் ஜமாத் தொண்டா்கள் நிறைய பணிகளைச்
செய்திருக்கின்றாா்கள். அவர்களில் தலைமை நிலையில் செயல்பட்ட ஒருவரையாவது
அரசு கௌரவித்திருக்க வேண்டும். தொலைக்காட்சியில் சகோதரா் யுனூஸ் அவர்களைக்
காட்டும் போது என் மனதில் தௌஹித் ஜமாத் தொண்டா்கள் செய்த தொண்டுகளும்
சேவாபாரதி இயக்கத்தைச் சோ்ந்த தொண்டா்களின் பணியும் ஜெயின் சமூகத்தவா்களின்
பணியும் என் மனதில் ஓடியது. அடுத்து அவர்களும் அழைக்கப்படுவாா்கள் என்று
நினைத்தேன். நடக்கவில்லை. அரசு கோட்டைவிட்டு விட்டது. அரசு பாராட்டும் என்று
யாரும் தொண்டு செய்யவில்லைதான். இருப்பின் கௌரவிப்பது அரசின் தகுதியைக்
காட்டுவதாக கருதுகின்றேன்.
அரசின் செயல் நியாயமானதல்ல.குறுகிய வட்டத்திற்குள் அரசு உள்ளது.